'>
Showing posts with label ஞானம். Show all posts
Showing posts with label ஞானம். Show all posts

Thursday, December 22, 2011

"சுதேசி" யில்கனி மொழி எதிர்காலம் கட்டுரை

அண்ணே வணக்கம்ணே !
ஒரு ஆசாமி ஊருக்கு புதுசா வந்த சாமி(யார்) கிட்டே லைஃப்ல நிம்மதியே இல்லை. என்ன பண்ணலாம்னு கேட்டாரு. சாமி விவரமான ஆளு. ஒரு நா கோழி வளர்க்க /இன்னொரு நாள் நாய் வளர்க்க / இன்னொரு நாள் கிளி வளர்க்கன்னு உபதேசங்களை மாத்தி மாத்தி கொடுத்துக்கிட்டே இருந்தாரு.

என்ட்ரி கொடுத்த ஒவ்வொரு ஜீவராசியும் ஒவ்வொரு விதமா டார்ச்சர் பண்ண - ஒன்னு இன்னொன்னை விரட்ட ஆசாமிக்கு நாக்கு தள்ள ஆரம்பிச்சிருச்சு. மறு நாள் டக்கர் குட்டி ப்ரதர்னிட்ட கணக்கா பயங்கர விரக்தியோட சாமியை பார்க்க போனாரு.

சாமி நீ வளர்க்க ஆரம்பிச்ச எல்லா ஜீவராசியையும் ஜெ சசி அண்ட் கோவை விரட்டின மாதிரி விரட்டிருன்னாரு. ஷாட் கட்.

மறு நாள் ஆசாமி வந்தான். அக்மார்க் இழந்த சக்தி வைத்தியரை பார்த்து லேகியம் சாப்ட கணக்கா சுஸ்தா வந்தான். சாமி கேட்டாரு.

எப்படிப்பா இருக்கேன்னாரு அதுக்கு ஆசாமி தினத்தந்தி ஹெட் லைன்ஸ் கணக்கா " நிம்மதியா இருக்கேன் சாமி"ன்னான்.

இந்த கதையை ஏன் இப்பம் சொல்றேன்னு கேப்பிக.சொல்றேன். தெய்வம் என்னெல்லாம் கொடுத்திருக்கோ அதனோட மகிமை அதுக நம்மாண்ட இருக்கிற வரை தெரியாது, எதுனா கிரகம் சைடு வாங்கி உள்ளடி கொடுத்து "உள்ளது போச்சுரா நொள்ளை கண்ணா"னு ஆயிட்டா அப்பத்தேன் தெய்வம் நம்மை "எம்மாம்"
கருணையோட ஆசீர்வதிச்சிருந்தாருன்னு புரியும்.

நம்ம கதையும் அப்படித்தேன் ஆயிருச்சு. இந்த 40+ வயதுங்கறது ஒரு ஆணோட லைஃப்ல முக்கியமான காலகட்டம். மேலும் மேலும் தீவிரமா உழைச்சு மேலும் மேலும் சொத்து சுகம்னு சேர்க்க வேண்டிய வயசு.

நாம பைபிள் சொல்றாப்ல ( பறவைகள் விதைப்பதுமில்லை -அறுப்பதுமில்லை) வாழ்ந்துட்ட பார்ட்டி. பழக்கத்தை மாத்திக்க முடியலை. ஏறக்குறைய ரிட்டையர்ட் லைஃப் மாதிரி ஓடிக்கிட்டிருந்தது. எங்க பாட்டி "அவுத்து வுட்ட மாடு மாதிரி"ன்னு சொல்வாள்.அப்படி ஒரு லைஃப்.

மொதல் ஆப்பு மின்வாரியம் வச்சுருச்சு. ஒரு நாளைக்கு அஞ்சு மணி நேரம் பவர் கட். இதுக்கு மிந்தி தீப்பெட்டி கணக்கான போர்ஷன்ல பவர் கட் நேரத்துலயும் ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டிருந்தம். ( அதாங்க பலன்களை பதிவு பண்ணி வச்சுக்கறது) .

வாழ்க்கையில உயரனும்ங்கறதை நெஜமாக்க மேல் மாடிக்கு வந்துட்டமா சுத்து வட்டாரத்துல வியாபர தலங்கள் , லாட்ஜுகள்ள ஓடும் ஜெனரேட்டர்கள் சத்தம் மண்டைய பிளக்குது.இதுல என்னத்தை பதிவு பண்றது.

இடையில இந்த காலண்டர் சமாசாரம் ஒன்னு .( இன்னைக்கு பாரத்தை சென்னை ஆஃப்செட் ப்ரிண்டர்ஸ் தலை மேல இறக்கியாச்சுன்னு வைங்க) . ஜோதிடம் 360 நூல் வெளியீடு ஒன்னு. ( பொங்கல் வெளியீடு)

எல்லாம் சேர்ந்து ரொட்டீன் ஆக்டிவிட்டீஸ்ல பயங்கர எஃபெக்ட் வந்துருச்சு. இந்த இழவுல ஒரு சாட்சி சொல்லும் கடமை வேற .

அல்லாத்துக்கும் க்ளைமாக்ஸ் மாதிரி காலண்டர் ப்ரிண்டிங் வேலையா சென்னைக்கு போன நம்ம பாப்பாவோட உட்பி + அவள் வேலை பார்க்கும் ஸ்டுடியோ ஓனர் அவளுக்கு செக்யூரிட்டியா போறதால தன்னோட வளர்ப்பு நாயை நம்ம ஆத்துல விட்டுட்டு போயிட்டான். ஏற்கெனவே நம்ம ஆத்துல ஒரு டிக்கெட் இருக்கு.

ஆனால் அது ஸ்னேகா டைப். புதுசா வந்த டிக்கெட் இருக்கே கொய்யால சஞ்சய் காந்தி டைப். நம்ம நரம்பை கழட்டிருச்சு போங்க. இப்பத்தேன் உறைக்குது ஆத்தா நம்மை எந்த அளவுக்கு காபந்து பண்ணி வச்சிருந்தான்னு.

நாளையிலருந்தாச்சும் கொஞ்சம் நிம்மதியா விட்டா "பொளப்ப" பார்க்கலாம். ஆத்தா என்ன பண்றாளோ ஆருக்கு தெரியும்?

எச்சரிக்கை:

கனிமொழியின் எதிர்காலம் குறித்த நம்ம கணிப்பு சுதேசி இதழ்ல வெளியாகியிருக்கு. கடைசி பாராவுல மட்டும் தங்கள் சரக்கை சேர்த்து பப்ளிஷ் பண்ணியிருக்காய்ங்க. ஆன்லைனில் பார்க்க விரும்பறவுக கீழே உள்ள சுட்டிகளை க்ளிக்கி பார்க்கலாம்.

http://sudesi.com/tamil/viewpage?order=21
http://sudesi.com/tamil/viewpage?order=22

(என்னண்ணே சோதிட கேள்விபதில் பகுதிக்கு மொத நாள் வந்த கேள்விகளோட சரி ..கேள்விகளே வரலை.. ஆளுக்கு ஒன்னா தூக்கி தட்டுங்க. இல்லாட்டி ஜா.ரா மாதிரி போலி பெயர்ல கேள்வி கேட்டு பதில் கொடுக்க வேண்டி வந்துரப்போவுது)

Saturday, April 16, 2011

பொய் பொய் தவிர வேறில்லை

அண்ணே வணக்கம்ணே,
ஒஷோ சொல்வாரு ( கேட்டதில்லிங்கண்ணா ..படிச்சதுதேன்). என் பேச்சை நீங்கள் கேட்பது போலவே நானும் கேட்கிறேன். இப்ப நானும் சொல்றேன் (அதாங்க எழுதறேன்) என் எழுத்தை நீங்கள் படிப்பது போலவே நானும் படிக்கிறேன். நமக்கு இந்த மேல் பூச்செல்லாம் பிடிக்காது. கொத்தா பிடிச்சு புடுங்கிரனும். (பிரச்சினையோட ஆணிவேரை சொன்னேங்கண்ணா)
இங்கே ஐ மீன் உலகத்துல எல்லாமே பொய். தாளி சாவறது ஒன்னுதேன் நிஜம். காந்தியும் செத்தாகனும்.கோட்ஸேவும் செத்தாகனும். பணக்காரனும் செத்துத்தான் ஆகனும்.ஏழையும் செத்துத்தான் ஆகனும். இடையில உள்ளதெல்லாம் பொய். அப்பன்,ஆயி,அண்ணன் ,தம்பி,கொள்கை ,லட்சியம் எல்லாமே பொய்.Read More

Sunday, October 24, 2010

மகாஅவதார் பாபா அரவிந்தர் ஒற்றுமை + பக்தாள் மடமை


பாண்டிச்சேரி ஆரோவில் தெரியுமில்லை? அந்த ஆசிரமத்தின் ஸ்தாபகர் அரவிந்தர் பத்தி மஸ்தா பீலா விடறாய்ங்க. ஓரளவு அறிவுப்பூர்வமா எழுதக்கூடிய திருப்பூர் கிருஷ்ணனோட ஆசிரயத்துல வர்ர அமுதசுரபி கூட இதுக்கு விதி விலக்கில்லை.

ஆனால் அரவிந்தரோட லைஃப பார்த்திங்கனா மொதல்ல சுதந்திர போராட்டம், அதுவும் ஹிம்சா மார்கம் .ஷாட் கட் பண்ணா ஜெயிலு. டர்ராயிட்டு ஆன்மீகத்துக்கு தாவிட்டாரு போல.

ஒழியட்டும் அதைப்பத்தி இப்ப கேள்வி இல்லை. அவரு ஆசிரமம் கட்டி கோலோச்சற சமயத்துல இன்னா சொல்லிக்கினு இருந்தாரு தெரியுமா? இது நாள் வரை வாழ்ந்த மகான்கள் எல்லாம் உயிரளவுல தான்  இறவா/பிறவா  நிலை பத்தி பேசியிருக்காய்ங்க. ஆனா நான் உடலளவுலயும் இறவா நிலையை  எய்த போறேன்.

இதன் விளைவாக அவர் இறந்த பிறகும் அவர் உடலை புதைக்காம வச்சிருந்தாய்ங்க. மறுபடி அவர் ஆத்மா வந்து அவரோட பூத உடல்ல பூந்துக்கும்னு காத்திருந்தாய்ங்க

பாடி நாறிப்போக ஆரம்பிக்கவே வேற வழியில்லாம புதைச்சு தொலைச்சாய்ங்க.ஆனால் இதையெல்லாம் வசதியா மறந்துட்டு ,மறைச்சுட்டு  இஷ்டத்துக்கு ரீல் சுத்தறாய்ங்க. சனம் இதையும் நம்புது.

மஹா அவதார் பாபானு ஒரு கதை சொல்றாய்ங்க. திரையுலக பாபா ரஜினி உபயத்துல இவர் பிரபலமானார். இவரு 2000 வருஷமா பூத உடலோட இருக்காருன்னு சுத்தி விட்டாய்ங்க.

அடங்கொய்யால ஹ்யூமன் பாடி மொபைல் ஃபோன் மாதிரி. ஆத்மா சிம் கார்டு மாதிரி. மொபைல் சிதறிப்போனாலும் சிம் ஒர்க் ஆகுதுன்னா அதுல லாஜிக் உண்டு. மொபைலுக்கு அழிவே இல்லைன்னா எங்கன போயி முட்டிக்கிறது. இயற்கையோட ஆதார விதியையே புறக்கணிக்க சாமானியர்கள் ட்ரை பண்ணலாம் ( ஹேர் டை, பொய்ப்பல் எட்ஸெட் ரா - ஞானிகள் ட்ரை பண்ணலாமா? அப்படிபண்ணினவுகளை ஞானினு சொல்லமுடியுமா? )

உண்மையான மகான்கள் இந்த மேட்டர்ல ரெம்ப தெளிவா இருந்திருக்காய்ங்க. உ.ம்  ரமண மகரிஷி . இந்த கேட்டகிரில வர்ர ஒரு மகானை பத்தி ஒரு தொடர்பதிவு போட உத்தேசம் . அதனோட முதல் அத்யாயத்தை இப்ப படிங்க.


"எந்தரோ மஹானுபாவுலு அந்தரிகி வந்தனமு "

"தைவம் மனுஷ்ய ரூப்பேணா" ங்கறாப்ல எத்தனையோ மகான்கள் பிறந்திருந்திருக்காய்ங்க..வாழ்ந்திருக்காய்ங்க. இன்னைக்கும் வாழ்ந்து க்கிட்டிருக்காய்ங்க. அவிக குமுதம் காரன் கிட்டே ஒப்பந்தம் போட்டு ஸ்பான்சர்ட் சீரியல் எல்லாம் எழுதமாட்டாய்ங்க. இன்னைக்கு சனம் தலைக்கு மேல வச்சு கொண்டாடற உண்மையான மகான்கள்ள பலர் அவிக வாழ்ந்த காலத்துல ஒரு சின்ன வட்டத்துக்குள்ளயே அடங்கி போயிருப்பாய்ங்க.  இன்னைக்கு ஷீர்டி பாபாவோட ஃபோட்டோஸுனு செலாவணில உள்ள படங்களை பார்த்தா ரெம்ப ஹேண்ட்சம்மா இருப்பாரு. ஆனால் நான் ஷீர்டி போனப்ப அவரோட ஒரிஜினல் படத்தை அங்கன பார்த்தேன். வா.வெ.

தேடுங்கள் கிடைக்கப்பெறுவீர்கள்ங்கறாப்ல தேடறவனுக்கு தான் கிடைக்கும். எவனுக்கு எந்த க்ஷணம் கிடைக்குமோ அந்த க்ஷணம் தான் கிடைக்கும். சில சமயம் தேடாமயே திணிக்கப்படும் . இன்னைக்கு ஸ்வாமி நித்யானந்த பாபாங்கற பார்ட்டிய பத்தி பார்ப்போம்.

(திடீர்னு எதுக்கு இந்த பாபாவை திணிக்கறே. ஜோதிட சாஸ்திரமர்மங்கள் என்னாச்சுனு கேப்பிக நாளைக்கு சொல்றேன்)

ஓப்பனிங் ஷாட்

கேரள மானிலம். கோழிக்கோடு . கோராப்பூர் நதி அருகே துனேரி கிராமம். அங்கன சத்து நாயர், உண்ணியம்மாள் தம்பதி. அவிகளுக்கு ஏற்கெனவே எட்டு குழந்தைகள் பிறந்து அதுல 3 இறந்தும் போயிருக்கு.

அதே ஊர்ல டி.ஆர் ஈஸ்வர அய்யருன்னு ஒரு லாயர். குடும்பி. ஒரு கோவிலும்  கட்டி வச்சிருந்தாரு. மேற்படி சத்து நாயர், உண்ணியம்மாள் தம்பதி ஈஸ்வர அய்யர் கேர் ஆஃப்ல  இருந்துக்கிட்டு  வீடு ,கோவில் தொடர்பான எல்லா வேலைகளையும்  பார்த்துக்கிட்டிருந்தாய்ங்க.

ஒரு நாள். துனேரி,பூர்காரி நதிகள்ள  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுது. அப்போ உண்ணியம்மாளுக்கு மும்மூர்த்திகள் வந்து கோராப்பூர் நதில குளிக்கிறாப்ல ஒரு கனவு வருது. தூக்கம் கலைஞ்ச பிற்பாடும் குழந்தை அழுகுரல்  கேட்குது. கணவன் மனைவி ரெண்டு பேரும்  அழுகை ஒலி வந்த திக்கை நோக்கி போக சிவன் கோவில்ல ஒரு குட்டிபாப்பா. பாம்பு படம் விரிச்சு  குடை பிடிச்சிக்கிட்டிருக்கு.

பாம்புக்கும் ஞானி/தியானிக்கும் ஒரு தொடர்புண்டு. ராகு,கேது கிரகங்களை பாம்போட இரு பாதிகளாத்தான் உருவகப்படுத்தியிருக்காய்ங்க. கேது ஞான காரகன். ஒருவன் ஞானமடையனும்னா கேது சுபபலமா இருக்கனும். (ஜெயேந்திர சரஸ்வதி ஜாதகத்தை ஒரு தாட்டி பார்த்திருங்க - பயந்துருவிங்க) .கேது சுபபலமா இருந்தா லோகாயத வாழ்க்கை ஷெட். ஆனால் ஆன்மீக வாழ்க்கை துலங்கும்.

ஒரு குழந்தையோட ஜாதகத்துல ராகு, கேதுக்கள் பரமோச்ச நிலையில் ,சுப பலமா இருந்தா இப்படி பாம்பு படமெடுத்து நிழல் தர்ரதெல்லாம் ஜுஜுபி. பெண்கள் ஜாதகத்துல கடுமையான சர்ப்பதோஷமிருந்தா அவிக விலக்கான போது உடுத்தியிருந்த உடைமேல பாம்பு விழுந்து புரள்றதும் உண்டு.

வியாக்யானம் போதுமா மேட்டருக்கு வருவோம். பாம்போட பட நிழல்ல உள்ள குழந்தைய பார்த்ததும் ஒடனே ஈஸ்வர அய்யருக்கு தகவல் சொல்றாய்ங்க. அவர் டெம்ப்ரரியா உங்க குடிசையில இருக்கட்டும் நாளைக்கு விசாரிச்சு பார்க்கலாம்ங்கறாரு.  சுத்துவட்டாரத்துல எவருக்கும் லேட்டஸ்டா குழந்தை பிறந்ததா தகவலே கிடையாது.

சத்து நாயர், உண்ணியம்மாள் தம்பதியே அந்த குழந்தைய வளர்க்கறாய்ங்க. ஈஸ்வர அய்யரோட ஃப்ரெண்ட் ஒருத்தர் ராமன் என்று பேர் வைக்கிறார்.  ராமன் அய்யர் பசங்களோடயே விளையாடிக்கிட்டு வளர்ர்ரான்.

இதற்கிடையில் சத்து நாயர் எங்கயோ மரம் வெட்ட போய் வீட்டுக்கு வந்து செத்துப்போயிர்ராரு.

ஒரு தாட்டி அய்யர் வீட்டுக்கு சம்பூத்ரி நாத்ங்கற ஜோசியர் ஒருத்தர் வரார். அவரு ராமனை பாத்துட்டு " எதிர்காலத்துல இவன் பெரியமகான் ஆவான்"ன்னு சொல்றார்.

இதை ஜாதகத்தை வச்சி சொல்றத விட கைரேகைய வச்சு ரெம்ப சிம்பிளா சொல்லிரலாம். ஆட்காட்டி விரல் இருக்குதா.. அந்த விரலுக்கு கீழே உள்ள பார்ட்டை குரு மேடுங்கறோம். அந்த குரு மேட்டுல தலைகீழா போட்ட ஒரு ப்ராக்கெட் மாதிரி ஒரு ரேகை இருக்கும். இதை குருவளையம்னு சொல்றோம்.

கமிங் டு தி ஸ்டோரி. (சாரி பயோகிரஃபி) ராமனுக்கு ஞானம் வந்து அவன்(ர்) மகான் ஆறதுக்கு முந்தியே மகோதரம்ங்கற ( வயிறு பெருத்துரும்)  வியாதி வந்துருது. எத்தனை வைத்தியம் பார்த்தாலும்  நோ யூஸ். ராமனோட வயிறு  வீக்கம் மட்டும் வடியவே இல்லை.( அவர் தன் பூத உடலை உதிர்க்கிற வரை அப்படியேதான் இருந்தது)

நித்யானந்த பாபாவோட வரலாறை  அப்பப்போ ஒரு பதிவு போட்டு நிறைவு செய்ய உத்தேசம். இதுக்கும் அவரே தான் கோ ஆப்பரேட் பண்ணனும். பார்க்கலாம்.