'>

Friday, December 23, 2011

பிட்டு படம் பார்த்த அனுபவம்


அண்ணே வணக்கம்ணே !

நாலாம் க்ளாஸ் படிக்கறச்சயே "பருவம்"படிச்ச கேஸு நாம. அல்லாமே ரெண்டு வருசத்துல போரடிச்சுரும். இப்படி பல விஷயங்களை தொட்டதுண்டு, அப்பாறம் விட்டதும் உண்டு. அப்படிப்பட்ட பட்டியல்ல ஒன்னுதேன் பிட்டுப்படம்.

நம்ம ஊருல ஒரு தியேட்டர் மொக்கையாயிட்டா நஷ்டத்தை சமாளிக்க ரெண்டு மூனு வழிதேன்.ஒன்னு எம்.ஜி.ஆர்,சிவாஜி பழைய படங்கள்,ரெண்டு என்.டி.ஆர் ,ஏ.என்.ஆர் பழைய படங்கள் போடனும். இல்லாட்டி பிட்டுதேன்.

பிட்டு படம் ஓட்டறது - பார்க்கிறதுல்லாம் அல்லா ஊர்லயும் ஒரே மாதிரிதான் இருக்கும்னு நினைக்கிறேன்.
இருந்தாலும் அனுபவங்களை மேட்ச் பண்ணி பார்த்துக்க வசதியா இந்த பதிவு. இந்த படத்துக்கெல்லாம் பிகின் பண்றதுக்கு ஒரு டைம் -இன்ட்ரோலு - ஊட்டுக்கு உடறதுல்லாம் இருக்காது.

மெயின் பிக்சர் ஒரு நல்ல படமா கூட இருக்கலாம். ஆனால் அதுக்கான போஸ்டர் புதிய தலைவரின் "எழுச்சி உரை" மாதிரி பம்பார்டா இருக்கும். பத்துமணியிலருந்து சட்டசபைக்கு எம்.எல்.ஏங்க கணக்கா பார்வையாளர்கள் வந்துக்கிட்டே இருப்பாய்ங்க. ஆனால் லைட்ஸ் ஆஃப் ஆனபிற்காடுதேன் என்ட்ரியே கொடுப்பாய்ங்க.

சுமாரா கூட்டம் சேர்ர வரைக்கும் மெயின் படம் தேமேன்னு ஓடிக்கிட்டிருக்கும். கூட்டம் ஒரு மாதிரியா சேர்ந்து இனி ஆரும் வரமாட்டாய்ங்கன்னு ஆப்பரேட்டர் முடிவு பண்ணிட்டா பிட்டை தூக்கி கோர்த்துவிடுவாரு.

தொந்தியும் தொப்பையுமா ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அவசர அவசரமா- அப்பப்போ கேமராவை திரும்பி பார்த்துக்கிட்டு கெ.கா செய்வாய்ங்க.ஆண் பெண்ணுன்னு சொல்றது ஒரு உத்தேசமான அவுட் லைனை வச்சுத்தேன். இன்னைக்கு ? வாழ்க தகவல் தொழில் நுட்பம். பிட்டு முடிஞ்சதும் தலைவர் பேச்சுக்கு பின்னான மாநாடு கணக்கா சனம் படக்குனு காலியாயிருவாய்ங்க. செக்ஸும் குழந்தை பிறப்பும் -குப்த ஞான் - எய்ட்ஸ் & பால்வினை நோய்கள் இதெல்லாம் வேறு சாதி.

இப்படி பிட்டு படத்துக்காகவே ஒரு தியேட்டர் சுடுகாட்டை தாண்டி இருந்தது.செகண்ட் ஷோ போறச்ச சுடுகாட்டுக்குள்ளாற போயி போனா "சுருக்க" போயிரலாம்னு கூட்டாளிகளை ஏமாத்தி சமாதிகள் மேல உட்கார்ந்து பஞ்சாட்சரி சொன்ன நாட்களும் உண்டு.

பிட்டு கதை இதோட முடிஞ்சுரலை. இப்பத்தேன் அசலான விஷயத்துக்கு வரப்போறேன். பேசும்போது பிட்டை போடறதை பத்தி கொஞ்சம் பேசுவம். பேசும் போது பிட்டை போடலாம் .ஆனால் ஆளுக்கேத்த பிட்டா போடனும் !

ஆளுக்கேத்த பிட்டா போடனும்ங்கற பாய்ண்டை பார்த்துட்டு சந்தர்ப்ப வாதம் பண்ண சொல்றதா நினைச்சுராதிங்க.

சினிமா உலகத்துல நேட்டிவிட்டின்னு ஒரு சமாசாரத்தை பத்தி மஸ்தா பேசுவாய்ங்க. நீங்க பேசற மேட்டரு எதிராளிக்கு அன்னியமா தோனாம அட நமக்கு சம்பந்தப்பட்ட மேட்டரா இருக்கேன்னு தோனும்படி பேசனும்.அதைத்தேன் ஆளுக்கேத்த பிட்டா போடனும்னு சொன்னேன்.

சட்டியிலிருந்தாதானே அகப்பையில வரும் - இது மேட்டரு. இதை ஒரு டூவீலர் மெக்கானிக்குக்கு சொல்லனும்னா "டாங்குல இருந்தாதானே கார்ப்பெட்டர்ல வரும்"னு சொல்லனும் .( கார்ப்போரேட்டர் - இது சரியான உச்சரிப்பு -ஆனால் இப்படி உச்சரிச்சா நீங்க அன்னியமாயிருவிக)

லைஃப்ல பாலன்ஸ் பண்ணிக்கிட்டு போகனும்னு ஒரு தாய்குலத்துக்கு சொல்றாப்ல இருந்தா தயிர் குழம்புல இஞ்சி போடறோம் சாம்பார்ல பெருங்காயம் போடறோம் ஏன்? தயிர் சீதளம் இஞ்சி சூடு. பருப்பு வாயு. பெருங்காயம் அதை சால்வ் பண்ணும்னு சொல்லனும்.

ஆளுக்கேத்த பிட்டா போடனும்ங்கற யதார்த்தத்தை நான் உணர்ந்துக்கிட்டது டீன் ஏஜ்லன்னா ஆச்சரியபடுவிங்க.ஆனா இது நெஜம். அந்த காலத்துல நம்ம கொலிக்ஸ் எல்லாம் "பலான" மேட்டர்னா உடனே வாயை பொளப்பாய்ங்க.

ஆனால் நாம வர்ஜியா வர்ஜியமில்லாம படிச்சுட்டு கண்டதையும் ரோசிச்சு கண்டதையும் கண்டுபிடிச்சுக்கிட்டிருப்பம். அதை பகிர்ந்துக்கிட்டா அது நம்ம மனசுல பச்சக்குனு பதியும்.எப்படி பகிர்ந்துக்கறது?

உன்னதமான மேட்டரை கூட பலான உவமான உவமேயங்களோட சொல்ல ஆரம்பிச்சம். ஃபார்முலா சூப்பர் சக்ஸஸ். (அதை இப்பயும் கன்டின்யூ பண்ண வேண்டி இருக்கிறது சோகம்) சொல்ல வேண்டிய ஃபார்ம் எவ்ளோ முக்கியமோ சொல்ல வேண்டிய மேட்டரை ஷேப் அப் பண்ணிக்கிறது ரெம்ப முக்கியம். இதுக்கு ரோசிக்கனும்.

அதென்னமோ நமக்கு ரோசிக்க வேண்டிய அவசியமே இல்லாம மைக்ரோ செகண்ட்ல ஸ்பார்க் ஆகும்.
இன்னைக்கு ஒரு கேள்வி.மாமியாரு அடிமை மாதிரி நடத்தறாய்ங்க.கேவலமா பேசறாய்ங்க. இதுக்கு என்ன பரிகாரம்?

ஒரு கருப்பு கயிறு எடுத்துக்க அதுல ஒரு சங்கை கோர்த்துக்க . அதை கழுத்துல மாட்டிக்க. இப்படி இன்னம் ரெண்டு கயிறு ரெடி பண்ணி வீட்டு வாசல், வாகனத்தோட பம்பருக்கு கட்டிக்க. ஒரு ப்ளூ நிற ப்ளாஸ்டிக் உண்டியல் வாங்கிக்க.அது மேல வராக ஸ்வாமி படத்தை பேஸ்ட் பண்ணு. வாராவாரம் 8 ரூ உண்டியல்ல போட்டுக்கிட்டே வா. பிரச்சினை தீர்ந்தா அந்த பணத்தை திருமலை வராகஸ்வாமி உண்டியல்ல சேர்த்துருன்னு சொல்ட்டு கழண்டுக்கிட்டோம்.

இதுல உள்ள லாஜிக் என்ன? மொத்தத்துல பிரச்சினைக்கு எந்த கிரகம் காரணம்னு ரோசிச்சு சொல்றவுகளுக்கு ஜோதிடம் 360 பாம்லெட் இலவசம்.



No comments: