'>

Sunday, January 23, 2011

சுக்கிர செவ்வாய் சேர்க்கை: கில்மாவுக்கு ஆப்பு

சுக்கிரனுடைய காரகத்வத்தையும், செவ்வாயுடைய காரகத்வத்தையும் ஒரு ஓட்டு ஓட்டீங்கன்னா இந்த சேர்க்கையோட விளைவு என்னனு புரிஞ்சுரும்.

மொதல்ல பாசிட்டிவ்:

செவ்- வீட்டு மனை  சுக் - வீடு,  செவ்- மரம்  சுக் -ஃபர்னிச்சர், செவ்-  நெருப்பு சுக் -விருந்து

இப்ப நெகட்டிவ்:

செவ்-ரத்தப்போக்கு  சுக் - இன உறுப்பு , செவ்- யுத்தம்   சுக் - காதல் , செவ் - போர்க்களம் சுக்: பெட் ரூம் , செவ் - சகோதரர்கள் சுக் - மனைவி/காதலி , செவ் -கோபம் சுக் - கில்மா,


சுக்கிர செவ்வாய் சேர்க்கையால  ஊடல்ல இருந்து மஹிளா ஸ்டேஷன்ல புகார்,ஃபேமிலி கோர்ட்ல விவகாரம் வரை நடக்குது.   சிலர் விஷயத்துல கைனகாலஜிக்கல் காரணங்களால் அறுவை  சிகிச்சைய கூட தருது.

இதுக்கு பரிகாரம்:

பெட் ரூம்ல யுத்த காட்சி கொண்ட சீனரிகள் வைக்கலாம். வசதி இருந்தா சரித்திர படம் செட்டிங் மாதிரி ஒரு கேடயத்துல ரெண்டு வாட்களை கூட வைக்கலாம். கணவன் மனைவி மார்ஷல் ஆர்ட்ஸ் ப்ராக்டிஸ் பண்ணலாம் (முடியாதவுக தலையணை சண்டை போடலாம்-  தலையணைல வாள் படம் எம்பிராய்டரி பண்ணிருங்க) . மெழுகை உருக்கி கலை பொருள் தயாரிக்கிற (பத்திக்?) முயற்சி செய்யலாம். இந்த சேர்க்கை எந்த பாவத்துல ஏற்பட்டிருக்கோ அதுக்குரிய அங்கத்தின் மீது ஆயுதங்களின் வடிவங்களை பச்சை குத்திக்கலாம்.

 நெற்றி அ கண்ணத்தில் வாட்டர் கலரில் ஏதேனும் ஒரு ஆயுதம் வரைந்து கொள்ளலாம். அ இந்த வடிவத்தில் ஸ்டிக்கர் பொட்டு கிடைத்தால் ஸ்ரேஷ்டம். லட்சுமி நரசிம்மரை வழி படவும்( மடியில லட்சுமி மஸ்ட்). இடுப்புல அரணாக்கயிறுல ஏதேனும்  ஆயுத வடிவ டாலர் அணியவும்.

எச்சரிக்கை:
அண்ணே .. இது பொதுப்பலன் தேன். பை மிஸ்டேக் உங்க ஜாதகத்துல இந்த சேர்க்கை இருந்தா உஅனே டர்ராயிராதிங்க. உங்க லக்னம் எது, லக்னத்துக்கு சுக்கிரன் செவ்வாய்ல யாரு யோககாரகர்,யாரு பாவி இப்படி 108 பாய்ண்ட்டை அலசித்தேன்  முடிவு பண்ணனும் ..

1 comment:

Unknown said...

சனி தொடர தொடருங்கோஓ