'>

Tuesday, January 4, 2011

லக்னாதிபதி உச்சமானா? ப்ளஸ் & மைனஸ்

லக்னங்கறது ஜாதகத்துக்கு கடைக்கால் மாதிரி. ஜாதகத்துல எத்தீனி யோகம் இருந்தாலும் லக்னாதிபதி டுபுக்காகியிருந்தா ஒரு இழவும் கைக்கும் வந்து சேராது. அதே நேரத்துல ஜாதகம் சுமாரா இருந்தாலும் லக்னாதிபதியோட பலத்துல சமாளிச்சுர்ரதே இல்லை சாதிக்கவும் முடியும்.

லக்னங்கறது நம்ம நிறம்,மணம்,குணம், உடல்,மனம்,புத்தி ஆரோக்கியம்,பொறுமை,முடிவெடுக்கும் திறன்  எல்லாத்தயும் காட்டற இடம். மற்ற 11 பாவங்களோட சுருக்கம் இது.

ஆக லக்னாதிபதி உச்சம் பெற்றால் அது மினிமம் கியாரண்டி ஜாதகம்னு கண்ணை மூடிக்கிட்டு சொல்லிரலாம்.

இதுல ஒரு மைனஸ் பாய்ண்டும் இருக்கு.ஓஷோ சொல்வாரு " நீங்க மத்தவுகளை விட உயர்ந்துட்டா பிரச்சினை அதிகம்"

மத்தவுக குண்டூசி தவறி விழுந்ததுக்கு பதறிப்போயி காட்டுக்கத்தல் கத்த "யார் கால்லயாச்சும் குத்திர ப்போவுதுப்பா மொதல்ல அதை பொறுக்கி எடுத்து அதுக்கான டப்பாவுல போடு"ன்னு சொன்னா எதிராளிக நொந்துபோய்ருவாய்ங்க

மேலும் எதிர்காலத்துல நீங்க என்னவா மாறப்போறிங்களோ இளமையில  அதுவாவே இருப்பிங்க இதை சாமானியர்கள் டைஜஸ்ட் பண்ணிக்க முடியாம நொந்துப்போயிருவாய்ங்க. உங்களை நோகடிக்கவும் கூடும்.

No comments: