'>
Showing posts with label lagnam. Show all posts
Showing posts with label lagnam. Show all posts

Wednesday, March 14, 2012

லக்னம்/லக்னாதிபதி பலப்படுவதால் தீமைகள்


அண்ணே வணக்கம்ணே !

லக்னாதிபதி பலம் பெறலின்னா டாரா கிளிஞ்சுரும்னு நானே பல சந்தர்ப்பங்கள்ள சொல்லியிருக்கன். ஆனால் அந்த சீக்வென்ஸ்ல கண்ணாலம் பத்தியோ - மேரீட் லைஃபை பத்தியோ முக்கியமா ஆன்மீகத்தை பத்தியோ பாய்ண்டே ரெய்ஸ் ஆகியிருக்காது.

லக்னாதிபதிங்கறவர் எந்த அளவுக்கு பலம் பெற்றால் ஜாதகருக்கு அந்த அளவுக்கு செல்ஃப் என்ற "சுயம்" இருக்கும்.

இதை இந்த உலகத்துல அன்னாட பொயப்புக்காக "என்னா வேணம்னா" செய்ய தயாரா இருக்கிற அல்லக்கைங்க புரிஞ்சுக்காது. இதை அகங்காரம் -ஈகோன்னு சொல்லிருவாய்ங்க. மத்த கிரகங்கள் பேர் சொல்லும் நிலையில இருந்து இந்த ஜாதகர்கள் சொந்த தொழில் -சொந்த வியாபாரம் கு.பட்சம் ஒரு டீம் லீடர்,டிப்பார்ட்மென்டல் ஹெட் மாதிரி செட்டில் ஆயிட்டா பிரச்சினை வராது.

மத்த கிரகங்கள் ஆப்படிச்சிட்டிருந்தா பார்ட்டி என்னவோ சாதாரண லேபரா இருப்பான். ஆனால் அவனோட செல்ஃப் /சுயம் பக்காவா இருக்கும். லக்னாதிபதி நைசர்கிக சுபனாக இருந்து லக்னாத் பாபனாக இருந்தா தப்பு தண்டாவுக்கு போகமாட்டான். ஆனால் எவனும் இவனை நம்பமாட்டான். இவன் லைஃபே ஒரு பேத்தடிக் ஸ்டோரியா இருக்கும். Read More

Thursday, November 17, 2011

ராசியா? லக்னமா?



ஜாதகத்தை அனலைஸ் பண்ணும்போது,தசாபுக்திகளுக்கான பலனை கணிக்கும்போது லக்னத்தையும்,கோசார பலனை கணிக்கும்போது ராசியையும் பேஸ் பண்ணிக்கனுங்கறது அடிப்படை விதி. அதே சமயம் ராசியாதிபதி,லக்னாதிபதி ரெண்டு பேர்ல ஆரு பலம்மா இருக்காய்ங்கனு பார்த்து ஒர்க் அவுட் பண்ணனும்னுல்லாம் நேத்து சொல்லியிருந்தேன்.

ஒரு வேளை ராசியாதிபதி -லக்னாதிபதி ரெண்டு பேரும் பலம்மா இருந்தா ஆரை பேஸ் பண்றதுன்னு சிண்டை பிச்சுக்கனும் -அனுபவத்தை வச்சுத்தேன் டிசைட் பண்ணனும்னு சொல்லியிருந்தேன். இந்த மேட்டர்ல மொத பேஷண்ட் நாமதேன்.

நம்முது கடகலக்னம்,சிம்மராசி. லக்னாதிபதியான சந்திரனும் -ராசியாதிபதியான சூரியனும் பரிவர்த்தனம் அடைஞ்சிருக்காய்ங்களா.. ஒவ்வொரு சனி பெயர்ச்சி,குரு பெயர்ச்சிக்கும் அது அனுகூலமா பிரதிகூலமான்னு சிண்டை பிச்சுக்கறதே வேலை.

ராசிய வச்சு பார்த்தா 3 ல சனி வேலை செய்யனும். லக்னத்தை வச்சுப்பார்த்தா 4 ல சனி வேலை செய்யனும். சமீபத்திய அனுபவங்களை வச்சுப்பார்த்தா ரெண்டுமே வேலை செய்யறது.

3-ல் சனி:

தினத்தந்தியில 2007 ஏப்ரல்ல சேர்ந்ததுலருந்தே வீட்டு நிர்வாகம் மொத்தத்தையும் மகளுக்கு கொடுத்து விட்டாச்சு. அதனால கொஞ்சம் பொளச்சம். தினசரி தாதா மாமூல் கணக்கா காலை 30 மாலை 30 வாங்கி அதை மட்டும் அழிக்கிறது. அப்படியும் ரெண்டு தாட்டி பல்லு கட்டி மொக்கை. இப்பம் 3 ஆவது.

போன மாசம் (2-ல் சனி இருக்கிறச்ச) பொஞ்சாதியும் மகளும் ஏதோ கண்ணாலத்துக்கு போனாய்ங்க.மறு நாள் திரும்பிர்ரதா திட்டம். நமக்குன்னு பாப்பா ரூ.100 வச்சுட்டு போனாள். தாளி எதையாச்சும் உருப்படியா பண்ணா என்னன்னு வண்டியோட சைலன்ஸரை க்ளீன் பண்ண விட்டேன். அந்த பிக்காலி நம்ம தொப்பைய,முகத்துல தேஜஸை பார்த்து பார்ட்டி தாங்கும்டான்னுட்டு ஆயில் மாத்தினேன், ஸ்விட்சை மாத்தினேன்னு ரூ.300 க்கு பில்லை தீட்டி விட்டுட்டான். பல நாளைக்கப்பாறம் கை மாத்து வாங்கி சமாளிக்கவேண்டியதாயிருச்சு.

இதுவே சனிப்பெயர்ச்சிக்கப்பாறம் இதே போல ஒரு சந்தர்ப்பம் வந்தப்ப 400 ரூ வரை சர்ப்லஸ் பட்ஜெட்ல இருந்தம். பரவால்லடா மாப்ளே ராசிக்கு 3 ல சனி வேலை செய்றாருன்னு நிமிர்ந்தம். நம்ம பங்காளி ஜா.ராவுக்கு ஏதோ வேலை கிடைச்சுட்டாப்ல இருக்கு. பாவம் நேரமில்லை போல .வீக் எண்ட்ல மட்டும் கமெண்ட் போடறாரு

4-ல் சனி:
இந்த ஊட்டுக்கு பாடிகைக்கு வந்து 1 வருசமாகுது. வந்த நாளே ஊட்டுக்காரவுகளுக்கு நாம போட்ட கண்டிஷன் தனி மீட்டர் போட்டுரனுங்கறது.ப்ரீச் ஆஃப் அக்ரிமெண்ட். சரி ஒளிஞ்சு போவட்டும்னு நாமளே ரூ.2000 கொடுத்தம் ஏறப்போட்டு போட்டுருன்னுட்டம். இதுவரை ஒரு ம..ரும் நடக்கலை. இன்னைக்கு புதுசா தண்ணி விடமுடியாதுன்னுட்டாய்ங்க ( இதுக்கு அடிஷ்னல் சார்ஜு ரூ.300) .வண்டில சைலன்சர் ரெண்டு தாட்டி க்ராக்.கழட்டி -வெல்ட் பண்ணி மாட்டியிருக்கம். வீடு,வாகனம்லாம் நாலாவது இடம்தானே.

நம்ம ப்ளாகையும் ,சைட்டையும் (விதியில்லாம) பார்க்கிற சோதிடப்புலிகாள்! நீங்களே சொல்லுங்க. நமக்கு சனி 3 ல வேலை பார்க்கிறாரா? 4 ல வேலை பார்க்கிறாரா?

Tuesday, January 4, 2011

லக்னாதிபதி உச்சமானா? ப்ளஸ் & மைனஸ்

லக்னங்கறது ஜாதகத்துக்கு கடைக்கால் மாதிரி. ஜாதகத்துல எத்தீனி யோகம் இருந்தாலும் லக்னாதிபதி டுபுக்காகியிருந்தா ஒரு இழவும் கைக்கும் வந்து சேராது. அதே நேரத்துல ஜாதகம் சுமாரா இருந்தாலும் லக்னாதிபதியோட பலத்துல சமாளிச்சுர்ரதே இல்லை சாதிக்கவும் முடியும்.

லக்னங்கறது நம்ம நிறம்,மணம்,குணம், உடல்,மனம்,புத்தி ஆரோக்கியம்,பொறுமை,முடிவெடுக்கும் திறன்  எல்லாத்தயும் காட்டற இடம். மற்ற 11 பாவங்களோட சுருக்கம் இது.

ஆக லக்னாதிபதி உச்சம் பெற்றால் அது மினிமம் கியாரண்டி ஜாதகம்னு கண்ணை மூடிக்கிட்டு சொல்லிரலாம்.

இதுல ஒரு மைனஸ் பாய்ண்டும் இருக்கு.ஓஷோ சொல்வாரு " நீங்க மத்தவுகளை விட உயர்ந்துட்டா பிரச்சினை அதிகம்"

மத்தவுக குண்டூசி தவறி விழுந்ததுக்கு பதறிப்போயி காட்டுக்கத்தல் கத்த "யார் கால்லயாச்சும் குத்திர ப்போவுதுப்பா மொதல்ல அதை பொறுக்கி எடுத்து அதுக்கான டப்பாவுல போடு"ன்னு சொன்னா எதிராளிக நொந்துபோய்ருவாய்ங்க

மேலும் எதிர்காலத்துல நீங்க என்னவா மாறப்போறிங்களோ இளமையில  அதுவாவே இருப்பிங்க இதை சாமானியர்கள் டைஜஸ்ட் பண்ணிக்க முடியாம நொந்துப்போயிருவாய்ங்க. உங்களை நோகடிக்கவும் கூடும்.