'>

Wednesday, March 14, 2012

லக்னம்/லக்னாதிபதி பலப்படுவதால் தீமைகள்


அண்ணே வணக்கம்ணே !

லக்னாதிபதி பலம் பெறலின்னா டாரா கிளிஞ்சுரும்னு நானே பல சந்தர்ப்பங்கள்ள சொல்லியிருக்கன். ஆனால் அந்த சீக்வென்ஸ்ல கண்ணாலம் பத்தியோ - மேரீட் லைஃபை பத்தியோ முக்கியமா ஆன்மீகத்தை பத்தியோ பாய்ண்டே ரெய்ஸ் ஆகியிருக்காது.

லக்னாதிபதிங்கறவர் எந்த அளவுக்கு பலம் பெற்றால் ஜாதகருக்கு அந்த அளவுக்கு செல்ஃப் என்ற "சுயம்" இருக்கும்.

இதை இந்த உலகத்துல அன்னாட பொயப்புக்காக "என்னா வேணம்னா" செய்ய தயாரா இருக்கிற அல்லக்கைங்க புரிஞ்சுக்காது. இதை அகங்காரம் -ஈகோன்னு சொல்லிருவாய்ங்க. மத்த கிரகங்கள் பேர் சொல்லும் நிலையில இருந்து இந்த ஜாதகர்கள் சொந்த தொழில் -சொந்த வியாபாரம் கு.பட்சம் ஒரு டீம் லீடர்,டிப்பார்ட்மென்டல் ஹெட் மாதிரி செட்டில் ஆயிட்டா பிரச்சினை வராது.

மத்த கிரகங்கள் ஆப்படிச்சிட்டிருந்தா பார்ட்டி என்னவோ சாதாரண லேபரா இருப்பான். ஆனால் அவனோட செல்ஃப் /சுயம் பக்காவா இருக்கும். லக்னாதிபதி நைசர்கிக சுபனாக இருந்து லக்னாத் பாபனாக இருந்தா தப்பு தண்டாவுக்கு போகமாட்டான். ஆனால் எவனும் இவனை நம்பமாட்டான். இவன் லைஃபே ஒரு பேத்தடிக் ஸ்டோரியா இருக்கும். Read More

No comments: