'>
Showing posts with label வாஸ்து. Show all posts
Showing posts with label வாஸ்து. Show all posts

Thursday, March 22, 2012

வடகிழக்கில் தெருக்குத்து : அரசியல் தலைமை

அண்ணே வணக்கம்ணே !
உண்மைய சொல்லனும்னா 1984 லருந்தே தாளி தேய் பிறை ஆரம்பிச்சுருச்சு. ஆனால் இது வெளியுலகத்துக்கு தெரியாத அளவுக்குத்தேன் இருந்தது. கொய்யால 1987 ல பிகாம்ல கோட்டடிச்சது -லவ் மேரேஜ்ல கோட்டை விட்டது நடந்த பிற்காடு ஊரே கொல்லுனு ஆயிருச்சு. 1991 வரை கூட தாய் கட்சியில ஒட்டிக்கிட்டிருந்ததால அஜீஸ் ஆயிருச்சு.

1991ல கண்ணாலம் பண்ணிக்கிட்டு வெளிய வந்த பிற்காடுதேன் அப்பாவோட ரகசிய உதவிகளையும் மீறி வறுமை வாட்ட ஆரம்பிச்சுருச்சு. அதுலயும் 1994 ல அப்பா டிக்கெட் போட்டாரா கிளிஞ்சுருச்சு. நேத்திக்கு வாஸ்து பத்தி ஏதோ டச் பண்ணதோட சரி . இன்னைக்கு சொந்தகதையான்னு சலிச்சுக்கிராதிங்க. மேட்டருக்கு வந்துக்கிட்டே இருக்கேன்.

நேத்திக்கு வீட்டின் இன்னபிற திசைகள் திறந்தவெளியாயிருந்து ஈசானியம் (வடகிழக்கு) மூடியிருந்ததால அவதிப்பட்ட ஒரு குடும்பத்தை பத்தி சொல்லியிருந்தேன். நம்ம லைஃப்லயும் ஈசான்யம் மேஜர் ரோல் ப்ளே பண்ணியிருக்கு.

மேலே சொன்ன கேஸ்ல ஒரு பெண் ஒல்லியோ ஒல்லியா துடைப்ப குச்சி மாதிரி இருந்ததுன்னு சொன்னேன். ஈசானியம் குருவுக்குரிய திசை. குரு தான் புத்திர காரகன் -அவருதான் கங்கண காரகன். இந்த பெண் இப்படி கண்ணாலத்துக்கு அன்ஃபிட்டா இருந்ததுக்கும், அடுத்த பெண் பித்து பிடிச்சு அலைஞ்சதுக்கும், ஒரு பையன் மந்திரவாதி பிடியில சிக்கி பொன் பொருள் இழந்ததுக்கும் மத்த திசை ( தெற்கு) திறந்த வெளியா இருந்து ஈசானியம் மூடப்பட்டதே காரணம்.

நம்ம வீட்டை பொருத்தவரை கிழக்கு பார்த்த வாசல் - வடகிழக்குல பெட் ரூம் - அந்த மூலைக்கு நேர் எதிர்க்க தெரு ( தெருக்குத்து) -மாத்தி கட்டறதுக்கு மிந்தி மேற்கு திசை திறந்த வெளி - ஈசானியம் மூடியிருந்தது.

இதனோட எஃபெக்ட் என்னடான்னா அப்பா கண்ணாலம் கட்டிய பிரம்மச்சாரி ( ஆந்திராவுல அத்தீனி ஜில்லாவுக்கும் ட்ரான்ஸ்ஃபர் ஆகி கேள்வி கேட்காம போயி வேலை பார்த்த கேசு ) ஒரு சித்தப்பு சின்னவயசுல கண்ணாலமாயிட்டாலும் குழந்தை வரம் கேட்டு அலைஞ்சுக்கிட்டு கிடக்க, இன்னொரு சித்தப்பு பெண் பார்க்க விசிட் அடிக்காத ஊரே கடியாது.

கடேசியில அவரு ஓகே பண்ணின பெண்ணை வர்ணிச்சா அவர் ஆத்மா ராத்திரிக்கு வந்து லொள்ளு பண்ணும். இப்பமே கிரக நிலை சரியில்லாம பேஸ்தடிச்சு கிடக்கோம்.எதுக்கு வம்பு.

அத்தைய பொருத்தவரை மாப்பிள்ளை ஓகே. அவரோட ஃபேமிலி எலுமிச்சம்பழம் மொத்தவியாபாரம்னு சொன்னாய்ங்க. அப்பாறம் பார்த்தா கூடையில விக்கிறவுகளாம். (இதை ஈடு கட்ட சாகிற வரை அப்பா படியளந்துக்கிட்டே இருந்தது வேறு கதை)

நம்ம தலைமுறைக்கு வரும்போது பெரிய அண்ணனோட மேரீட் லைஃபும் ட்ரபுள் சம் தேன். அண்ணி வாடகை வீட்டு கக்கூஸுல கட்டெறும்பு வருதுன்னு தாய் வீட்டுக்கு போயிட்டாய்ங்க .அப்பாறம் அஜீஸ் ஆயி லைஃபை ஆரம்பிச்சாய்ங்க வி.ஆர் .எஸ் வாங்கின பிற்காடு ஹார்ட் அட்டாக்ல டிக்கெட்டு.சின்ன அண்ணன் லேட் மேரேஜுக்கு பிற்காடு நடு வயசுல ப்ளட் கான்சர்ல டிக்கெட். நம்ம கதை தெரிஞ்சது தானே. மொதல் கண்ணாலம் ஃபணால். ரெண்டாவது 16 வருசம் உஞ்ச விருத்தி . தம்பிக்காரன் கதை டிஃப்ரன்ட். படக்குனு பெப்டிக் அல்சர் வந்து ரத்தவாந்தில்லாம் எடுத்திருக்கான்.

இத்தனைக்கும் காரணம் மேற்கு திசை திறந்திருந்து வடகிழக்கு மூடியிருந்ததுதேன். தாளி வீட்டை இடிச்சு கட்டின பிற்காடு மேற்கு திசையில உள்ள கிணற்றுக்கு சூரிய வெளிச்சம் வரணும்னு கூரையில கம்பி சன்னல் வச்சாய்ங்க.மழை விட்டும் தூவானம் விடலைன்னா இதான் போல.

வடகிழக்கு திசைய பத்தி சொல்லனும்னா இன்னம் பத்து பதிவு போடனும். இன்னம் பல மேட்டர்லாம் இருக்கு. இன்னொரு சந்தர்ப்பத்துல நிச்சயமா சொல்றேன்.

டாப் சீக்ரெட்: வடகிழக்குல தெருக்குத்து இருந்தா அந்த வீட்ல இருந்து ஒரு மக்கள் தலைவன் புறப்பட்டே ஆகனும். நம்ம ஜாதகத்துல குரு வேற உச்சம். பாவத்துல குருவோட சந்திரன் வேற சேர்ந்துக்கறாரு. வெய்ட் அண்ட் ஸீ..



Wednesday, March 21, 2012

வடகிழக்கு மூடி இருந்தால் பைத்தியம் ?

அண்ணே வணக்கம்ணே !
வாரத்துல மொத 3 நாள் நாட்டு நடப்பு - அடுத்த 3 நாள் தேன் சோசியம்னு ஒரு விதிய வச்சுக்கிட்டு ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டிருக்கோம்.

நிறைய பேரு சோசியத்தை ஒரு சாங்கியமா பார்க்கிறாய்ங்க. ( திமுகவுல பொதுக்குழு செயற்குழு கூட்டற மாதிரி) இவிக எடுக்கிற முடிவுக்கு சோசியர் ஓகே சொல்லனும்னு நினைக்கிறாய்ங்க.

இந்த மயித்துக்கு எதுக்கு சோசியம் பார்க்கனும்? லைஃப்ல ஒரு ஜங்சன் பாய்ண்ட் வந்து - எந்த பக்கம் ஒடிச்சு திருப்பலாம்னு ஒரு பஜில் வந்து - முடிவெடுக்கிற வாய்ப்பிருக்கும் போது சோசியம் கேட்கலாம்.

நம்மாளுங்க எப்டின்னா லைஃப்ல பயங்கரமா கமிட் ஆகியிருப்பான். அவனா போட்டுக்கிட்ட எல்லைக்கோட்ல இருந்து ஒரே ஒரு மைக்ரோ மிமீ கூட வெளிய வர முடியாது.ஆனால் சோசியம் கேப்பான்.

மருந்து மாத்திரை வாங்கி சாப்பிடற நிலை இருந்தா டாக்டர் கிட்டே போகனும். அப்பம் நோயும் குணமாகும் .டாக்டருக்கு நெல்ல பேரு.

பத்து வருசத்துக்கு மிந்தி ஒரு வீட்டுக்கு வாஸ்து பார்க்க கூட்டுப்போனாய்ங்க.

தெற்கு பார்த்த வீடு. அப்பம் தெற்குல தெரு இருக்கும்.அது காலியிடத்தின் கீழ் வரும்.

வீட்டுக்கு கிழக்கு வடக்குல காலியிடம் இருந்தா மட்டும் நெல்லது. மத்த திசைகள்ள காலியிடம் இருந்தா நெல்லதில்லை. ஞா இருக்கா?

நைருதியில மாடிப் படிக்கட்டு (ஓகே) ஆக்னேயத்துல பாத்ரூம் ,லேவட்ரி (அதுங்கீழவே செப்டிக் டாங்க்)

சைட்ல தெற்கு பாகம் ஏறக்குறைய காலி. வடக்கு பாகத்துல கன்ஸ்ட்ரக்சன். ஈசான்யம் ச்சொம்மா இரும்பு பொட்டி கணக்கா மோல்டிங் போட்டு கிடக்கும்.

செப்டிக் டாங்க் வெட்ட இருக்கிறது ரெண்டே சாய்ஸ்.

1.வடக்கு சென்டர் 2.கிழக்கு சென்டர்

மத்த எந்த பாகத்துலருந்தாலும் தாளி பல்புதேன். இங்கன ஆக்னேயத்துல இருக்கு. இது பெண்களை காட்டும் திசை. இங்கன பள்ளமிருந்தால் பெண்கள் கடும்மையா பாதிக்கப்படுவாய்ங்க.

வீட்டின் எந்த பாகமாவது திறந்த வெளியாக இருந்து ஈசான்யம் மூடிக்கிடந்தா வேற வம்பே வேணா. ஈசான்யம் மைண்டை காட்டும் இடம் .

எல்லாத்தையும் பார்த்துட்டு டர்ராகி " நெல்லது கொஞ்சமாவும் கெட்டது சாஸ்தியாவும் " சொல்ட்டு வந்துட்டம்.

அந்த ஃபேமிலியோட செனேரியோவை சொன்னா வாஸ்துவோட எஃபெக்ட் எந்தளவுக்கு இருக்கும்னு புரியும்.

அம்மா விதவை -பெரிய பொண்ணு 60 வயசு தாத்தாவுக்கு ரெண்டாந்தாரமா போச்சு. அடுத்தது துடைப்பக்குச்சி சைஸ்ல "ஈ" னு இருக்கும். கடேசியில ஒரு பொண்ணு. அது பித்தம் பிடிச்சு ரோட் ரோடா அலைஞ்சுக்கிட்டிருக்கும்.

இடையில ரெண்டு ஆண் பிள்ளைகள். அதுல பெரியவன் ஏதோ ஒரு நாளைக்கு 200 அ 300 சம்பாதிச்சுட்டு வர, அம்மா 100 அ 200 சம்பாரிக்க லைஃப் ஓடிக்கிட்டிருந்தது. பையங்கள்ள சின்னவன்து பெரிய ஸ்கான்டல். எவனோ மந்திரவாதி மந்திரம் கத்துத்தர்ரான்னு அவன் பின்னாடி அலைஞ்சுக்கிட்டு -காசு பணம்னு நிறையவே தெண்டம். ஒரிஜினலா பார்த்தா மந்திரவாதிக்கு கிழங்கு கிழங்கா பொம்பளை பிள்ளைங்க.அதுல எவளையாவது படுக்கப்போடலாம்னு இவிக அலைஞ்சாப்ல இருக்கு.

பெருஸ்ஸா இடிச்சு கட்டலைன்னாலும் ச்சொம்மானாச்சு வேக்குவத்தை குறைக்க சில முதலுதவிகள் மாதிரி சில விஷயங்களை சொல்லிட்டு வந்தேன்.

நமக்கு பேசிக்கலாவே சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் கொஞ்சம் சாஸ்தி. ( சிம்மம்ல) முந்தா நேத்து மேற்படி பார்ட்டிய நம்ம கிட்டே கூட்டிட்டு வந்த ஆளு கிராஸ் ஆனான். என்னப்பா சேம லாபம்லாம் எப்டின்னு கேட்டேன். ( ச்சொம்மா ஒரு சக்ஸஸ் ஸ்டோரிய கேட்கலாமேன்னு ஒரு ஆர்வம்) அவன் பழைய குருடி கதவை திறடின்னு இருக்குங்கறான்.

நமக்கு கடுப்பாயிருச்சு.

" யோவ் நான் சொல்ட்டு வந்த ஆல்ட்டரேஷன்லாம் பண்ணாய்ங்களா?"
"இல்லப்பா"
"சரி ஒழிஞ்சு போவட்டும் .ஊட்டை காலி பண்ணிரச்சொன்னேனே அதையாவது செய்தாய்ங்களா?"
"இல்லப்பா"

இந்த மாதிரி பார்ட்டிங்களாலதான் சோசியம் ,வாஸ்துன்னாலே சோர்ஸ் ஆஃப் ஜோக் மாதிரி ஆயிருச்சு.

Tuesday, November 1, 2011

பெரும்பணம் ஈட்ட ஜோதிட,வாஸ்து ரகசியங்கள்


அண்ணே வணக்கம்ணே !

நாம இந்த வலையுலகத்துல அடி எடுத்து வச்சது 2000 ,ஜூலை. சூடு பிடிச்சதென்னவோ 2009 மே மாசத்துக்கு அப்பாறம் தேன்.

என்னென்னமோ தொடர்லாம் எழுதினோம். சிலதை முடிச்சோம்.சிலதை டீல்ல விட்டோம். என்னதான் பைத்தாரத்தனமா கிறுக்கி தள்ளினாலும் சனம் விடாம படிச்சுட்டு வர்ரிங்க.

நீங்களா கடுப்பாறதுக்குள்ளாற நமக்கே ஸ்பார்க் ஆகும் லைன் அப்பை மாத்திருவம். இப்படித்தான் ஓடிக்கிட்டிருக்கு.

இப்பம், இந்த நொடி ஒரு மேட்டர் ஸ்பார்க் ஆகுது. இதை வச்சு மறுபடி லைன் அப்பை மாத்த உத்தேசம். உங்கள்ள பலரும் நம்ம எழுத்துக்களை ஆர்வமா படிக்கிறிங்க. கமெண்ட் போடாட்டாலும் ஹிட்ஸ் மட்டும் கூடிக்கிட்டே போகுது. நன்றி.

நீங்க கம்ப்யூட்டர் முன்னே உட்கார்ந்து நம்ம சைட்ட தேடி படிக்கனும்னா உங்க கடமைகளை எல்லாம் நல்ல படியா முடிச்சிருக்கனும். உங்க தொழில்,வியாபாரம் ,உத்யோகம்லாம் சிறப்பா இருக்கனும்.அப்பத்தேன் ஒன்பது இடமும் குளிர்ந்திருக்கும். அப்பத்தேன் நாலு விசயத்தை தெரிஞ்சுக்கலாங்கற எண்ணமே வரும்.

அதுலயும் நம்ம சைட்ல ஒன்னுக்கொன்னு தொடர்பில்லாத மேட்டர்லாம் படிக்கனும்னா நிறைய பொறுமை தேவை. அதிலயும் நம்ம பாசை கீதே படா பேஜாருப்பா. அதனால இன்னைலருந்து ஃபைனான்ஸ் மேட்டரை கவனிக்கலாம்னு இருக்கேன்.

உத்யோகஸ்தருங்கனா பரவால்லை. ( அதுலயும் என்னத்த வாழுது தினசரி இந்த பாஸுங்க கிட்டே ஏகறது புலி வாய்ல தலைய விட்டு எடுத்த கதையாத்தான் இருக்கு - மேலும் ஜாப் செக்யூரிட்டில்லாம் போன பத்துவருசத்தோட காலி. இப்பம் அல்லாருமே வேலை தேடிக்கினு தான் கீறாங்கோ)

இதுல யாவாரிங்க பாடு ரெம்ப நாஸ்தியா கீது. சனங்க கிட்டே காசில்லை. விலை வாசியா ஏறிப்போச்சு. போட்டியில விலைய குறைச்சு விக்கலாம்னாலும் பயமா கீது. இப்படி பல பிரச்சினை. அதனால மொதல்ல யாவாரிங்களை கவனிச்சுருவம். அப்பாறம் உத்யோகஸ்தருங்களை கெவுன்ச்சிக்குவம்.

1.வாஸ்து:

ஊட்டுக்கு சொல்ற மாரியே கடை ,கண்ணிக்கும் (கன்னிக்கு இல்லிங்கோ) வாஸ்து சொல்லி அலம்பல் பண்றானுங்கோ. நீங்க அதெல்லாம் கண்டுக்கிடாதிங்க. ஊட்டுக்கு இருக்க வேண்டிய வாஸ்து வேற. கடை கண்ணிக்கு இருக்கவேண்டிய வாஸ்து வேற.

மேற்கு ,தெற்கு பள்ளம், கிழக்கு,வடக்கு மேடா இருந்தாலும் பரவால்லை துரை.ஆனால் கடன்னு வாங்கினா பாங்கில மட்டும் வாங்கு. இல்லாட்டி கடன் கழுத்தை நெறிக்கும்.

தெருக்குத்துன்னு கும்மாங்குத்து குத்துவானுங்கோ.அதையும் கண்டுக்காதே வாத்யாரே. தெருக்குத்து இருந்தா யாவாரம் பிச்சிக்கினு பூடும்.

புதுசா கடை போட்டு/ மாத்தி நைருதில கல்லா பெட்டிய வச்சு உட்கார்ந்துக்கிட்டா ஈதான் ஓட்டனும். அக்னி மூலைல உட்கார்ந்து பாரு. ஒரு நிமிசம் நிம்மதியா இருக்க விடாம கஸ்டமருங்க வந்துக்கினே இருப்பாங்கோ.


2.லட்சுமி:

லட்சுமி நின்னா எல்லாம் ஓடிப்பூடும்னு எந்த அலக்கை ஊதிவிட்டுச்சோ தெரிலை. அல்லாரும் லட்சுமிய உட்கார வச்சு உட்கார வச்சு லட்சுமிக்கு பைல்ஸே வந்துருச்சுப்பா. லட்சுமின்னா பணம். பணங்கறது பாடில ப்ளட் மாதிரி .அது ஃப்ரீயா சர்க்குலேட் ஆகோனம். அதனால் தில்லா நிக்க வை நைனா. ஆல்ரெடி உட்கார்ந்துக்கினு இருந்தா அந்த ஃபோட்டோவை ஊட்ல எடுத்துக்கினு போய் வச்சிரு. லட்சுமிக்குரிய பீஜம் ஸ்ரீம். இதை பிரணவத்தோட சேர்த்து சான்ட் பண்ணிக்கினே வா. செமை சில்லறை புரளும்.

ஓம் ஸ்ரீம் ஓம் நமஹா

3.குழலூதும் கண்ணன்:

நம்ம கிட்னர் ஃப்ளூட்டை வாய்ல வச்சு ஊதினாருன்னு வை. புல்லாங்குழல் ஓசை கேட்டு வந்து குமிஞ்ச கோபிகா ஸ்த்ரீங்க மாதிரி கஸ்டமருங்க வந்து குமிவாய்ங்க. தில்லை வை.ஆனால் ஊட்ல வைக்காதே. ஊட்ல இருந்தா படக்குனு கொணார்ந்து கடையில வச்சுக்க. புதன் கிளமை ஒரு முளம் துளசி மாலை போட்டு ஓம் க்லீம் கிருஷ்ண க்லீம்னு ஜெபிச்சுட்டு இரு.

4.சண்டி:
சிங்கத்து மேல அம்மன் இருக்கிற படத்தை வச்சு வெள்ளிகிழமைல ஒரு எலுமிச்சம்பழம், ஒரு தம்ளர் மஞ்ச தண்ணி , பத்து ரூவா பட்டை லவங்கம் வாங்கி நைவேத்தியம் பண்ணு.

மறு நாள் மஞ்ச தண்ணிய கால் படாத இடத்துல தெளிச்சுரு. பட்டை லவுங்கத்தை வீட்டுசமையலுக்கு கொடு. எலுமிச்சம்பழத்தை ஜூஸ் போட்டு குடி. ( இந்த க்ளைமேட்ல மாணா வாத்யாரே - வெய்யில் காலத்துல மட்டும அப்படி செய் . மழை காலத்துல அதை கடை/வீட்டு சன் ஷேட்ல போட்டுரு.

இதை செய்தா கஸ்டமர் உன்கண்ட்ரோல்ல இருப்பான். போட்டிக்காரவுக கோட்டிக்காரவுகளா இருந்தாலும் அவிக முன்னே நீ தலை நிமிர்ந்து நடக்கலாம். அந்த அளவுக்கு செமை பிக் அப் இருக்கும் பாஸ்..

5.இன்னோரு மேட்டரு. நம்ம ஊர்ல ஆருனா பொளைக்க தெரியாத சோசியரு இருந்தா அவர் கிட்டே ஜாதகத்தை காட்டு. அவரு நல்லதா நாலு வார்த்தை சொன்னா ஓகே. இல்லை சகட்டு மேனிக்கு வினோலாக்ஸ் கொடுத்தாருன்னு வை. கல்லாவுல நீ உட்காராத. கல்லாவுக்கு நேர இருக்கிற சேர்ல உட்காராதே. பக்கவாட்ல இன்னொரு சேர் போட்டு உட்காரு. கடவுளே உன் கடைக்கு ஓனருன்னு நினை.

6. எனக்கு ஒரு செட்டியாரு (வயசாளி) கொடுத்த சஜஷனை அப்படியே தரேன். கப்புனு பிடிச்சுக்க. நீ பண்ற வியாபாரத்துல செலவெல்லாம் போக மொதலுக்கு வட்டி, ஒனக்கு கூலி கிடைக்குதான்னு பாரு. கிடைக்கலேன்னா கிடைக்கறாப்ல ப்ளான் பண்ணு. முடியலின்னா இழுத்து மூடிட்டு வேலை ,வெட்டி பார்க்க போயிரு.

கேஷுக்கு வாங்கி கேஷுக்கு வில்லு ( வித்துக்க) - முடியலியா கடனுக்கு வாங்கி கேஷுக்கு வித்துக்க. கடனுக்கு வாங்கி கடனுக்கு வித்தீனா மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடியாயிரும்.

இருப்பை பணமா வச்சுக்காதே.சரக்கா வச்சுக்க. அவசரம்னா அசலுக்கு தள்ளி விட்டுரு.


7. கடை வியாவாரம் பண்ற இடம். கடைய கோவிலா மாத்திராதே. கடையில கஸ்டமருதான் கடவுள். கடையில கஸ்டமருங்க மஸ்தா கீனம். சாமி படங்க இல்லை. 3 ,5 ,7 மிஞ்சிப்போனா ஒன்பது படம் வச்சுக்க.
செத்து போனவுகளை சாமி படங்களோட கலக்காதே.

சில அய்யருமாரு வாயு மூலையில சாமி படங்களை வைக்கச்சொல்வாய்ங்க. நீ ஆரத்தி காட்டற நேரம் மட்டும் தான் அங்கே தெய்வ சான்னித்யம் ஏற்படும். நைருதில வை. கிழக்கையோ வடக்கையோ பார்த்த மாதிரி வை.

8.தகடு,யந்திரம்,சக்கரம் இதுக்கெல்லாம் அர்த்தம் இருக்கு. ஷக்தி இருக்கு. அதெல்லாம் சிடி,டிவிடி மாதிரி. அது எம்ப்டியாவே இருந்தாலும் அதுல ரைட்டிங் பண்றதுக்கு ஒரு வித்தை இருக்கு. பூஜை பண்ற சமயம் அந்த படம்/சக்கரங்களை தொட்டு ப்ராணஸ்ய சிவஹ் ப்ராணேச ஸ்வாஹான்னு சொல்லிக்கிட்டே வா. நாளடைவில் சிடி ரைட் ஆயிரும்.

9.கடை யாவாரத்துக்குத்தேன். டிவி பார்க்க, பாட்டு கேட்க, திங்க,தூங்க, ஃபிகர் மடக்க, தண்ணி போட வேற இடம் இருக்கு. பொஞ்சாதியாவே இருந்தாலும் கடைக்கு வந்தா கணக்கு கணக்காவே இருக்கனும்.

10.சனம் மானங்கெட்ட சனம் . நீ எத்தீனி தபா இன்சல்ட் பண்ணாலும் மறுபடி மறுபடி வருவாய்ங்க.ஆனால் பைசா,கடை,ஆஃபீசெல்லாம் மானஸ்தங்க.ஒரு தபா இன்சல்ட் பண்ணிட்டேனு வை. டாட்டா பை பைதான்.

11.பெருமாள் (ஏழுமலையான்) படத்தை வைக்காதே. வட்டி கட்டியே சாகனும். சிவன் தியானத்துல உள்ள படத்தை வை. அண்ணன் தம்பியாவே இருந்தாலும் யாவாரம் பேசற "தில்" வரும்.

12.உன் கடையில ஒவ்வொரு அங்குலமும் உனக்கு பரிச்சயமா இருக்கனும். கண்ணை கட்டிக்கிட்டாலும் எந்த பொருள் எங்க இருக்குன்னு தெரியனும். வெய்ட் எல்லாம் கிழக்கு வடக்குல வை தெற்கு,மேற்கை ஃப்ரீயா உடு (பாசேஜ்)

Friday, June 24, 2011

வீடு மாறும் ரஜினி : வாஸ்து குறித்த பகீர் உண்மை


வாஸ்துவும் ஜாதகம் மாதிரிதான். 100% வாஸ்து உள்ள வீடு அசாத்தியம் .எந்த வீடும் நன்மை தீமை இரண்டையும் கலந்து தான் தரும்.

உ.ம்: கிழக்கு,வடக்கு பகுதியில தெரு , காலி இடம் இருந்தா ஆண்கள் கோழைகளாவும் - பெண்களை அடிமைகளா ட்ரீட் பண்றவுகளாவும் மாறிருவாய்ங்க

தீமைய தவிர்க்க வீடு மாறினா ...

அ) அடுத்த 1.5 வருடத்துக்கு பழைய வீட்டோட வாஸ்துதான் வேலை செய்யும்.
ஆ) பத்துவட்டிக்காரனுக்கு செட்டில் பண்ணிட்டு வங்கிக்கடனுக்கு போக நினைச்ச கதைதான்.
இ) ப.வ.காரன் விடமாட்டான். அப்படியே மீறிப்போனா வங்கி மேனேஜருக்கும் வத்தி வ்ச்சுருவான்
ஈ) பழை வீட்ல இன்னம் என்னெல்லாம் தீமை நடக்கனும்னு இருக்கோ அந்த தீமை எல்லாம் குறுகிய காலத்துலயே நடந்துர வாய்ப்பிருக்கு
உ) முக்கியமா பழைய வீட்டிலிருந்தபோது பெற்ற நன்மையை உடனே இழக்க நேரிடும்.

செய்தி: சூப்பர்ஸ்டார் வீடு மாறுகிறார்


பிட்டா (ப)பிடிங்க !

1.ஒரு நிறுவனத்தில் 6 மாதத்துக்கு மிஞ்சி பிரச்சினை இல்லாமல் பணியில் தொடர்ந்தால் உங்கள் சென்சிட்டிவிட்டி ரேட் குறைந்துவிட்டது என்று அர்த்தம்.

அதே நிறுவனத்தில் ரெண்டரை வருடத்துக்கு மிஞ்சி தொடர்ந்தால் உங்களிடம் ஏதோ தவறு இருக்கிறது அல்லது அந்த நிறுவனம் பெட்டர் சாய்ஸ் என்று அர்த்தம்

அதே நிறுவனத்தில் ஐந்து வருடம் தொடர்ந்து விட்டால் உங்களில் எதுவோ செத்துவிட்டது அல்லது அந்த நிறுவனம் பெஸ்ட் சாய்ஸ் என்று அர்த்தம்

அதே நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வும் பெற்றுவிட்டால் அந்த நிறுவனமோ அ நீங்களோ பாஸ்டை ரெவ்யு பண்ணிக்கவே இல்லை வளர்ச்சிப்பாதைக்கு திரும்பவே இல்லை என்று அர்த்தம்

ஓய்வு பெற்ற பிறகும் அதே நிறுவனத்துடன் தொடர்பில் இருக்கிறீர்கள் என்றால் உங்களை போன்ற ஜால்ரா உலகத்திலேயே இல்லைன்னு அர்த்தம். அல்லது அந்த நிறுவனம் மிக மிக உன்னதமான நிர்வாகத்தை கொண்டுள்ளது என்று அர்த்தம்


2.கடவுளுக்கு இஸ்லாம்ல சதிகாரன் (மாக்கிர்) என்று ஒரு பெயர் உண்டு.கெட்டவுகளை வச்சு நெல்லவுகளுக்கு எதிராவும் சதி பண்றாரு. ஆனால் இந்த ப்ராசஸ்ல நெல்லவுகளுக்கு கிடைக்கிறது கர்ம நாசம், ஜன்ம ராஹித்யம் ( மறு பிறவி இருக்காது) - ஞானம். கெட்டவுகளுக்கு கிடைக்கிறது பாவம்.

அதுக்காவ கெட்டவனுக்கு விருது ,பட்டம்லாம் கிடைக்காது. எவனெல்லாம் கூட்டு சேர்ந்து ஆப்படிச்சானோ அவனுகளுக்குள்ளயே விவகாரம் வரும். ஒருத்தன் அடுத்தவனை ஒழிச்சு கட்ட பார்ப்பான். அவனுக்கு வச்ச வெடி இவன் பேண்டுக்குள்ளயே வெடிக்கும். உ.ம் : ராஜ பக்சே - பொன்சேகா , ராசா -தயா நிதிமாறன், பிரணப்-சிதம்பரம் ( பிரதமர் பதவிக்கான ரேஸ்ல முந்தத்தான் சிதம்பரம் சாரு ..பிரணப் சாம்பர்ல உளவு பார்த்ததா குற்றச்சாட்டு)