'>
Showing posts with label தீர்வுகள். Show all posts
Showing posts with label தீர்வுகள். Show all posts

Saturday, May 26, 2012

படுக்கையறை பிரச்சினைகள்: 1


அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு பதிவு இழந்த சக்தி வைத்தியரோட விளம்பரம் மாதிரி இருந்தா அதுக்கு நாம பொறுப்பு கடியாது. ஏன்னா நாம எடுத்துக்கின சப்ஜெக்ட் அது மேரி.

அந்த காலத்துல ஆருனா புருசன் பொஞ்சாதி முட்டிக்கிட்டா - சண்டை சாடின்னு நடந்தா பெருசுங்க.. இன்னா சொல்லும்? அட விடுப்பா.. எல்லாம் பொயுது போனா செரியா பூடும்.

பொயுது போனா என்னாவும்? சாப்டுவாய்ங்க. சாப்டுட்டு படுப்பாய்ங்க. படுத்த பிற்காடு இவன் அவள் பக்கம் திரும்புவான். அவள் சுவத்தை பார்த்து படுத்திருப்பாள். அந்த அவுட் லைனை பார்த்ததுமே மூடு மாறிரும்.

இங்க ஒரு சைக்கலாஜிக்கல் பாய்ண்டை சொல்லனும். ஆரு கான்ஃபிடன்டா இருக்கானோ அவன் "எதையும்" நேருக்கு நேரா பார்ப்பான்.ரசிப்பான் டீல் பண்ணுவான். இதுவே இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் உள்ளவன் சைடா பார்ப்பான், பேக்ல இருந்து பார்ப்பான்.ரசிப்பான்.

புருசன் பொஞ்சாதி சண்டையில 99.99 சதவீதம் இ ன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் உள்ள புருசனாலயும், சுப்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் உள்ள பொஞ்சாதினாலயும் தேன் வரும்.

பொஞ்சாதிக்கு ஐ.சி (இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்) இருந்தா அவள் சரண்டர் ஆஃப் இண்டியா. நோ ப்ராப்ளம்ஸ். புருசனுக்கு சுப்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் இருந்தாலும் நோ ப்ராப்ளம். ( இந்த மேல் சேவனிஸ்ட் சொசைட்டியில இதை நார்மலா எடுத்துக்கறாய்ங்க -மேஜரா இருக்கிறதெல்லாம் நார்மல்ங்கறது டெமோக்ரடிக் ஃபோபியா (ஹய்யா மனவியல்ல ஒரு புது வியாதிய கண்டுபிடிச்ச நமக்கு பட்டம் கிட்டம் தருவாய்ங்களா.. )

தகராறு எங்கன வருதுன்னா.. பொஞ்சாதி சு.காம்ப்ளெக்ஸ் உள்ளவன்னு வைங்க. புருசன் என்னமோ அஜீஸ் ஆயிருவான் ( ஐ மீன் சரண்டர்) ஆனால் அம்மா,அக்கா,அண்ணன் தம்பி,ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அவனை நோண்டிக்கிட்டே இருப்பாய்ங்க. அவனும் மன்சந்தானே ஏதோ சந்தர்ப்பத்துல " இவள் ஓவராத்தான் போறா"ன்னுட்டு சீறிர்ரான். முட்டிக்குது.


//அவள் சுவத்தை பார்த்து படுத்திருப்பாள். அந்த அவுட் லைனை பார்த்ததுமே மூடு மாறிரும்.//னு ஆரம்பிச்சு சைக்காலஜிக்கு தாவிட்டன். புருசன் கான்ஃபிடன்ட் ஃபெலோவா இருந்தா தகராறுக்கே சான்ஸில்லை. அவன் ஐ.சி பார்ட்டிங்கறதாலதேன் தகராறே வந்தது.

ஐ.சி உள்ளவன் சைடா பார்ப்பான், பேக்ல இருந்து பார்ப்பான்.ரசிப்பான்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன். உடனே இவனுக்குள்ள பலான மூட் சீறி கிளம்பும். அப்பாறம் என்ன காத்தாலயோ மதியமோ முட்டிக்கிட்டதெல்லாம் சமாதானமாயிரும்.

ஆனால் இந்த தியரி அந்தகாலத்துக்குத்தேன் ஒர்க் அவுட் ஆகும். இந்தகாலத்துக்கு ஒர்க் அவுட் ஆகாது. ஏன்னா..

அப்பத்துல சனங்களோட உணவு முறை , வழ்க்கை முறை வேறு . பாடி கண்டிஷன் அவிக பாடியிலருந்த மெட்டஃபாலிசம் வேறு.

இப்பம் எல்லாம் தலைகீழா மாறிருச்சு. சகட்டுமேனிக்கு ஆன்டிபயாடிக்ஸ் உபயோகிச்சு பாடியோட இம்யூன் சிஸ்டமே அடிவங்கிட்ட நிலைமை இப்போ இருக்கு.

செக்ஸ் பவர்ங்கறது இயற்கை கொடுக்கிற வரபிரசாதம். இயற்கையோட ஒன்றி வாழறவுகளுக்குத்தேன் செக்ஸ் பவர்.

இயற்கை விழிக்கும்போது விழிச்சு - இயற்கை தூங்கபோகும்போது தூங்கினாய்ங்க. எவ்ரி திங் வேர் பர்ஃபெக்ட். இன்னைக்கு ?


சரிங்ணா.. திடீர்னு கில்மாவை நுழைக்கிறான்யான்னு நினைச்சிருப்பிங்க. மேட்டர் இன்னாடான்னா நம்ம இஸ்மாயில் சார் சொன்னாப்ல ப்ராப்ளம் பேஸ்டு சொல்யூஷன்ஸ் தந்துக்கிட்டிருக்கம். எல்லா பிரச்சினைகளுக்கு மூலம் இந்த கில்மா.

கில்மா பிரச்சினைகளை எப்படி ஜோதிட ரீதியா புரிஞ்சுக்கறது.. எப்டி சால்வ் பண்றதுன்னு எழுத ஆரம்பிச்சம். லேசா மொக்கை போட்டு பதிவுக்கு வந்துரலாம்னு ப்ளான் பண்ணா பவர் கட் நேரம் நெருங்கிருச்சு.

என்ன பண்றது? கில்மா பிரச்சினைகளுக்கு ஜோதிட ரீதியிலான தீர்வுகளை நாளைக்கு பார்ப்போம்.. உடுங்க ஜூட்.

Wednesday, May 23, 2012

கூகுல் ஆட்சென்ஸ் கிடைச்சுருச்சுங்கோ !


அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு ட்ராக் மாறாம நேத்து கொடுத்த பிக்சர்ல உள்ள சனத்துக்கு சொல்யூஷன் கொடுத்தே தீர்ரதா முடிவு பண்ணியிருக்கேன். அதுக்கு மிந்தி கொஞ்சம் மொக்கை.

அனுபவஜோதிடம் டாட் காம் சைட்டுக்கு போனவுக நொந்து போயிருப்பாய்ங்க. மேட்டர் இன்னாடான்னா அல்லாம் இங்கிலீஷு. இதுக்கு ஒரு பெரிய காரணம் இருக்கு.அதான் கூகுல் ஆட்சென்ஸ்.

ஒரு நாள் கூத்துக்கு மீசை வச்ச மாரிதானேன்னு தமிழ் போஸ்டை எல்லாம் ட்ராஃப்டா மார்க் பண்ணிட்டு ப்ளாக்ல இருந்த இங்கிலீஷ் போஸ்டையெல்லாம் கொண்டாந்து போட்டு நிரவி கூகுல் ஆட்சென்ஸுக்கு ரீ சப்மிட் பண்ணேன்.

கொய்யால எந்த அக்ரகாரம் கொளுத்திக்கிட்டு போயிருச்சோ தெரியலை. டெம்ப்ரவரியா அப்ரூவ் பண்ணி ஆட் கோடும் கொடுத்துட்டாய்ங்க. அதனால அமலா பாலை தேடாத சமயத்துலயாச்சும் தமிழ்ப்பாலை தேடி அ.ஜோ சைட்டுக்கு வர்ர சனம் இன்னம் கொஞ்ச நாள் பொறுக்கனும்.

கூகுல் காரவுக இன்னம் டீப்பா ரெவ்யூ பண்ணி அப்ரூவ் பண்ண பிற்காடுதேன் கூகுல் ஆட்ஸ் டிஸ்ப்ளே ஆகும். அது நடந்தாதேன் சில்லறை புரளும். ஆருனா கூகுல் ஆட்சென்ஸ்ல எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவுக டிப்ஸ் கொடுத்தா நல்லாருக்கும். ( டூ அண்ட் டோன்ட்ஸ்) நாம சகட்டுமேனிக்கு ஐட்டம் போட்டு கூகுல் காரன் டிஸ் அப்ரூவ் பண்ணிட்டான்னா கட்டில்ல கிடத்தினதை தொட்டுக்கூட பார்க்காமயே கோட்டை விட்ட்ட கதையா ஆயிரும்.

இன்னைக்கு தலையணை பூக்கள் நாவல்ல ஜெயேந்திரரை பாத்திரமாக்கி ஜல் ஜக் போட்ட பாலகுமாரன் இன்னைய தேதிக்கு மன்னிப்பு கேட்கனுனு ஒரு பதிவை போட்டிருக்கேன்.நம்ம இங்கிலீஷெல்லாம் ஓட்டை. ரெம்ப ஈஸியா புரியும்.தகிரியமா ஒரு ஓட்டு ஓட்டிப்பாருங்கண்ணா

நேத்திக்கு நான் கொடுத்த பிக்சர்ல உள்ளவுக பொருளாதார ரீதியில ரிலீஃப் ஆகனும்னா கீழ்கண்ட பரிகாரம்லாம் செய்துக்கிடனும்.


தாய்மாமன்னு ஆரும் இல்லையா? பிரச்சினையே இல்லை விட்டுருங்க. . இருந்தாலும் அவிகளால சகாயமில்லையா ? விட்டது சனி. அவிக ரெம்ப லொள்ளு பண்றாய்ங்களா? வம்பு வழக்கு வல்லடில்லாம் இருக்கா? அப்பம் பரிகாரம் நிச்சயம் தேவை.

1.வசதி இருந்தா நல்ல தரமான வார பத்திரிக்கைகளை வாங்கி (படிக்காட்டாலும் நல்லதே) படிக்கிறவுகளுக்கு ஓசி கொடுங்க

2.அக்கம்பக்கத்துல ஏழை பிள்ளைங்க இருந்தா அவிகளுக்கு ஸ்லேட்டு ,பல்ப்பம், நோட்டு ,புஸ்தவம்,பேனா பென்சில்னு வாங்கி கொடுங்க

3. கெட்டுப்போன சொந்தக்காரனோ , ஃப்ரெண்டோ மெடிசின் வாங்க காசில்லாம தவிக்கிறானா உதவுங்க


உங்களுக்கு தோல்,கீல்,அண்டம் தொடர்பான பிரச்சினை இருக்கா? அப்பம் பரிகாரம் நிச்சயம் தேவை

எச்சரிக்கை:

1.தோல் பிரச்சினை இருந்தா முடிஞ்சவரை அப்டியே விட்டுருங்க. ரெம்ப இமிசையா இருந்தா இயற்கை வைத்தியம் ட்ரை பண்ணுங்க. (உண்ணாவிரதம் - புத்து மண்ணை உரசி போடறது -மண் குளியல் எட்செட் ரா) இதுக்கு வழியில்லையா ? சித்தா,ஆயுர்வேதம்,ஹோமியோ பதின்னு கதை பண்ணிக்கிட்டிருங்க/ இங்கிலீஷ் மெடிசினுக்கு மட்டும் போகாதிங்க. அது அமுக்கிரும் -கிளப்பி விட்டுரும் -உசுருக்கே ஆபத்தாயிரும். # லாஜிக்

2.கீல் பிரச்சினை இருந்தா அதுக்கு என்ன காரணம்னு பார்த்து அதுக்கு ட்ரீட் பண்ணுங்க. பெயின் கில்லர்ஸுக்கு அடிக்ட் ஆயிராதிங்க.

3.அண்டம் தொடர்பான பிரச்சினை இருந்தா - லாஜிக்கலா ரோசிச்சு சர்ஜரி அது இதுன்னு போங்க. அவசரப்படாதிங்க.


பரிகாரம்:
1.தூது போற வேலை வேண்டாம் ( அதுவும் லாபம் கருதின்னா வேண்டவே வேண்டாம்)

2.பொயப்புக்கு தேவையில்லாத மேட்டரை தெரிஞ்சுக்க கூட நினைக்காதிங்க

3.பொளப்பா இருந்தா தவிர தினசரிகளை லெஃப்ட் ஹேண்ட்ல கூட தொடாதிங்க .கம்ப்யூட்டருக்கு தடா. நெட்டுக்கு பொடா

4.ஓய்வு நேரத்துல போஸ்ட் ஆஃபீஸ்/ தாசில்தார் ஆஃபீஸுன்னு போயி ஏழை மக்களுக்கு மனு எழுதிக் கொடுங்க.

5.புல்லாங்குழல் ஊதாத கண்ணனோட படத்தை வீட்ல வச்சு துளசி மாலை போட்டு பூஜை பண்ணுங்க. துளசி ஃப்ரெஷா இருக்கும் போதே அதை தண்ணில போட்டு கொதிக்க வச்சு குடிங்க. ( நன்னா அலம்பிட்டு)

6.வசதி இருந்தா நாமம் போட்ட சாமிகளோட நாமாவளி/ ஸ்லோகங்களை பாக்கெட் புஸ்தவமா போட்டு இலவசமா டிஸ்ட் ரிப்யூட் பண்ணுங்க


படிப்பு ? சொல்லிக்கிறாப்ல இல்லை.அதுலயும் கணக்குன்னாலே மைண்ட் ப்ளாக் ஆயிருது. ஃபிசிக்ஸ் ,கெமிஸ்டரின்னா கண்ணை கட்டுது. ஒரு சாதாரண லெட்டர் எளுதனும்னா கூட அடிச்சு திருத்திதான் எளுத வேண்டியதா கீது. - இதான் உங்க நிலைமையா? அப்பம் பரிகாரம் நிச்சயம் தேவை.

1.பச்சை நிற ஆடை அணிகலன் நிறைய யூஸ் பண்ணுங்க. புஸ்தவங்களுக்கு பச்சை நிறத்துலயே அட்டை போட்டு வச்சுக்கங்க . ரைட்டிங் பேட் / கம்ப்யூட்டர் டேபிள் எல்லாமே பச்சை .

2.படிக்கிறச்ச வடக்கு மூலையிலயோ வடக்கை பார்த்தோ உட்காராதிங்க. சரும வியாதி ,அண்ட வியாதி, கீல் வாதம் உள்ள ஏழைகளுக்கு முடிஞ்ச உதவியை செய்ங்க

3.பெருமாள் பேர் கொண்டவுக ,வைசிய பிள்ளைங்க டச்சுல இருந்தா அவிகளுக்கு சின்ன சின்ன குறிப்பு நோட்டுகளை இலவசமா கொடுங்க (ஸ்பைரல்)


ஐ.டி,கம்ப்யூட்டர், மெடிசின்,அக்கவுண்ட்ஸ் ஆடிட்டிங், போஸ்டல், கூரியர்,கமிஷன் ஏஜென்ஸி,டீலர்ஷிப் ,மீடியேஷன் இப்படி எந்த லைன்ல போனாலும் முட்டு சந்துல தான் போய்விடுது. ஆரு மூலமாவாச்சும் ஆருக்காச்சும் எதுனா மெசேஜ் கொடுத்தா தப்பாவே போய் சேருது. ஆரை பிடிக்க ஆரை அணுகனுங்கற டெக்னிக்கே கைவரமாட்டேங்குது. இதான் உங்க நிலையா? அப்பம் பரிகாரம் நிச்சயம் தேவை

லெஃப்ட் ஸ்மால் ஃபிங்கர்ல மரகதப்பச்சைக்கல் மோதிரம் அணியவும். இதுவரை பல்வேறு பிரச்சினைகளுக்கு கொடுத்திருக்கிற எல்லா பரிகாரங்களையும் பின்பற்றவும். இனம் இனத்தோடு சேருங்கறாப்ல இதே பிரச்சினை உள்ளவுக உங்க க்ரூப்ல நாலஞ்சு பேரு இருந்தா நாலு பேரும் ப்ளான் பண்ணி நான் சொல்லியிருக்கிற எம்.ஜி.ஆர் வேலைகளை செய்யலாம்.

பைசாவை கண்ல பார்க்க முடியலை . கொடுக்க வேண்டியதை ஆருகிட்டனா கொடுத்தனுப்பினா போய் சேரமாட்டேங்குது. சரியான விலாசத்தை எழுதி அனுப்பினாலும் லெட்டர் என்ன இ மெயில் கூட டெலிவரி ஆகமாட்டேங்குது.

Saturday, May 19, 2012

செமை மேட்டருதான் .. ஆனா..: தீர்வுகள்



அண்ணே வணக்கம்ணே !
நாளை முதல் (திங்கள்) நம்ம பதிவுகள் ஃபேஸ்புக்ல மட்டும் வெளியாகும். உடனே இங்கே அழுத்தி நம்ம அனுபவஜோதிடம் முக நூல் பக்கத்துக்கு ஒரு லைக் போட்டுருங்க.

நம்ம இஸ்மாயில் சார் யோசனை - ப்ராப்ளம் பேஸ்ட் சொல்யூஷன்ஸ் - பாப்பா, காசு பணம் - ஃப்ளாஷ் பேக் ஞா இருக்குல்ல. இந்த காசு பண மேட்டர் உங்களை எப்டி கலாய்க்குதுன்னு ஒரு பிக்சர் இருக்கும். கீழே நான் தந்திருக்கிற பிக்சர்தான் உங்க பிக்சர்னா அதுக்கான பரிகாரங்களை ப்ராக்கெட்ல தந்திருக்கேன். ப்ளீஸ் ஃபாலோ.. கொஞ்சம் கொஞ்சமா ரிக்கவரி ஆகி பொருளாதார ரீதியில நெல்ல பொசிஷனுக்கு வந்துருவிங்க. டோன்ட் ஃபர்கெட் டு கன்வே ரிசல்ட் டு மீ. ஓகேவா உடுங்க ஜூட்.

பிக்சர்: 1

கிடைச்சிருக்கிற மேட்டர் சூப்பர் மேட்டருதான்.ஆனால் .. ஏழெட்டு வருசம் கஷ்டப்படனும். அப்பாறமா திரும்பிப்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. ஏழு தலைமுறை உட்கார்ந்து சாப்பிடலாம். உ.ம் தொழிற்சாலை ,குவாரி, சுரங்கம்

வியாபாரம் என்னமோ ஓகே பாஸ்..ஆனால் தூசு,தும்பு,ஆயில்,கிரீஸ், நெடி மதிய சோத்தை நாலு மணிக்குத்தான் திங்க முடியும்.

நீங்க செய்து வருவது விவசாயம், ஐரன்,ஸ்டீல்,ஆயில், எருமை தொடர்பான தொழிலா? பேமென்ட் லேட் ஆகுதா? வேலைக்காரவுக திருடறாய்ங்களா? தலித்துகள் ஒத்துழைக்க மறுக்கிறாய்ங்களா?

சொத்து,சேமிப்பு, முதலீடுகள் மீது வருசக்கணக்கா வில்லங்கம் தொடருதா?

( தீர்வு/பரிகாரம் )

முட்டிக்கு காக்கி கலர் நீ பேட் போட்டுக்கங்க ( ஸ்போர்ட்ஸ் கடையில கிடைக்கும்) . உங்க தொழில் லைசென்ஸ்,அக்ரிமென்ட், முதலீடு ,சேமிப்பு ,சொத்து பத்து தொடர்பான பத்திரங்கள் டாக்குமென்ட்ஸை காக்கிப்பையில போட்டு பீரோல வைங்க. இருக்கிறதுலயே பழசான பீரோ பெட்டர் சாய்ஸ்.

அப்பா இருந்தா நீங்களே அவரை சலூனுக்கு கூட்டிப்போங்க. அவர் நோயாளியா - வெளிய வர முடியாத சந்தர்ப்பத்துல இருந்தா ஷேவ் பண்ணி விடுங்க. ஹேர் கட் பண்ண கத்துக்கிட்டு ஹேர் க்ட் பண்ணுங்க.

ஒரு வேளை படுத்த படுக்கையா இருந்தா "அலம்பி"விடுங்க. அப்பாவழி உறவினர்கள் யாராவது ஏழையா இருந்தா அவிகளுக்கு உங்களால முடிஞ்ச உதவியை செய்ங்க.

தூரப்பயணம் போகுது அங்கே தலித் நண்பர் யாராவது இருந்தா அவிக வீட்ல தங்குங்க. அல்லது ஒரு தலித் நண்பரை கூட்டி வச்சுக்கிட்டு அவருடன் ஹோட்டல்ல ஸ்டே பண்ணுங்க. கு.ப ஸ்லம்மை ஒட்டியிருக்கிற ஹோட்டல்ல ஸ்டே பண்ணுங்க.

பிக்சர் : 2

சூப்பர் ஃபீல்டு கண்ணு .ஆனா லேபர் கோ ஆப்பரேட் பண்ணனும்/ இல்லின்னா பட்டை நாமம் தான்..

( தீர்வு/பரிகாரம் )
காக்கி பாண்ட் அணியவும். தங்கம் தவிர்த்து ஸ்டீல் ஆர்னமென்ட் பூணவும். ஃபீல்டுக்கு குளிக்காம போகவும்.ஹேர் டை போடற வயசா இருந்தா ஹேர் டை தவிர்க்கவும். போலீஸ் காரவுக போடற நிறத்துல ஷூஸ் சூஸ் பண்ணிக்கங்க.

பழைய ,கிழிந்த,சாயம் போட ஆடைகள் அணியவும். ஃபீல்டிலான உங்கள் ரூம்/சாம்பர் ஓலையால் பின்னப்பட்டிருந்தால் நல்லது. அதை சுத்தப்படுத்த வேண்டாம். ரூம் ஃப்ரஷ்னர் ஏதும் யூஸ் பண்ணாதிங்க
வராக மூர்த்தி,வராகி , கிராம தேவதை படங்களை மட்டும் வைத்து பூஜிக்கவும்.

பிக்சர்: 3

வயசுல மூத்த பெண், பயங்கர கருப்பா,கருப்பா பயங்கரமா இருக்கிற பெண், அல்லது உங்க கம்பெனி நீங்க ஊழியரையே மணந்தவரா ? தம்பதிகளுக்குள்ள ஒத்துப்போகலியா?

கால் நரம்பு ஆசனம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கா? சோம்பல்,அகால போஜனம் ஆகிய குணங்கள் இருக்கா?

(தீர்வு பரிகாரம்:)

காக்கி பாண்ட் அணியவும் -குறைஞ்ச பட்சம் சஃபார் சூட். பிக்சர் 2 வுக்கு கொடுத்த பரிகாரங்களை நீங்களும் உங்கள் மனைவியும் ஃபாலோ பண்ணிக்கனும்.

பிக்சர் : 4

உங்களையும் அறியாம உங்க பேச்சு வெகண்டையா வெளிப்பட்டு வில்லங்கத்தை கொடுக்குதா? கொடுக்கல் வாங்கல்ல தகராறு வருதா? தாமதமாகுதா?

(தீர்வு பரிகாரம்:)

கழுத்தில் ஸ்டீல் செயின் அணியவும். கலப்பை, மன்வெட்டி, கொல்லூறு வடிவத்துல டாலர் கிடைச்சா அதை அந்த செயின்ல சேர்த்து போட்டுக்கங்க. நாம "கோடாலி" வச்சிருக்கம். இது மைனர் செயின் கணக்கா தொண்டைக்குழிய டச் பண்ணனும்.

அப்பப்போ வாய் விட்டு ஓம் நமோ வராஹஸ்வாமினே நமஹ ஓம் நமோ வாராஹி மாத்ரே ஸ்வாஹான்னு சொல்லிக்கிட்டிருங்க.

ச்சொம்மா தமாசுக்கு மெட் ராஸ் பாஷை பேசுங்க.க்ளோஸ் சர்க்கிள்ஸ்ல சகட்டுமேனிக்கு கெட்ட வார்த்தை பேசுங்க.


பிக்சர்: 5

பொதுக்குனு உட்கார்ந்துக்குமோங்கற வீட்ல வசிக்கிறிங்களா? அரத பழசான வாகனத்தை வச்சுக்கிட்டு மல்லாடறிங்களா? அம்மா சொம்மா சொம்மா உங்க பொஞ்சாதியோட மல்லுக்கட்டி லொள்ளு பண்றாய்ங்களா?

கழுத்தில் ஸ்டீல் செயின் அணியவும். கலப்பை, மன்வெட்டி, கொல்லூறு வடிவத்துல டாலர் கிடைச்சா அதை அந்த செயின்ல சேர்த்து போட்டுக்கங்க. நாம "கோடாலி" வச்சிருக்கம். டாலர் மார்பு பகுதியை டச் பண்ணனும்.

வீட்டு வாசற்படியை ஒட்டிய வென்டிலேட்டருக்கு ,வாகனத்தோட பம்பருக்கு எருமைக்கு கட்டற கருப்பு கயிறை கட்டுங்க.

வீட்டை ஒட்டடை அடிக்காதிங்க . கழுவாதிங்க.. அழகுப்படுத்தாதிங்க. வாகனத்துக்கு நோ வாட்டர் சர்வீஸ். பூசை போட்டுத்தான் ஆகனும்னா உங்க கிராம தேவதை அ ஏதேனும் காவல் தேவதை கோவிலுக்கு கொண்டு போய் போடுங்க. வீட்டு ஹால்ல எதுனா ஃபேக்டரி / விவசாயம் தொடர்பான சீனரி கொண்ட போஸ்டரை ஒட்டி வைங்க.

பிக்சர்: 6

எட்டுவருசத்துக்கு மேல சந்ததியில்லாம இருக்கா?

தீர்வு:
பெயர் புகழுக்கு ஆசைப்படாதிங்க. தையல் விட்டது, கிழிஞ்சது,சாயம் போனது போன்ற சட்டை ,பாண்ட் அணியவும். ஷேவிங்குக்கு சில்லறை இல்லாத மாதிரி தாடியை அப்படியே விட்டுருங்க. ( நோ ட்ரிம்மிங் ஆல்ஸோ)

வராஹமூர்த்தி,வாராஹி அம்மனோட உருவத்தை கற்பனை பண்ணுங்க. குழந்தைங்க பிறந்தா ஒரு பரம ஏழை தன் குழந்தைக்கு எந்தவிதமான ஃபெசிலிட்டீஸை கொடுப்பானோ அதை மட்டும் கொடுப்பேன்னு சங்கல்ப்பம் பண்ணிக்கங்க.

Sunday, May 6, 2012

பிரச்சினை எதுவானாலும் தீர்வு இதோ


அண்ணே வணக்கம்ணே !

ஜோதிடம் 360 புஸ்தத்தை படிச்சுட்டு நம்ம இஸ்மாயில் சார் ஒரு தூள் ஐடியா கொடுத்தாரு. அதாவது ப்ராப்ளம் பேஸ்ட் அனலைஸ் அண்ட் சொல்யூஷன்.

ராஜமன்ட்ரி கொல்லப்புடி வீராஸ்வாமி அண்ட் கோ வினர் பரிகாரங்கள் பற்றிய நம்ம ஸ்க்ரிப்டை படிச்சுட்டு ஓகே பண்ணாய்ங்க.ஆனாலும் ஃபைனலா வெரிஃபை பண்ணி திருத்தங்களுடன் ஓகே சொல்ல வேண்டிய அவிக ஆஸ்தான வித்வான் டிக்கெட் போட்டுட்டாரா அந்த ப்ராஜெக்ட் ஊத்திக்கிச்சு.

இதை ஏன் இங்கே சொல்றேன்னா அந்த புஸ்த்வத்துல இப்படி ஒரு அத்யாயமே வச்சிருந்தன். தினசரி வாழ்க்கையில சனத்துக்கு பலப்பல பிரச்சினைகள் . கிரகத்தை வச்சு பிரச்சினைய சொல்றாப்ல பிரச்சினைய வச்சு கிரகத்தை கேட்ச் பண்ண முடியும் (லாஜிக்) .பிரச்சினை தரக்கூடிய பாவத்தை – கிரகத்தை கேட்ச் பண்ண பிற்காடு பரிகாரம் சொல்றதும் சாத்தியம்தேன்.Read More

Tuesday, November 15, 2011

ஜாதகம் இல்லாதவுக: பிரச்சினையும் தீர்வும்


அண்ணே வணக்கம்ணே!
ரெண்டு நாளைக்கு மிந்தி ஜாதகம் இல்லாதவுக தங்கள் பிரச்சினைகளை வைத்தே அந்த பிரச்சினைக்கு எந்த கிரகம் காரணம்னு ஒரு குன்ஸா தெரிஞ்சுக்க ஒரு பதிவு போட்டோம். நேத்து பிரச்சினைக்கு காரணம்சூரியன்,சந்திரன்,செவ்வாய்னு தெரிஞ்சா செய்துக்கவேண்டிய பரிகார பேக்கேஜையும் தந்திருந்தம்.

இன்னைக்கு உங்க பிரச்சினைக்கு காரணம் ராகு,குரு,சனி,புத,கேது,சுக்கிரன்னு தெரிஞ்சா செய்துக்க வேண்டிய பரிகாரங்களை பதிவா போட்டிருக்கம். Read More

Tuesday, December 14, 2010

பெண்களால் வரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள்

ஜோதிட ரீதியாக பெண்களை 9 வகையாக பிரித்து அவர்களின் குணாம்சங்கள் என்ன? அவர்களால் எந்தெந்த வகையில் பிரச்சினைகள் வரும் அவற்றிற்கு தீர்வு என்ன என்று விலாவாரியாக சொல்லும் தொடர் (?)  ஒன்றை கவிதை07 வலைப்பூவில் துவக்கியுள்ளேன். அதைப்படிக்க இங்கே  அழுத்தவும்