'>

Monday, December 5, 2011

போங்கடா நீங்களும் உங்க அறிவு ஜீவித்தனமும்

அண்ணே வணக்கம்ணே !
கிரகமும் கடவுளும்னு மினி தொடர் தொடர்ந்தே தீரும் கவலை வேண்டாம்.சோதிடபதிவு போட்டா பத்து ரூவா சம்பாரிச்சுக்கலாம் இல்லேங்கலை. நம்மை " நிக்க" வச்சதே சோ.பதிவுகள் தான் இல்லேங்கலை.
அதுக்காவ நாட்டு நடப்பை கண்டுக்காம இருந்தா அது துரோகம். அதனால இன்னிக்கு மட்டுமாச்சும் ஒரு சில விஷயங்களை பற்றி தலா ஒரு பாராவாச்சும் எழுதியே தீர்ரதுன்னு முடிவு பண்ணியிருக்கேன். கிரகமும் கடவுளும் தொடர் நாளையிலிருந்து தொடரும்.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு:
பலான இடத்துக்கு போனா கதை பேச /கேட்க நேரம் இருக்காது. இதுவே தள்ளிக்கிட்டு வந்துட்டா ரெண்டு ஷோவுக்கு இடையில் நிறைய நேரம் இருக்கும். அப்பம் டைம் பாஸுக்கு கதை கேட்பதுண்டு. சொல்லிவச்ச மாதிரி அல்லாரும் ஒரே கதைதேன்.

மொதல்ல குடும்பம் சொந்தம் பந்தத்துல எவனா எச்சில் பண்ணியிருப்பான். அப்பாறம் இவள் மனசுக்கு புடிச்சதா ஒரு டிக்கெட். அப்பாறம் ஏரியா பெரிய மன்சங்க வரைக்கும் ஒரு நெட் ஒர்க். அப்பாறம் அது நேஷ்னல் பர்மிட் ஆயிரும்.

மொதல்ல லோக்கல் பெரிய மன்சங்களுக்கு சில்லறை வர்த்தகத்துல அனுமதி கொடுத்தாய்ங்க. இதுவே ஜன நாயகத்தை அதுவும் "வெல்ஃபேர் ஸ்டேட்"ங்கற கான்செப்டை தொழிலுக்கு அனுப்பின மாதிரிதேன்.

இப்பம் அன்னிய முதலீட்டுக்கு அனுமதிங்கறாய்ங்க இதை (இன்டர்) நேஷ்னல் பர்மிட்டுன்னுதேன் சொல்லனும்.

இதெல்லாம் எப்படி இருக்குதுன்னா கட்டின பொஞ்சாதிக்கு சோறு போட முடியாத புருசன்ங்காரன் பாவம் பொஞ்சாதி சாப்பிடாம இருக்காளேன்னு ஊட்டுக்கே பார்ட்டிய பிக் அப் பண்ணி அனுப்பி வச்ச மாதிரி இருக்கு.

அப்பூடி பொஞ்சாதி மேல பாசம் இருந்தா - சோறு போட்டே தீரனும்னு துடிப்பு இருந்தா கோவா பீச்சுக்கு போயி குப்புற படுத்து சம்பாதிக்கவேண்டியதுதானே..

பொஞ்சாதிக்கிட்டே ஃபைல் கொடுத்து கை.எழுத்துக்கு அனுப்பறதெல்லாம் இந்த அறிவு ஜீவிகளின் வேலை. பொஞ்சாதிய அனுப்பறாப்ல பாரதமாதாவை அனுப்பினா என்னன்னு எவனோ அறிவு ஜீவிக்கு ஸ்பார்க் ஆயிருக்கு. அவனோட மூளையின் குழந்தைதேன் இந்த அன்னிய முதலீடு சமாசாரம்.
ஜன் லோக் பால் மசோதா:

இந்த மசோதாவுக்கு ஏற்பட்டு ஏகத்துக்கு எகிறிப்போன மவுசை இறக்கவே இந்த அன்னிய முதலீடு பிரச்சினைய தூக்கி பிடிக்கிறாய்ங்களோன்னு ஒரு சம்சயம். மொதல் இன்னிங்ஸ்ல எல்லாத்துக்கும் அப்பாற்பட்ட நிலையில இருந்த அன்னா டீம் மற்றும் அன்னா ஹசாரே ரெண்டாவது இன்னிங்ஸ்ல தேசலா , கொஞ்சமா சாயம் வெளுத்து தெரியறாய்ங்க. தாத்தா என்ன பண்றாருன்னு லெட் அஸ் வெய்ட் அண்ட் சீ..



ஜெ.அரசின் விலையேற்ற அதிரடி:

இந்த விலையேற்ற யோசனையை அம்மா சொந்தமா அமல் படுத்திட்டதா நினைக்காதிங்க. எல்லாம் இந்த தலைமை செயலக அறிவு ஜீவிகளின் மூளையில் பிறந்த கேன்சர் கட்டிகள். அம்மா என்னமா வீங்கி ,என்னமா சிவந்து வேலன்டைன் டே ரோசா மொக்கு மாதிரி இருக்குன்னு மயங்கிட்டாய்ங்க அதான் அம்மா பண்ண தவறு.

அம்மா ச்சொம்மா ஆளனுப்பி விட்டிருந்தா பால் விலை, பஸ் கட்டணம், மின் கட்டணம்லாம் உயர்த்தாமயே நிலைமையை சமாளிக்க அயனான ஐடியா கொடுத்திருப்பம்.அனுப்பலியே. இருந்தாலும் என்ன அடையாள ஆலோசனை கட்டணமா ரூ.1 ஐ ஃபிக்ஸ் பண்ணி ஐடியா கொடுத்துருவம்ல.

1.ஆவின் - போக்குவரத்து வாரியம் - மின்வாரியம் மூன்றையும் மூன்று தனி தனி பப்ளிக் லிமிட்டட் கம்பெனியாக்கிர்ரது

2. மேற்படி நிறுவன ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் ஷேர் வாங்கிக்க முன்னுரிமை தந்துர்ரது - பால் அட்டை தாரர்கள் , பாஸ் ஹோல்டர்ஸ், மின் இணைப்பு பெற்றிருப்பவர்களுக்கும் முன்னுரிமை.

3.மேற்படி நிறுவனங்களுக்கு தலையால தண்ணி குடிச்சாச்சும் 3 வருசத்துக்கு ஒரு பாக்கேஜ் கொடுத்துட்டு "ச்சூ" காட்டி விட்டுர்ரது . ஐ மீன் ( பைசா+ செயல் திறனை மேம்படுத்த -ஊழலை கட்டுப்படுத்த செயல் திட்டம் -அதன் அமலுக்கு உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்ப உதவி) 3 வருசத்துக்கப்பால லாபம் வந்தாலும் உங்களுக்கே - நஷ்டம் வந்தாலும் உங்களுக்கே ஆளை விடுன்னு அரசாங்கம் கழண்டுக்கனும்.

கனிமொழிக்கு வரவேற்பு:
ஒரு தெலுங்கு சினிமாவுல ராஜேந்திர பிரசாத் சதா சர்வ காலம் பான் பராக் குதப்பும் ட்ரஸ் டிசைனர். எம்.டி வந்து " லேட்டஸ்டா ஒரு டிசைன் போடச்சொன்னா நீ என்ன பண்ணிட்டிருக்கே" அது இதுன்னு காச்சுவாரு. அப்பம் ரா.பிரசாதோட அசிஸ்டன்ட் ஏதோ லொள்ளு பண்ண ரா.பிரசாத் அவனை துப்புவாரு. அசிஸ்டன் அணிஞ்சிருந்த வெள்ளை டீஷர்ட் மேல பான் பராக் எச்சில் சகட்டுமேனிக்கு எகிறும்.

ஒடனே எம்.டி "டிசைன்னா இதான்யா டிசைனுன்னு"குதிப்பாரு . இதுல துப்பினது சிபிஐ மற்றும் கோர்ட். எச்சில் விழுந்தது கனிமொழி ஆடையில் .டிசைனுன்னா டிசைன் இதான் டிசைனுன்னு குதிக்கிறது ?

சொல்லவும் வேணுமா என்ன? தூத்தேறிக்க.. இந்த கனிமொழி அம்மாவையும் இலக்கிய உலகம் அறிவு ஜீவின்னு ஒரு காலத்துல கொண்டாடிக்கிட்டிருந்தது

ஆந்திர அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்:

சந்திரபாபு என்டிஆர் உபயத்துல ஒரு நாலரை வருசம் , பா.ஜ.க உபயத்துல ஒரு நாலரை வருசம்னு 9 வருசம் சி.எம்மா குப்பை கொட்டியாச்சு.

2004 ல காலி. 2009 எலக்சன்ல ஊர்ல இருக்கிற குப்பையையெல்லாம் தலைமேல கொட்டிக்கிட்டு மெகா அல்லையன்ஸ் வச்சுப்பார்த்தாரு.(அதுலயும் தெ.ரா.சமிதி குப்பை செமை நாற்றம்) பப்பு வேகலை.

இப்பம் ஜகன் வேற செமை துள்ளு துள்ளிக்கிட்டிருந்தாரா. தேர்தல் வந்தா அவருதான் அடுத்த முதல்வர்னு ஒரு ஃபோபியா சந்திரபாபுவுக்கு வந்துருச்சு.

வயசான காலத்துல லொள்ளு எதுக்கு. ஜகன் துள்ளி துவளட்டும். இதெல்லாம் 6 மாசம் 1 வருசத்துக்கு மேல தாங்காது. இந்த அரசாங்கம் இஸ்பேட் மாளிகை மாதிரி உஃபுன்னு ஊதினா கொட்டிக்கும். நமக்கு வசதியான நேரத்துல ஊதலாம்னு சூதானமா அரசியல் பண்ணிக்கிட்டிருந்தாரு.

ஜகன் நீ அரசாங்கத்தோட கொலைட் ஆயிட்ட. நீ எதிர்கட்சிங்கற கடமையிலருந்து தவறிட்டே அது இதுன்னு ரேக்கி விட்டுக்கிட்டே இருந்தாரு.

கொய்யால உனக்கு வைக்கிறேன் இருடா வேட்டுன்னு கிரண் - கிரண் டு சோனியா -சோனியா டு சங்கர் ராவ் (மந்திரி) சங்கர் ராவ் டு ஹை கோர்ட்-ஹை கோர்ட்லருந்து ஆர்டர்.

ஜகன் மேல சி.பி.ஐ ரெய்டுல்லாம் விட்டு பார்த்தாய்ங்க ஜகன் அசரலை. சந்திர பாபு காங்கிரஸோட "சோரம்"போயிட்டாருன்னு ஜகன் அடிச்சு விட பாபுவுக்கு தன் கற்பை நிரூபிச்சுக்கவேண்டி வந்துருச்சு. அதான் இந்த தீர்மானத்தோட பின்னணி.

இதுக்கு ஆதரவா :122 பேர் வாக்களிக்க , எதிர்த்து : 162 பேர் வாக்களிக்க கிரணுக்கு தலை தப்பியது.ஜகன் ஆளுங்க 19 பேர் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க சிரஞ்சீவியின் பிரஜாராஜ்ஜியம் ஆளுங்க 17 பேர் எதிர்த்து வாக்களிக்க மேட்டர் பேலன்ஸ் ஆயிருச்சு.

சிரஞ்சீவியும் இதான்டா சான்ஸுன்னு ரேங்கிக்கிட்டு கைகேயி வேலைல்லாம் செய்து சைக்கிள் கேப்ல காரியம் சாதிச்சுக்கிட்டுத்தேன் ஓட்டுப்போட்டாரு அது வேற விஷயம்.

இதுல சோகம் என்னடான்னா அறிவு ஜீவி -லோக் சத்தா தலைவர் - டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஜெயபிரகாஷ் இந்த பிரச்சினையில நடு நிலை வகித்தார்.

அறிவு சாஸ்தியாயிட்டா இப்படித்தான் நடந்துப்பாய்ங்க போல. கொய்யால இந்த அரசு இருக்கனுமா போகனுமாங்கற மேட்டர்லயே ஒரு முடிவை எடுக்க முடியாத இவிக தான் அறிவு ஜீவிகள். போங்கடா உங்க அறிவுல..............................


No comments: