'>

Tuesday, December 6, 2011

குரு Vs தட்சிணா மூர்த்தி


எச்சரிக்கை:
கடந்த சில நாட்களாக கமெண்ட்ஸே வர்ரதில்லை. ஆனால் ஹிட்ஸ் மட்டும் 1200 க்கு குறையவே இல்லை.ஆனால் கல்லா பெட்டி மட்டும் நெல்லாவே ரொம்புது.

என்னங்கடா இதுன்னு ஒரே கொயப்பம். அப்பாறம் சரி உடு பழைய நீர் விலகி புதுவெள்ளம் பாயுது போலன்னு ஆறுதல் படுத்திக்கிட்டம்.

நேத்தெல்லாம் ஆருக்காவ எழுதறோம்னு ஒரு விரக்தி.ஒரு ஆறுதலா தேன் கூடு தளத்துல நம்ம பதிவு ரெண்டாவது சூடான பதிவா வந்திருக்கு. ஸ்க்ரீன் ஷாட் மேலே.. பதிவுக்கு போயிரலாமா?



அண்ணே வணக்கம்ணே !

கடவுளும் கிரகமும்னு மினி தொடர் ஆரம்பிச்சு சூ,சந்,செவ்,ராகு முடிச்சாச்சு. படக்குனு ஜம்ப் பண்ணி சுக்கிரனை முடிச்சோம்.

இப்பம் விட்ட இடத்துல தொடரனும். இன்னைக்கு குரு. பதிவின் இறுதியில் வாழ்க்கை பற்றிய என் கண்ணோட்டத்தை தத்துவமா சொல்லியிருக்கேன். படிச்சுட்டு சட்டைய கிழிச்சுக்கிட்டா நாம பொறுப்பு கிடையாது.

இனி குரு. மொதல்ல குருவை பற்றி ஒரு சின்ன மேட்டர் (இதை அய்யர் தி கிரேட் ங்கற முகமூடியில சொல்லியிருந்தம் - நம்மை ஏன்னு கேட்க நாதியில்லாம போயிருச்சா - நம்மை நாமே கிளிச்சு ஒரு நாடகம் போட்ட கால கட்டம் அது. இந்த உண்மை தெரியாம நம்ம ஜானகிராமன் அந்த எழுத்துக்களையெல்லாம் கர்மசிரத்தையா கமெண்டா போட்டு தீர்த்தாரு. அன்னாருக்கு நன்றி.

நிற்க குருவை பற்றி அய்யர் தி கிரேட்:

ஒரு மனிதன் திரிமூர்த்திகள் கிட்டே மோதிட்டு குரு கிட்டே வந்து " தலை! தப்பு பண்ணிட்டன் நீங்கதேன் காப்பாத்தனும்"னு கேட்டா குரு காப்பாத்துவாரு.

ஆனால் குரு கிட்டே மோதிட்டு திரிமூர்த்திகள் கிட்டே போய் "குரு கிட்டே மோதிட்டன் . என்னை நீங்கதேன் காப்பாத்தனும்னு போயி கேட்டா அவிக "போடாங்கொய்யால எங்க 3 பேர் கிட்டே ஒட்டு மொத்தமா மோதிட்டு போனாலும் காப்பாத்தற பார்ட்டி குரு - நீ அவர்கிட்டயே மோதிட்டு வந்திருக்கேன்னா எங்க கிட்டே மோத எவ்ள நேரம் ஆகும் போ போ"நன்னிருவாய்ங்களாம்.

இது குருவுக்குரிய சிறப்பு. உடைச்சு சொன்னா திரி மூர்த்திகள் கிட்டே மோதிட்டு வந்தவனை கூட காப்பாத்தற ரேஞ்சுக்கு "கப்பாசிட்டி"ய கொடுக்கற கிரகம் குரு. இவர் ஜாதகத்துல/கோசாரத்துல சரியில்லைன்னா ஆரை வணங்கறதுங்கற கேள்விக்கு தட்சிணா மூர்த்திய வணங்குன்னு சொல்றாய்ங்க.

த.மூர்த்திய வணங்கறதுக்கும் - குரு தொடர்பான தீய பலன்கள் குறையறதுக்கும் என்ன தொடர்புன்னு கேப்பிக.

த.மூர்த்தின்னா வேற யாரோ இல்லை . மிஸ்டர் ஷிவாதேன். என்ன ஒரு வித்யாசம்னா தட்ச யாகத்துல அவிர்பாகத்தை கொடுக்க சொல்லி வாதாட மிஸஸ் ஷிவா போறாய்ங்க. வேலைக்காகலை. ஆத்துக்காரர் வீரபத்ரரையும் - இந்தம்மா காளியையும் உருவாக்கி ஏவ யாகம் காலி.

தட்சனால கிடைச்ச உடல் தனக்கு வேணாம்னு ஆத்தா யாக குண்டத்துல இறங்கிர்ராய்ங்க. அந்த சாம்பல் உலகமெல்லாம் விழுந்ததாம்.

அந்த சாம்பல் விழுந்து இடங்களைத்தேன் சக்தி ஸ்தலங்கள்னு டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் காரவுக வாரி குவிக்கிறாய்ங்க.

இந்த மாதிரி ஆன்டி க்ளைமேக்ஸ்ல பொஞ்சாதி புள்ளை குட்டி ஆருமில்லாம சிவனார்- யோகத்துல ஆழ்ந்துர்ராரு இந்த ஃபோஸைத்தேன் தட்சிணா மூர்த்தின்னு வணங்கறோம்.

குரு ஸ்வர்ண காரகன் (தங்கம்) குரு தனகாரகன் . நம்மாளுகிட்டே இதெல்லாம் மருந்துக்கும் கிடையாது.அதனாலதேன் தியாகேசன்னு பேரு.

குரு கங்கண காரகன். (வாழ்க்கை துணை) பொஞ்சாதியே யாக குண்டத்துல இறங்கியாச்சு) குரு புத்ரகாரகன் ( இவர் மோனத்துல இருக்க - தேவர்கள் மன்மதனை அனுப்பி அம்பு ஏவி -இவர் அவரை எரிச்சு -இப்படி பல எப்பிசோட் கடந்த பிற்காடுதேன் முருகர் வராரு. அதுவரை தனியாளு) சிவனார் இந்த கட்டத்துலதேன் சனத்குமாரர்களுக்கு உபதேசம்லாம் பண்றாரு (குரு) .

இவரு சாதாரணமா ஜொள்ளு பார்ட்டி .தாருகாவனத்து ரிஷிபத்தினிகளையெல்லாம் கர்பமாக்கின படு கில்மா பார்ட்டி. ஒரு கட்டத்துல விஷ்ணுவோட ஹோமோ. ஆனால் தென் திசை நோக்கி மோனத்துல அமர்ந்திருக்கிறச்ச அவர் குரு மூர்த்தி -தட்சிணா மூர்த்தி. அந்த சமயம் இவருக்கு குரு காரகங்கள்ள ஒன்னு கூட கிடையாது.ஆனால் ஜகத்குருவா இருக்காரு.

யத்பாவம் தத்பவதி. நீங்க எதை நினைக்கிறிங்களோ அதுவா மாறலாம். நீங்க த.மூர்த்திய (முழு மன்சா) மனசுல நிறுத்தினா நீங்களே குருவா மாறலாம். நெருப்பை நெருப்பு என்ன செய்ய முடியும். ஜீவனுள்ள குருவை வெறும் ஸ்தூல உருவமுள்ள குரு கிரகம் என்ன செய்ய முடியும்? இது ஒரு வ்யூ..

இன்னொரு வ்யூல பார்த்தா நீங்க இந்த பதிவை படிச்ச பிறவு தட்சிணா மூர்த்திய தரிசிச்சா உங்க மைண்ட்ல என்ன ஓடும்?

த பார்ரா மும்மூர்த்திகளில் ஒருத்தரு.. இவரே பொஞ்சாதி - பிள்ளை குட்டி ஆருமில்லாம கிடக்காரு. நாம எந்த மூலைக்கு? இங்கன ஆருக்கும் எதுவும் நிரந்தரமில்லை போலன்னுட்டு எளிமைக்கும் -தனிமைக்கும் ப்ரிப்பேர் ஆயிருவிங்க.

தனிமைக்கு ப்ரிப்பேர் ஆன பிறவு பொஞ்சாதி ராசாத்தி அம்மாள் மாதிரி ஆட்டம் போட்டா "ஆளை விடுன்னு மஞ்ச துண்டை அவுத்து போட்டுட்டு கருப்பு சால்வை போட்டுக்கிட்டு பெரியார் கொள்கையை பரப்புறேன்னு கிளம்ப தயாராயிருவிக. அப்பம் ராசாத்தி அம்மாள் என்ன பண்ண முடியும்? குருவால என்ன பண்ண முடியும்?

தனிமைக்கு ப்ரிப்பேர் ஆன பிறவு பிள்ளை அழகிரி மாதிரி ஆட்டம் போட்டா "ஆளை விடுன்னு மஞ்ச துண்டை அவுத்து போட்டுட்டு கருப்பு சால்வை போட்டுக்கிட்டு பெரியார் கொள்கையை பரப்புறேன்னு கிளம்ப தயாராயிருவிக. அப்பம் அழகிரியால என்ன பண்ண முடியும்? குருவால என்ன பண்ணமுடியும்.

நீங்க தனிமைக்கு ப்ரிப்பேர் ஆகி உறவுகளை டாக்கிள் பண்ணா உறவுகளால லொள்ளு வராது. உறவுகளை சஸ்டெய்ன் பண்ணிக்க அஜீஸ்மெண்டை ஆரம்பிச்சிங்கனா கொஞ்ச நாள் காலம் ஓடும். ஆனால் 193 நாளு பிரிவுக வேக வேண்டி வந்துரும்.

இப்பம் புரியுதா குருவுக்கும் -தட்சிணா மூர்த்திக்கும் என்ன உறவு -என்ன லிங்குன்னு ? உடுங்க ஜூட்..


வாழ்க்கையே ஒரு காத்திருப்பு

வாழ்க்கைய புரிஞ்சிக்கிட்டா அது அரித்மெட்டிக் புரிஞ்சிக்கலின்னா அல்ஜீப்ரா மாதிரி குழப்பி அடிக்கும்.வாழ்க்கைய பல பேர் பல விதமா டிஃபைன் பண்ணியிருக்காய்ங்க.எனக்கென்னமோ இன்னைக்கு ஒரு வெத்து ஆசாமியோட பேசிக்கிட்டிருந்தப்ப ஒரு ஃப்ளோவுல இந்த பஞ்ச் வந்துருச்சு. ரோசிச்சு பார்த்தா இதான் கரீட்டுன்னும் தோணுது.

இன்னம் கொஞ்சம் டீட்டெய்லா சொல்லனும்னா வெற்றி பெற்றவன் தோல்விக்காக காத்திருக்கனும், தோல்வியுற்றவன் வெற்றிக்காக காத்திருக்கனும்.இதான் வாழ்க்கை இது உண்மையா இல்லின்னாலும் சரி இதை நம்பி நம்ம மைண்டை ட்யூன் பண்ணிக்கிட்டா தோல்வி துவளச்செய்யாது, வெற்றி துள்ள செய்யாது.

இப்பமும் காத்திருக்கேன். 1991 ல திருமணமாகி 2011 மேரேஜ் டே தினம் ஃபோட்டோ எடுக்க அது நாம என்னா மாதிரி கிழடு தட்டி போயிருக்கோம்னு காட்ட , மகள் ஃபீல் பண்ணாத டாடின்னுட்டு என்னென்னமோ தகிடு தத்தம்லாம் செய்து - ஃபோட்டோ செஷனே நடத்திட்டா .ஆனால் இந்த கம்ப்யூட்டர் பைத்தியம் பிடிச்சு உளறிக்கொட்ட ஃபோட்டோ ஞா இல்லாம ஃபார்மெட் அடிச்சாச்சு. இப்பம் ஃபைல் ரெக்கவரி போட்டிருக்கன்.

போனதுல எத்தனை மீறுதுன்னு காத்திருக்கேன் . ஓஷோ என்னமோ அந்தந்த நொடிக்கு வாழனும்ங்கறாரு. ஆனால் மனசு பிரிவுல உறவை தேடுது - உறவுகள் இருக்கும்போது தனிமைக்கே ஏங்குது. இது எப்படியா கொத்த பை.தனம்னு புரியுது.

பிரம்மச்சரியத்துல காமத்தை நினைச்சா பிரம்மச்சரியம் அவுட். காம விளையாட்டில் பிரம்மச்சரியத்தை பற்றி கவலைப்பட்டா கில்மாவும் அவுட். புரியுது. என்ன நாம ஆட்டோசஜஷன்ல புலி. நாம எந்த கட்சியில இருக்கோமோ அந்த கட்சிதான் சூப்பருன்னு மொதல்ல நம்மை நம்பவச்சிருவம்ல. அதனாலதேன் காலம் ஓடிக்கிட்டிருக்கு.

அதே சமயம் நம்ம கட்சிக்கு அப்பாற்பட்டும் நல்ல கட்சிகள் இருக்கிறதை சின்னதா ஸ்டார் சிம்பல் போட்டு பொடிப்பொடியா குறிச்சு வச்சிருப்பம்.அதனாலதேன் பிழைச்சோம். இல்லாட்டி நாறியிருப்பம்.

நான் பல தடவை சொல்லியிருக்கேன். எனக்கு நான் உபதேசிச்சு ஆறுதல் பெற்ற விஷயங்களைத்தேன் இன்னைக்கு அறிவிச்சிக்கிட்டு இருக்கேன். எடுத்தா எடுங்க உட்டா உடுங்க.

பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் கிட்டே அடிமைப்பட்டு கிடந்தப்போ சுதந்திரத்துக்கு ஏங்கினோம் -சுதந்திரம் பெற்ற பிறகு அன்னிய முதலீட்டுக்கு தொங்கறோம்.தேவையா இது? நாம நல்ல அடிமைகளாவும் வாழலை. சுதந்திரத்தோட பெருமையும் நமக்கு உறைக்கலை.




No comments: