'>
Showing posts with label dream house. Show all posts
Showing posts with label dream house. Show all posts

Sunday, December 4, 2011

சுக்கிரனும் -லட்சுமியும்

அண்ணே வணக்கம்ணே .. நம்ம வினோத்ஜீ வீடுங்கற பேர்ல ஒரு வலைப்பூ ஆரம்பிச்சு "ஊடு" கட்டி விளையாடிக்கிட்டிருக்காரு. நம்மை ஆத்தரா வேற இன்வைட் பண்ணிட்டாரு. நம்முது கடகலக்னம்ங்கறதாலயோ என்னமோ அந்த தலைப்பு நமீதா கணக்கா நம்மை இழுத்துருச்சு.வாரத்துக்கு ஒரு போஸ்டாச்சும் போடலின்னா நல்லாருக்காது.

அதே சமயம் நாம ஆரம்பிச்ச மினி தொடரையும் தொடர்ந்தாக வேண்டியிருக்கு. ஆக்சுவலா இன்னைக்கு குருவை பற்றி எழுதனும். குருவுக்குரிய தெய்வமா தட்சிணா மூர்த்தி சொல்லப்படுகிறார். குருவுக்கும் -த.மூர்த்திக்கும் என்ன தொடர்புன்னு எழுதியாகனும். அதே நேரத்துல வீட்டை பற்றியும் எழுதனும். ஊரை சுத்தின மாதிரியும் இருக்கனும் அண்ணனுக்கு பொண்ணை பார்த்த மாதிரியும் இருக்கனும்ங்கற மாதிரி எழுதனும்னா இன்னைக்கு குரு -சனி -புத-கேது எல்லாரையும் ஓவர் லுக் பண்ணி சுக்கிரனுக்கு ஜம்ப் ஆயிரனும்.
ஏன்னா அவர் தானே கிருக காரகர் ( கிரகம் - வீடு). கில்மாவுக்கும் அவர்தான் காரகம்னு தனியே சொல்லத்தேவையில்லை.

மன்சன் வீடு கட்ட ஆரம்பிச்சதே கில்மாவுக்காகத்தான்னு "வீடும்-வீடு பேறும்" பதிவுல சொன்னது ஞா இருக்கலாம்.அது மனோதத்துவ அலசல். இது ஜோதிட அலசல்.மனோதத்துவம்னா குறுந்தாடி வச்ச கிழவாடிகள் அடிக்கிற ஜல்லின்னு நினைச்சுராதிங்க. மனோதத்துவம் சொல்ற ஆசனப்பருவம் மூலாதாரத்தையும்-அதையடுத்து வரும் பருவம் ஸ்வாதிஷ்டானத்தையும் குறிப்பிடுது.

மனோதத்துவத்துக்கும் யோக சாஸ்திரத்துக்குமே லிங்க் இருக்கும்போது ஜோதிடத்துக்கும் மனோதத்துவத்துக்கும் லிங்க் இருக்காதா என்ன? கீது நைனா..

ஜோதிஷத்துல யோ.சா, ம.தத்துவம் எல்லாம் அடங்கி இருக்கு. ஒரு கிரகம் வீசும் கிரணம் ,அதிர்வு அவை தரும் தூண்டுதல் மனித உடல்/மனதை என்ன செய்யும்ங்கறது அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம்.

ஆனால் அந்த தூண்டுதல் -அதன் விளைவு என்னவா முடியும்ங்கறதெல்லாம் மருத்துவம் -மனோதத்துவம். இது அன்றைய ரிஷிகள் மகரிஷிகளின் "பட்டறிவுக்கு" சாட்சி.

உதாரணமா கடகத்துக்கு அதிபதி சந்திரன்.அவர் அடிக்கடி கட்சி மாறும் அரசியல் வாதி மாதிரி ராசி மாறிக்கிட்டே இருப்பாரு. இதனால ஜாதகனோட மன நிலை -உடல் நிலையில் ஒரு வித திடீர் தன்மை,எதிர்பாரா தன்மை ,நிலையற்ற தன்மை இருக்கும் அனுகூல,பிரதி கூல நிலை மாறி மாறி வரும். இது ஸ்பார்க்.

இதை வச்சு மனித உடல் /மனம் என்ன பாடுபடும்னு கணிக்கிறச்ச மருத்துவம் சைக்காலஜி எல்லாம் வந்துருது. பெரியவுக கோடிட்டு காட்டியிருக்காய்ங்க. நாம கோடிட்ட இடத்தை நிரப்பறோம். தட்ஸால்.

எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டாருய்யான்னு அலுத்துக்காதிங்க.பாய்ண்டுக்கு வரேன். சுக்கிரன் கில்மாவுக்கு காரகன் என்பது ஸ்பார்க் .ஞானோதயம். அடுத்து அவர் கிருக காரகன் ,வாகன காரகன்னு சொல்லியிருக்காய்ங்களே அதெல்லாம் மருத்துவம் சைக்காலஜி தொடர்பான உண்மைகள்.

சுக்கிரன் நல்லாருந்தா பார்ட்டி கில்மா மேட்டர்ல படு கிட்டனாயிருப்பாரு. பெண் வீக்கர் செக்ஸ். சதா இன்செக்யூரிட்டியில இருக்கிறவள்.அவளுக்கு செக்யூரிட்டி எது வீடு..கில்மாவுக்குன்னா கட்டிலறை -அதுக்கு கதவு. இதெல்லாம் இருந்தா தேன் கில்மா படு கில்மாவா இருக்கும்.

அடுத்து வருவது வாகன காரகம் வேலை முடிஞ்சு சிட்டி பஸ்ல நசுங்கி நாறி வீடு போய் சேர்ந்தா பாலகுமாரன் சொன்னாப்ல பனிக்குட வாசனைதேன் வரும். அதனால வாகனத்து மேல மனசு தாவும்.

இப்படியா கொத்த சுக்கிரன் சரியில்லேனு வைங்க எந்த சாமிய கும்பிடனும்னு கேட்டா லட்சுமியை கும்பிடுன்னு ஜோதிடம் சொல்லுது ஏன்?

லட்சுமி எங்கன இருக்கா? கடல் மேல - ஆதிசேஷன் -படம் எடுத்து கொத்த தயாரா இருக்க அசால்ட்டா ஆத்துக்காரரோட பாதங்களை பிடித்து விட்டபடி இருக்கா.லட்சுமியோட ஆ.காரரான விஷ்ணு லேசுப்பட்ட ஆளா?

ஊஹூம்..ஒவ்வொரு அவதாரத்துல ஒவ்வொரு ஆட்டம். சில அவதாரத்துல ஒன்னு ,சிலதுல ரெண்டு ,கிருஷ்ணாவதாரத்துலன்னா கணக்கே இல்லை. இது சிவனாரோட ஹோமோ செக்ஸ் வேற . இத்தீனி லொள்ளு இருந்தாலும் கணவனை பிரியலை.

கழுத்துல துண்டு போட்டு இழுத்தா எவனும் ஓடிப்போகத்தேன் பார்ப்பான். பாதத்துல என்ன விசேஷம்னா உச்சந்தலைக்கு டைரக்ட் லிங்க் இருக்குது த்லை ! அதுலயும் கால் கட்டை விரல் இருக்கே. மூளைக்கு ஹாட் லைன் மாதிரி.

உடலுறவின் போது ரெண்டு கால் கட்டை விரலையும் ஒன்னோட ஒன்னா பின்னிக்கிட்டா வீரியம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் (ஆனால் இது பெண் மேல் முறையில் தான் ஆணுக்கு சாத்தியம்)

லட்சுமிக்கு அக்கு பஞ்சர்ல இருந்து வர்மக்கலைலருந்து பலதுலயும் டச் இருந்திருக்கு. இல்லாட்டி அந்த மாதிரி ஒரு லொக்கேஷன்ல (கடல்) , அந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன்ல ( பாம்பு) அந்த மாதிரி ஒரு கணவனோட (ஹோமோ) சகஜமான வாழ்க்கைய நடத்த முடியுமா என்ன?

சுக்கிரன் மலர்களுக்கு காரகன் .அவள் பிறந்ததும் மலரில் - உறைவதும் மலரில். சுக்கிரன் அழகு அலங்காரம், வாசனாதி திரவியங்களுக்கு காரகன். ஆத்தா மேல சுடுகாட்டு சாம்பல் வாசனைதேன் வரும். ஆனால் விஷ்ணு அலங்கார பிரியர். அதனால லட்சுமியும் மேட்சிங்கா அதே ரூட்ல மெயின்டெய்ன் பண்றாய்ங்க.

எந்த பெண்ணாவது பார்க்க லட்சணமா இருந்தா ஆத்தா மாதிரி இருக்கு, சரஸ்வதி மாதிரி இருக்குன்னு சொல்றதில்லை. லட்சுமி கரமா இருக்குன்னு தேன் சொல்றோம்.

இந்த லைன் அப்ல ரோசிச்சா இன்னும் நிறைய்ய மேட்டர் வெளிய வரும். இதையெல்லாம் மனசுல வச்சு 5 வெள்ளிக்கிழமை லட்சுமிக்கு பூஜை செய்து ,6 ஆவது வெள்ளிக்கிழமை லட்சுமிகரமா வாழும் 6 சுமங்கலிகளை அழைத்து தாம்பூலத்தில் வெள்ளிக்காசோ ஃபேர் அண்ட் லவ்லியோ ஏதோ ஒரு சுக்கிர காரக பொருளை கொடுத்து அவிகளையே லட்சுமியா பாவிச்சு அவிக கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கினா சுக்கிர தோஷத்துலருந்து ரிலீஃப் கிடைக்கும். காதலில் வெற்றி,கண்ணாலம்,சுமுகமான தாம்பத்யம் அமையும்.வீடு,வாகனம்னு மனசு தாவ அவையும் அமையலாம். டார்கெட் /அச்சீவ் மெண்டுக்கு எந்த ரேஞ்சுல பூஜை பண்ணனும்.ஸ்தூலமான ஆடம்பரத்தை விட உங்க உணர்வுகள் முக்கியம். மனம் குவித்த ஆராதனை முக்கியம்.

உடுங்க ஜூட் !

குறிப்பு:
நேத்துதேன் சிஸ்டம் மொத்தத்தையும் வைரஸ் ஸ்கான் பண்ணி முடிச்சம். படக்குனு கீ போர்டு பிரச்சினை கொடுக்க ஆரம்பிச்சுருச்சு. ராமா கனவேமிரா ரகுராம கனவேமிரான்னுட்டு அடிச்சு பார்த்தா இந்த வரிகள் மட்டும் கச்சிதமா டைப் ஆச்சு. இதுக்கு டெக்னிக்கலா என்ன காரணம்னு ஆருனா சொல்லலாம்.

Friday, December 2, 2011

வீடும் -வீடு பேறும்


அண்ணே வணக்கம்ணே !
இந்த எழுத்தும் ஒரு பேச்சுதேன். என்ன சைலன்ட் மோட்ல நடக்குது. இந்த பேச்சே மனிதன் காட்டில் வாழ்ந்தப்போ வேட்டைக்காக கூட்டத்தை பிரிஞ்சு மறுபடி கூடினப்போ ஆரம்பிச்சிருக்கும் போல. அப்பாறம் மன்சன் சஞ்சார வாழ்க்கைய விட்டு ஸ்திரவாசம் ஏற்படுத்திக்கிட்டப்போ ஊட்டுக்கு வந்து பொஞ்சாதி கிட்டே பீலா விடறதில ஆரம்பிச்சிருக்கும் போல.

அப்படி பீலா விடும்போது கொலிக்ஸ் ஆரும் உண்மைய போட்டு உடைக்காம இருக்கனும்னே மன்சன் வீட்டை கட்ட ஆரம்பிச்சானான்னும் நமக்கு ஒரு சம்சயம்.ஆனால் இந்த வீடு சமாசாரத்துக்கு பேசிக்கே கில்மா தான்னு அடிச்சு சொல்ல தோனுது.

காட்டு வாழ்க்கையில வேட்டையாடும் திறன் - சஞ்சார வாழ்க்கையில குதிரையேற்றம் இத்யாதி, ஸ்திரவாசத்துல தொழில் திறன் ,செல்வ செழிப்பை காட்டி குட்டிங்களை கரெக்ட் பண்ண மன்சங்கள்ள சிலரு ஆதிமன்சங்களாவே நின்னுட்டாய்ங்க போல.

அவன் பொஞ்சாதிய இவன் ,இவன் பொஞ்சாதிய அவன்னு கரெக்ட் பண்ண ஆரம்பிச்சிருக்கனும். அதுலயும் காட்டுவாழ்க்கையிலான லைஃப் ரிஸ்க் எல்லாம் ஸ்திரவாசத்துல இல்லியா ஆதி மன்சங்க ஸ்டேஜ்ல நின்னுட்ட பார்ட்டிங்க பயங்கர லந்து பண்ணியிருப்பாய்ங்க போல.

அவனவன் தன் பொஞ்சாதிய கட்டி காப்பாத்தவே வீடு மாதிரி எதையோ செய்ய ஆரம்பிச்சு அது இன்னைக்கு நில அபகரிப்புக்கு தனிப்பிரிவு போடற ரேஞ்சுக்கு பிக்காப் ஆயிருச்சுனு நினைக்கிறேன்.

மழை வெயில்ல இருந்து காப்பாத்திக்க வீடுதான் தேவைன்னு கிடையாதே. மொத்தத்துல வீடுங்கறதே கில்மாவை எந்த இன்டரப்ஷனும் -இன்செக்யூரிட்டியும் இல்லாம அனுபவிக்கத்தேன் உருவாகியிருக்கனும்.
அதுலயும் சொந்த வீடுங்கறது ஒவ்வொரு மன்சனுக்கும் ஒரு கனவாவே இருக்கு.

சொந்த வீடுங்கறது என்ன? இந்த சமூகத்துக்கு தனிமனிதன் போடும் லட்சுமண ரேகை. எம்.ஜி.ஆர் தொப்பி இல்லாம இருக்க முடிஞ்ச இடம் அவரோட வீடுதேன். கலைஞர் கருப்பு கண்ணாடி இல்லாம இருக முடிஞ்ச இடம் அவரோட வீடுதேன்.

மன்சன் விட்டு விடுதலையாகி ஆராமா இருக்க முடிஞ்ச இடம் வீடுதேன். வீடுங்கறது அவன் உள் மனப்படிமங்களின் ஸ்தூல வடிவம் - சரீரத்தின் நீட்சின்னு சொல்லலாம். அந்த மேட்டர்ல கன்டின்யுனிட்டி கெடுவதை மன்சன் லைக் பண்றதில்லை.அதனாலதேன் சொந்த வீடு கனவா போச்சு.

ஆரோ ஒரு மனோதத்துவ விஞ்ஞானி நம்ம கனவுகளுக்கெல்லாம் அடிப்படை கில்மான்னு சொல்லிவச்சிருக்காராம். இதை முழுக்க முழுக்க மறுக்க முடியுமா?

குகைகளில் வாழ்ந்த ஆதிமனிதனின் உள் மன தொன்ம படிமங்கள் அவனை வீடு கட்ட வைக்குது. மனிதனை வீடு பற்றி கன்வு காண வைக்குது போல.

டார்வின் ஒவ்வொரு உயிரோட குணாம்சமும் மன்சன்லயும் இருக்குங்கறதை தன் தன் பரிணாம தத்துவத்துக்கு ஆதாரமா சுட்டி விஸ்தாரமான உதாரணங்களை கொடுத்து ஸ்தாபிக்கிறார். வீடு பற்றி கனவு காணுவோர் கூடு கட்டி /குகை/வளையில் வசிக்கும் ஜீவராசிகளின் குணங்களை கொண்டவர்களாக இருக்கலாம்.

வீடு பற்றிய கனவுகளை கணக்கில் எடுக்காது காலத்தை தள்றவுக இன்னபிற ஜீவராசிகளின் குணங்களை கொண்டவர்களாக இருக்கலாம்.

இதையெல்லாம் படிச்சுட்டு "வக்ரம் புடிச்ச மன்சன்யா எல்லாத்துலயும் இதே இழவா"ன்னு திட்டிக்காதிங்க. உடலுறவை தெலுங்கு சமஸ்கிருத மொழிகளில் சம்யோகம்னு சொல்வாய்ங்க. யோகம் என்றால் கலத்தல்.
சம் என்பது சிறப்பு விகுதி.

உடலுறவில் ஆண் பெண் கலக்கிறார்கள்.அதன் மூலம் (அது ஆழமானதாக இருந்தால் இயற்கையோடும் கலக்கிறார்கள் - இயற்கையில் இருந்து தம்மை பிரிக்கும் மனதை - ஈகோவை கடக்கிறார்கள்.

யோகம்ங்கற வார்த்தைக்கும் கலத்தல்ங்கறது தான் பொருள்.யோகம் மனிதனை இறைவனோடு கலக்கிறது.
இறைவனோடு இவன் கலந்து தான் இருந்தான். பிறப்புக்கு முன் ஆகட்டும் -இறப்புக்கு பின் ஆகட்டும் இறைவனோடு கலந்துதான் இருந்திருப்பான்/இருக்கப்போகிறான்.

இறைவனோடு - இவன் கலந்திருந்த நினைவுகள் சப் கான்ஷியஸ்ல இருக்கலாம். இறைவன் தன்னை இயற்கையின் வடிவத்துல வெளிப்படுத்தியிருக்கான். பெண் இயற்கையின் பிரதி - நிதி -பிரதி நிதி. அவளை சேர்ந்தால் இயற்கையை -இயற்கையாக தன்னை வெளிப்படுத்திக்கிட்ட இறைவனை கலந்த நிறைவு மனிதனுக்கு ஏற்படுது.

மனம் கடந்த நிலையை வீடு பேறுன்னு சொல்லலாம். அந்த வீடு பேற்றின் ஃபோன்சாய்க் வடிவமே வீடுன்னு நான் சொன்னா மறுக்க முடியுமா? இறைவனின் சாங்கத்யத்துல மன்சன் எப்படி நிச்சிந்தையா இருக்கானோ அப்படி ஒரு ஃபீலிங்கை நாலு சுவர்கள் கொடுக்குது. மனிதனோட அசலான நோக்கம் அந்த நாலு சுவர் கிடையாது.

அவன் பிறப்புக்கு முன் தான் பெற்றிருந்த நிச்சிந்தையான நிலையை - மனமற்ற நிலையை - அகம் (ஈகோ) கடந்த நிலையை மீண்டும் பெற விரும்புறான். இயற்கையாக வெளிப்படுத்தி கொண்டிருக்கும் இறைவனுடன் இயற்கையின் பிரதி - நிதி -பிரதி நிதியான பெண்ணின் மூலம் இறைவனை கூட கனவு காண்றான்.

நான் பல தடவை சொல்வது போல மன்சனுக்கு எது அவெய்லபிளோ அதனோட அருமை பெருமை உறைக்கவே உறைக்காது. வீடு மேட்டர்ல கூட இதே நிலை தான். அது அன் அவெய்லபிளா இருந்தப்போ ஒடம்பெல்லாம் எண்ணெய் பூசிக்கிட்டு தெருவெல்லாம் புரள்றான். அது அவெய்லபிள் ஆனதும் அடுத்த ஸ்டாப்பிங்கை பற்றி ரோசிக்க ஆரம்பிச்சுர்ரன்.

ஆக்சுவலா இவன் கனவு காணும் வீடு இவன் சொந்த கனவில்லை.வாடகை கனவு . இவன் கனவு காணும் வீடு இவன் சொந்த வீடு அல்ல. இவன் வாழ்ந்த வீட்டின் நகல்.

(இப்டி ஊடு மேட்டர்ல சொல்ல மஸ்தா மேட்டருங்க இருக்குங்ணா இன்னொரு சந்தர்ப்பத்துல நோண்டி நுங்கெடுப்போம். அதுவரைக்கும் அம்பேல் வைத்து விடைபெறுவது ..ஹி ஹி சொல்லனுமா என்ன?)