'>
Showing posts with label டிப்ஸ். Show all posts
Showing posts with label டிப்ஸ். Show all posts

Tuesday, October 4, 2011

சோதிடர்கள் வாக்பலிதம் பெற டிப்ஸ்


அண்ணே வணக்கம்ணே !
இதே பதிவில் சோதிடர்கள் வாக்பலிதம் பெற டிப்ஸ் கொடுத்ததோட சோசியம் கேட்கிறவுகளுக்கும் பல டிப்ஸ் தந்திருக்கேன். நம்ம உத்தேசம் சோதிடர்கள்+ சோதிட ஆர்வலர்கள் ஜோதிடத்தின் பெருமைய உயர்த்தனும்ங்கறதுதேன். மொதல்ல கை.எ. பிரதியோட ஸ்கானை போட்டு ஒப்பேத்தறேன்.

அப்பாறம் ஆடியோ அப்பாறம் டெக்ஸ்ட் . உடுங்க ஜூட் ( வாழ்க ! பவர் கட் .. வாழ்க.. தனித்தெலுங்கானா போராட்டம் -வயிற்றெறிச்சலுடன்)





இப்போ டெக்ஸ்ட் ..கொஞ்ச நாழியில ஆடியோ

சோசியம் கேட்க....டிப்ஸ்

சோசியம் சொல்ல சோசியர்கள் பின்பற்ற ஏராளமான விதிகள் இருக்கு அதுல ஆளுக்கு ஒரு அம்பதை மிஞ்சிப்போற முறை வச்சுக்கிட்டு காலம்
தள்ளிக்கிட்டிருக்கோம். (சோதிடப்புலிகள் மன்னிக்க) சோசியம் கேட்கவும் சில விதிகள் இருந்தா நல்லது.

மாத சோதிடம் காரவுக தர்மசாஸ்திரம்னு ஒரு புஸ்தவம் போடாய்ங்க. இதுல சோசியம் கேட்கப்போறவுக எப்படி நடந்துக்கனும்னு சில பாய்ண்ட்டெல்லாம் தந்திருந்தாய்ங்க.

ஆனால் அந்த தர்ம சாஸ்திரத்தை கொடுத்தது ஒரு கிராஸ்பெல்ட்டு - அந்தாளு
மைண்டல சோசியர்னா ஒரு ஐயருங்கற கான்செப்ட் தான் இருந்திருக்கு. எனவே அது சோசியருக்கு மரியாதை என்பதை விட ஐயருக்கு மரியாதையாகிவிட்டது ஆனா நாம் இந்த பதிவுல சொல்லப்போற விதிகள் எந்த சோசியர்கிட்டே (ஐ மீன் அவர் ஒரு தலித்தாக இருந்தாலும்) போறவுகளும் பின்பற்ற வேண்டிய விதிகள்.

1. நீங்க சந்திக்க நினைக்கிற சோசியரை பற்றி தீர விசாரிங்க. முக்கியமா
ஏற்கெனவே அவர்கிட்டே போய் வந்தவுகளை விசாரிங்க.

2. உங்களுக்கு அவசியமிருந்தா மட்டுமே சோசியரை சந்திக்க போங்க (உ.ம்)
பிரச்சினை, குழப்பம், புது முயற்ச்சி, தசாவில் மாற்றம்.

3. நீங்க போனது உங்க எதிர்காலத்தை தெரிஞ்சுக்க – சோசியரோட புலமையை பரீட்சிக்க அல்ல.- இதை நன்னா ஞா வச்சுக்கங்க.

4. இடம், பொருள், ஏவல், எல்லாத்தையும் பார்த்து முடிவு பண்ணுங்க.

(அ) சோசியர்கிட்டே கூட்டம் கம்முதுன்னா அங்கே போய் கேட்கிறதைவிட அவரை உங்க இடத்துக்கு அமுக்கறது பெஸ்ட். அதுக்குனு தாதா, குண்டர்கள் மூலம் ப்ரஷர் கூடாது.

(ஆ) சோசியர் ஈ ஓட்டின்னா முன்கூட்டியே அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிக்கிட்டு
அவரோட இடத்துக்கே போகலாம்.

(இ) பல சோசியர்கள் சலூன் மாதிரி கட்டண பட்டியலை தொங்க விட்டிருப்பாய்ங்க. வெகுசிலர் இப்படி செய்யறதில்லை. அறிமுகம் செய்தவுக கிட்டயே கட்டண விவரங்களை தெரிஞ்சுக்கிடறது நல்லது. சில்லைரையா முன்கூட்டியே மாத்தி வச்சுருங்க.- அவருக்கு+ உங்களுக்கு தேவையில்லாத கன்ஃப்யுஷன் இருக்காது.

(ஈ) சோசியரோட அலுவலகத்துக்கு போறதா முடிவு பண்ணிட்டா ஜாதகங்களை மறக்காம கொண்டு போங்க – கம்யூட்டர் ஜாதகம் பெஸ்ட்.

(உ) On the way போறது – அடுத்தடுத்து Schedule போட்டுக்கிட்டு போறது நல்லதில்லை.

(ஊ) உங்க வாகனத்தை சரியான இடத்துல பார்க் பண்ணுங்க – ஒழுங்கா பூட்டுங்க.

(எ) தனியா போங்க / தம்பதி சமேதரா போங்க – குழந்தைகள், மச்சான்,
வேலைக்காரன், அல்லக்கை, பெரியாரிஸ்டுனு கூட கூட்டிப்போகாதீங்க.

(ஏ) சிலர் மேற்சொன்ன வகையறா பார்ட்டிகளை அனுப்பி சோசியர் ஃப்ரீயா
இருக்காரான்னு பார்த்துட்டு வான்னு அனுப்புவாங்க. (நம்மை இப்படி
விசாரிக்க ஆள் அனுப்பினா மதுரை பக்கம் போய்க்கிட்டிருக்கேன் – வர 10
நாளாகும்னு சொல்லிர்ரது)

(ஐ) சிலர் சோசியருக்கே ஃபோன் போட்டுருவாங்க ”வரலாமா”னு மட்டும் கேட்டா
போதும். சோசியரும் ”வாங்க”ன்னுட்டு கட் பண்ணிரனும். அதைவிட்டுட்டு
ஜல்லியடிக்கக்கூடாது.

நீங்க போட்ட காலை சோசியர் Cut பண்னா அவர் Office-ல இருக்காரு. சோசியம் சொல்லிக்கிட்டிருந்காருன்னு அருத்தம். மறுபடி மறுபடி போட்டு லொள்ளு பண்ணக் கூடாது.

(நம்மை இப்படி கடுப்படிச்சா – ரோமிங்ல இருக்கேன் நாளைக்கு கூப்டுங்கன்னிர்ரது)

(ஒ) சோசியர்கிட்டே என்ன கேட்கிறதுன்னு முதல்லயே முடிவு பண்ணிரனும்.

(ஓ) உங்க டர்ன் வரும் வரை உங்க செல் ஃபோன் சைலன்ட்ல போட்ருங்க. உங்க
டர்ன் வந்த பிறகு பாக்கெட்ல போட்டுருங்க.

(ஔ) நீங்க பார்க்கப் போனது சரியான சோசியரைன்னு வைங்க. நீங்க எதையுமே
சொல்லத் தேவையில்லை. உங்க ஜாதகமே சொல்லிரும். அதனால ஜாதகத்தை
அவர்கிட்டே வச்சுட்டு வளவளன்னு பேசாதீங்க.

(5) ஜாதகத்தை சோசியர்கிட்டே கொடுக்கும் போதே உங்க மைண்டை ப்ளஸன்டா வச்சுக்கங்க.

(6) உங்க இஷ்ட தெய்வத்தை மனசுல நினைச்சு ”இந்த சோசியர் மூலமா என்
எதிர்காலத்தை எனக்கு தெரிவிக்கனும் – எனக்கு ஒரு நல்ல வழியை காட்டனும்னு வேண்டிக்கங்க”.

இதுவரைக்கும் சொன்ன Tips எல்லாம் கொடுக்கப்பட்டதுக்கு முக்கியமான காரணம் உண்டு.

நீங்க சோசியம் கேட்க போகும் போது உங்க மைண்ட்லயோ – சோசியர்
மைண்ட்லயோ ஈகோ தலை தூக்கக்கூடாது.

உங்களுக்கிடையில் மிஸ்கம்யூனிகேஷன் வந்துரக்கூடாது. முக்கியமா உங்க மைண்ட்ல உங்க பிரச்சினை + எதிர்காலம் குறித்த கேள்வி தவிர வேற எந்தவித இன்டரப்ஷனும் இருக்கக்கூடாது.

(உம்) உங்க டூவீலரை No Parking ல நிறுத்திட்டீங்கனு வைங்க. உங்க மைண்ட்
டூவீலர் மேல இருக்குமே தவிர உங்க எதிர்காலத்தின் மேல இருக்காது.

நீங்க இந்த டிப்ஸை எல்லாம் ஃபாலோ பண்ணினா நீங்க பார்க்கப்போனது சுமாரான ஜோசியரா இருந் தாலும் உங்களுக்கு பெட்டர் ரிசல்ட் கிடைக்க வாய்ப்பிருக்கு.

சோசியம் சொல்ல டிப்ஸ்:

1. எதிர்காலம்ங்கறது தேவரகசியம். அது தானா தன்னை வெளிப்படுத்தி
க்கிட்டாலே தவிர எந்த கொம்பனாலையும் அதை அறிய முடியாது.

2. சோசியராக கண்டதையும் படிக்கனும். மனப்பாடம் பண்ணனும். ஆனா
எதிர்காலத்தை கணிக்க இதெல்லாம் உதவாதுங்கறதை காலப்போக்குல உணர்வீங்க அப்படி உணர்ந்த நாள் தான் நீங்க முழுமையான சோதிடர்னு அருத்தம்.

3. ஜோதிடத்தை Mode of Living ஆக வச்சுக்க கூடாது. குறைந்த பட்சம்
ஜோதிடமல்லாது ரெண்டு மூணு Source of Income வச்சுக்கனும். தெய்வம் ஒரு
சிலருக்கு – அவிக எதிர்காலத்தை அறிவிக்க நினைச்சு என்னை ஒரு “மீடியமா”
சூஸ் பண்ணியிருக்குனு நினைக்கனும்.

4. ஜாதகம் என்பது ஒரு சாக்கு மட்டுமே கிரக பலங்களை பல்வேறு விதிகளை கொண்டு நான் கணக்கிடறதும் ஒரு சாக்கு மட்டுமே. பலன் சொல்றது நானா இருந்தாலும் – சொல்ல வைக்கிறது தெய்வம் – அந்த பலனை தரப்போறதும் தெய்வம் தான்னு நினைக்கனும்.

5. ஜாதகத்தை கையில் வாங்கும் போதே ”தெய்வமே! எனக்கு ஒரு இழவும் தெரியாது இந்தாளு எனக்கு ஏதோ தெரியும்னு வந்துட்டாரு... இவரை ஏமாத்தாதே”னுட்டு நினைச்சு வாங்கனும்.

6. ஜாதகத்துல உள்ள கிரகங்களை பார்த்து பலாபலங்களை நிர்ணயிக்கும் போதே.... ”யப்பா.... நீங்கலாம் தெய்வத்தோட படைப்பு – நான் சாதாரண மன்சன் இந்தாளு என்னை நம்பி வந்துட்டான். இவனை என்னத்தான் செய்யப் போறீங்க கொஞ்சம் சொல்லுங்கப்பு“ன்னு கிரகங்களோட பேசனும்.

7. உங்களை நீங்க ஒரு தாயா உணரனும், ஒரு பசுவா உணரனும், குருவா, தந்தையா உணரனும். யத்பாவம் தத்பவதி. நீங்க எப்படியா கொத்த டகால்ட்டியா
இருந்தாலும் காலப்போக்குல தாயா, தந்தையா, குருவா, பசுவா மாறுவீங்க....

அதாவது எக்ஸ்பார்ட்டி உங்களை insult பண்ணாலும் – Exploit பண்ணப் பார்த்தாலும் அந்த கசப்பு உங்க மனசுக்குள்ள இறங்கவே இறங்காத நிலை வந்துரும்.

8. வாக்பலிதம் ஏற்பட:

A. உண்மையையே பேசுங்க.
B. குறைவா பேசுங்க
C. இதம்மா பேசுங்க
D. காசுபணம வந்தா வச்சுக்கங்க, But உபரி காசு பணத்துக்கு Plan பண்ணாதீங்க
- முடிஞ்சா செலவழிக்கவும் ஒரு ஆள் இருந்தா நல்லது.( ஐ மீன் காசு பணத்தை நீங்க தொடவேண்டிய அவசியமே இருக்கக்கூடாது)

E. ஜோதிடம் சொல்லி காசு வந்துட்டா கருமம் வந்திருக்குன்னு பயப்படுங்க.
அதை தொலைக்க வழி தேடுங்க.

(உம்) உங்க ஜாதகத்துல புதன், வாக்கு ஸ்தானாதிபதி, ரோகாதிபதி இந்த 3 பேரில் யார் பலகீனப்பட்டிருக்காய்ங்களோ அந்த கிரக காரகம் கொண்ட மனிதர்களுக்கு முடிஞ்ச வரை உதவி செய்ங்க.

F. கணபதி, குல தெய்வம், இஷ்ட தெய்வம், கலைவாணி அருள் இருந்தா வாக்பலிதம் நிச்சயம்.

எஸ். முருகேசன்.

Saturday, June 11, 2011

சூப்பர் ஜோதிடராக 11 டிப்ஸ்

அண்ணே வணக்கம்ணே..
நம்ம ஊர்ல ஒரு ராமர் கோவில் இருக்குதுங்கண்ணா. கடந்த 12 வருசத்துல கொடி மரம், வாகனங்கள் தேர், வாகன மண்டபம் எல்லாமே ஷெட் ஆகி இம்மாம் வருசம் உற்சவமே நடக்காம போயிருச்சுங்கண்ணா. நம்ம தொகுதி எம்.எல்.ஏவோட இனிஷியேஷன்ல சனம் வேட்டி வரிஞ்சு கட்டி கோதாவுல இறங்கி இந்த வருஷம் உற்சவம் இன்னைக்கு துவங்குது.

இந்த அக்கேஷன்ல நம்ம லோக்கல் ஃபோர்ட் நைட்லியோட ஸ்பெஷல் எடிசன் ஒன்னை ரிலீஸ் பண்றோம். அது தொடர்பான வேலைகள்ள கொஞ்சம் பிசி. அதனால ஆனைப்பசிக்கு சோளப்பொறியா ஒரு 11 டிப்ஸ் மட்டும் கொடுத்திருக்கேன்.

கமெண்ட் சைஸ்ல பதிவு போடறாய்ங்கனு நானே நக்கல் அடிச்சிருக்கேன்.ஆனால் இன்னைக்கு நம்ம நிலைமையும் அப்படி ஆயிருச்சு. என்ன பதிவுக்கு போயிரலாமா?


1.கிரகங்கள் என்னமோ ஃபுட் பால் ப்ளேயர்ஸ் மாதிரியும் நீங்க என்னமோ வர்ணனையாளர் மாதியும்ஃபீல் பண்ணிக்காதிங்க. கிரகங்கள் எப்படி வேலை செய்யுதுன்னு தெரிஞ்சா வா.வெ.

மனிதனின் உடல்,மன செயல்பாடுகளை, குண மாற்றங்களை தீர்மானிக்கிறது நாளமில்லா சுரப்பிகள் சுரந்து ரத்தத்துல கலந்து விடற இரசாயனங்கள். இந்த நா.சுரப்பிகளை கமாண்ட் பண்றது ஹைப்பொதலாமஸ். ஹைப்போதலாமஸை கமாண்ட் பண்ற்து உங்க எண்ணம். கிரகங்கள் உங்க எண்ணங்களை தூண்டுது அவ்ளதான்.மத்த வேலைகளை க்ளாண்ட்ஸ் பார்த்துக்குது

2.லக்னாதிபதி , சந்திரன், ஐந்தாம் பாவாதிபதி ஸ்ட்ராங்கா இருந்தா அஷ்டமசனி கூட ஜுஜுபி. மேற்சொன்ன மேட்டர்ல பிரச்சினை இருந்தா தாளி சந்திராஷ்டமத்துல கூட செத்துப்போயிர்ராய்ங்க. மொதல்ல ஜாதகத்தை தூக்கிவச்சுக்கிட்டு பார்க்கவேண்டியது இந்த 3 மேட்டரை தான்.

3. அடுத்து லக்னாத் 6,8,12 காலியா இருக்கா பாருங்க. இது மினிமம் கியாரண்டி. இந்த இடங்கள் காலியாவே இருந்தாலும் இதன் அதிபதிகள் விடமாட்டாய்ங்க. அம்மா கொடைக்கானல்ல இருந்தாலும் நமது எம்.ஜி.ஆர்ல கட்டம் கட்டிர்ராப்ல வேலை "கொடுத்துருவாய்ங்க"

4.இந்த 6,8,12 அதிபதிகள் எங்கே இருந்தாலும் அந்த பாவத்துக்கு ஆப்புதேன்.ஆரோட சேர்ந்தாலும் அந்த கிரகத்துக்கு ஆப்புதேன்.

5.கிரகயுத்தம்னா தெரியுமோல்லியோ? எல்லா கிரகங்களையும் முந்திக்கிட்டு செவ் நிக்கறது. செவ்வாய்க்கு பின்னாடி நிற்கிற கிரகமெல்லாம் கிரக யுத்தத்துல தோத்துப்போனாப்ல கணக்கு.

6.பரஸ்பர முரண்பாடுள்ள கிரகங்கள் சேருவது : உ.ம் சூரியன்+சனி/ராகு சந்திரன்+கேது , இந்த சேர்க்கையில் சூரியன் பால் மாதிரி சனி/ராகுல்லாம் பாலிடால் மாதிரி. பாலிடால் கலந்தது ஒரு பேரல் பாலாயிருந்தாலும் அதை பாலிடாலா ட்ரீட் பண்றாப்ல மொக்கை பண்ண கிரகத்தோட எஃபெக்ட் தான் அதிகமா இருக்கும்.

7. உச்சனை உச்சன் பார்க்கக்கூடாது.

8.ஒரு கிரகம் நீசமாகி அது நின்ற இடத்து அதிபதியும் நீசமான உச்சம் பரிகாரம்

9.ஒரு கிரகம் நீசமாகி அது நின்ற இடத்து அதிபதி உச்சம்/ஆட்சி பெற்று நீச கிரகத்தை பார்த்தா நீசம் பங்கமாகி ராஜயோகம் ஏற்படும்

10.ஜாதகத்துல லக்னாத் 6, 8, 12 அதிபதிகள் இந்த 6 ,8 ,12 பாவங்களில் ஏதோ ஒரு பாவத்தில் ஒன்று சேர்ந்தா அது விபரீத ராஜ யோகம். ஓ.பன்னீர் செல்வம் சி.எம் ஆன கதையா படக்குனு க்ளிக் ஆயிருவாய்ங்க.

11.குரு+செவ் , சந்திரன்+செவ் மாதிரியான கிரகங்களோட காம்பினேஷன் ஓகேதான். ஆனால் இப்படி சேர்ந்த கிரகங்கள் லக்னத்துக்கு சுபர்களா இருக்கனும்.
Read More

Wednesday, May 25, 2011

நீங்க சூப்பர் ஜோதிடராகனுமா? டிப்ஸ்! டிப்ஸ்!

ஜோதிடங்கறது மனித வாழ்வோட ரெம்ப நெருக்கமான சப்ஜெக்ட். அதனால மனித வாழ்க்கையோட ஒவ்வொரு அம்சத்தோடயும் உங்களுக்கு அறிமுகம் இருக்கனும். அது குறித்த ஆராய்ச்சியும் முக்கியம். இது தொடரனும். அதுக்கு உங்க மனசுல மனித குலத்தின் பால் அக்கறை இருக்கனும்.

ஏன் வந்தது எப்படி வந்ததுன்னெல்லாம் தெரியாது. என் கனவுகள் நெஜமாலுமே ராஜ கனவுகள் தான்.ஏதோ வாழ்க்கையில நாயடி பட்ட பின்னாடி -  நான் பட்ட பாடு ஆரும் படக்கூடாதுங்கற அனுபவத்துல வந்திருந்தா பரவால்லை.

சின்ன வயசுலயே நான் படிச்ச ரத்னபிரபா, அம்புலிமாமா,பாலமித்ரா கதையில கூட என்னை இளவரசன் பாத்திரத்தோட தான் இன்வால்வ் பண்ணிப்பேன். நம்ம படிப்பு,ரசனையோட திக்கு  திசை மாற மாற நாம படிச்சுக்கிட்டிருந்த புஸ்தவங்களும் மாற ஆரம்பிச்சது.

அதிலான கதாநாயகர்கள்,ஆதர்ச புருஷர்களோட என்னை நான் இன்வால்வ் பண்ணிக்க ஆரம்பிச்சேன். இன்வால்வ்னா சொம்மா ஜொள்ளு விடறதில்லிங்கண்ணா. அவிகளை நமக்குள்ள ஃபீல் பண்றது. செக்யூர்ட் லைஃப்  - மேன் ஆஃப் தி மேட்ச் மாதிரி வீட்ல,ஸ்கூல்ல எங்கயுமே நமக்கு ரெட் கார்ப்பெட் தேன்.Read More

Sunday, February 13, 2011

காதலர் தின ஜோதிட டிப்ஸ்


காதலை என்னதான் தெய்வீகம் அது இதுனு தூக்கிப்பிடிச்சாலும் காதலுக்கு அடிப்படை கவர்ச்சிதேன். ஆண் மேல பெண்ணுக்கு கவர்ச்சி ஏற்படனும்னா அந்த ஆணுக்கு கட்டாயம் சனி நல்ல இடத்துல நிக்கனும். சனி பிடிச்சவனை பார்த்தா "ஏம்பா இந்த சூட்கேசை தூக்கிட்டு வரயா"னு தான் கேட்கத்தானே தோனும்.(சனி - லேபர்)

சனியை பொருத்தவரை மன்சாளை ரெண்டு வகையா பிரிக்கலாம். சனி அனுகூலமா உள்ளவுக. சனி பிடிச்சவுக. சனி அனுகூலமா உள்ளவனுக்கு சனிபிடிச்சவன் பயிட்டு தூக்கவேண்டியதுதான்.

ஒரு காதல் ஜோடி பீச்ல உட்கார்ந்திருக்கும். அதுல காதலனோ,காதலியோ ஆரோ ஒருத்தர் தேன் எந்திரிச்சு போய் திங்க எதையாவது வாங்கிட்டு வருவாய்ங்க. அப்படி எந்திரிச்சு போறவன் /வள் ஆரோ அவளுக்கு சனி பிடிச்சிருக்குனு அர்த்தம்.

சனி அனுகூலமா உள்ளவுக நூத்துக்கணக்குல சேர்ந்து ஒரு காரியத்தை செய்யலாம். பிரச்சினை வராது. ஆனால் சனி பிடிச்சவுக ரெண்டு பேரு ஒரு இடத்துல ரெண்டு நிமிசம் சுமுகமா இருக்கமாட்டாய்ங்க.

ஆக ஆருக்கெல்லாம் சனி அனுகூலமா இருக்காரோ அவிக மட்டும் லவ்ஸ் பண்றது பெட்டர். அதை விட்டுட்டு ஏழரைல, அர்தாஷ்டமத்துலன்னு சனி பிடிச்ச நேரம் லவ்ஸ் பண்ணா பயந்து பயந்து பண்ணனும் ( இங்கே காதல் வந்தது உங்க சுதந்திரத்தை கொல்ல - இந்த லவ் மேட்டர் ஆருக்கெல்லாம் லீக் ஆகுது அவிகளுக்கெல்லாம் பயந்து சாகனும் - சனி பிடிச்சவன் அடிமையாதான் வாழனும்)

மேலும் சனி பிடிச்ச நேரத்துல லவ்ஸ் பண்றிங்கனு வைங்க ஏற்கெனவே சொன்னாப்ல சனி பிடிச்சவுக ரெண்டு பேரு ஒரு இடத்துல ரெண்டு நிமிசம் சுமுகமா இருக்கமாட்டாய்ங்க. இந்த மாதிரி கிராக்கிங்கதான் மத்தில கழண்டுக்கறது ஆசிட் அடிக்கிறது , கத்திக்குத்துக்கெல்லாம் இறங்கிரனும் ( இவன் ஸ்டேஷன்ல போய் கை கட்டி நிக்கனுமே - சனி பிடிச்சா நீங்க விசிட் பண்ணியே ஆகவேண்டிய இடங்கள் சிலது இருக்கு போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி, கோர்ட்டு ,சுடுகாடு. டேக் கேர்!)

எதிர்பாலினரோட நெருக்கம், இதம்லாம் கிடைக்கனும்னா சனி பலம் நிச்சயம் தேவை. சனி பலம் இல்லாத சமயம் , இதர கிரகங்களோட பலத்தால (உ.ம் குரு, சுக்கிரன்) மேற்படி நெருக்கம், இதம் கிடைச்சாலும் டிக்கெட் இல்லாம சினிமா பார்த்துக்கிட்டிருக்கிற மாதிரி தான். படக்குனு தியேட்டர்காரன் டார்ச் சகிதம் செக்கிங்குக்கு வந்தான்னா அவமானம் தேன்.

இன்னொரு மேட்டர் , காதல் பிறக்கிற சமயம் சனி அனுகூலமாயிருந்தா போதும்.. அப்பாறம் சனி பிடிச்சாதேன் சிக்கல் வரும் -அந்த சிக்கலை தாங்கி காதல் நின்னாதான் அது உண்மையான காதல் - விவகாரம் கண்ணாலத்துல முடியும். பெண்ணுக்கு சனி பிடிச்சாதான் அவள் ஒழுங்கா குடும்பம் நடத்துவாள். ஆணுக்கு சனி பிடிச்சாதான் பொஞ்சாதி அருமை தெரியும்.

சில ஜோடிகளை பார்த்திங்கனா லவ்ஸ் பண்ணுவாய்ங்க பண்ணுவாய்ங்க பண்ணிக்கிட்டே இருப்பாய்ங்க. எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் படக்குனு ஒரு நாள் சுமுகமா பிரிஞ்சுருவாய்ங்க. இன்னாடா மேட்டருன்னா அவிகளுக்கு காதல் வந்தப்பயும் சனி அனுகூலமா இருந்திருப்பாரு. லவ்ஸ் பண்ண காலம்லாமும் சனி அனுகூலமா இருந்திருப்பாரு.

சனி அனுகூலமா உள்ளவளுக்கு சனி தொடர்பான வேலைகள் செய்யவேண்டிய அவசியம் கிடையாது ( ஐ மீன் பயந்து நடக்கிறது -மாமனார் மாமியாருக்கு -அடிமையா இருக்கிறது -கணவனுக்கு) ஆனால் எதிர்பாலினனால இதம் கிடைக்கனும். கிடைச்சுருச்சு.

ரெண்டு பேருக்கு சனி அனுகூலமா இருந்தா ஓகே. ரெண்டு பேருக்கும் சனி பிடிச்சிருந்தா நாட் ஓகேன்னு சொன்னேன். ( ஆனால் இந்த காதல் கண்ணாலத்துல முடிஞ்சாதேன் அது உண்மையான காதல்) . ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு சனி அனுகூலமா இருந்து - ஒருத்தருக்கு சனி பிடிச்சிருந்தா என்னாகும்னு கேப்பிக நம்ம சைட்ல சொல்லியிருக்கேன். இங்கே அழுத்தி அதையும் படிங்க