ஜோதிடங்கறது மனித வாழ்வோட ரெம்ப நெருக்கமான சப்ஜெக்ட். அதனால மனித வாழ்க்கையோட ஒவ்வொரு அம்சத்தோடயும் உங்களுக்கு அறிமுகம் இருக்கனும். அது குறித்த ஆராய்ச்சியும் முக்கியம். இது தொடரனும். அதுக்கு உங்க மனசுல மனித குலத்தின் பால் அக்கறை இருக்கனும்.
ஏன் வந்தது எப்படி வந்ததுன்னெல்லாம் தெரியாது. என் கனவுகள் நெஜமாலுமே ராஜ கனவுகள் தான்.ஏதோ வாழ்க்கையில நாயடி பட்ட பின்னாடி - நான் பட்ட பாடு ஆரும் படக்கூடாதுங்கற அனுபவத்துல வந்திருந்தா பரவால்லை.
சின்ன வயசுலயே நான் படிச்ச ரத்னபிரபா, அம்புலிமாமா,பாலமித்ரா கதையில கூட என்னை இளவரசன் பாத்திரத்தோட தான் இன்வால்வ் பண்ணிப்பேன். நம்ம படிப்பு,ரசனையோட திக்கு திசை மாற மாற நாம படிச்சுக்கிட்டிருந்த புஸ்தவங்களும் மாற ஆரம்பிச்சது.
அதிலான கதாநாயகர்கள்,ஆதர்ச புருஷர்களோட என்னை நான் இன்வால்வ் பண்ணிக்க ஆரம்பிச்சேன். இன்வால்வ்னா சொம்மா ஜொள்ளு விடறதில்லிங்கண்ணா. அவிகளை நமக்குள்ள ஃபீல் பண்றது. செக்யூர்ட் லைஃப் - மேன் ஆஃப் தி மேட்ச் மாதிரி வீட்ல,ஸ்கூல்ல எங்கயுமே நமக்கு ரெட் கார்ப்பெட் தேன்.Read More

No comments:
Post a Comment