அண்ணே வணக்கம்ணே !
ஜோதிடம் 360 வேலைகள் ஒரு வழியா முடிஞ்சது. ரொட்டீன் லைஃபுக்கு வந்துட்டன். இன்னைக்கு எடுத்துக்க வேண்டிய மேட்டர் கில்மா கனவுகள். இத்தீனி நாள் வண்டி ஓடாம இருந்ததால கொஞ்சம் அதிகமாவே சத்தம் போடுது.
இந்த சந்தர்ப்பத்துல கில்மா மேட்டருக்கு போனா ரெம்ப மொக்கையாயிரும்.ஏன்னா அதெல்லாம் எந்த புஸ்தவத்துலயும் இருக்காது.
நம்ம சொந்த அருள் வாக்கு. அதுக்கு ஒரு மூட் இருக்கனும். இப்பம் அதில்லை. அதனாலதேன் இன்னைக்கு யோகங்களின் மறுபக்கம்
பவர் ஃபுல் ஃப்ளட் லைட்டை ஆன் பண்ணா வெளிச்சம் மட்டும் வராது .. அனலுக்கு முகத்துல வேர்வையும் ஆறா வரும். அதே சமயம் அந்த லைட்டுக்கு பின்னாடி அமாவாசை கணக்கா இருட்டும் இருக்கும்.
ஒளுங்கு மரியாதையா ஒர்க் அவுட் ஆகிற யோகமே இந்த கதி.. இன்னம் அரை குறை யோகம்லாம் இன்னா மேரி சைட் எஃபெக்ட் பண்ணும்னு இப்ப பார்ப்போம்.
அ நபாயோகம்:
சந்திரனுக்கு 12 ஆவது ராசியில் ராகு கேதுக்களை தவிர இதர கிரகங்கள் இருப்பது
பலன் : நல்ல ஆரோக்கியம் ,பெயர் புகழ்
அதியோகம்:
சந்திரனுக்கு 6,7,8 வீடுகளில் சுபர்கள் ஒன்றாகவோ தனித்தனியாகவோ இருப்பது.
பலன்: உயர்ந்த உத்யோகம், போலீஸ் முதலான துறைகளில் ஈடுபடுவர்,பண வசதி ,பெயர் புகழ்
(இதே ஐட்டம் லக்னத்துக்கு ஒர்க் அவுட் ஆனா லக்னாதி யோகம்னு பேராம்)
அஷ்ட லட்சுமி யோகம்:
ராகு 6 ல் நின்று குரு கேந்திரத்தில் இருப்பது
பலன்: அனைத்து சுகம்,சந்தோஷம்
அகண்ட சாம்ராஜ்ய யோகம்:
2,9 அல்லது 11 க்குடையவன் ஆட்சி உச்சம் பெற்று பலமாகி நின்று குரு 5 க்கோ அ பத்துக்கோ அதிபதியாகி கேந்திரங்களில் இருந்தால் இந்த யோகம்
பலன்: தீர்காயுள் ,பணவசதி,பெயர் புகழ்
சுபகிரகங்கள் 3,6,10,11 வீடுகளில் இருப்பது
பலன்:பெரும் உத்யோகம் பெயர் புகழ்
விபரீத ராஜயோகம்:
6,8,12 அதிபதிகள் கூடியோ /தனித்தோ இதே ராசிகளில் இருப்பது. ஏழையும் செல்வசீமானாவார்.ராஜயோகம் ஏற்படும்
நீசபங்க ராஜயோகம்:
ஒரு கிரகம் நின்ற ராசி அதற்கு நீச வீடாகி - அந்த ராசிக்குரிய கிரகம் தன் ஆட்சி உச்ச வீட்டில் அல்லது லக்னம் /ராசிக்கு கேந்திரத்தில் இருப்பது.
பலன்: திடீர் தனயோகம் , பெயர் புகழ்
இதான் டேட்டா.. இதை உடனே டைரியில எழுதிக்கிராதிங்க. இதெல்லாம் எந்த அளவுக்கு பொதுப்படையான விதிகள்னா .. வேணா கெட்ட கெட்ட வார்த்தையெல்லாம் வருது . நாம அம்பேல் .
நாளைக்கு மேற்சொன்ன கிரக ஸ்திதிகள் யோகத்தை தருமா ? (இப்பமே சொல்றேன் ஒரு ..மயி..ம் தராது. (தந்தாலும் ஒன்னு ரெண்டு லக்னத்துக்கு ஒர்க் அவுட் ஆனா சாஸ்தி)
மேற்சொன்ன கிரகஸ்திதிகளால் ஜாதகர் எந்தளவுக்கு டர்ராகி நாறிருவாருன்னு சொல்றேன்.
உடுங்க ஜூட்
No comments:
Post a Comment