'>

Sunday, February 12, 2012

சரியான எழுத்துக்கு அடையாளம்

சரியான எழுத்துக்கு அடையாளம் - தன்னை தாண்டி சிந்திக்க வைப்பதே. இதை நான் இந்த நடையில் எழுத காரணம் .. சரியாகவே ஊகித்துவிட்டீர்கள் சரியான எழுத்தை படித்தேன்.

எழுத்து நடை என்பது அழகிப்போட்டியில் கேட் வாக் போன்றது . என்னதான் கேட் வாக் கற்றாலும் - குரூபி உலக அழகி ஆக முடியாது. என் நடை ஆரம்பத்தில் எப்படியிருந்தது . போக போக எப்படி மாறியது என்பதை கவனித்தால் எனக்கே பிரமிப்பாக இருக்கிறது.

இன்றும் நான் என் நடையை மாற்றிக்கொண்டதில் எனக்கு வருத்தமில்லை. அதை விமர்சிப்பவர்கள் "ஒரு நடைக்கு" பழக்கப்பட்டு போனவர்கள் .. சற்றே தடுமாறுகிறார்கள் அவ்வளவே.

அவர்களை அடியொற்றி எழுத வந்த நானாவித வர்ணத்தாரும் அதே நடையை பின்பற்றினர்.

நடையை பின்பற்றினால் பரவாயில்லை. விஷயங்களையும் அவர்களது பார்வையையும் பின்பற்றியதுதான் சோகம். மாமா ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தார் மாமி காபியை கொண்டு வந்து லொட்டென்று வைத்தாள் பாணி கதைகள் படித்து ரொம்பவே உ.வ பட்டவன் தான் நானும்.

ஆனால் காலப்போக்கில் என் தவறை திருத்திக்கொண்டேன். நம் விஷயங்களை எழுதவேண்டும் - நம் நடையில் எழுதவேண்டும் என்ற ஞானோதயம் ஏற்பட்டது ( நம் -பிராமணரல்லாதோர்)

எவனோ லண்டனில் நடத்திய பேப்பரை பார்த்து இங்கே அவாள் ஒரு பேப்பர் வைக்க -அதைப்பார்த்து நம்மவர் பேப்பர் வைக்க கொடுமை போங்க. முன்னெல்லாம் பக்கோடா மடித்து வந்த ஒற்றைகாகிதத்தை கூட அது எந்த இதழுக்கு சொந்தமானது என்று சொல்லிவிடுவேன்.

நேற்று குமுதம் -குங்குமம் இரண்டையும் புரட்டிவிட்டு சிண்டை பிய்த்துக்கொண்டேன். ஜஸ்ட் ஜெராக்ஸ். என்ன ஒரு ஆறுதல் என்றால் கலர் ஜெராக்ஸ்.

இந்த உலகம் இதுவரை தன்னை முன்னோக்கி உந்தும் பேச்சுக்கும் எழுத்துக்கும் இரண்டாவது இடத்தை தான் தந்திருக்கிறது.( ஓரிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம்) . மேலும் இந்த வகை பேச்சும் எழுத்தும் ஒரு சிறுவட்டத்தில் சிக்கிவிடுகின்றன.

உடலளவில் வாழ்வோருக்கு அந்த சிறுவட்டமே பிரபஞ்சமாகிவிடுகிறது . நான் உயிரளவில் உயிர்ப்போடு வாழ துடிக்கிறேன். மக்கள் தாகம் தீர்க்க விரைந்தோடி வரும் நதியை போல் ..

ஆகாய கங்கை போல் - சரஸ்வதி நதியை போல் எட்டாது பாய என் தாய்மனம் இடம் கொடுக்கவில்லை. வான் மழை போல் இறங்கி வருகிறேன்.

உலகில் முன்னோடிகள் பட்ட பாட்டோடு ஒப்பிட்டால் "ஒளுங்கான தமிழ்ல எழுது" மாதிரி விமர்சனங்கள் ஜுஜுபி.

இந்த அவாஸ்தும் - விண்டோசும் முட்டிக்கொண்டதில் சிஸ்டம் தமிழக சட்டமன்றம் மாதிரி ஆகிவிட்டது. பஸ் ஸ்டாண்டில் தனியே நிற்பவனை கேள்வி கேட்காது போலீஸ் ஜீப்பில் ஏற்றிச்செல்வதை போல இந்த அவாஸ்த் விண்டோஸ் எக்செல் ஃபைலை எல்லாம் - அழகி உட்ப்ட சான்ட் பாக்ஸில் போட்டு தொலைக்க வேலை கெட்டு பயங்கர கடுப்பு. ஆன்டிவைரஸ் இல்லாவிட்டால் சிஸ்டம் நன்றாகவே வேலை செய்கிறது . ஆனால்அது பெரியார் இல்லாத தமிழ் நாடு போல ஆகிவிடும் . அதனால் தான் விடாப்பிடியாக முட்டி மோதிக்கொண்டிருக்கிறேன்.

No comments: