'>

Friday, January 6, 2012

எழுத்தாளர் சாரு நிவேதிதா மரணம் !

கண்ணா 3 லட்டு திங்க ஆசையா? இப்படி ஒரு டைட்டிலை தான் ப்ளான் பண்ணினம். ஆனால் பாருங்க. தாலுகாஃபீஸண்டை பார்த்த பேனர் ஞா வந்து டைட்டில் மாறிப்போச்சு.

எல்லா ஊரையும் போல நம்ம ஊர்லயும் இறந்துபோனவரோட ஃபோட்டோவை போட்டு ஒரு பேனர் வச்சிருந்தாய்ங்க. அந்த ஃபோட்டோவை பார்த்து அப்படியே ஷாக் ஆயிட்டன். அய்யய்யோ சாரு அவுட்டான்னு படா பேஜாராயிருச்சு. அதே நேரம் பரவால்லைப்பா தமிழ் எழுத்தாளர் மறைவுக்கு தெலுங்கு தேசத்துல பேனருன்னு கொஞ்சம் பெருமையாவும் இருந்தது.

ஆனால் பேனர்ல சுந்தரதெலுங்குல இருந்த மேட்டரை படிச்ச பிற்காடு க்ளியர் ஆச்சு. நம்ம ஊர்ல எம்.எஸ்.ஆர் மூவி லேண்டுன்னு ஒரு தியேட்டர்.அதுக்கு ஒரு ஓனர்.அந்த ஓனருக்கு ஒரு பையன். அவரு சமீபத்துல இறந்துட்டாரு. அவரோட படம் தான் அது. ஆசாமி அச்சு அசல் நம்ம எழுத்தாளர் சாரு நிவேதிதா போலவே இருக்காரு..

இருக்கப்பட்டவுகங்கறதால தெலுங்கு தினசரிகள்ள விளம்பரம்லாம் வ்ந்தது. ரெண்டு நாள் டைம் கொடுத்தா
ஏதேனும் தெலுங்கு ஈ பேப்பர்ல இருந்து அந்த படத்தை பிக்கப் ப்ண்ணி நம்ம சைட்ல போடறேன்.

அல்லாம் சரி வாத்யாரே இப்பம் எதுக்கு இந்த மேட்டருன்னு கேப்பிக சொல்றேன். நம்ம சைட்டுக்கு சுந்தரேசன்ங்கற பேர்ல ஒரு பார்ட்டி ஜோசிய மேட்டர்லாம் மெயில் மூலமா அனுப்பிக்கிட்டிருக்காரு.

நமக்குள்ள ஒரு குறு குறு. இதுவும் நம்ம ஜா.ராவான்னு. இருந்தாலும் அவர் மெயில்ல அனுப்பின ஐட்டங்களை போட்டுக்கிட்டு வர்ரோம். நீங்களும் படிச்சிருப்பிங்க.

இதுல தமாசு இன்னாடான்னா நம்ம நவீன பரிகாரங்கள் கட்டுரையிலருந்து கிரகங்களை பேச வைக்கிற கான்செப்ட், அவனுக்கென்னப்பா சுக்கிரதசைங்கற சொல்வடைல்லாம் சுட்டு எழுதியிருக்காரு.

நம்ம ஜா.ரா இருக்காரே அவரு அக்மார்க் காப்பி பேஸ்ட் மாஸ்டர் . நம்மை திட்டி தீர்க்கவே சொந்தமா கிளிக்க முடியாம முன்னொரு காலத்துல " நம்மாளுங்களை" உசுப்பை நம்மை நாமே கிளிச்சு எழுதின அய்யர் தி கிரேட் மேட்டரை தான் அல்லா சைட்லயும் காப்பி பேஸ்ட் பண்ணிக்கிட்டிருக்காரு.

இப்பம் சுந்தரேசன். எங்கயோ உதைக்குது. இருந்தாலும் திருவாளர் சுந்தரேசனோட இரண்டு பதிவுகள் உங்கள் பார்வைக்கு.



No comments: