'>

Friday, January 6, 2012

பெண் மூலம் நிர்மூலமா?


எனது முந்தைய படைப்பை ஆயிரத்தி ஐநூத்தி சொச்சம் பேரை படிக்க வைத்தமைக்காக திரு. முருகேசன் ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டு இந்த பதிவை ஆரம்பிக்கிறேன். என்னுடைய படைப்புகளை தொடர்ந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை கல்யாணம் பண்ண நெறைய பேரு (ரூம் போட்டு) யோசிக்கிறாங்க. மூலத்துப் பெண்ணால் மாமனாருக்கு கண்டம்
வந்துரும்னு யாரோ கொளுத்திப் போட்ட திரி இன்னும் திருமணச்சந்தைல
பொகஞ்சிக்கிட்டுதான் இருக்கு. அது உண்மையா இல்ல கப்சாவான்னு ஜோதிட ரீதியா பாப்பம்.

பொதுவாவே மனிதருக்கு தல மேலதான் இருக்கும். அதே மாறி
ராசிக்கட்டத்துக்கும் லக்னம் மேஷம்தான். இப்ப இந்த ராசிக்கட்டத்த
பாருங்க. (சரியா தெரியலன்னா அனுபவஜோதிடம் ப்ளாக் ஷ்பாட்டுக்கு போயி
பாருங்க)

இப்ப மேஷத்தை ஜாதகியா எடுத்துக்கங்க. மேஷத்துக்கு ஏழாம் வீடான் துலாம்
அவளது கணவனை குறிக்கும். அதே ஏழாம் வீட்டிற்கு ஒன்பதாம் வீடு மாப்ளையோடஅப்பாவ அதாவது மாமனார குறிக்கும். ஸோ, மூன்றாம் வீட்டை மாமனாருக்கு எழுதிக் குடுத்திருக்காங்க.

இந்த மாமனார குறிக்கிற மிதுன ராசி மேஷத்துக்கு மூன்றாம் வீடாகும். இந்த மிதுன ராசிக்கு ஏழாம் வீடு தனுசு ராசி. இந்த தனுசு ஒப்பனிங்க்லதான் மூலம் நட்சத்திரம் முழுசா ஆரம்பமாகுது.

இந்த மூலம் நட்சத்திரம் கண்டாந்திர நட்சத்திரங்களில் ஒன்றாகும்.
பொதுவாவே, கண்டாந்திர நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகள் பிழைச்சிருந்தா
அந்த நட்சத்திரம் அந்த குழந்தையின் உறவினர்களை பாதிக்கும்னு ஜோதிட
சாஸ்திரத்துல ஒரு ரூல் இருக்கு. இந்த மூல நட்சத்திரம் ராட்சச கணத்தை
சேர்ந்தது. இதோட தேவதைன்னு எடுத்துக்கிட்டா நைருதின்னு சொல்லுவாங்க. இது இருட்டு தேவைதையாகும். ஆங்.... நைருதின்ன உடனே வாஸ்து சாஸ்திரம்
ஞாபகத்துக்கு வருது. வாஸ்துல கூட நிறுத்தி மூலை அசுர சக்திகள் ஸ்ட்ராங்கா
நிற்கும் இடம்னு படிச்சிருப்பீங்க.

சரி. இப்பம் நம்ம டாப்பிக்க பாப்பம். உபய லக்னத்திற்கு பாதகஷ்தானம் ஏழாம்
எடம்னு படிச்சிருப்பீங்க. இப்ப மாமனாரை குறிக்கிற மூன்றாம் வீடான உபய
ராசியான மிதுனத்திற்கு பாதகத்த குடுக்குற ஏழாம் வீடான தனுசு ராசியின்
ஆரம்பத்தில்தான் மூலம் நட்சத்திரம் இருக்கின்றது.

எனவே மேற்கண்ட கூற்றுகளை நன்கு ஆராய்ந்து பார்த்ததில் மூலம்
நட்சத்திரத்தை ஏன் டெர்ரர் லிஸ்ட்டில் வைத்தார்கள் என்பது புலனாகிறது.
இருப்பினும் அவரவர் லக்னப்படி சாதகமா இல்ல பாதகமா என்று பார்த்த பிறகே
முடிவெடுங்கள்.

இதுக்கு தீர்வே இல்லியா?

ஓட்டைன்னு (டபுள் மீனிங் இல்லீங்க்ணா) இருந்தா சாவி இல்லாமய இருக்கும்.

இருக்கு.

மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணின் லக்னம் மேஷம், ரிஷபம், சிம்மம்,
கன்னி, விருச்சிகம், தனுசு, மீனம் என அமைந்தால் மட்டுமே தோஷம் காட்டும்.
மற்ற லக்னங்களில் பிறந்தால் நாட் அப்ப்ளிகபுல்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணின் கணவன் ரிஷபம், மிதுனம், கன்னி,
துலாம், விருச்சிகம், கும்பம், மீனம் ஆகிய லக்னங்களில் போரந்தவனாக
இருந்தால் அவன் தந்தைக்கு மூல நட்சத்திர பெண்ணால் தோஷம் உண்டு. மத்தபடி மத்த லக்னங்களில் பிறந்திருந்தால் கணக்கில் வராது.

மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணின் மாமனார் ரிஷபம், மிதுனம், கடகம்,
துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய லக்னங்களில் பிறந்தவராக
இருந்தால் மூல நட்சத்திரந்தில் பிறந்த மருமகளால் தோஷம் வரும். மத்தது ன்னா கிடையாது. எனவே இந்த மாதிரியான ரூல்ஸை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பாக
எடுத்துக் கொள்ளாமல் இடம், பொருள் பார்த்து முடிவெடுத்துக் கொள்ளுங்க.

பின்குறிப்பு:
என்னுடைய படைப்புகளை படித்து இந்த எழுத்து நடை அவர் சாயல் தெரிகிறது,
இவர் சாயல் தெரிகிறது என்று யாரும் கள்ளத்தனமாக திரு.முருகேசன் ஐயாவுக்கு புறா மூலம் ஓலை அனுப்ப வேண்டாம். அனுப்பினால் புறா ரிட்டன் வராது என்றும் புறாவை ரோஸ்ட் பண்ணிருவம் என்றும் இதன் மூலம் தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். வர்ட்டா.... :)

2 comments:

Anonymous said...

சிறிய சந்தேகம்.பெண் கன்னி லக்னம்.ஆனால் ஆண் மேஷம் லக்னம்.இதனால் பாதிப்பு வருமா?

Chittoor Murugesan said...

ஐயா !
திருமண பொருத்த விஷயத்தில் ஏதோ ஒரு அம்சத்த மட்டும் எடுத்துக்கிட்டு முடிவு பண்ணக்கூடாது .

தோஷங்கள்,லக்னாதிபதி பலம் ,குரு ,சுக்கிரர்களின் நிலை இப்படி பல விஷயங்களை பார்க்க வேண்டும்.

இவை அனுகூலமா இருந்தா கன்னி வெர்சஸ் மேஷங்கற பாய்ண்ட் அடிபட்டு போயிரும்