அண்ணே வணக்கம்ணே !
ஒரு சினிமாவுல வடிவேலு "போடா கூறு கெட்ட குக்கருன்னு திட்டுவாரு. குக்கர் என்னவோ ஓகேதான். அந்த பிடியும் -அதை குக்கர் பாடியில இணைக்க உள்ள ஏற்பாடும்தேன் கூறு கெட்டத்தனமா கிடக்கு.அதையும் -அதை எப்படி ரெக்டிஃபை பண்றதுங்கற மேட்டரையும் கொஞ்சம் பொறுமையா படிச்சிங்கனா நம்ம டிசைனருங்க எப்படியா கொத்த அறிவு கொழுந்துங்கன்னு புரியும்.
உங்களுக்கு இது சின்ன மேட்டரா இருக்கலாம். நாளெல்லாம் அதை அடுப்புல ஏத்தி இறக்குற உங்க வீட்டம்மாவுக்கு இந்த மேட்டரை படிச்சு காட்டுங்க. நீங்க ப்ரவுசிங்ல இருக்கிற நேரம் சூடான மசாலா டீ கிடைக்கும்.
நமக்கு இந்த திங்கற மேட்டருன்னாலே பயங்கர கடுப்பு. திங்கறது வேற திங்கறதை பத்தி பேசறது வேற. நம்மை பொறுத்தவரைக்கும் திங்கறதுல உள்ளவன் ஆசனப்பருவத்தை விட்டு வெளிய வரலைன்னு அருத்தம்.ஆனால் நாம திங்கலைன்னா உடம்பு உடம்பை தின்னுரும்.அதுக்காக தின்ன வேண்டியதா இருக்கு.அதுக்காவ சமைக்க வேண்டியதா இருக்கு. அதனால நம்ம ஊட்லயும் ஒரு குக்கரு கீது. படக்குனு அது மைனாரிட்டி மந்திரி சபை கணக்கா ஊசலாட ஆரம்பிச்சது. சரி ஒழியட்டும் பார்த்து செய்யின்னு ஊட்டுக்காரிக்கு சொல்லி விட்டுட்டம்.
ஒரு கட்டத்துல இழந்த சக்தி வைத்தியரை தேடுற ரேஞ்சுக்கு தொங்கி போச்சு -ஆட்டம் அதிகமாயிருச்சு. இன்னாங்கடா இது லொள்ளா போச்சு ஏத்தி இறக்கும் போது கொட்டிக்கிட்டா வம்பா போயிருமேன்னு. திருப்பி பார்த்தேன்.
படுபாவிங்க அத்தீனி விலை கொடுத்து வாங்கின குக்கருக்கு - கைப்பிடியை குக்கரோட இணைக்க இரும்பு ஸ்க்ரூ போட்டிருக்கான். அந்த ஸ்க்ரூ போயி வழ வழன்னு இருக்கிற குக்கர் பாடியில எப்படி பிடிக்கும்? ஒரு அஞ்சு ரூவா பித்தளை ஸ்க்ரூ போட்டு அதுக்கு ஒரு போல்ட்டை க்ளாம்புக்குள்ளாற கொடுத்திருந்தா கம்பெனி திவாலாயிருமா?
( போல்ட் கொடுத்திருக்கான் - எங்கே க்ளாம்புக்கு வெளிய அதுவும் இரும்புதேன்)
இரும்பு ஸ்க்ரூங்கறதால அது துருப்பிடிச்சு ஜாம் ஆகிக்கிடக்கு. அரை டஜன் குக்கர் கடைக்காரன் அஞ்சு சைக்கிள் மெக்கானிக் ட்ரை பண்ணியும் பருப்பு வேகலை. விதியில்லாம கேஸ் வெல்டர் கிட்ட போயி கட் பண்ணி எடுக்க வேண்டியதாயிருச்சு.
நாம அதை டுபாக்கூரா ரெடி பண்ணி வச்சிருக்கம் படத்துல பாருங்க. குக்கர் கைப்பிடிக்குள்ளாற இருக்கிற ஸ்க்ரூவை டைட் பண்ண ஸ்க்ரூ ட்ரைவர் உள்ளார போக ஒரு பாதை கூட வைக்கலை. டைட் பண்றவன்
ஸ்க்ரூ ட்ரைவரை ஏத்த குறைச்சலா வச்சுத்தேன் டைட் பண்ணனும். என்னாத்த குக்கரு ? என்னாத்த கைப்பிடி? கொய்யால ஏ.சி.ரூம்ல உட்கார்ந்து மாடல் ஓகே பண்ண கம்மனாட்டிய செருப்பாலடிக்கனும்..
தாய்குலத்துக்கு யோசனை:
ஊட்டுல குக்கர் இருந்தா மொதல்ல அதை கொண்டு போயி குக்கர் க்ளாம்புக்குள்ள ஒரு பித்தளை போல்ட்டை வச்சு அடிச்சு - பித்தளை ஸ்க்ரூ போட்டு கொடுக்க சொல்லுங்க. இல்லாட்டி கொட்டி கவிழ்த்து அவதிப்படனும்.
அதுவரை குக்கரை கழுவினா உடனே கைப்பிடிக்குள்ளாற ஸ்பாஞ்ச் போட்டு தண்ணிய உறிஞ்சி எடுத்துட்டு வெயில்ல வைங்க. துருப்பிடிச்சு ஜாம் ஆயிட்டா பொழப்பு நாறிரும்.
ஸ்க்ரூ ட்ரைவர் ஃப்ரீயா மூவ் ஆக நாம ஏற்படுத்தின பாதை (இதை டிசைனிங்லயே யோசிச்சு செய்திருந்தாய்ங்கனா அழகாவும் இருந்திருக்கும்.
ரெண்டாவது படத்துல உள்ள எண்கள் -அவை குறிக்கும் விஷயங்கள்:
1.கைப்பிடிய பாடியோட இணைக்கிற க்ளாம்ப்
2.க்ளாம்புக்குள்ள நாம அடிச்சு இறக்கின போல்ட்
3.ஜாம் ஆன ஸ்க்ரூவை கட் பண்ணி எடுக்க கேஸ் வெல்டர் கட் பண்ணதுல நாறிப்போன பிடி ..அதை அஜீஸ் பண்ண நாம போட்ட வாஷர்களை கவனிங்க
No comments:
Post a Comment