அண்ணே வணக்கம்ணே !
முல்லை பெரியார் அணை பற்றிய விவாதங்களும் வன்முறையும் - பற்றி எரியுது.அம்மா பாவம் கொட நாடு கூட போகாம சட்டமன்ற சிறப்பு கூட்டம் ஏற்பாடு பண்ணியிருக்காய்ங்க.இன்னைக்கு மன்சங்க முடிவெடுக்க மிஷினுங்க வேலை செய்யுது. மிஷினுங்க முடிவெடுக்க மன்சங்க வேலை செய்யற காலம் வந்தாதான் இந்த நிலைமை மாறும் போல.
ஆருனா சாஃப்ட் வேர் நிபுணர் ஒருத்தரு இந்த மாதிரி பிரச்சினைகளை அக்கு வேறு ஆணி வேறா அனலைஸ் பண்ணி சால்வ் பண்ற சாஃப்ட்வேர் ஒன்னை கண்டுபிடிச்சா நெல்லா இருக்கும். நாம இந்தியா பாக்கிஸ்தான் பற்றி எழுதும் போது ஒரு பாய்ண்ட் சொல்றது வழக்கம்.
கொய்யால ரெண்டு நாட்லயும் பட்டினி இருக்கு ,தீவிரவாதம் இருக்கு,விபசாரம் இருக்கு. இந்த இழவுல என்னாத்த யுத்த முஸ்தீபு -என்னாத்த வீர வசனம். மொதல்ல ரெண்டு நாட்லயும் பட்டினி -தீவிரவாதம்-விபசாரம் ஒழியனும். இதுக்கு மூல காரணம் தேசீய வருமானத்தையும் தங்கள் தலைவருமானத்தையும் உசத்திக்க மக்களுக்கு உற்பத்தி நடவடிக்கைகள்ள சமமான பங்கில்லை. அதுல பங்கில்லைங்கறதால தேசீய வருமானம் உசந்தாலும் தலைவருமானம் உசரலை. ஏழ்மை தொடருது.பட்டினி -தீவிரவாதம்-விபசாரத்துக்கெல்லாம் மூல காரணம் ஏழ்மை.
வீரவசனம், யுத்த முஸ்தீபெல்லாம் இந்த பட்டினி -தீவிரவாதம்-விபசாரத்தை அதிகரிக்குமே தவிர ஒரு ம..ரு உபயோகமும் கிடையாது.
இந்தியா பாக் மேட்டர்லயே இதான் நம்ம ஸ்டாண்ட். இந்த பெரியார் அணை வித் இன் இண்டியா பத்தி எரியுது. கேரளா காரவுக உபரியா மின்சாரம் தயாரிக்கத்தேன் புது அணைக்கு அடி போடறாய்ங்கனு கேள்வி.
அடங்கொய்யால ..
இந்த உலக மய ,தாராள மய யுகத்துல மின் தேவைய பூர்த்தி செய்ய எந்த கொம்பனாலயும் முடியாது. நீங்க 10 மெகாவாட்டுக்கு திட்டம் போட்டு அது செயல்பட ஆரம்பிக்கிறதுக்குள்ளாற 1000 மெகாவாட்டுக்கு தேவை ஏற்பட்டு போயிருக்கும்.
மெகா அணைகளை கட்டறதெல்லாம் இந்திர லோகத்துல இருந்து வெள்ளை ஆனைய கொண்டு வந்து கட்டி வச்சு தீனி போட்ட கதைதேன். மேலும் அன்னைக்கிருந்த இஞ்சினியருங்க வேற இன்னைக்கு இருக்கிற "சில்லறை"ங்க வேற.
தப்பித்தவறி ஒழுங்கா கட்ட ஆரம்பிச்சாலும் வனத்துறை அனுமதி - சுற்று சூழல் அனுமதி லொட்டு லொசுக்குன்னு ஆயிரம் வில்லங்கமிருக்கு.
இதையும் மீறி கட்ட ஆரம்பிச்சாலும் ஊழல்னு ஒரு பூதம் இருக்கு. ஆந்திராவுல ஜலயக்னம் இப்படித்தேன் நாறிக்கிடக்கு.
ஊழலையும் மீறி அணை கட்ட துவங்கினாலும் அது முடியறதுக்குள்ள கட்டுமான செலவு பல ஆயிரம் மடக்கு எகிறிக்கும்.
இதெல்லாம் வம்பை விலை கொடுத்து வாங்கற கதை. அணை என்ன பட்டா பட்டி அண்டர்வேர் நாடாவா ஒடனே கட்டிக்கிறதுக்கு. இது எப்படியா கொத்த பை.தனம்னு கேரளா காரவுக ரோசிக்கனும்.
நதி நீர் அணைக்கு வந்த பிற்காடு மின்சாரம் தயாரிக்கிறது மாட்டோட வாலை பிடிச்சிக்கிட்டு ஓடற மாதிரி. அந்த நதி நீர் அணைக்கு வந்து சேர்ரதுக்கு மிந்தியே மூக்கணாங்கயிறை பிடிச்சு எங்கெல்லாம் வசதி வாய்ப்பிருக்கோ அங்கெல்லாம் சின்ன சின்ன ஹைட்ரோ பவர் ப்ராஜெக்ட்ஸ் ப்ளான் பண்ணி மின்சாரம் தயாரிக்கலாமே.
இந்த அணை பிசினஸெல்லாம் விட்டுட்டு நதி நீர் இணைப்பின் மீது கவனம் செலுத்தினா அஞ்சு பத்து வருசம் கஷ்டப்பட்டாலும் நீடித்த பலன் இருக்கும்.
ப்ரீச் ஆஃப் அக்ரிமெண்ட்டுங்கறதே மன நோயின் அறிகுறி. நல்லதோ கெட்டதோ ஒப்பந்தம்னு ஒன்னு போட்ட பிறகு அதனோட காலம் முடியற வரை அதுக்கு கட்டுப்பட்டு இருக்கிறதுதான் ஆரோக்கியமான மனதின் அறிகுறி.
இன்னொரு முக்கியமான மேட்டர் எதிர்காலத்துல உலக யுத்தம்னு வந்தா அது தண்ணீக்காகத்தான் வரும்னு சொல்லிவச்சிருக்காய்ங்க. உபரி நீருக்காக -உபரி மின் உற்பத்திக்காக இந்திய ஒருமைப்பாட்டுக்கே ஆப்படிச்சு ஆப்பசைச்ச குரங்கா மாட்டி தவிக்கிறதை விட நீர் வினியோகத்தை ,மின் வினியோகத்தை குறைக்கறதுல கவனம் செலுத்தனும்.
இதை கேரள அரசுக்கு மட்டும் சொல்லலை. தமிழக அரசுக்கும் சேர்த்துதேன் சொல்றேன். 99 வருட ஒப்பந்தம்னா அது என்னைக்கோ ஒரு நாள் காலாவதியாகும். ஆகித்தீரும்.அதுவரை காத்திருக்காம ஆல்ட்டர்னேட்டிவ்ஸை பார்த்துக்கனும்.
இன்னொரு மிக முக்கியமான மேட்டர் இந்த பஞ்சாயத்தை இந்திய கோர்ட்டுகள் ,பாராளுமன்றம்லாம் விசாரிக்கிறதை விட உலக அளவில் பெயர் பெற்ற களங்கமற்ற நிபுணர்கள் குழு தீர்க்கறது பெட்டர் சாய்ஸ்.
No comments:
Post a Comment