'>

Sunday, October 2, 2011

எங்கே தப்பு பண்றோம்?

வாழ்க்கையில "எங்கயோ தப்பு பண்ணிட்டம்"னு நினைக்காத ஆளில்லை. நினைக்காத நாளில்லை. அது இன்னா தப்புன்னு கொஞ்சம் முக்கி ரோசிச்சிருக்கன். ஸ்கான் பண்ணப்பட்ட கை.எ. பிரதியா படிக்கிற பொறுமை உள்ளவுக இப்பமே படிக்கலாம்.ஆடியோ பிரியர்கள் / டெக்ஸ்ட் பிரியர்களுக்கும் விருந்து நிச்சயம் . என்ன கொஞ்சம் முன்ன பின்னே பரிமாறப்படும்.





எங்கே தப்பு பண்றோம் பதிவை ஆடியோல கேட்க கீழ்காணும் ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேளுங்க.





இப்போ டெக்ஸ்டா ...

இந்த பதிவுல நான் குறிப்பிடப்போற பட்டியல்ல உள்ள தப்பையெல்லாம் நானும் செய்தவன்தேன். இன்னிக்கும்
அறிவு அரைக்கணம் கண்ணை மூடிக்கிட்டா படக்குன்னு செய்துரவும் வாய்ப்பிருக்கு ( தப்பை சொல்றேங்க)
அதனாலதேன் யாவாரிங்க வருசத்துக்கொருதரம், மல்டி நேஷனல் கம்பெனிங்க 3
மாசத்துக்கொருதரம் செய்யறதை தினசரி செய்துர்ரம். (அதாங்க பேலன்ஸ்ஷீட்)
இல்லாட்டி நமக்கும் ................க்கும் வித்யாசமில்லாம போயிரும். மன்சங்க
எங்கே தப்பு பண்றாய்ங்கன்னு இந்த பதிவுல பார்த்துருவம்.

1. இந்த வாழ்க்கை நிரந்தரமானதுனு நினைச்சுர்ரான். தான் கல்ப்ப கோடி
காலம் வாழப் போறதா நினைச்சுர்ரான் அதான் எல்லா தப்புக்கும் மூலம். அசலான
மேட்டர் இன்னாடான்னா நாம பிறந்த கணம் முதலே சாக ஆரம்பிச்சுர்ரம். (ஓஷோ)

இந்த உலகத்தோட ஆயுளோட நம்ம ஆயுளை கம்பேர் பண்ணிக்கிட்டாலே போதும் நாம ஊட்டி சீசனுக்கு வந்த டூரிஸ்டுங்கறது புத்திக்கு உறைக்கும். சனத்தோட சிந்திக்கும் போக்கே மாறிரும்.

எதையுமே டெம்ப்ரவரினு நினைச்சா அதை Full Swing-ல Exploit பண்ணிக்கற எண்ணம் வரும்.

ஒரு குட்டிய ஒரு நைட்டுக்கு புக் பண்ணிட்டு எவனாச்சும் உதவாக்கரை நண்பனோட பார்ல உட்கார்ந்து
தண்ணி போடுவானா? ஊஹும். வாழ்க்கைய நைட்டுக்கு புக் பண்ணின குட்டியா
நினைச்சுப்பாருங்க.

புனரபி மரணம், புனரபி ஜனனம், பிறவிகள், கடலைப்பிண்ணாக்கு இதெல்லாம் ஒரு
பக்கம் இருக்கட்டும்.

ஒரு காலத்தில 3 வருஷம் ஒன்னா படிச்சோம். ஒரு குட்டியை ஒரு தலையா
காதலிச்சோம். ஃபேர்வெல் ஃபங்சன் நடக்குது. உங்க காதலை இன்னிக்கு
சொல்லலைன்னா என்னிக்கும் சொல்ல முடியாது.

இந்த கட்டத்துல நீங்க மேடைல போட வேண்டிய நாடகம் (அ) பாட வேண்டிய பாட்டு,
அணிய வேண்டிய உடை எல்லாமே ஞா. இருக்கும். ஆனால் அதையெல்லாம் உங்க காதலை
சொல்ல எப்படியெல்லாம் உபயோகிக்கலாம்ங்கற விஷயம்தான் உங்க ப்ரெய்ன்ல
இருக்கும். இருக்கனும்.

இந்த உலக வாழ்க்கைங்கறது நீங்க போட வேண்டிய நாடகம் . காதலை
சொல்றதுங்கறது உங்க லட்சியம்.

ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே!
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே!

நீங்க ரிலேக்ஸ் பண்ணாலும் டென்ஷன் ஆனாலும், சிரிச்சாலும், அழுதாலும்
அதுக்கும் உங்க லட்சியத்துக்கும் லிங்க் இருக்கனும் அதான் வாழ்க்கை.

உங்க லட்சியம் எதுவானா இருந்து ஒழியட்டும். லட்சியத்தை அப்பப்போ டீல்ல
விட்டுட்டா உங்க மேல உங்களுக்கு இருக்கிற மரியாதையே குறைஞ்சுரும்

உலகமே கல்லால அடிச்சாலும் கு.ப. என் மனசாட்சி ”முருகேசா! நீ கரீட். இந்த
முட்டாக்கூ உலகம் கல்லால அடிக்குதுன்னா நீ உண்மைய டச் பண்ணிட்னு
அர்த்தம். ஃப்ரீயா உடு ஃப்யூச்சர்ல இந்த உலகம் தான் வருத்தப்படப்
போகுது”ன்னு சொன்னா அது தான் வாழ்க்கை.

.இந்த உலகம் ஆகா முருகேசனை போல ஒரு உத்தமனை பார்க்க முடியுமான்னு தலையால
வச்சு கொண்டாடுது. ஆனால் என் மனசாட்சி மட்டும் ”பட்டா டேய்! நீ இன்னா மாதிரி
ஜொள்ளு பார்ட்டி – டகால்ட்டி – டுபாகூர் உலகம் இன்னடான்னா உன்னைப் போய்
உத்தமன்னு சொல்லுது”னு வைங்க. இதுவா வாழ்க்கை


1. வாழ்க்கைங்கறது காங்கிரசல்லாத கூட்டணி அரசு மாதிரி எப்ப வேணா
கவுந்துரும். வி.பி.சிங் கணக்கா படக்குனு மண்டல் கமிஷன் ரிப்போர்ட்டை
அமலாக்க ட்ரை பண்ணனும்.

அட்வானி (இந்தி சானல் உச்சரிப்பு) ரத யாத்திரை கிளம்பினா படக்குனு தூக்கி உள்ளே
போட்டுரனும்.

அதை விட்டுட்டு அட்வானிய கண்டுக்காம விட்டிருந்தாலும் சிலநாள் அ சில வாரத்துல
ஆட்சி ஃபணால் தான். மண்டல் மேட்டரை டீல்ல விட்டிருந்தாலும் ஃபணால்தான்.

ஆக வாழ்க்கையில நீங்க லட்சியத்துக்காக Workout பண்ணாலும் சாகத்தான்
போகறீங்க. அதை டீல்ல விட்டாலும் சாகத்தான் போறீங்க.

லட்சியத்தை டீல்ல விட்டு – வாழ்வாங்கு வாழ்ந்தாலும் அது மரணத்தை விட
மோசமான – கேவலமான வாழ்க்கையா இருக்கும்.

லட்சியத்துக்காவ சிங்கிள் டீக்கு சிங்கியடிச்சாலும் மரணம் கொண்டாட்டமா இருக்கும்.

நான் ரெண்டு விதமாகவும் வாழ்ந்த கிராக்கி. இது என் சொந்த அனுபவம்.

ஆப்பரேஷன் இந்தியா 2000க்காக போராடினப்போ ஊரு சனம்லாம்
திமிரு-கொழுப்பு-பொழப்ப பாருன்னு கிழிச்சாலும்

நம்ம தீட்சண்யத்துக்கு ஆத்தாவே நடுங்கினாள். ஆத்தாளுக்கு
அல்டிமேட்டம்லாம் கொடுக்கிற ரேஞ்சுல இருந்தம்.

போலீஸ், ரெவின்யூ, ஜுடிஷியரி, அரசியல் கட்சி அலுவலகங்கள் ஏன் சீஃப்
செக்ரட்ரியே பம்மிக்கிட்டிருந்தாய்ங்க.

லட்சியத்தை திராட்டுல விட்டு அதோ இதோன்னு 7 வருசம் ஆயிருச்சு. வடிவேலு
சொல்றாப்ல கன்னம்லாம் பன்னு மாதிரி ஆகி ஒரு மாதிரி தேஜஸா இருக்கு.

ஆனா ராத்திரியில தூக்கம் வரமாட்டேங்குது. குறுக்கால போற பூனைக்கெல்லாம்
ரோசிக்க வேண்டியதாருச்சு.

லட்சியம் – லட்சியம்னு சொல்லிக்கிட்டு கிடக்கேன். லட்சியம்னா ஆ.இ. 2000
மட்டுமில்லே. வீடு கட்டறது – தபால்ல மேல்படிப்பு, வெளிநாடு போறது இப்படி
எந்த இழவானா இருக்கட்டும். அதை விட்டுக் கொடுக்காம வாழ்ந்தா – அதை
அடையாமயே போயிட்டாலும் உங்க வாழ்க்கை சக்ஸஸ்.

நமக்கு முந்தி கோடானு கோடி சனம் பிறந்து – வாழ்ந்து செத்திருக்காய்ங்க.
அகாலமா செத்திருக்காய்ங்க. அவலமா அத்வானமா வாழந்திருக்காய்ங்க. மரணமே
போல வாழ்ந்து முடிஞ்சிருக்காய்ங்க.

என்ன மசுருக்கு நம்மை இயற்கை படைச்சது? எதையோ புதுசா செய்வம்னுதேன் படைச்சிருக்கு.

ஆனால் நாம என்ன பண்றோம்? இதுவரை வாழ்ந்து செத்தவுகளோட எண்ண அலைகளுக்கு
அடிமையா – அவிக ஆட்டி வைக்கிற பொம்மையா வாழ்ந்துகிட்டிருக்கம். கேவலம் நம்ம அப்பா அம்மாவோட ஜிராக்ஸ் காப்பியா இருக்கம்.

இதுவரைக்கும் எவனும் செய்யாததை நாம செய்ய வேணாமா? நம்மை படைச்ச
இயற்கைக்கும் – பெத்து வளர்த்த அப்பா அம்மாவுக்கும் பெருமையை தேடி தர
வேண்டாமா?

குறைஞ்சபட்சம் அவிகளுக்கு கெட்ட பேரையாவது வாங்கித்தராம இருக்கலாமே!

இந்த நல்ல எண்ணம் வர்ரதுக்குள்ளே அப்பா அம்மா ரெண்டு பேரும் போய்
சேர்ந்துட்டாய்ங்க. அரசு ஊழியர் செத்தா – பிணத்தை தூக்க அந்த குடும்பம்
படற அவதியை பார்த்து அந்த செலவுக்கு இன்ஸ்டன்டா கஜானாவுலருந்து காசு கொடுக்கறாப்ல ஒரு
G.O. கொண்டு வரச்செய்தாரு எங்க அப்பா.

அவர் ஒன்றும் நிதிமந்திரியா இருந்தவரில்லே. ஜஸ்ட் ஒரு மாவட்ட கருவூல
அதிகாரி தான். வண்ணடி வண்டியா லெட்டர் அனுப்பி ஃபைனான்ஸ் செக்ரட்ரியை
தாலியறுத்து இதை சாதிச்சாரு.

இன்னிக்கு அப்பா இல்லை ஆனால் அந்த G.O. இருக்கு. இதன் மூலம் பயனைடையறவுகளுக்கு அப்பாவை தெரியாம இருக்கலாம்.

தப்பித்தவறி இந்த பார்ப்பானுங்க சொல்றதெல்லாம் நெஜமாயிருந்தா எங்கப்பன் ஆத்ம ரூபமா காலாவதியான சேட்டிலைட் கணக்கா வெத்தா சுத்திக்கிட்டிருந்தா அந்தாளுக்கு இன்னா மாதிரி குஜிலியாயிருக்கும் ரோசிங்க.

வாழ்வது ஒரு முறைதான். தினசரி ஆயிரக்கணக்கான செல்கள் செல்லாக்காசா போயி
புது செல் உருவாகுதாம். வயசாக வயசாக சாவு சாஸதியாகி புதுசா உருவாகிறது
குறைஞ்சருதாம்.

அட பிறவிகள் இருக்ன்னே வச்சுக்குவம், மனப்பாடம பண்ணி வாந்தி எடுக்கிற
பையனுக்கு ஒரே வார்த்தையில திக்கறாப்ல எந்த பிறவியலயும் லட்சியமா?
இன்னொரு லட்டாங்கற ஜங்சன் பாய்ண்ட்லல்லாம் இந்த பிறவியில ஜகா வாங்கினா - இந்த ஜகா வாங்கற மேட்டர் எந்த பிறவியிலயும் ரிப்பீட்டாகும்.

மரணம் நம்மை - நம்ம வாழ்க்கைய கனவை ஆட்டைய போட காத்திருக்கு. அலார்ட்டா இருங்க. எதையும் நாளைக்கு பார்க்கலாம் - இன்னொரு சந்தர்ப்பம் வரட்டும்னு பம்மாதிங்க.

லட்சியத்தை திராட்டுல விட்டு இன்னொரு லட்டுக்கு ஜொள் விடாதிங்க.

லட்சியத்துக்காவ இங்கே இப்போ எதை செய்யமுடியுமோ அதை செய்துருங்க. இல்லாட்டி ஒன்னுமே செய்யமுடியாத நிலை நாளைக்கே வந்துரலாம். உடுங்க ஜூட்.

எஸ். முருகேசன்.

2 comments:

Sugumarje said...

மிக, மிக அருமையான தெளிவான, முகத்தில் அடிக்கிற உண்மை... பின்னூட்டத்தில் மேற்கோள் காட்டுவதென்றால் மொத்த பதிவையும் இங்கே ஒற்ற வேண்டியத்க்திருக்கும்...

இதை பதிவை வேறுவிதமாக பயன்படுத்த அனுமதி தாருங்கள்...

ஆக (இதே கருத்துக்கள் எனக்குள்ளும் இருக்கிறது) மறுபடியும்.... நிறைய யோசிக்க வைத்துவிட்டீர்கள்..

Chittoor Murugesan said...

வாங்க ஜீ !
நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா - அதுக்கு என் எழுத்து உதவும்னா தூள் பண்ணுங்கஜி.

இதுக்கு போயி அனுமதில்லாம் தேவையில்லை.

வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.