'>

Monday, October 3, 2011

ஆண் மேல் முறையும் நதி நீர் பங்கீடும்

ஆண் மேல் முறையும் நதி நீர் பங்கீடும்ங்கற தலைப்புல இந்திய நாட்டின் தலையாய பிரச்சினைகளான மின் பற்றாக்குறை மற்றும் குடி நீர்/பாசன நீர் பற்றாக்குறைய ஜோவியலா அலசி சில தீர்வுகளையும் தந்திருக்கேன்.

கை.எ பிரதியின் ஸ்கான் ,ஆடியோ ஃபார்மெட் மற்றும் தட்டச்சு வடிவம் மூன்றும் அவெய்லபிள். ஆருக்கு எது பிடிச்சா அதை கொண்டாடலாம்.







பதிவின் ஆடியோ வடிவத்துக்கு கீழ்காணும் ப்ளேயர்ல ப்ளே பட்டனை அமுக்குங்க



மின் வெட்டில்லாத இந்தியா

பதிவின் தலைப்பை பார்த்ததுமே தாளி ஆரம்பிச்சுட்டான்யா சாத்தியமில்லாத
சஜஷன்ஸ் கொடுத்து கிர்ரடிக்க வச்சுரப்போறான்னு சலிச்சுக்காதீங்க.

தமிழ் நாட்லயாகட்டும் – ஆந்திரத்துலயாகட்டும் இன்னிக்கு – இந்த அகாலத்துல
மின்வெட்டு நிலவ காரணம் தெலுங்கானா போராட்டம்.

பஞ்சாப்ல ஒரு காலத்துல தனி நாடே கேட்டானுவ. (தமிழ்நாட்லயும்
கேட்டிருக்காய்ங்க ஆனால் இதெல்லாம் உடுப்பி சமாச்சாரம்) இப்பம் என்னாச்சு
காலிஸ்தான் கோரிக்கை?

இந்த பிரிவினை கோரிக்கைகளுக்கு ஸ்தூலமா எத்தினி காரணங்கள் இருந்தாலும்
அடிப்படை காரணம் நிர்வாக சீர்கேடு – Mismanagement of resources, in equal distribution தான் .ஜஸ்ட் அந்த 10 ஜில்லாவுல SP, கலெக்ட்ர் ஒழுங்கா வேலை செய்தீருந்தா தனிமாநில கோரிக்கைக்கெல்லாம் இடமே இல்லை.

வாத்யாரு, ”என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்”னு படினாரு. இத்தீனி வருச
மிஸ்மேனேஜ்மென்டுக்கு அப்பாறமும் வாத்யாரு சொன்ன வளங்கள் அப்படியேத்தான்
இருக்கு ஆனால் Mismanagement – நிர்வாக சீர்கேடு இன்னும் இன்னும்
அதிகரிச்சுகிட்டே போகுது. எங்கே போய் முடியப்போவுதோ?

தெலுங்குல ”மொலிகே நக்க பை தாடி பண்டு பட்ட சந்தான” ன்னு ஒரு பிரயோகம் உண்டு.

ஒரு நரிநாயடிப்பட்டு ஒரு பனை மரத்தடில முணகிக்கிட்டிருந்ததாம் அப்போ அதோட
தலைமேல ஒரு பனங்காய் வந்து வழுந்ததாம்.

இதான் மேற்படி பழமொழியோட அருத்தம். ஏற்கெனவே நொண்டி குதிரை. இதுல கால் வேற சறுக்கி விட்டுருச்சு.

அப்படித்தான் இருக்கு மின் வினியோகத்துல அரசுகள் நிலைமை. இங்கன இப்பம் 8
மணி நேரம் மின்வெட்டு.

இதுக்கே நாம கடுப்பாகிர்ரம். ஆனால் 365 நாளும் கிராமங்கள்ள 17 மணிநேரம்
பவர்கட். இருந்திருக்கு. இப்பம் கூடுதலா ஒரு மணி ரெண்டு மணி நேரம் பவர்
கட்டாம். கற்பனை பண்ணிப்பாருங்க.

நாம கான்க்ரீட் கூடுகள்ள பாதுகாப்பா இருக்கோம். ஆனால் கிராமத்துல வயல்,
வரப்பு – திறந்தவெளி கிணறு – அறுந்து விழுந்த மின்கம்பி – நாய் நரி – சில
சமயம் சிறுத்தை – கரடியை எல்லாம் தாண்டி போய்தான் பயிருக்கு தண்ணி
கட்டனும் / காட்டனும். அதுவும் பாதி ராத்திரியில.

தாளி... ஒரே ட்ரான்ஸ்பாரத்துல கன்சம்ப்ஷன் அதிகரிச்சா ட்ரான்ஸ்பார்ம்
காலி. ரெம்பவே லோ ஓல்ட்டேஜ் வந்தா மோட்டர் காலி. வைண்டிங் காலி.
தனக்கு வந்தாதான் தலைவலியும் ஜுரமும் இன்னிக்கு 8 மணி நேர பவர்கட்தான்
இந்த அளவுக்கு ரோசிக்க வச்சிருக்கு.

தெலுங்கானா போராட்டம் காரணமா நிலக்கரியை வெட்டி எடுக்க முடியாததுக்கே
இந்த நிலை ஒரு வேளை நிலக்கரியே தீர்ந்துட்டா?

புனல் மின்சாரம்னு பார்த்தா கோடையில தண்ணி இல்லைம்பாய்ங்க. மழைகாலத்துல
அணை தாங்காதுனு திறந்து விட்டுட்டோம்பாய்ங்க. அல்லது பவர் ஹவுஸ்
மூழ்கிருச்சும்பாய்ங்க அணை நிரம்பிப் போச்சுன்னு பீத்துவாய்ங்க மறு மாசமே
பஞ்சப்பாட்டு.

இன்னாடா மேட்டருன்னா கோடையில தூர் வாரியிருக்க மாட்டான். அணைக்கு மராமத்து செய்திருக்கமாட்டான், அட கேட்டுக்கு க்ரீஸ் கூட போட்டிருக்க மாட்டான்.

நதிநீர் மேட்டர்ல போனா ரெம்ப நாறும். செக்ஸ்ல கூட பெண்மேல முறைன்னு ஒரு
ஆலட்டரனேட்டிவ் இருக்கு.

ஆனா நதி மேட்டர்ல கீழை பகுதியில இருக்கிறவனை மேலை பகுதியில உள்ளவக
........க்கிட்டே இருப்பான். அவனைப் பொருத்தவரை கீழ்பகுதி ஒரு வடிகால்
மட்டுமே. அவிக அணைகள் எல்லாம் தானா நிரம்பி அடிச்சிட்டு போயிருங்கற நிலை வந்தாதான் திறப்பானுக.

இங்கே ஊருசனம் கிராமத்தை விட்டு உஸ்கோலுங்கள்ள சாம்பார் சாதம்
சாப்பிட்டாலும் (அ) தகரக்கொட்டாய்ல சாகனும். அடுத்த வெள்ளம் வர்ர வரை
வெள்ள நிவாரணமோ நஷ்ட ஈடோ வரவே வராது.

எங்கயோ குக்கிராமத்துல படிப்பறிவில்லாத – பாண்டு பத்திரம் இல்லாத குப்பனோ
சுப்பனோ வரப்பு தகராறு – வாய்க்கா தகராறுன்னு வெட்டி மடிஞ்சா – கோர்ட்ல
குடியிருந்தா அதை புரிஞ்சுக்கலாம்.

கொய்யால! மாநில அரசுகளே வெட்டி மடியுது. கோர்ட்டுல குவார்ட்டர்ஸ் கட்டுது.

பாப்லி அணைய கட்டாதேனு சுப்ரீம் கோர்ட்டு சொன்ன மகாராஷ்டிராகாரன் குண்டி
மண்ணு கணக்கா தட்டி விட்டுட்டு கட்டியே உட்டான். அவனை பிடுங்க முடியலை.
மன்மோகனாருக்கு சிதம்பரத்துக்கு கான்டக்ட் சர்ட்டிஃபிகேட் கொடுக்கவே
பொழுது சரியா இருக்கு.

கர்னாடகாகாரனுக்கு நெரம்பி வழிஞ்சாதான் ஆந்திராவுக்கு தண்ணி வரும்.
ஆந்திராவுல கண்டலேறு நிரம்பினாத்தான் தெலுங்கு கங்கை கால்வாய்ல தண்ணி
வரும். சென்னைல ஒரு குடம் தண்ணி கூடுதலா கிடைக்கும்.

இன்னாங்கடா இது அக்குறும்பா கீது. நான் இன்னா சொல்றேன்னா... தண்ணில
மின்சாரத்துல அரசியல் பண்ணாதே. ரெண்டு பார்ட்டியும் டிரிப்யூனல்/கோர்ட்டுகளுக்கு காட்டறது பொய்க்கணக்குத்தான்.

உண்மையான கணக்கு வேணம்னா விஞ்ஞானத்தை நம்பனும். சப்பான்காரனை கூப்டு
சர்வே பண்ண சொல்லு.

டிமாண்டுக்கு ஏத்த சப்ளை இல்லைன்னா உபயோகத்தை ரெண்டு பார்ட்டியும் சமமா குறைச்சுக்கனும். அறிவுப்பூர்வமா ரோசிச்சு – ஆக்கப்பூர்வமான முடிவை எடுக்கனும்.

நீர் விநியோகம்.

நீர் விநியோகத்தை குறைக்க ஆயிரம் வழி இருக்கு பாலை வனத்துலல்லாம்
சக்சஸ்ஃபுல்லா பயிர் பண்றாய்ங்க. பாரத நாட்ல பண்ண முடியாதா?

சொட்டு நீர் பாசனம் – வாய்காலுக்கு பதிலா பதிலா பிளாஸ்டிக் குழாய்களை
உபகோகிக்கறது, குறைஞ்ச தண்ணீர்லயே நிறைஞ்ச சாகுபடி தரக்கூடிய விதைகள்
தயாரிக்கிறது இப்படி பல வழிகள் இருக்கு.

முக்கியமா ஆயிரம் ஏக்கர்ல நெல்லை பயிர் செய்து அதை அப்படியே தாரை
வார்த்து வியாபாரிகளை, தரகர்களை போஷிக்கிறதைவிட விவசாயிகள் ஒற்றுமையா
பாடுபட்டு நெல்லை அரிசியாக்கி – Pack பண்ணி ப்ராண்டட் ப்ராடக்டா விற்க முடிஞ்சா 500 ஏக்கர் நெல்லே போதும்.

நம்ம நாட்டு விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தினா 500 ஏக்கர்ல ஆயிரம் ஏக்கர்
நெல்லை விளைவிக்க உதவுவாய்ங்க. இது ஒரு கட்டம். அடுத்த கட்டமா
டிமாண்டுக்கு ஏத்த சப்ளையை அதிகரிக்க வேட்டிய வரிஞ்சுகட்டனும். அதுக்கு
ஒரேவழி நதிநீர் இணைப்பு. ஆப்பரேஷன் இந்தியா 2000 தேன்.

விவசாயிக்கு உரிய காலத்துல விதை,உரம் ,கடன் கொடுத்து நாணயமான – நியாயமான கு.ப. கொள்முதல் விலையை கொடுக்க முடிஞ்சா ஆயிர் ஏக்கர்ல அரைகுறையா பாடுபட்டு தண்ணீர் விநியோகத்தை அதிகரிச்சு மாநிலங்கள் மத்தியில – நாடுகள் மத்தியில யுத்த சூழலை ஏற்படுத்தாமயே 500 ஏக்கரில் விஞ்ஞானப்பூர்வமாக சாகுபடி செய்து அவிகளும் உயர்வாங்க – நாடும் உயரும்.

மின்கட்டணம்.

மின்வெட்டு மென்னியை முறிக்கிற நிலையில தவுசண்ட் வாட்ஸ் மியூசிக்
சிஸ்டம்லாம் நாட்ல இருக்கு. நம்ம பசங்களை தட்டிக் கொடுத்தா குறைஞ்ச பட்ச
மின்சக்தியில முழுவீச்சுல வேலை செய்யற மின் உபகரணங்களை பட படனு கண்டு
பிடிக்க ஆரம்பிச்சுருவாய்ங்க.

மின்சாரத்தை வாங்கி – விக்கறதை மட்டுமே மின்சார வாரியம் செய்யாம
ஆராய்ச்சிக்கும் பணம் ஒதுக்கி – ஊழியர்களுக்கும் லாப நஷ்டத்துல பங்கு
கொடுத்து உற்பத்தி செலவை குறைக்கலாம் – லைன் லாசை குறைக்கலாம். மின் திருட்டை ஒழிக்கலாம்.

ஒரு டவுன் ப்ளானிங் ஆஃபிசர் ஒழுங்கா வேலை செய்தா போதுமான வெளிச்சம்
காற்று வர்ற வீடகள் உருவாகும். மின் விநியோகம் குறையும்.

ஒரே சீரியலுக்கும் ஆயிரம் டிவிக்கள் வேலை செய்யிது. இதுக்கு ஒரு வழி
பண்ணனும். மின்சாரத்தை கோடீஸ்வரங்களுக்கும் சலுகை விலைல தர்ர
கயவாளித்தனத்தை விட்டு ரயில்ல பாசஞ்சர் – எக்ஸ்பிரஸ் மாதிரி
மின்சாரத்தையும் சாதா – டீலக்ஸ்னு ரெண்டு குவாலிட்டில தரலாம்.

இதெல்லாம் ந...ட...க்...கற காரியம்மாய்யா? ஊஹும்....

2 comments:

Sugumarje said...

இதெல்லாம் ந...ட...க்...கற காரியம்மாய்யா? ஊஹும்....

அதான் எனது பதிலும்... ஆனா யோசனைலாம் பலமாத்தான் இருக்கு :)

Chittoor Murugesan said...

ஜீ !
காம்பட்டிஷன் போஸ்ட் கார்ட் எப்படி வந்தது தெரியுங்களா?

ஒரு ஆசாமி டிவி பார்த்துக்கிட்டிருந்தாரு. கண்டதுக்கும் உதவாக்கரை கேள்வி ஒன்னு கேட்க வேண்டியது. உங்க பதிலை போஸ்ட் கார்டுல எழுதுங்க -குலுக்கி பரிசு தர்ரோம்னு அறிவிக்கவேண்டியது.

இதை தொடர்ந்து பார்த்துக்கிட்டிருந்தவருக்கு கடுப்பாயிருச்சு.

எடுத்தாரு ஒரு போஸ்ட் கார்டை தட்டிவிட்டாரு போஸ்ட் மாஸ்டர் ஜெனரலுக்கு.

ஒரு போஸ்ட் கார்டு ப்ரிண்ட் பண்ணி அதை சேல்ஸுக்கு வச்சு - எழுதின கார்டை டெலிவரி பண்ண டபுள் டிஜிட்ல ரூவா செலவாகுது. ஆனா எட்டணாவுக்கு விக்கறிங்க.

இதை இப்படி மிஸ்யூஸ் பண்றாய்ங்களேன்னு எழுதினாரு. விளைவு காம்படிஷன் போஸ்ட் கார்டு உருவாச்சு.

ஆருகண்டா நம்ம சஜஷன் அந்த வாய் - இந்த வாய் வழியா பாஸ் ஆகி உரியவுங்க காதுக்கு போய் அமலாகவும் வாய்ப்பிருக்கே.