'>

Saturday, October 1, 2011

எழுத்தும்,தலையெழுத்தும்

அண்ணே வணக்கம்ணே !
நேத்து சொன்னபடியே இந்த பதிவை கையில எழுதி ஸ்கான் பண்ணி வச்சிருக்கன். நம்ம மணி அண்ணன் அனுப்பிவைங்க தலை .. நான் அடிச்சு போட்டுர்ரன்னு சொன்னாரு. அவருக்கும் அனுப்பினேன். அவர் தட்டச்சி எனக்கு மெயில்ல அனுப்பினதை படிக்கிறதுக்கு முந்தி ஒரு கில்மா மேட்டரு

இந்த கையில எழுதிக்கற மேட்டர்ல ஒரு தூளான படு ஹாட் ஜோக் ஒன்னு நம்ம சைட்லயே இருக்கு. அதை தேடி கண்டுபிடிக்கிறவுகளுக்கு ஒரு சிம் கார்ட் ஃப்ரீ.

குறிப்பு :1
படத்தை பெரிதாக்கி பார்க்க படத்தின் மேல் க்ளிக் செய்யவும்.

குறிப்பு:2
ஆடியோவை சகிச்சுக்கிட்டு தொடர்ந்து கேட்டுவரும் புண்ணியாத்மாக்களுக்காக ஆடியோ வெர்ஷனும் இருக்கு. ஈயடிச்சான் காப்பியில்லிங்கண்ணா. முடிஞ்சவரை அப்டேட் பண்ணி வாசிச்சிருக்கேன். புதுசாவும் நாலு விஷயம் சொல்லியிருக்கேன்.

டெக்ஸ்ட் பிரியர்கள் நம்ம மணியண்ணன் அடிச்சி அனுப்பினதை இப்ப படிக்கலாம். ஆடியோ பிரியர்களுக்கு ஆடியோவும் பின்னாடி வருது..

அண்ணே!
வணக்கம்ணே!
நீங்க அல்லாரும் டெக்ஸ்டு வேணும்னு சொல்லிகினு இருந்தீங்களா? எங்க ஊர்ல 4
மணி நேரமா இருந்த பவர்கட் 6 மணி நேரமாயிருச்சு.

எழுத்தாளர் சுஜாதா தன் கதைகள்ள ஹீரோ யாரையாவது கடுமையா திட்டனும்னா
விலைமகள் மகன்(கள்) என்ற வார்தையை உபயோகிப்பாரு. விலைமகள்/விலைமகள்ன்னு
திட்டினாலும் கு.பட்சம் சமூக விதிகளை / மோரல்லை மதிக்காதவன்னு அருத்தம்
வரும்.

அவளாச்சும் ஏதோ சில காரணங்களுக்காக அந்த தொழிலுக்கு போனாள். அவளோட மகன்
என்ன பாவம் பண்ணான்?

அதனால இந்த பவர்கட்டுக்கு காரணமான பெரிய மன்ஸங்களை திட்ட வேறு வார்த்தைகளை
தேடிக்கிட்டிருக்கேன். “பவர்ங்கறது ஒரு சர்வீஸ். தாளி அது எனக்கு
தேவையானப்போ கிடைக்கனும். அப்பத்தேன் நான் கொட்டி அழற காசு செரிக்கும்.

அமாவாசையன்னிக்கு சோறு வச்ச மாதிரி இவனுவ “பவர்” கொடுப்பானுவ நான் நாக்கை
தொங்கப்போட்டு காத்திருந்து.....

ஆனா ஒன்னு வாத்யாரே இந்த பவர் கட்டால ஒரு கடுமையான திருப்பம் என்னனு
கேட்பீக? சொல்றேன். இப்போ நீங்க படிக்கறீங்களே கை.எ.பிரதி இது பவர்கட்
பேமானிகளால கிடைச்ச நன்மை தானே.

மேற்கண்ட பேமானிங்கற வார்த்தைக்கு அருத்தம் நம்ப முடியாதவன் / ஏமாற்றும்
பேர்வழி That’s all.

இது மேதகு முன்னாள் பாரத பிரமதர் நேரு புண்ணியத்துல நீங்க தமிழ்நாட்ல
படிக்க முடியாம போன இந்தி வார்த்தை தலைவா!

பேயீமான் –(ஹி்ந்தி டைப் பண்ண முடியலை) - பேமானி....

நீண்ட நெடுங்காலத்துக்கு அப்பாறம் இன்னிக்கு 6 பக்கம் எழுதினேன். ஜோதிட
பலன்லாம் கூட இனி கையிலயே எழுதிரலாமாங்கற அளவுக்கு எழுத்து
பிடிச்சிருந்தது எழுதினேன். கூரியர் செஞ்சா கூரியர் சர்வீஸ்ல மினிமமே
ரூ.20 ன்னு தீட்டிட்டான். கொஞ்சம் ஊசலாட்டம் ஆயிருச்சு.

எழுத்துக்கும் தலையெழுத்துக்கும் தொடர்பு உள்ளதா சொல்றாய்ங்க. ஆனால்
எழுத்துக்கும் தனிமனித – சமூக – அரசியல் வாழ்வுக்கும் – அவற்றில்
ஏற்படும் மாற்றங்களுக்கும் தொடர்பு இருக்குன்னு இந்த பதிவுல ஸ்தாபிக்க
போறேன்.

விரல் நுனிகளுக்கும் மூளைக்கும் சம்பந்தமிருக்கு. இதை அடிப்படையாக
கொண்டது தான் கைரேகை.

எழுத்தாணி எழுத்து
எழுத்தாணியால எழுதிகிட்டிருந்தவரை வாழ்க்கை எப்படி இருந்ததுனு ரோசிங்க.
அதுக்கு காரணம் எழுத்தாணியால எழுதும் போது கட்டை விரல் நிமிர்ந்து
நிற்கும். கால், கை கட்டை விரல்களுக்கும் மூளைக்கும் நேரடி தொடர்பு
இருக்கு.

ஒரு வகையில பார்த்தா கால்-கை கட்டை விரல்களை கண்ணுக்கு தெரியும் மூளைனு
சொல்லலாம். கட்டை விரல் நிமிர்ந்து நிற்கும் போது மனிதன் தன்னம்பிக்கை
மிக்கவனாக – சுதந்திரமாக – யாரையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியமில்லாத
வாழ்க்கைய வாழ்ந்துகிட்டிருந்தான். கட்டை விரலை கைரேகைப்படி சுக்கிர
விரல்னு சொல்லலாம். இதனால தான் ஆண்மைக்குறைவு – எழுச்சி இன்மை – இயலாமை
– இத்யாதி பிரச்சினைகள் இல்லாம மேலும் மேலும் கண்ணாலம் கட்டி படு
கில்மாவோட வாழ்ந்திருக்காய்ங்க. சுக்கிர காரகங்களான உணவு, உடை,
இருப்பிடம், செக்ஸ் (பால்ய மணம்) இத்யாதிக்கு குறைவு இல்லாம
வாழ்ந்திருக்காய்ங்க.

மேலும் எழுத்தாணியில எழுதும் போது ( சுண்டு விரல்லருந்து போங்க) புத,சூரிய, சனி, குரு விரல்கள்
இணைந்து பிணைந்து உள்ளதால் எழுத்து அனைத்துப் பிரிவினரோட நலனையும் நாடும்
எழுத்தாக அமைந்தது. பெருசா Spl. ஸ்பெஷலைசேஷன் கிடையாது. (நன்று இரண்டு
விதி விலக்குகள் இருக்கலாம்) மனித குலத்துக்கு தேவையான எல்லா
விஷயங்களையும் சமமான முக்கியத்துவம் கொடுத்து எழுதினாய்ங்க.

எழுத்தாணியில எழுதும் போது ஏனோ தானோன்னு எழுத முடியாது (கிளிஞ்சுரும் -ஓலைய சொன்னேன் பாஸ்! ) சக்தியை மணிக்கட்டுக்கு கொண்டு வந்து சேமிச்சு அளவான சக்தியை
வெளிப்படுத்தி எழுதனும்.

இதனால அவிகளோட வாழ்க்கை – எழுத்து ரெண்டுமே Perfect ஆ இருந்தது.
சேமிப்பு குணம் – அளவான வெளிப்பாடு இருந்தது.

பனை ஓலை சைஸ் ரெம்ப சின்னது. இன்னிக்கு “பசங்க“ ட்வீட் பன்றோம், SMS
பன்றோம்னு பீத்தறாங்களே இதையெல்லாம் அந்த காலத்துலயே நம்மாளுங்க
செய்திருக்காய்ங்க.

சொல்ல வந்தது என்னனு டிசைட் பண்ணி ரெத்தின சுருக்கமா நெத்தியடியா
எழுதியிருக்காய்ங்க. உங்க கைவிரல்களுக்கும் – உள்ளங்கைகளுக்கும் எந்த
அளவுக்கு அழுத்தம் தரப்படுதோ அந்த அளவுக்கு மூளைக்கு ரத்தம் பாயும் – அது
ஆக்டிவ் ஆகும். மூளைக்கும் விரல்களுக்கும் உள்ள நேரடி தொடர்பு காரணமாக உங்க
எண்ணம் எந்த சுற்றி வளைத்தலும் பாசாங்கும் இல்லாம எழுத்தாகும்.

மோட் ஆஃப் ரைட்டிங் மாற மாற இந்த பிடிப்பு- அழுத்தம் – சக்தி சேமிப்பு அளவான வெளிப்பாடு – மூளைக்கும எழுத்துக்கும் உள்ள தொடர்பு இதெல்லாம் படிப்படியா குறைஞ்சுக்கிட்டே வந்துருச்சு.

தொட்டு எழுதற பேனா - ஃபவுண்டென் பேனா – பால்பாய்ண்ட் பேனா –
டைப்ரைட்டிங் மெஷின்லன்னு மாறிக்கிட்டே வந்தோம். மேற்சொன்ன பிடிப்பு- அழுத்தம் – சக்தி சேமிப்பு அளவான வெளிப்பாடு – மூளைக்கும எழுத்துக்கும் உள்ள தொடர்புல்லாம் படிப்படியா
குறைஞ்சு போச்சு. இப்போ கம்யூட்டர்ல டைப்பண்றோம். தாளி ஏர் டச்சாமில்ல.
இத்தனை நாள் நானும் கணிணியில தான் தட்டச்சினேன். ஒத்துக்கிடறேன்.

ஆனால் ஆரம்பத்துலருந்தே இது உறுத்திகிட்டே இருந்தது. நம்ம மனசை ரெம்பவே
பாதிச்ச விஷயங்களை அடிக்கும் போதோ (அ) உணர்ச்சி வசப்பட்டு டைப் பண்ணும்
போதோ இந்த உறுத்தல் இல்லியே தவிர ஒவ்வொரு பதிவையும் அடிச்சு முடிச்ச
பிறகு ஏதோ குறையிரதாவே தோனும்.

சொல்ல வந்ததை சரியா சொல்லலீயோ? மேம்போக்கா சொல்லிட்டமோ? அழுத்தி
சொல்லியிருக்கனுமோன்னெல்லாம் தோனும். இடையில ஓரிரண்டு பதிவுகளில் மொதல்ல
எழுதி – பிறரு தட்டச்சியிருக்கேன் ஆனால் நேரம் இல்லாத காரணத்தால் ரெட்டை
வேலை எதுக்குன்னு தர்க்கம் பார்த்து நிப்பாட்டிட்டன்.

தெலுங்கானா ராஷ்டிர சமிதி மூக்கர் ( கே.சந்திர சேகர் ராவ்) – லக்கி – லாட்டரி – டிப்ல முதல்வரான
கையாலாகாத கிரண் – தெலுங்கானா தரோம்னு வாக்குறுதி கொடுத்து ஓட்டை
அள்ளிகிட்டு கமுக்கமா தில்லில உட்கார்ந்து சில்லி கேம் ப்ளே
பண்ணிகிட்டிருக்கிற சோனியா கமிட்டி – அறிக்கைன்னு கதை
பண்ணிக்கிட்டிருக்கிற பெருந்தலைகள் நிலக்கரி சுரங்க வேலை நிறுத்த
தொழிலாளிகள் – இவிக புண்ணியத்துல ரெம்ப நாளைக்கப்பாறம் காலை 6 பக்கம்
மாலை 6 பக்கம் எழுதியிருக்கேன். எழுத முடிஞ்சதே திருப்தியை தருது.
மூளைக்கு பத்து வயசு குறைஞ்சாப்ல இருக்கு. நீங்களும் முயற்சி பண்ணுங்க
உங்க கருத்தை சொல்ல மறக்காதீங்க.

எஸ். முருகேசன்.
வழக்கம் போல கீழ்காணும் ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுருங்க. இணைய வேகம் போறாதுன்னா இங்கே அழுத்தி டவுன் லோட் பண்ணி கேட்கலாம்.

















No comments: