
அண்ணே வணக்கம்ணே !
போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் சேறு வாரி இறைக்கட்டும்னு ஒரு வேலைய எடுத்தாச்சு. அதை முடிச்சே தீரனும்னு “ஆண் பெண் வித்யாசங்கள் தொடர்பதிவை தொடர்ந்துக்கிட்டிருக்கோம். சாமி,பூதம்,பெரியாரு, நித்யானந்த பாபா (இவர் வேற பார்ட்டி-பெரியார்+ நித்யானந்த பாபா படம் தேன் நம்ம டெஸ்க் டாப்ல இன்னைக்கும் இருக்கு ) ஆரானாலும் சரி நமக்கு கொஞ்சம் போல பீஸ் ஆஃப் மைண்டை கொடுத்து இந்த தொடரை முடிக்க வச்சா கோடி புண்ணியம். வேற ஆருக்கு? நமக்குத்தேன். ஆண் பெண்கள் ஒரே யுத்தத்தை ஒரே அணியிலிருந்து நடத்தவேண்டிய நிலையில ஒருத்தரை ஒருத்தர் சந்தேகப்பட்டுக்கிட்டு -டார்ச்சர் பண்ணிக்கிட்டு அல்பாயுசா போயிர்ராய்ங்கப்பா.
அனானி கமெண்ட் போடற நாதாரிய கூட சாகனும்னு நான் நினைக்கமாட்டேன். நம்ம எதிரி செத்தா அவன் இத்தீனி நாளு நமக்குள்ள ஒரு அங்கமா இருந்ததால நமக்குள்ளயும் ஏதோ செத்துப்போயிரும். அதனால ஆரும் சாகக்கூடாது. கொய்யால விதி வந்து செத்தா சாகட்டும். சாவை எதிர் நோக்கி போய் வரவேற்கிற பிசினஸ் இருக்கக்கூடாதுங்கறதுதேன் நம்மளோட முக்கிய நோக்கம்.
கடந்த அத்யாயத்துல (9) ஒன்பதாம் பாவ காரகத்வத்துல அப்பாவை பொறுத்தவரை ஆண் பெண் இடையில் என்ன வித்யாசம்னு பார்த்தோம். இப்பம் மதம் – தெய்வம் – குரு -குரு உபதேசம் -புண்யக்ஷேத்திர தரிசனம்- ஆன்மீகம் ஆகிய விசயங்கள்ள ஆண் பெண்ணுக்குள்ள என்ன வித்யாசம்னு பார்த்துருவம். Read more
No comments:
Post a Comment