அண்ணே வணக்கம்ணே..
நம்ம ஊர்ல ஒரு ராமர் கோவில் இருக்குதுங்கண்ணா. கடந்த 12 வருசத்துல கொடி மரம், வாகனங்கள் தேர், வாகன மண்டபம் எல்லாமே ஷெட் ஆகி இம்மாம் வருசம் உற்சவமே நடக்காம போயிருச்சுங்கண்ணா. நம்ம தொகுதி எம்.எல்.ஏவோட இனிஷியேஷன்ல சனம் வேட்டி வரிஞ்சு கட்டி கோதாவுல இறங்கி இந்த வருஷம் உற்சவம் இன்னைக்கு துவங்குது.
இந்த அக்கேஷன்ல நம்ம லோக்கல் ஃபோர்ட் நைட்லியோட ஸ்பெஷல் எடிசன் ஒன்னை ரிலீஸ் பண்றோம். அது தொடர்பான வேலைகள்ள கொஞ்சம் பிசி. அதனால ஆனைப்பசிக்கு சோளப்பொறியா ஒரு 11 டிப்ஸ் மட்டும் கொடுத்திருக்கேன்.
கமெண்ட் சைஸ்ல பதிவு போடறாய்ங்கனு நானே நக்கல் அடிச்சிருக்கேன்.ஆனால் இன்னைக்கு நம்ம நிலைமையும் அப்படி ஆயிருச்சு. என்ன பதிவுக்கு போயிரலாமா?
1.கிரகங்கள் என்னமோ ஃபுட் பால் ப்ளேயர்ஸ் மாதிரியும் நீங்க என்னமோ வர்ணனையாளர் மாதியும்ஃபீல் பண்ணிக்காதிங்க. கிரகங்கள் எப்படி வேலை செய்யுதுன்னு தெரிஞ்சா வா.வெ.
மனிதனின் உடல்,மன செயல்பாடுகளை, குண மாற்றங்களை தீர்மானிக்கிறது நாளமில்லா சுரப்பிகள் சுரந்து ரத்தத்துல கலந்து விடற இரசாயனங்கள். இந்த நா.சுரப்பிகளை கமாண்ட் பண்றது ஹைப்பொதலாமஸ். ஹைப்போதலாமஸை கமாண்ட் பண்ற்து உங்க எண்ணம். கிரகங்கள் உங்க எண்ணங்களை தூண்டுது அவ்ளதான்.மத்த வேலைகளை க்ளாண்ட்ஸ் பார்த்துக்குது
2.லக்னாதிபதி , சந்திரன், ஐந்தாம் பாவாதிபதி ஸ்ட்ராங்கா இருந்தா அஷ்டமசனி கூட ஜுஜுபி. மேற்சொன்ன மேட்டர்ல பிரச்சினை இருந்தா தாளி சந்திராஷ்டமத்துல கூட செத்துப்போயிர்ராய்ங்க. மொதல்ல ஜாதகத்தை தூக்கிவச்சுக்கிட்டு பார்க்கவேண்டியது இந்த 3 மேட்டரை தான்.
3. அடுத்து லக்னாத் 6,8,12 காலியா இருக்கா பாருங்க. இது மினிமம் கியாரண்டி. இந்த இடங்கள் காலியாவே இருந்தாலும் இதன் அதிபதிகள் விடமாட்டாய்ங்க. அம்மா கொடைக்கானல்ல இருந்தாலும் நமது எம்.ஜி.ஆர்ல கட்டம் கட்டிர்ராப்ல வேலை "கொடுத்துருவாய்ங்க"
4.இந்த 6,8,12 அதிபதிகள் எங்கே இருந்தாலும் அந்த பாவத்துக்கு ஆப்புதேன்.ஆரோட சேர்ந்தாலும் அந்த கிரகத்துக்கு ஆப்புதேன்.
5.கிரகயுத்தம்னா தெரியுமோல்லியோ? எல்லா கிரகங்களையும் முந்திக்கிட்டு செவ் நிக்கறது. செவ்வாய்க்கு பின்னாடி நிற்கிற கிரகமெல்லாம் கிரக யுத்தத்துல தோத்துப்போனாப்ல கணக்கு.
6.பரஸ்பர முரண்பாடுள்ள கிரகங்கள் சேருவது : உ.ம் சூரியன்+சனி/ராகு சந்திரன்+கேது , இந்த சேர்க்கையில் சூரியன் பால் மாதிரி சனி/ராகுல்லாம் பாலிடால் மாதிரி. பாலிடால் கலந்தது ஒரு பேரல் பாலாயிருந்தாலும் அதை பாலிடாலா ட்ரீட் பண்றாப்ல மொக்கை பண்ண கிரகத்தோட எஃபெக்ட் தான் அதிகமா இருக்கும்.
7. உச்சனை உச்சன் பார்க்கக்கூடாது.
8.ஒரு கிரகம் நீசமாகி அது நின்ற இடத்து அதிபதியும் நீசமான உச்சம் பரிகாரம்
9.ஒரு கிரகம் நீசமாகி அது நின்ற இடத்து அதிபதி உச்சம்/ஆட்சி பெற்று நீச கிரகத்தை பார்த்தா நீசம் பங்கமாகி ராஜயோகம் ஏற்படும்
10.ஜாதகத்துல லக்னாத் 6, 8, 12 அதிபதிகள் இந்த 6 ,8 ,12 பாவங்களில் ஏதோ ஒரு பாவத்தில் ஒன்று சேர்ந்தா அது விபரீத ராஜ யோகம். ஓ.பன்னீர் செல்வம் சி.எம் ஆன கதையா படக்குனு க்ளிக் ஆயிருவாய்ங்க.
11.குரு+செவ் , சந்திரன்+செவ் மாதிரியான கிரகங்களோட காம்பினேஷன் ஓகேதான். ஆனால் இப்படி சேர்ந்த கிரகங்கள் லக்னத்துக்கு சுபர்களா இருக்கனும்.
Read More

1 comment:
உபயோகமான தகவல்கள் சார்..
மிக்க நன்றி..
Post a Comment