நீங்க செலவழிக்கும் விதம், தூக்கம்,செக்ஸ், மோட்சம் இத்யாதிய காட்டற இடம் 12 ஆம் பாவம். மொதல்ல ட்
இந்த 4 ஐட்டத்துக்கும் உள்ள பரஸ்பர தொடர்பு என்னன்னு பார்த்துருவம்.
செலவழிக்கும் விதம் Vs தூக்கம்:
மறுபடி மறுபடி சொல்றேனு நினைக்காதிங்க ( நவீன மனிதனின் மறதி எனக்கு தெரியும்ல) மன்சங்க இன்னா பண்ணாலும் அதும் பின்னாடி இருக்கிற ரெண்டே ஆசை 1.கொல்லுதல் 2.கொல்லப்படுதல். பணத்தை வச்சிக்கினு இன்னா பண்றோம்னு ரோசிச்சிங்களா?
இருட்டு ,கல்லாமை, தனிமை,பாதுகாப்பின்மை,வாரிசின்மை இதையெல்லாம் மனித மனம் மரணத்துக்கு சமமா பார்க்குது. அதனால தான் பணத்தை உயிரா மதிக்கிறோம். உயிரை பணயம் வச்சு பணம் சம்பாதிக்கிறோம். உயிரா மதிக்க வேண்டிய தன்மானத்தை பலி கொடுத்து சம்பாதிக்கிறோம்.
சம்பாதிச்ச பணத்தை வச்சு இருட்டை விரட்டறோம் (கரண்ட் பில் கட்டறோம்),தனிமைய தவிர்க்கிறோம், அறிவை விருத்தி பண்றோம்( ஸ்கூல் போறோம், ட்யூஷன் போறோம் -இதெல்லாம் டூ இன் ஒன் ப்ராஸசுங்கோ),வேலை வாய்ப்பு தேடறோம் ( பணத்துக்காக ) ,கண்ணாலம் கட்டறோம் (செக்ஸுக்காக) குழந்தை பெத்துக்கறோம் ( நம்மோட மறுபதிப்பை விட்டுட்டு போக)
இப்படி நை நைன்னு சொல்றதை விட சிம்பிளா சொன்னா பணத்தை வச்சுக்கிட்டு மரணத்தோட நிழல்களோட யுத்தம் பண்றோம். நீங்க பணம் செலவழிக்கிறதெல்லாம் மரணத்தை ஏதோ ஒரு விதத்துல எதிர்க்கத்தான். இன்னா ஒரு தமாசுன்னா நிஜத்தை விட்டுட்டு நிழலோட ஃபைட் பண்றோம்.
சர்தான்பா இது அல்லாருக்கும் பொருந்தாதே. சில பேரு கரண்ட் பில் கட்டாமயே ,கனெக்சன் கட்டானாலும் ரீ கனெக்சன் வாங்காமயெ இருட்லயே வாழ்ந்துர்ராய்ங்களே, படிக்காதவன் நிலை என்ன? தண்டத்தீனிங்க நிலை என்ன? கண்ணாலம் கட்டாதவன் நிலை என்ன? குழந்தை பெத்துக்காம தள்ளிப்போடறவன் நிலை என்னனு கேப்பிக.
சொல்றேன். இவிகளுக்கு ரெண்டு சான்ஸ் இருக்கு ஒன்னு மரணத்தோடயே ஃபைட் பண்ணிக்கிட்டிருக்கலாம் (நிஜத்தோட) அ தாளி அந்த மரணம் என்ன என்னை தேடிவர்ரது நானே தேடிப்போறேன் அதைங்கற நினைப்புல இருக்கலாம் ( ஐ மீன் சப்கான்ஷியஸா)
ஆக நீங்க செலவழிக்கிற விதம் ரெண்டா இருக்கலாம்
ஒன்னு:
மரணத்தோட நிழல்களோட மோதறது அல்லது மரணத்தை ஒத்திப்போடறது. (க்ளைமேக்ஸ்ல தான் புரியும் உங்க முயற்சிகள் உங்களை நிஜமான மரணத்தை நோக்கியே உங்களை செலுத்தியிருக்கிறதை
ரெண்டு:
மரணத்தை அதனோட எந்த வடிவத்துலயும் எதிர்கொள்ள ப்ரிப்பேர் ஆயிர்ரது. ஏழ்மை ,இருட்டு,தனிமை,நிராகரிப்பு ..இப்படி எந்த வடிவத்துல வந்தாலும் தப்பியோட பார்க்காம முழுக்க ஃபேஸ் பண்றது விட்டா அனுபவிக்கிறது.
தற்கொலை எண்ணங்களோடு மோதறது .( கணக்கு வழக்கில்லாத தீனி, தூக்கம் ,செக்ஸ், இல்லீகல் அண்ட் இம்மாரல் எர்னிங்ஸ் எல்லாமே தற்கொலை எண்ணங்களோட வெளிப்பாடுதேன்.
இந்த ரெண்டு கேட்டகிரில நீங்க எந்த பக்கம்னு பார்த்துக்கனும்.
நீங்க மொதல் கேட்டகிரியா இருந்தா மரணத்தோட நிழல்கள்,உருவகங்களுக்கெல்லாம் அஞ்சி நடுங்கி கை கால் உதறி கச்சாமுச்சானு சம்பாதிக்கதுடிப்பிங்க. சம்பாதிப்பிங்க. தாளி "இத்தீனி சாவு செத்து சம்பாதிச்சது செலவழிக்கத்தானே"ன்னு செலவழிக்க ஆரம்பிச்சிருவிங்க.
உங்களோட கொல்லும்,கொல்லப்படும் இச்சை ரெண்டுமே பண விஷயத்துலயே ஒர்க் அவுட் ஆயிர்ரதால செக்ஸ் மேட்டர்ல ஈடுபாடு போக போககுறைஞ்சுரும்.
இதுவே செகண்ட் கேட்டகிரியா இருந்தா இருட்டுக்கு அஞ்சமாட்டிங்க (இருட்ல தான் செக்ஸ் பீறிட்டு கிளம்பும்) தனிமைக்கு அஞ்ச மாட்டிங்க. . நிராகரிப்புக்கு அஞ்ச மாட்டிங்க இப்படி மரணத்தோட எந்த நிழலுக்கும் அஞ்சாம மரணத்தையே எதிர்கொள்ள ப்ரிப்பேர் ஆயிருவிங்க. வீரிய ஸ்கலிதத்தின் போதான அந்த குட்டி மரணம் உங்களை பெரிதும் கவரும்.
( சமிக்கனும்.. இது ஏதோ துக்கடா சப்ஜெக்டு ஒரு சாப்டர்ல அடிச்சு விட்டுரலாம்னு நினைச்சேன்.. ஊஹூம் இது பெண்டை நிமிர்த்திரும் போல இருக்கு - எனவே...................
தொ..............ட...................ரும்
No comments:
Post a Comment