'>

Friday, October 8, 2010

எந்திரனுக்கு எதிராக கள்ளிறக்கும் தொழிலாளிகள் போராட்டம்

அனுபவ ஜோதிடத்துல இந்த மாதிரி பதிவு தேவையான்னு கேப்பிக. என்ன பண்றது.. இப்படி எதுனா கொனஷ்டையா எழுதினாத்தான் பத்து பேர் கூடுதலா படிக்கிறாய்ங்க.
மேலும் இன்னைக்கு  உங்கள் தொழிலும் - வரக்கூடிய வியாதிகளும்னு ஒரு சூப்பர் பதிவு போட்டிருக்கேன். அதுக்கும் இந்த அறிவிப்புக்கும் சின்னதா லிங்க் இருக்கிறதால இந்த வில்லங்க பதிவு.

எந்திரன் சினிமாவில் தம்மை அவமதிக்கும்,காட்சிகள்,மற்றும் வசனங்கள் இருப்பதாக குற்றம் சாட்டி அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்று ஆந்திர கள்ளிறக்கும் தொழிலாளிகள்  சங்கம் வலியுறுத்தி உள்ளது. சன்பிக்சர்ஸ் இந்த வெட்டுக்கு ஒத்து வராவிட்டால் மானிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளது.

எந்திரன் தெலுங்கில் ரோபோ என்ற பெயரில் வெளியாகி ஈயடித்துக்கொண்டிருப்பது தெரிந்ததே. பட்ட காலே படும் கெட்ட குடியே கெடும் என்பதை போல கள்ளிறக்கும் தொழிலாளிகள் சங்கம் இவ்வாறு எச்சரித்துள்ளது.

எதிர்க்கும் காட்சிகள்:

ஹீரோவை வெறுப்பேற்றி,உற்சாகப்படுத்தி தன்னை காதலுக்கும்படி செய்ய ஹீரோயின் கள்ளிறக்கும் தொழிலாளியை "ஒரு நாளைக்கு என்னை காதலி என்பதும் அவன் " நீ வெண்ணை மாதிரி இருக்கே நான் பெருச்சாளி மாதிரி இருக்கேன்" னு   சொல்லும் காட்சி.

கள்ளிறக்கும் தொழிலாளி கள்ளை தர ஹீரோயின் துப்பும் காட்சி

அவன் உப்பு கண்டம் போட்ட மீனை தர ஹீரோயின் துப்பும் காட்சி

இவை தம் தொழிலையும்,இனத்தையும் அவமதிக்கும் வகையில் உள்ளதாக மேற்படி சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த காட்சிகள்,வசனங்களை  நீக்காவிட்டால் மானிலம் தழுவிய போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

No comments: