ஒரு மனிதன் செய்யும் தொழிலுக்கும், அவனுக்கு வரும் வியாதிக்கும் லிங்க் இருக்கு. ப்ராக்டிக்கலா பார்த்தா சமையல்,பஞ்சாலை, சிமெண்ட் ஃபேக்டரி ,பீடி சுத்தறது இத்யாதி தொழில்ல இருக்கிறவுகளுக்கு நுரையீரல் தொடர்பான வியாதி வரும். உட்கார்ந்தே வேலை செய்யறங்களுக்கு பைல்ஸ் வரும். பேசியே தொழில் செய்யறவுகளுக்கு கேஸ் ட்ரபுள் வரும். இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.இது ப்ரக்டிக்கல்.
இதையெல்லாம் சொல்ல கவிதை07 தான் சூட்டபிள். இங்கன அனுபவ ஜோதிடத்துல ஜோதிஷம் தொடர்பானதே எழுதறதுனு ஒரு முடிவுல இருக்கேன்
இப்போ அஸ்ட்ராலஜிக்கலா பார்க்கலாம்.
கிரக பலத்தை பொருத்து தொழில் அமைஞ்சா ( அமைச்சுக்கிட்டா) , அந்த தொழிலை பொருத்து வரக்கூடிய நோய்கள் வராது. ஆனால் நம்ம சனம் தங்கள் ஜாதகப்படி தங்களுக்கு எந்த தொழில் அமைஞ்சிருக்குன்னெல்லாம் பார்க்க மாட்டாய்ங்களே. ஊரெல்லாம் டாக்டர் ,இஞ்சினீருன்னா தாங்களும் டாக்டர் , இஞ்சினீராயிரனும், ஊரெல்லாம் சாஃப்ட் வேர்னா தாங்களும் இஞ்சினீராயிரனும்னு தவிப்பாய்ங்க.
அதுக்குண்டான அமைப்பு இருக்கா இல்லியான்னு பார்க்கமாட்டாய்ங்க. சிக்ஸ் ஓல்ட் பல்புக்கு சிக்ஸ் ஓல்ட் கரண்டுதான் கொடுக்கனும். அதிகமா கொடுத்தா என்ன ஆவும்? பல்பு ஃப்யூசாயிரும். தொழில் மேட்டர்லயும் அதான் நடக்குது.
நம்ம ஜாதகத்துல எந்த கிரகம் வலிமையோட இருக்கோ அந்த கிரகத்தின் காரகத்வம் உள்ள தொழிலை தேர்வு செய்து செய்ய ஆரம்பிச்சா தொழில்ல டெவலப்மெண்டும் நல்லாருக்கும். மேற்சொன்ன மாதிரி தொழிலை பொருத்து வர்ர நோய்களும் வராது.
எந்த கிரகம் கெட்டு குட்டிச்சுவராகியிருக்கோ அதே கிரகத்தோட காரகத்வம் கொண்ட தொழிலை செய்யும்போது என்னாகுதுன்னா லோ ஓல்ட்டேஜ் சமயத்துல பக்கத்து வீட்டுக்கு பவர் சப்ளை கொடுத்த கணக்கா எல்லாமே மங்கலாயிருது. இதே நிலை தொடர்ந்தா ட்ரான்ஸ்ஃபார்ம் கூட வெடிச்சுரலாம்.
(சில சமயம் ஒவ்வொரு ஜாதகத்துல லக்னாதிபதி மட்டும் கொஞ்சம் போல வலிமையோட இருப்பாரு - இவிக அவரோட காரகத்வம் கொண்ட தொழில்லயே இறங்குவாய்ங்க. இதனால கிரகபலன் எக்ஸாஸ்ட் ஆகி அதே கிரகம் தொடர்பான வியாதிகள் வரும்.) பலான கிரகத்தாலே எனக்கு யோகம்னாய்ங்களே இப்ப அதே கிரகத்தால நோய் வந்துருச்சுங்கறிங்களேனு புலம்புவாய்ங்க.
இப்போ நவகிரகங்களோட தொழில் காரகத்வத்தையும் அந்த கிரகத்தோட பலம் இல்லாம அந்த தொழில்கள்ள இறங்கினா வரக்கூடிய பிரச்சினைகள் வியாதிகளை பத்தி பார்ப்போம்.
சூரியன் தரும் தொழில் அமைப்பு :
தந்தையின் தொழிலை தொடர்தல், விளம்பரம், மோட்டிவேஷன், ஸ்போக்ஸ் மேன், சேல்ஸ் ரெப்,சூப்பர் வைசர், கடியாரம்,டைம் ஆஃபீஸ், பகல் நேரத்தில் திறந்த வெளி யில் செய்யற தொழில், ஷெட்யூல்ட் பயணங்களுடன் கூடிய தொழில்(லாட்ஜு வைத்தியர் மாதிரி) கிராம நிர்வாகம்,மலை, தலை,எலும்பு,பல் தொடர்பான தொழில்கள் யாவும் சூரிய காரகத்வம் கொண்டவை.
சூரியன் கெட்டிருப்பின் வரக்கூடிய நோய்கள் பிரச்சினைகள்:
ஜாதகத்துல சூரியன் கெட்டிருந்தும் சூரியனோட காரகத்வத்துல வர்ர தொழிலையே செய்தாங்கனா மண்டை உடையும்,பல் கொட்டிப்போகும், பேக் போன் அடிவாங்கும் ( இளையதளபதி விஜய் கதையில இதான் நடந்திருக்கும்) ஃப்ரேக்சர்ஸ் நடக்கும்,அப்பா டிக்கெட் வாங்கிருவாரு, அப்பாவோட விரோதம் வரும். வில்லேஜ் பாலிடிக்ஸ்ல மாட்டுவாய்ங்க. லாஸ் ஆஃப் கால்ஷியம் இருக்கலாம். தன்னம்பிக்கை இருக்காது. செல்ஃப் ரெஸ்பெக்ட் மெயிண்டெய்ன் பண்ணமாட்டாய்ங்க
சந்திரன் தொடர்பான தொழில்கள் :
தண்ணீர்,திரவ பொருட்கள், படகு,கப்பல்,ஆறு,ஏரி,குளம்,கடல்,மீன்,இறால்,முத்து தொடர்பான தொழில்கள்,மனம் தொடர்பான தொழில் (சைக்கிரியாட்ரிஸ்ட்) மிமிக்ரி, வெண்முத்து, பிரமுகர்களின் மனைவியர், தாய், தாயுடனான உறவு, தாய்வழி உறவுளின் துணை அ தயவில் செய்யும் தொழில்கள், தண்ணீர்த் தொடர்பான இடங்கள், தொழில்கள், யார் எவ்வளவு நேரம் இருப்பார்கள் என்று சொல்ல முடியாத இடங்கள் தொடர்பான தொழில்கள் (உம்) நீச்சல் குளம், கல்யாண மண்டபம், காய்கறி மார்க்கெட், பேருந்து, ரயில் நிலையங்கள் முதலியன. திடீர்ப் பயணங்கள் நிறைந்த தொழில் ,சிக்ஸ்த் சென்ஸை நம்பி செய்யும் தொழில், சீஸனல் வியாபாரங்கள், மக்களுடன் நேரடித் தொடர்புள்ள வேலைகள் இவற்றிற்கெல்லாம் சந்திர பலம் தேவை .
சந்திரன் கெட்டிருந்து சந்திரன் தொடர்பான தொழிலில் ஈருபட்டிருப்பின் வரக்கூடிய நோய்கள் பிரச்சினைகள்:
மனம், நுரையீரல், கிட்னி தொடர்பான வியாதிகள், சீதள ரோகங்கள், மன பிரமை, நிலையில்லாத வாழ்வு, மூட நம்பிக்கைகள், சபலசித்தம், அசுத்த குடி நீரால் வரும் நோய்கள், நா வறட்சி, அதி மூத்திரம்,சொட்டு மூத்திரம்
செவ்வாய் தொடர்பான தொழில்கள்:
பாடி பில்டிங்,ஜிம்,மார்ஷன் ஆர்ட்ஸ், போலீஸ், மிலிட்டரி, ரயில்வே, எரிபொருள், கெமிக்கல்,எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மின்சாரம், ரத்தம், ஆயுதங்கள், பட்டாசு வெடி பொருட்கள், நெருப்பு, தர்க்கத்துக்கு முக்கியத்துவம் உள்ள தொழில், சகோதரர்கள்,வயதில் இளையோர், சத்ரிய குலத்தினருடன் சேர்ந்து செய்யும் தொழில்கள், சர்ஜன், மெட்டல் ஃபோர்ஜிங், ஹோட்டல் ஸ்போர்ட்ஸ், என்.சி.சி. மாட்டுப்பண்ணை, பால் பொருள், காரமான பொருட்கள், மாமிசம் தொடர்பான தொழில்கள்.
செவ்வாய் பலமின்றி மேற்படி தொழில்களில் இறங்கினால் வரும் வியாதிகள்:
எலும்புக்குள் இருக்கும் மஜ்ஜை தொடர்பான வியாதிகள்( போன் மேரோ), ரத்த சோகை, வெள்ளை அணுக்கள் குறைதல், நோய் எதிர்ப்பு சக்தி ஃபணாலாகி கண்ட நோய்களும் வாட்டுதல், அல்சர் (முக்கியமா பெப்டிக் அல்சர்) ரத்த வாந்தி,ரத்த பேதி, கட்டிகள்,ரத்த மூலம், மாதவிலக்கு தொடர்பான வியாதிகள், நிலதகராறுகள், அரிவாள் வெட்டு, குண்டு காயம்,சாலை விபத்து,தீ விபத்து, சகோதரர்களே ஆப்பு வைக்கறது,ஆயுதம் தாங்கிய வாடகை கொலையாளிகளால் ஆபத்து.
ராகு தரும் தொழில் அமைப்பு:
சினிமா, லாட்டரி, சாராயம், சூதாட்டம், நகல் தயாரித்தல்( ஜெராக்ஸு,காப்பி ரைட்டிங்) , இருட்டில் செய்யும் வேலைகள் ( சினிமா ப்ரொஜக்சன் முதல், கள்ளக்காதலியுடன் அஜால் குஜால் வரை) , திருடு, கடத்தல், போலி சரக்குகளை விற்றல், ஏமாற்றுதல், ரகசிய போலீஸ், உளவாளி, ஸ்பெகுலேஷன், பங்குச்சந்தை, வரி ஏய்ப்புக்கு உதவுதல், விஷம், ஆங்கில மருந்துகள், பொய்யே முதலீடாய் நடக்கும் அனைத்து தொழில்களும் ராகு தொடர்பானவையே.( அரசியல்? லாயர்?) கருப்பு மார்க்கெட், மாஃபியா,ஏற்றுமதி,இறக்குமதி , பதுக்கல், திருட்டு, கணக்குக் காட்டுதல், பாம்புகள், விஷபிராணிகள் தொடர்பான தொழில்கள், கள்ளத்தோணியில் வெளிநாடு போதல் , அனுப்புதல் ஆகிய தொழில்களும் ராகு தொடர்பானவையே
ராகு பலமின்றி ராகு தொடர்பான தொழிலில் இறங்கினால் வரும் வியாதிகள்:
இடுப்புக்குக் கீழ்பாகத்தில் வைத்தியர்களுக்குப் புலப்படாத நோய்கள், பலஹீனங்கள், வயதுக்குத் தகுந்த வளர்ச்சியில்லாது போதல் (அ) ஊளைச்சதை, மெடிக்கல் ரியாக்சன் அ அலர்ஜி அ விஷபிராணிகளின் கடியால் நிறம் கருத்து போதல், அன் வாரண்டட் மோஷன்ஸ், வாமிட்டிங்ஸ், களவு போதல், மாயமாய் மறைதல் ( தலை மறைவுங்கோ) ,தனிமை, தன்னவர் சதிக்கு பலியாதல், காதல் தோல்வி, மனைவியுடன் பிரிவு, மலட்டுத்தன்மை, அல்லது தொடர் கருச்சிதைவு,
குரு:
தங்கம்,அடகு வியாபாரம், சட்டரீதியிலான சட்டப்படியான வட்டியுடன் கூடிய பைனான்ஸ், அரசியல், நிர்வாகம், அரசு துறை, அரசு காண்ட்ராக்டுகள்,ஓய்வு தொகைகள், முதியோர் இல்லங்கள், அரசு வீட்டுவசதி வாரியம், வாத்தியார், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், நீதிமன்றம், கரூவூலம், தொடர்பான தொழில்கள் , புராணம், வேதம், சேவை நிறுவனங்கள், ஆட்சி மொழி, காசாளர், கண்டக்டர், திட்டத்துறை, ஆலோசனை வழங்கும் துறையிலான வேலைகள்
சனி தரும் தொழில் அமைப்பு :
நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் வாரிய, தொழிலாளர் துறை, தொழிற் பேட்டை, இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், கருப்பு நிற பொருட்கள், மரணம் தொடர்பான தொழில்கள், அமரர் ஊர்தி, ஃப்ரீசர் பாக்ஸ், எல்.ஐ.சி க்ளாஸ், போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள்,அடிமைத்தொழில், சிறைத்துறை இதெல்லாம் சனியால் அமையும் தொழில்களாகும்.
புதன் தரும் தொழில் அமைப்பு:
புதியவர்களைத் தொடர்பு கொள்ளும் திறமை, மனதிலிருப்பதை எதிராளிக்கு விவரிக்கும் திறமைக்கு தேவையுள்ள தொழில்கள் உதாரணமாக பி.ஆர்.ஓ, அஃபிஷியல் ஸ்போக்ஸ் மேன் இத்யாதிக்கு புத பலம் முக்கியம்.போஸ்டல், எஸ்.டி.டி. கூரியர், ஜோதிடம், ஏஜென்சி, கன்சல்டன்ஸி துறை,ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட், கணிதத்திறமை, மருத்துவத்தொழில், வியாபாரம்.
முன்பின் அறிமுகமில்லாத இருவரைச் சேர்த்து வைக்கும் தொழில்கள். விற்பனை பிரதிநிதிகள், மார்க்கெட்டிங் ஊழியர்கள், திறமையான பேச்சாளர்கள் கூட்டுறவு அமைப்புகள், அரசு சார் நிறுவனங்கள், கூட்டு வியாபாரங்கள், ஏஜென்ஸி,டீலர்ஷிப், ஃப்ராஞ்சைஸ் , பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள் , பிறர் வேலையை ஒப்பந்த அடிப்படையில் செய்வது, ஈவன்ட் மேனேஜ்மென்ட், கருத்தரங்குகள், நாடக அரங்குகள், கார்டனிங், கருத்துப்பரிமாற்றத்துக்கு உதவும் தெருமுனைக் கூட்டங்கள் முதல் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மா நாடுகள், பஜார் தெருக்களில் நடைபெறும் தொழில்கள், வியாபாரிகளுக்கு அளிக்கப்படும் சர்வீஸஸ்ள் தாய்மாமன், மாமனார் உதவியுடன் செய்யும் தொழில்கள், பிரபல வைஷ்ணவ புண்ணிய சேத்திரங்களில் செய்யும் தொழில்கள் அனைத்துக்கும் புத பலம் தேவை. இதுவே புதன் தரும் தொழில் அமைப்பு.
புதன் கெட்டு, புத காரகத்வம் கொண்ட தொழில் செய்தால்:
தாய் மாமன், மாமனாருடன் விரோதம் வரலாம், செய்துவந்த புதகாரகத்வ தொழில்கள் திடீர் என்று பெரு நஷ்டத்தை தரலாம். பெரிய அளவில் வைத்திய செலவுகள் ஏற்படலாம். கம்யூனிகேஷன் கேப் காரணமா பெரிய மனிதர்களுடன் விரோதம் ஏற்படலாம், சரும வியாதி வரலாம் (சொரியாசிஸ்) கொட்டை நசுங்கலாம், ஆண்மை குறையலாம்,பைத்தியம் பிடிக்கலாம், ஏஜெண்டுகள் ஏமாற்றிவிடலாம்.
கேது தரும் தொழில் அமைப்பு::
தியானம் ,யோகம், சன்னியாசம், மக்களை மோட்ச மார்கத்துக்கு திருப்புவது,வேதாந்தம், ஆராய்ச்சித்துறை, வைராக்கியத்தை கை கொண்டு அதையே போதிப்பது. மாந்திரீகம், சூனியம். வெளி நாட்டு ஒப்பந்தங்கள், ஆட்களை வெளி நாட்டுக்கு அனுப்பும்,ட்ராவல் ஏஜென்சி,வெளி நாடுகளில் வேலை வாய்ப்பு வாங்கிதருதல், ஞானத்தை தேடி செய்யும் பயணங்களை ஏற்பாடு செய்தல். ஆசிரமங்கள் நிர்வகித்தல் , பிற மத நிறுவனங்களிலான வேலை வாய்ப்பு போன்ற தொழில்களுக்கெல்லாம் கேது பலம் தேவை.
கேதுபலமின்றி கேது தொடர்பான தொழில்கள் செய்தால்:
புண்கள், சீலைப்பேன் வரலாம், அலைச்சல், வீண் விரயம், காரணமற்ற கலகம், வீடின்மை, சோறின்மை, உடுத்த உடையின்மை, நாடோடியாய்த் திரிதல் மனதில் இனம் புரியாத பீதி, யாரேனும் சூனியம் வைத்துவிட்டார்களா? செய்வினை செய்து விட்டார்களா? எனும் சந்தேகம், பாம்புப் புற்றின் அருகில் படுத்திருப்பது போன்ற அச்சம், நம்பியவர் யாவரும் கைவிட்டு விடுதல், வெளிநாடு செல்ல ஆசைப்பட்டுப் போலி நிறுவனங்களிடம் பெரும் பணத்தை இழத்தல், வெளிநாடுகளில் இருக்கும் போது பாஸ்போர்ட்டு, விசா தொலைதல், யுத்தம் அறிவிக்கப்படுவது, கலகத்தில் சிக்கிக் கொள்வது, வழி தவறி விடுவதுபோன்ற தீயபலன் ஏற்படும்.
சுக்கிரன் தரும் தொழில் அமைப்பு :
படாடோபமான பர்னிச்சர், பட்டாடைகள், வாசனைப் பொருட்கள், உயர் தர அறுசுவை உணவு, நொறுக்குத் தீனிகள், நல்ல நடனம், சங்கீதம் தொடர்பான தொழில்கள். தின்றால் பசி தீரக்கூடாது, குடித்தால் தாகம் தீரக்கூடாது. இதுபோன்ற பீசா, கோக் வகையறா தொடர்பான தொழில்கள். ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், ஏசி அறை, ஸ்லீப்பர்கள், வெள்ளி, கலா ரசனை,கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட்ஸ், கலர் சென்ஸ் ,அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ரிலாக்ஸேஷன், பாஸ்டைம், விருந்து,பார்ட்டி வுல்வா பேருந்துகள் தொடர்பான தொழில்கள்.
சுக்கிர பலமின்றி மேற்படி தொழில்களை செய்தால்:
தூக்கமின்மை, கண்ணாலம் கானல் நீராகலாம்.தப்பித்தவறி ஆனாலும் தம்பதிகளிடையில் ஒற்றுமையிராது. ஆண்மையின்மை, பெண்கள் என்றால் "பலான' விஷயத்தில் ஆர்வமின்றி போதல், வாகனம் களவு போதல், வீடு ஆக்கிரமிப்புக்குள்ளாதல், சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலை ஏற்படுதல். வீட்டுப்பெண்கள் விதவையாதல், கணவனை பிரிந்து வாழ்தல், பல தாரம் ஏற்படுதல்,
தீர்வு:
உங்க ஜாதகத்தை உங்க குடும்ப ஜோசியர் கிட்டே காட்டி உங்க ஜாதகத்துல உருப்படியா இருக்கிற கிரகம் எது? அதனோட தொழில் காரகத்வம் என்ன? உங்க தொழில் அந்த கிரகத்தோட காரகத்துவத்துல அடங்குதானு பார்த்து வெரிஃபை பண்ணிக்கிரனும். ஒரு வேளை உங்க தொழில் பலவீனமான கிரகத்தின் காரகத்வத்தில் அமைந்திருந்தால் மெல்ல மெல்ல அந்த துறையிலிருந்து விலகி, தங்கள் ஜாதகத்தில் பலம் பெற்றுள்ள கிரகத்தின் காரகத்வம் கொண்ட துறைக்கு மாறிவிடுங்கள்.
இல்லேன்னா மேல் சொன்ன நோய்கள் வருவது கியாரண்டி. குறைந்த பட்சம் பெய்ய தொகைக்கு மெடிக்ளெய்ம் பாலிசியாவது எடுத்துருங்க
No comments:
Post a Comment