'>

Tuesday, October 12, 2010

2010, குரு பெயர்ச்சி பலன்

காதல் புனிதமானது.காதலர்கள் அற்பத்தனம் செய்யலாம்.நட்பு புனிதமானது . நண்பர்கள் துரோகம் செய்யலாம். அதே போல் ஜோதிடம் உண்மையானது சில ஜோதிடர்கள், சில நேரத்தில் பொய்யர்களாக இருக்கலாம் ( நான் உட்பட). குரு பெயர்ச்சி விஷயத்திலும் இதுதான் நடக்கிறது.

கவலையே படாதிங்க. 12 ராசிக்காரவுகளுக்கு குரு பெயர்ச்சி பலன் தரத்தான் போறேன். ஆனா அவிகவிக ராசிக்கு மட்டும் படிச்சுட்டு ஓடிப்போயிர்ர கதையெல்லாம் இங்கன நடக்காது. மொத்தப்பதிவையும் படிச்சாத்தான் ஒரு ஐடியா வரும். (அஸ்கு புஸ்கு) பை தி பை இந்த ப்ளாக்ல மட்டுமில்லாம கவிதை07லயும் மெம் பராயிருங்கண்ணா.. ( ஜனவரி 1 ஆம் தேதிக்குள்ள 500 பேராச்சும் மெம்பராகலைன்னா இந்த அனுபவ ஜோதிடத்துலயும் புதுப்பதிவுகள் போடுவது நிறுத்தப்படும். மொக்கை போதும் இப்ப மேட்டர்..

குரு பார்த்தால் கோடி புண்ணியம், குருபலம் ஆனை பலம் தரும் இப்படி வக்கணையாக பழமொழிகளை அள்ளி வீசி ஜோதிடர்கள் சோதிடபிரியர்களை சோம்பேறிகளாக்குகின்றனர்.

முதலில் கோசார ரீதியில் குரு  இப்போது எங்கே உள்ளார், எப்போது எந்தராசிக்கு போகிறார்னு பார்ப்போம்.( நான் பல வருடங்கள் பரீட்சித்து ,  நம்பி ஃபாலோ செய்யும் திருக்கணித முறையில் கணிக்கப்பட்ட ஆந்திர பூமி தெலுங்கு பஞ்சாங்கப்படி)

அப்பாறம்  மேட்டருக்கு வருவம்.


குரு இப்போது 2010 ஜூலை 23 முதல் நவம்பர் 1 வரை  மீனத்தில் வக்கிரமாக உள்ளார்.

நவம்பர் 1 ஆம் தேதி வக்கிரமாகவே கும்பம் வருகிறார்.

நவம்பர் 19 ஆம் தேதி வக்கிர தியாகம் பெற்று  டிசம்பர் 6 ஆம்தேதி மீனத்துக்கு வருகிறார்.

ஆக ஒரிஜினல் குரு பெயர்ச்சி டிசம்பர் 6 ஆம்தேதிதான் ( பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் - பச்சக்குனு ஞா இருக்க இதை சொல்றேன் )

அதுவரை எடியூரப்பா மந்திரி சபை மாதிரி ஊசலாடிக்கிட்டு இருப்பார்.

குரு பலம் வந்தா என்னெல்லாம் நடக்கும்?(னு சொல்றாய்ங்க)

குருவோட காரகத்வம் கொண்ட விஷயங்கள் எல்லாம் அனுகூலமாகனும். லாபமேற்படனும். குருவோட காரகத்வம் என்ன?

குரு காரகத்வம்: (குருவே சொல்றாரு பாருங்க)
 நான் தங்கம், பைனான்ஸ், அரசியல், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வடகிழக்குத் திசை அகியவற்றிற்கு அதிகாரி, நானே புத்திரக்காரகன், பௌத்திரக்காரகன் (பேரன்கள்), நீதிமன்றம், கரூவூலம், புஷ்பராகம், பிராமணர், சான்றோர், இதயம், வயிறு, ஞாபகசக்தி, புராணம், வேதம், சேவை நிறுவனங்கள், ஆட்சி மொழி, அரசு தரும் வீட்டு வசதி, காசாளர், கண்டக்டர், முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுதல், இது எல்லாம் என் இலாகாவின் கீழ் வருபவை. தட்சிணாமூர்த்தி, சாயிபாபா, ஸ்ரீராகவேந்திரரர் ஆகியோரும் எனது பிரதி ரூபங்களே!

குருபலம்னா என்ன?
உங்க ராசிக்கு குரு 2,5,7,9,11 ராசிகள்ள  வர்ரதை தான் குரும்பலம்ங்கறாய்ங்க. மீனகுரு யாருக்கெல்லாம் அனுகூலம்னு இப்ப பார்ப்போம்.( முதல் சுற்று- ப்ரிலிமினரியா)

யாருக்கெல்லாம் குருபலம் உண்டு?:

குரு கும்பத்துக்கு 2லும், விருச்சிகத்துக்கு  அஞ்சிலயும், கன்னிக்கு 7லயும் கடகத்துக்கு 9லயும், ரிஷபத்துக்கு 11லயும் வரார். ஆக இந்த ராசிக்காரவுகளுக்கெல்லாம் குருபலம் வரப்போகுது.

மத்த ராசிக்காரவுகளுக்கெல்லாம் குரு பலம் கிடையாது (பிரிலிமினரியா பார்க்கிறச்ச)

இது எந்தளவுக்கு ப்ராக்டிக்கலைஸ் ஆகும்? குரு பலம் இருக்கிறவுக மேற்படி விஷயங்கள்ள தூள் கிளப்ப, குரு பலம் இல்லாதவுக குப்பையாயிருவாய்ங்களா? இதுல எதுனா லாஜிக் இருக்கா?

குருபலம் வரும்  ராசிகள் ஒரு ஸ்கேன்:

கும்பம்:
இவிகளுக்கு இப்போ அஷ்டம சனி நடக்குது.(சுருக்கமா சொன்னா இவிக சொத்தை அடுத்தவன் அனுபவிக்கனும் -அடுத்தவன் கடனுக்கு இவிக பதில் சொல்லனும்)  இவிகளுக்கு குரு 2/11 க்கு அதிபதி 2ல வந்து ஆட்சி பெறுவதால் சுராங்கனி கா சேக்கு ( பைசா) வந்து கொட்டுமா? அப்படியே கொட்டினாலும் அஷ்டமத்துல சனி விட்டுருவாரா?

இதர ராசிக்காரவுகளுக்கு வர்ர அஷ்டம சனி வேறு கும்பத்துக்கு வர்ர அஷ்டமசனி வேறு. லக்னாதிபதியே எட்டுல இருந்தா சீன் எப்படி இருக்கும்? "தானும் கெட்டு தன்னை சேர்ந்தவுகளையும் கெடுத்துரனும். மன்சன்  லைஃப்ல போகவே கூடாதுனு நினைக்கிறஇடத்துக்கெல்லாம் போயாகனும். (போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், ஆஸ்பத்திரி, சுடுகாடு) , உடம்பு,மனசு,புத்தி ஏன் ஆத்மா கூட க்ஷோபிக்கனும். அதான் பலன்.

இதையெல்லாம் மீறி குரு என்ன செய்துர முடியும்?

குரு பலன் தரும் காலம்:
ராசி மாறுவதற்கு ரெண்டு மாசம் முன் கூட்டியே பலன் தரனும்னு சொன்னாலும், ராசி மாறின பிற்பாடு மத்தில வர்ர நாலு மாசம் தான் பலன் தருவாருன்னும் சொல்றாய்ங்க.

கும்பராசிக்காரவுக என்ன செய்யலாம்:
இவிக மொதல்ல அஷ்டம சனிக்குண்டான பரிகாரங்களை செய்துக்கிட்டு வந்தாதான் குரு ஓரளவாச்சும் பலன் தர முடியும் ( 2ல வர்ரதால கொடுக்கல் வாங்கல், செல்வாக்கு,சொல்வாக்கு, குடும்பத்துல அமைதி, 11க்கு அதிபதிங்கறதால வியாபார முயற்சிகள்ள லாபம் ,மூத்த சகோதர வர்கத்தால பலன் இத்யாதி ஏற்படலாம். அதுவும் எப்போ? ராசி மாறின பிற்பாடு 4 மாசம் கழிச்சுத்தான்.

சனிக்குண்டான பரிகாரங்கள்:
இந்த பரிகாரங்கள் கும்ப ராசிக்காரவுகளுக்கு மட்டுமில்லிங்கணா.. யாருக்கெல்லாம் குரு நல்லாயிருந்து சனி சரியில்லையோ அவிக குருவால பலன் பெறனும்னா மொதல்ல சனிக்குரிய பரிகாரங்களை செய்துக்கிட்டுத்தான் ஆகனும். 

1. சமையலுக்கு நல்லெண்ணையையே உபயோகியுங்கள்.2. கருப்பு நிறத்தைத் தவிர்த்து, நீலநிற ஆடை, அணிகலன்களை அதிகம் உபயோகியுங்கள்.3. ஏழை மற்றும் இயலாதவர்களுக்குப் பழைய பொருட்கள் மற்றும் இரும்பு தானம் செய்யவும்.4. சென்ட், ஸ்ப்ரேயர் தவிர்க்கவும்.5. வேப்பிலை ரசம் குடிக்கவும். அகத்திக்கீரை, பாகற்காய் அதிகம் உணவில் சேர்க்கவும்.6. சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.மோதிரம், வளையம், டாலர் அணியவும்.7. குடியிருப்பது பழைய வீடாயிருந்தால், அதைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். அலங்கரிக்காதீர்கள். 8. தோட்டம் போடுங்கள். பலன்களை தவிர்த்து விடவும்.9. என் ஆளுகைக்குட்பட்ட தொழில்களில் நீங்கள் இருந்தால் மெல்ல விலகி விடுங்கள்.10. தியானம் செய்யுங்கள். கிராமக் காவல் தேவதைகளை வழிப்படுங்கள்.11. யாரேனும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, ஆஸ்பத்திரி, சுடுகாட்டுக்கு லிப்ட் கேட்டால் தயங்காமல் கொடுங்கள். பிரச்சினை வராது என்றால் துணையாகவும் போங்கள். 12. எதிலும் பெரிதாய் சுத்தம் சுகாதாரம் பார்க்காதீர்கள்.13. மேற்குத் திசையில் பள்ளம், காலியிடம் கூடாது.


குரு சனி ரெண்டு பேரும் சரியில்லாத ராசிக்காரவுக என்ன செய்யனும்?:

குரு சனிக்குரிய விஷயங்கள்ள உசாரா இருக்கனும்.குரு,சனி ரெண்டு கிரகங்களுக்கும் உரிய பரிகாரங்களை செய்துக்கனும்.

சனிக்குரிய விஷயங்கள்: (சனியே சொல்றாருங்கோ)
ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள், கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள், தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம் இவற்றிற்கெல்லாம் நானே அதிபதி. சோம்பல், மந்த புத்தி, நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம் இவையும் என் அதிகாரத்தின் கீழ் வருபவையே. க்ளாஸ், போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல், சிறைப்படுதல், மலச்சிக்கல் இவற்றிற்கும் நானே அதிகாரி.

குருவுக்குரிய விஷயங்கள் இந்த பதிவிலேயே தரப்பட்டிருக்கு பாருங்க.

சனிக்குரிய பரிகாரங்களும்  இந்த பதிவிலேயே தரப்பட்டிருக்கு பாருங்க.

இப்போ குருவுக்குரிய பரிகாரங்களை பார்ப்போம்:

1. வியாழக்கிழமை மஞ்சளாடை அணிந்து தட்சிணாமூர்த்திக்கோ வேறு எவரேனும் குருவுக்கோ விரதமிருங்கள்.2. தங்கத்தை லாக்கரில் வையுங்கள். 3. வட்டிக்கு ஆசைப்படாதீர்கள்.4. அஜீரணத்தைத் தவிர்த்து விடுங்கள்.5. பிராமண நண்பர்களுக்குச் சாப்பாடு போடுங்கள்.6. மஞ்சள் நிறப் பொருட்களை அதிகம் உபயோகியுங்கள்.7. கோயில், குளம், ஆசிரமம், திருப்பணி சேவைகளுக்குப் பணம் கொடுங்கள். ஆனால் நீங்கள் அங்கு செல்வதோ, ஈடுபாடு காட்டுவதோ வேண்டாம்.8. பெரிய மனிதர்களுடன் அளவோடு பழகுங்கள்.9. வங்கி, கோர்ட்டு, தேவஸ்தானங்களைத் தவிர்த்து விடுங்கள்.10. வெறும் வயிற்றில் வில்வ இலையை மென்று விழுங்குங்கள். 11. வடகிழக்கில் மேடு, படிகள், மாடிப்படிகள் இருந்தால் நீக்கி விடுங்கள்.

அடடா.. இவ்ளோ பெரிய பதிவுல குரு அனுகூலமா வர உள்ள ராசிகள்ள ஒரே ஒரு கும்பராசிக்கு மட்டும்  உருப்படியா பலன் சொல்ல முடிஞ்சிருக்கு. உடுங்க ஜூட். அடுத்த பதிவுல மத்த ராசிக்காரவுகளை கவனிச்சுரலாம்.

No comments: