'>

Monday, October 11, 2010

உங்க ஜாதகமும் செக்ஸ் லைஃபும் : 2

கடந்த பதிவுல தூக்கம், செலவுகள் இத்யாதியை காட்டற விரயபாவம்தான் , உங்க செக்ஸ் லைஃபையும் தீர்மானிக்குதுனு சொல்லியிருந்தேன். ஆனால் டோட்டலா உங்க லைஃபை தீர்மானிக்கிற லக்னம், லக்னாதிபதி, நீங்க  பெண்ணா இருந்தா கற்பை காட்டற 4 ஆவது இடம், 4 ஆமிடத்ததிபதி, வாழ்க்கை துணை/காதலன் /காதலியை காட்டற 7 ஆமிடம்,7 ஆமிடத்ததிபதி, உங்க மரணம் இத்யாதிய காட்டற 8ஆமிடம், 8 ஆமிடத்ததிபதி , மேற்படி பாவங்களில் நின்ற இதர கிரகங்கள், மேற்படி பாவாதிகளுடன் சேர்ந்த கிரகங்கள், மேற்படி பாவாதிபதிகள் நின்ற இடங்கள் , காம சுகங்களுக்கு அதிபதியான சுக்கிரன் நின்ற பாவம், சுக்கிரன் நின்ற பாவாதிபதி இப்படி பல அம்சங்களோட இம்பாக்ட்  உங்கள் செக்ஸ் லைஃப் மேல இருக்கும். மேற்சொன்ன பாவாதிபதிகளில் எந்த கிரகம் பலம் பெற்றுள்ளதோ அதை பொருத்தும், அந்த கிரகம் நின்ற ராசியின் தன்மை பொருத்தும், அது எத்தனையாவது பாவம் என்பதை பொருத்தும் செக்ஸ் லைஃப் அமையும்.



ஆண்,பெண்,அலி கிரகங்கள் :

கிரகங்கள்ள ஆண் கிரகம்,பெண் கிரகம், அலிகிரகம்னு வேறுபாடுகள் உண்டு.  நீங்க ஆணாயிருந்தா உங்க ஜாதகத்துல ஆண் கிரகங்கள் பலம் பெற்றிருக்கனும். நீங்க பெண்ணா இருந்தா பெண் கிரகங்கள் பலமா இருக்கனும். நீங்க பெண்ணாயிருந்தா பெண் கிரகங்கள் வலுப்பெற்றிருக்கனும். அப்படி இயல்பா அமைஞ்சிருந்தா இயல்பான செக்ஸில் ஈடுபடுவிங்க. இல்லைன்னா  செக்ஸ் நேரத்தில் ஆண் பெண்ணின் பாத்திரத்தை வகிப்பதும் , பெண் ஆணின் பாத்திரத்தை வகிப்பதும் நடக்கும்.

ஆண் பாத்திரம்:
செக்ஸுக்கான இடத்தை ,நேரத்தை தீர்மானிப்பது கவுண்டர் பார்ட்டை  செக்ஸுக்கு தூண்டுவது, உடலுறவு நிலையை தீர்மானிப்பது, மேலிருந்து  இயங்குவது.

பெண் பாத்திரம்:
கவுண்டர் பார்ட்டின் தீர்மானங்களுக்கு வளைந்து கொடுத்தல், கீழிருத்தல்.

எச்சரிக்கை:

எதிர்பாலினத்தை சேர்ந்த கிரகங்கள் அல்லது அலிகிரகங்கள் ( ஆண் ஜாதகத்தில் பெண்கிரகங்கள்,பெண் ஜாதகத்தில் ஆண் கிரகங்கள்)  அளவுக்கதிகமாக பலம் பெற்றிருந்தால் ஆணில் பெண்மை, பெண்ணில் ஆண்மை அதிகரித்து என்விரான்மென்டல் காரணங்களும் சேர  பால் குழப்பமும் ஏற்பட்டு விடலாம்.

ராசிகளில் பால் வேறுபாடு :
கிரகங்களை போலவே ராசியிலும் பால் வேறுபாடு உண்டு. ஆண் கிரகங்கள் ,ஆண் ராசியிலும், பெண் கிரகங்கள் பெண் ராசியிலும் நின்றால் நல்லது. இயல்பான செக்ஸ் லைஃப் இருக்கும். இல்லையேல் செக்ஸின் போது ஆண் பெண்ணாகவும்,பெண் ஆணாகவும் செயல்பட வாய்ப்பு இருக்கிறது.


பி.கு:
இந்த மேட்டர்ல இதுக்கு மேல எழுதினா கில்மா பர்சண்டேஜ் அதிகமாயிரும். இதையெல்லாம் விரிவா விளக்கமா தெரிஞ்சிக்கனும்னா கவிதை07 வலைப்பதிவோட உறுப்பினர் எண்ணிக்கை 500 ஐ தொடனும்.  நீங்க இன்னும் உறுப்பினராகலைன்னா இங்கே அழுத்தி உடனே மெம்பராகுங்க.  ஏற்கெனவே நீங்க மெம்பருன்னா சைன் இன் பண்ணி இன்வைட் ஆப்ஷன்ல போய் உங்க நண்பர்களையும் இன்வைட் பண்ணுங்க. உடு ஜூட்.

1 comment:

jagadeesh said...

நீங்க இந்த விசயத்தில் கொஞ்சம் வீக்கா இருப்பீங்க போல, அதன் எப்ப பார்த்தாலும், இதப் பற்றியே கதைக்கறீங்க.