Monday, October 11, 2010
எம்.ஜி.ஆருக்கு வராத அவப்பெயர் கலைஞருக்கு மட்டும் ஏன்?
எம்.ஜி.ஆருக்கு வராத அவப்பெயர் கலைஞருக்கு மட்டும் ஏன்?
காமராஜர் என்னிக்கோ சொல்லிட்டாரு. ஒரே குட்டையில ஊறின மட்டைங்கன்னு. "இருவர்"படத்துல மணி ரத்தினம் தன்னால ஆனவரை எந்த அளவுக்கு எம்.ஜி.ஆர்,கலைஞரை எக்ஸ்போஸ் பண்ணனுமோ பண்ணிட்டாரு.
அவரோட நோக்கம் மக்களுக்கு உண்மைகளை எடுத்து சொல்லி அவிகளை எஜுகேட் பண்றதெல்லாம் கிடையாது. ஏதோ ஒரு சென்சேஷ்னல் இஷ்யூவை எடுத்துக்கிட்டு அதை பிராமண, பிராமணீய வ்யூ பாயிண்ட்ல படமாக்கி, விவாதப்பொருளாக்கி மண்டைகள் உடையச்செய்து நெல்லா கல்லா கட்டலாமேங்கறதுதான்.
ஆனால் இருவர் படத்தை சனம் கண்டுக்கிடவே இல்லை. ( சில நேரத்துல தமிழ் நாட்டு சனம் புல்லரிக்க வச்சிர்ராய்ங்கப்பா) மொக்கை போதும் மேட்டருக்கு வரேன்.
திராவிட பேரியக்கத்தால தமிழ் நாட்ல மாசத்துக்கு 3 தாட்டி மழை பெய்யுது, ஆறு போகம் விளையுதுன்னு சொல்லமாட்டேன்.
அதே நேரத்துல அறிவு ஜீவிங்கற விருதுக்கு ஆசைப்பட்டு இயக்கத்தை காட்டிக்கொடுக்கிறதும் என் நோக்கமில்லை. திராவிட பரம்பரையில் வந்த எம்.ஜி.ஆர்,கலைஞரை அவிகளோட பலஹீன க்ஷணங்கள்ள "அவாள்" ஆட்கொண்டுட்டாய்ங்கனு தான் சொல்றேன்.
அவிக ஃபார்முலா ஒன்னுதான் எந்த துறையா இருந்தாலும் அதுல நெம்பர் ஒன் அவிக இனத்தாளா இருக்கனும். தப்பித்தவறி சூத்திரன் நெம்பர் ஒன்னாயிட்டா அவனுக்கு ஒரு பாப்பாத்திய கட்டி வச்சுரனும் ( உ.ம் ரஜினி - ஆமங்கண்ணா "எந்திரா எந்திரா"ன்னு டைட்டில் சாங் வருதே -விளம்பரத்துல- சூசகமா ரசிகனை எந்தி(ர்)ரா எந்தி(ர்)ராங்குதுனு சொல்றாய்ங்க - நாம இன்னம் படம் பார்க்கலை - இருபது ரூபாய்க்கு மேல செலவழிக்க விருப்பமில்லை - ஒரு ஓசி டீயும் கிடைச்சா- அடுத்த வாரம் வந்துருங்க சாமினு ரசிகர்கள் சொன்னாய்ங்க - நிலைமை அப்படியா இருக்கு)
அப்படியில்லைன்னா அவனையே பார்ப்பானாக்கிருவாய்ங்க. உ.ம் இளையராஜா. இதே ஃபார்முலாவை வச்சுத்தான் எம்.ஜி.ஆரை மூகாம்பிகை பக்தராக்கிட்டாய்ங்க. பெரியார்,அண்ணா வழியில் வந்த கலைஞரையே பவழ மோதிரம் அணிய வச்சுட்டாய்ங்க. மஞ்ச துண்டு போட வச்சிட்டாய்ங்க. ராஜராஜன் கோவிலுக்கு பட்டு வேட்டி,பட்டுச்சட்டை அணிய வச்சுட்டாய்ங்க.
கலைஞரய்யா ! செவ்வாயால வரக்கூடிய தீய பலனை குறைக்க பவழ மோதிரம் தான் அணியனும்னு சட்டமில்லே. சென்னை மாநகராட்சி எல்லையில இருக்க கூடிய எல்லா உடல் ஊனமுற்றவர்களுக்கும் 9 நாளைக்கு தலப்பா கட்டு பிரியாணி ஏற்பாடு பண்ணிருங்க. ஆயுசுக்கும் செவ்வாய் உங்க ஜோலிக்கு வரமாட்டாரு ( அரசு செலவுல இல்லிங்கய்யா - சொந்த செலவுல)
கலைஞரய்யா! குருவால வரக்கூடிய தீய பலனை குறைக்க மஞ்ச துண்டுதான் அணியனும்னு சட்டமில்லே. ஒரு 3ஆயிரம் ஏழை பெண்களுக்கு அவிக கண்ணாலத்துக்குனு 3 கிராம் தாலி கொடுங்க..( அரசு செலவுல இல்லிங்கய்யா - சொந்த செலவுல) ஆயுசுக்கும் குரு உங்க ஜோலிக்கு வரமாட்டாரு.
அய்யய்யோ..."எம்.ஜி.ஆருக்கு வராத அவப்பெயர் கலைஞருக்கு மட்டும் ஏன்?"னு தலைப்பை வச்சுட்டு இப்படியா மொக்கை போடறதுனு பல்லை கடிக்காதிங்க ..காது நல்லாவே கேட்குது. மேட்டருக்கு வரேன்.
கலைஞரய்யா மேல எத்தனை விதமான குற்றச்சாட்டுகள் இருந்ததோ,இருக்குதோ அத்தனை குற்றச்சாட்டுகள் வாத்தியார் மேலயும் இருந்தது. இவரு மேல சர்க்காரியா கமிஷனுன்னா,அவரு மேல ஷா கமிஷன். இப்படி இந்த பதிவெல்லாம் சொல்லிக்கிட்டே போகலாம்.(சிரிச்சவுக கையில வெத்தலை பாக்கு கொடுக்க நான் தயாராயில்லே)
ஆனாலும் எம்.ஜி.ஆரை எந்த குற்றச்சாட்டும் டச் கூட பண்ண முடியலே. கலைஞரய்யா மேல மட்டும் ஃபெவிக்கால் போட்ட மாதிரி ஒட்டிக்கிச்சு.ஏன்? இங்கருந்து சோசியம் கவுண்ட் டவுன் ஸ்டார்ட்.
நீங்க இன்னா மாதிரி யோக ஜாதகத்துல பார்த்தாலும் ஒவ்வொரு பாவமும், ஒவ்வொரு கிரகமும் கொஞ்சமாச்சும் தோஷம் வாங்கி ,கொஞ்ச மாச்சும் தீமை செய்யற நிலைல தான் இருக்கும்.
நீங்க இன்னா மாதிரி தரித்திரம் பிடிச்ச ஜாதகத்துல பார்த்தாலும் ஒவ்வொரு பாவமும், ஒவ்வொரு கிரகமும் கொஞ்சமாச்சும் நல்ல பார்வை , நல்ல கிரகத்தோட சேர்க்கை இத்யாதி வாங்கி ,கொஞ்ச மாச்சும் நன்மை செய்யற நிலை இருக்கும்.
அதாவது நல்லது கெட்டது கலந்து தான் இருக்கும். பவர் ஜெனரேஷன்ல பத்தாக்குறை இருக்கும்போது பவர் சப்ளையை ஒரு ப்ளான் படி குறைக்கிறாய்ங்க. அறிவிக்கப்பட்ட மின் வெட்டு , அறிவிக்கப்படாத மின் வெட்டுன்னு அஜீஸ் பண்றாய்ங்க இல்லைன்னா நா..........றிடும். (இப்பவே அப்படித்தான் இருக்குனு சொன்னா நான் ஒன்னும் செய்ய முடியாது .
அப்படியாக ஒவ்வொரு பாவமும், ஒவ்வொரு கிரகமும் தரக்கூடிய சுப பலனுக்கும் நாமாவே சுயமா வெட்டு விதிச்சுக்கிட்டா தூள் கிளப்பலாம். மின்சார பற்றாக்குறை எழும்போது அதை சால்வ் பண்ண மின்வாரியத்துக்கு ரெண்டு சாய்ஸ் இருக்கு. ஒன்னு ஓடற வரைக்கும் ஓடட்டும்னு உள்ளதை துடைச்சி விட்டுரலாம்.அப்பாறம் கலைஞர் மெழுகுவர்த்தி வெளிச்சத்துல தான் உடன் பிறப்புக்கு கடிதம் எழுத முடியும். (ச்சொம்மா உளுவுளாக்காட்டிக்கு -அவிகளுக்கு இல்லாத ஜெனரேட்டரா?)
அல்லது உள்ளதையே ரேஷன்ல ரிலீஸ் பண்றது.
அப்படி பாவங்கள்,கிரகங்கள் தர்ர நற்பலன்களுக்கு கூட நாமாவே சுய வெட்டு விதிச்சிக்கிட்டு மேனேஜ் பண்ணலாம். உதாரணமா ( கலைஞர்,எம்.ஜி.ஆர் மேட்டருக்கு வந்தே உட்டேன். ஜாதகத்துல அஞ்சாவது இடம் " பிள்ளைகள்,மன நிம்மதி, பெயர், புகழ், அதிர்ஷ்டம், தியானம் ஆகியவற்றை காட்டுது.
கொஸ்டின் பேப்பர்ல தெரியாத கேள்வியை சாய்ஸ்ல விட்டுர்ர மாதிரி மேற்படி மேட்டருல உங்களுக்கு எது முக்கியமில்லையோ அதையெல்லாம் விட்டுட்டா மிஞ்சியிருக்கிற மேட்டர்ல தூள் கிளப்பலாம்.
லோ ஓல்ட்டேஜ் ப்ராப்ளம் இருக்கிறப்ப மோட்டரையெல்லாம் நிறுத்திட்டா பல்பு வெளிச்சமாயிருதுல்ல அப்படித்தான்.
லைஃப் ஈஸ் ஆப்ஷன்ஸ். எதையாவது விட்டாத்தான் எதையாவது பெற முடியும். கலைஞரய்யா மேட்டர்ல பார்த்தா பிள்ளைகள் மஸ்து (மு.க.முத்து மேட்டர் அய்யாவுக்கு ரெம்ப வருத்தத்தை கொடுத்தாலும் அவர் இன்னைக்கு சி.எம்மா குப்பை கொட்ட காரணமே முத்து நொந்து போனதுதான் - ஒரு மோட்டர் ஆஃப் ஆச்சு - ஒரு பல்ப் பளிச் ஆயிருச்சு) . என்னை கேட்டா என்.டி.ஆர் அரசியலுக்கு வந்ததும் பிள்ளைகளுக்கு இருந்த சொத்தையெல்லாம் பிரிச்சு கொடுத்துட்டாப்ல அய்யாவும் பிரிச்சு கொடுத்து கழட்டி விட்டிரலாம். எம்.ஜிஆர் ஒரு காலத்துல என் பேரை சொல்லிக்கிட்டு என் மனைவியே ஃபோன் பண்ணாலும் எந்த ஆப்ளிகேஷனும் ஒப்ளைஜ் பண்ணாதிங்கனு விளம்பரம் கொடுத்தாப்ல அய்யாவும் ஒரு விளம்பரம் விடலாம். அப்படியே ஆட்சிக்கு ஸ்டாலின்,கட்சிக்கு அழகிரி வாரிசுகள்னு அறிவிச்சுட்டா ப்ராப்ளம் ஓவர்.
மன நிம்மதி (இதுக்குதான் அப்பப்ப ஆப்பு வச்சிராய்ங்கனு கேள்வி) , அடுத்து வர்ரது பெயர், புகழ் . நான் சாகிற வரை எந்த பிக்காலியாச்சும் விருது, பாராட்டு விழானு வந்தா கேட்டுக்கு வெளிய இருந்தே துரத்தி விட்டுருங்கனு செக்யூரிட்டிக்கு இன்ஸ்ட் ரக்சன் கொடுத்துட்டா போதும். அடுத்த பாய்ண்ட் . அதிர்ஷ்டம். இது கை கொடுத்தது ஒரே தாட்டித்தான் ( சேவல்,புறா) அடுத்தது தியானம் .ஐயருங்க இதுலயும் அய்யாவை தேத்தி விட்டுருப்பாய்ங்க.
தாத்தா இதையெல்லாம் ஃபாலோபண்ணுவாருங்கறிங்க. ஊ ஹூம். நாய் வாலை நிமிர்த்த முடியுமா என்ன? அய்யாவுது கடக லக்னம் . ரிஷப ராசி.கடக லக்ன காரவுக தங்கள் பிள்ளைகளை தங்கள் நிழல்லயே வச்சுக்கிட்டு நாறடிச்சுருவாய்ங்கனு ஒரு விதி இருக்கு. பந்து ப்ரீதி இன்னொரு மைனஸ் பாய்ண்ட். ரிஷபராசிக்காரவுகளுக்கு எமனே பேச்சும் ,குடும்பமும்தான். இதையெல்லாம் ஆரு சொல்றது.
தாத்தா கச்சா முச்சானு பிள்ளைகளை பெத்து விட்டுட்டதால அஞ்சாமிடம் ஓவர் டைம் பண்ணி மொக்கயாயிருச்சு. புகழாசை, பிள்ளைகள் பால் அதீத பிரேமை இத்யாதி எல்லாம் சேர்ந்து கலைஞரை அவப்பெயருக்குள்ளாக்கிருச்சு.
இப்போ எம்.ஜி.ஆர் மேட்டருக்கு வருவம். மொத ப்ளஸ் இவருக்கு பிள்ளைகள் இல்லே. ஒரு வீட்ல ரெண்டு ஸ்டேர்ஸ் இருக்குனு வைங்க. லோ ஓல்ட்டேஜ் வரும்போது ஒரு ஸ்டேருக்கு பவர் கட் பண்ணிட்டம்னு வைங்க. அப்போ மிச்சமிருக்கிற ஸ்டேர்ல உள்ள பல்பெல்லாம் வெளிச்சம் போடுமா இல்லியா.
ஜெ மேட்டர்ல கூட அவிக ஒரு தத்து பிள்ளைய ஸ்க்ரீன் மேல கொண்டு வந்த பிறவுதான் டவுன் ஃபாலே ஆரம்பமாச்சு.
சரி முருகேசன் ! மேட்டர் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. எங்களுக்குனு என்ன சொல்றிங்க. சொல்லுங்கனு கேட்கிறிங்க. சொல்றேன். கீழே ஒவ்வொரு பாவமும் என்னென்ன விஷயங்களை காட்டுதுனு ஒரு லிஸ்ட் தந்திருக்கேன். இதுல உங்களுக்கு ( உங்க பாய்ண்ட் ஆஃப் வ்யூல) எது இன்றியமையாததோ அதை மட்டும் வச்சிக்கிட்டு மத்ததையெல்லாம் விட்டுத்தொலைங்க. தவுசண்ட் வாட்ஸ் பல்பு மாதிரி வெளிச்சம் போடுவிக.
(லக்னம்)
உங்கள் தோற்றம்( ஆடை அணிகலன்) உடல்,மனம். உடல் நலம், மன நலம்,நிறம்,குணம்.
(தன பாவம்)
தனம்,வாக்கு,குடும்பம்,கண்கள்
(சோதர பாவம்)
சகோதர,சகோதிரிகள்,தைரியம்,ஷட்டில்
பிரயாணங்கள்,காது,இசை ஞானம்,புஜங்கள்,தோள்
(மாத்ரு பாவம்)
தாய்,தாய் வழி உறவினர்,பூமி,வீடு,வாகனம்,கல்வி,சுகஸ்தானம்,இதயம்
(புத்ரபாவம்)
பிள்ளைகள்,மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,தியானம்,வயிறு
(ரோக பாவம்)
வெல்ல முடிந்த சத்ரு, தீரக் கூடிய ரோகம், தீர்க்கக்கூடிய ருணம்(கடன்),தாய்மாமன்,வயிறு
(களத்ர பாவம்)
நண்பன்,காதலர்/லி,பங்குதாரர்,மனைவி, தொப்புள்
(ஆயுள் பாவம்):
வெல்ல முடியாத ,உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய சத்ரு, தீராத ரோகம், தீர்க்கமுடியாத ருணம்(கடன்),சிறைப் படுதல், மஞ்சள் கடிதாசு கொடுத்தல்,அடிமையாதல்,மேஜர் விபத்து, ஆப்பரேஷன்,மர்மஸ்தானம்
(பித்ரு பாவம்)
தந்தை,தந்தைவழி உறவு,தந்தை சொத்து,
சேமிப்புக்கள்,தூர பிரயாணங்கள்,வெளி நாட்டுப் பயணங்கள்.
(ஜீவன பாவம்):
பிழைப்புக்கு வழி(மோட் ஆஃப் லிவிங்க்),தொழில்,வேலை,உத்யோகம்,வியாபாரம்
(லாப பாவம்)
மூத்த சகோதிரி/சகோதரன்,லாபம்.
(விரயபாவம்) :
தூக்கம்,செக்ஸ்,மரணம்,மரணத்துக்கு பின்னான நிலை,செலவு செய்யும் விதம்,பாதங்கள்.
என்ன பாஸ் ! இழக்க தயாராயிட்டிங்களா? அப்போ பெறுவது நிச்சயம். அடிச்சு தூள் கிளப்புங்க..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment