கே:
ஜோசியம் ஹ்ய்மேனிட்டிக்கு எதிரா போகுமா?
ப:
நிச்சயமா போகும்.பார்ட்னர்ஸ் இருப்பாய்ங்க. அதுல ஒருத்தருக்கு பயங்கர கெட்ட நேரம் நடக்குதுனு வைங்க அவரை கழட்டிவிட்டுட்டா ரெம்ப நல்லது. ஆனால் நான் அப்படி சொல்லமாட்டேன். அவருக்கு இப்ப கொஞ்சம் போல நேரம் சரியில்லை.ஆனால் எதிர்காலத்துல அவரால நல்ல யோகம் காத்திருக்கு.அதனால தற்சமயத்துக்கு அவரை எதுலயும் முன்னே தள்ளாம நீங்களே டாக்கிள் பண்ணுங்கனு சொல்வேன்
கே:
சரிங்க பாஸ்.. ஒரு ஜோசியரா ஜோதிஷ பிரியர்களுக்கு நீங்க சொல்ல நினைக்கிறது எதுனா உண்டா?
ப: நிறைய இருக்கு. உதாரணமா எதுக்கெடுத்தாலும் ஜோசியர்கிட்ட ஓடறது கெட்ட பழக்கம். எப்பயோ தசாபுக்திகள் மாறும்போதோ,கோசாரத்துல சனி,குரு,ராகு,கேது இத்யாதி கிரகங்கள் மாறும்போதோ, சக்திக்கு மிஞ்சி வாழ்வா சாவா ரேஞ்சுல புது முயற்சிகள்ள இறங்கறதுக்கு முந்தியோ மட்டும் போறது நல்லது. மொத்தம் 12 ராசி. இதுல ஒரு ரெண்டரை வருஷத்துல சனி அனுகூலமா இருக்கிறது ஜஸ்ட் 4 ராசிக்குத்தான். மத்த 8 ராசிக்கு பிரச்சினைதான். அதனால இவிக ஜோசியரை ரவுண்ட் அப் பண்ணிக்கிட்டே இருப்பாய்ங்க. இவிகளை இப்படி வட்டமிட வைக்கிறது ஜோசியருக்கே நல்லதில்லை. அட் தி சேம் டைம் சனி பிடிச்சவுக கேம்ப் அடிக்கிற ஜோசியர் ஆஃபீஸுக்கு அடிக்கடி போறதும் நல்லதில்லை.
கே:
நீங்க சொல்றது விசித்திரமா இருக்கு. சனங்களை போவக்கூடாதுன்னிங்க ஓகே. ஜோசியருக்கென்ன நஷ்டம் பைசா வருமே..
ப:
அங்கனதான் ஜோசியருங்க தப்பு பண்றாய்ங்க . பைசா மட்டும் வராது பின்னாடியே அதை கொடுத்தவனோட சனியும் வரும்.
கே:
நல்ல நேரம், கெட்ட நேரத்துக்கு என்னங்க வித்யாசம்?
ப:
நல்ல நேரத்துல காரியம் பெருசா வீரியம் பெருசான்னா காரியம் தான் பெருசுங்கற மெச்சூரிட்டி வந்துரும். அல்பத்துக்கெல்லாம் கூட தலை வணங்கி வாழ ஆரம்பிச்சு "யாருக்கும் தலைவணங்காம வாழற நிலை"க்கு வந்துருவிங்க.கெட்ட நேரத்துல ..
கே:
சொல்லாதிங்க புரிஞ்சிருச்சு வீர்யம் பெருசுங்கற கான்செப்ட் வந்துரும்,கண்டவனோட மோத ஆரம்பிச்சு, எவனுக்கும் தலைவணங்காம வாழப்பார்த்து எல்லாருக்கும் தலைவணங்கினாத்தான் வாழ்க்கைங்கற ஸ்டேஜுக்கு வந்துருவம். அதானே வித்யாசம். நல்ல நேரத்துக்கும் கெட்ட நேரத்துக்கும் இன்னம் எதுனா வித்யாசங்கள் உண்டா ?
ப:
குமுதத்துல ஆறுவித்யாசம் மாதிரி இருக்குங்க. நல்ல நேரத்துல காசு கம்மியா வரும் ஆனா வேலையெல்லாம் கரீட்டா நடக்கும். கெட்ட நேரத்துல காசா கொட்டும். வீணாப்போயிரும்.வேலை மட்டும் நடக்காது
கே:
அட.. அப்பாறம்..
ப:
எந்த வேலையா இருந்தாலும் நல்ல நேரத்துல துவங்கினது ஒன்னுக்கு பத்தா டெவலப் ஆகும், கன்டின்யூ ஆகும்.கெட்ட நேரத்துல ஆரம்பிச்சது ஒரு முறையோட ஃபணாலாயிரும். இந்த சூட்சுமம் தெரியாம சனம் நல்ல நேரத்துல ஊரானுக்கு ஷ்யூரிட்டி போட ஆரம்பிப்பாய்ங்க. அல்லது ஃப்ரெண்ட்லியா அல்லையன்ஸ் சொல்ல ஆரம்பிப்பாய்ங்க அல்லது கண்ணாலம், காட்சியை அட்டெண்ட் பண்ண ஆரம்பிப்பாய்ங்க. நல்ல நேரம் முழுக்க இந்த வேலைகளை செய்துக்கிட்டு இருந்துட்டு எனக்கு ஒன்னுமே நடக்கலைம்பாய்ங்க
கே:
த பார்ரா இதான சூட்சுமம்?
ப:
இதுமட்டுமில்லிங்கணா .. நல்ல நேரத்துல உழைக்கனும்ங்கற துடிப்பு இருக்கும். ஆனால் உழைப்பே தேவையில்லாம வேலைங்க முடியும். கெட்ட நேரத்துல உழைப்பான்னு மலைப்பு இருக்கும். இப்படி உழைக்கிறோமேங்கற ஆதங்கம் இருக்கும். ஆனால் கடும்மையா உழைச்சாக வேண்டிய அவசியம் ஏற்படும்
கே:
நீங்க எல்லாத்தையும் சைன்டிஃபிக்கா அனலைஸ் பண்ணுவிங்களே.. சனி பிடிக்கிறதை பத்தி கொஞ்சம் அனலைஸ் பண்ணுங்களேன்
ப:
சனி ஆசன துவாரத்துக்கு அதிபதி. ஆசனதுவாரங்கறது வண்டிக்கு சைலன்சர் மாதிரி. சைலன்ஸரை அடைச்சுட்டா வண்டி ஸ்டார்ட் ஆகாது. அதே மாதிரி சனி பிடிக்கிறதுக்கு 6 மாசம் முந்தியிருந்தே அஜீரணம், பசியின்மை, மலச்சிக்கல் எல்லாம் ஆரம்பிச்சுரும். சனி பிடிச்சபிறவு அகால போஜனம், அகால நித்திரை, அகாலத்துல வயித்த கலக்கறதுல்லாம் நடக்கும். இதுக்கு பரிகாரமாத்தான் சனிக்குரிய எள்ளை கொண்டு தயாரிக்கிற நல்லெண்ணையை உபயோகிக்க சொல்றது..
கே:
சனிக்கும் எள்ளுக்கும் என்னங்க சம்பந்தம்?
ப:
இருக்குங்க. சனி பிரேதாத்மாக்களுக்கு காரகர் - அதனால தான் காரியம் ,கருமாந்திரத்துலல்லாம் எள்ளை பிரபலமா உபயோகிக்கிறாய்ங்க . எள்ளு சனிக்கு ரெம்ப விசேசம் .பொதுவாக எல்லா எண்ணெய் வித்துக்களுக்கும் சனி தான் காரகர்.
கே:
சனி பிடிச்சா ஆண்மை கூட குறைஞ்சுரும்ங்கறாய்ங்களே
ப: அஸ்ட் ராலஜிக்கலா பார்த்தா சனி அலிகிரகம். அதனால ஆண்மை குறையும்னு சொல்லிரலாம். இருந்தாலும் இதைபத்தி இன்னம் கொஞ்சம் டீப்பா அடுத்த பதிவுல பார்ப்போம்
No comments:
Post a Comment