'>

Wednesday, October 6, 2010

ஓப்பன் டாக் வித் அஸ்ட்ராலஜர் :1

கே:
பாஸ் ! ஓப்பன் டாக்குனு தலைப்பு வச்சிட்டம். நான் எதுனா வில்லங்கமா கேட்பேன் . சபிச்சுர மாட்டிங்களே

ப:
சாபம்னா ஞா வருது. ஜோசியருங்க நவகிரகங்களை பாவி ,மாரகன்னு சொல்லிட்டே இருப்பாங்கள்ள அதனால அவிகளுக்கு  தோஷம் வந்துருமாம். அதை போக்கிக்க ஸ்லோகம்லாம் சொல்லனுமாம்.  ஜோசியரை கலாய்க்கிறவுகளுக்கு அந்த தோஷம்லாம் ட்ரான்ஸ்ஃபர் ஆயிருமாம்.

கே:
பார்த்திங்களா எங்கே நானு கச்சா முச்சானு கேள்வி கேட்டுருவனோன்னு அட்வான்ஸா செக் வைக்கிறிங்க.

ப:
அதெல்லாம் ஒன்னுமில்லப்பா.. எங்கனயோ படிச்சதை சொல்றேன்

கே:
அப்பாடி பயந்தே போயிட்டேன். ஆமாங்க சாமி .. காசு கொடுக்காம ஜோசியம் பார்த்தா பலிக்காதுனு சொல்றாய்ங்களே நெஜமாவா?

ப:
அப்படீனு சொல்றாய்ங்க. ஆனால் எனக்கு இதுலல்லாம் நம்பிக்கை கிடையாது. இந்த ப்ரொஃபெஷன்ல மேஜரா உள்ளது அவா தானே. அவிகளுக்கு அறிவு சாஸ்தியாச்சே. அதனால இப்படி ஒரு குண்டு போட்டிருப்பாய்ங்க

கே:
அதென்னது  ஜோசியருங்களூது மட்டும் ப்ரீபெயிட் சர்வீஸா? முன் கூட்டியே வெத்தலை பாக்கு வைன்னிர்ராய்ங்க. அதுல பணமும் வச்சுர்ரம்.

ப:
முந்தின கேள்விக்கு சொன்ன பதிலேதான் இதுக்கும். வெத்தலை பாக்குங்கறது ஆரூடம் பார்க்க இருக்கலாம். ஜாதகமில்லாதவுக, டேட் ஆஃப் பர்த் தெரியாதவுகளுக்கு இப்படி சொல்றதுண்டு.

கே:
அதென்னா பாஸ் ஆரூடம்?

ப:
சொன்னா சிரிக்க கூடாது.

கே:
 ஊஹூம்.  நீங்க சொல்லுங்க

ப:
வெத்தில பாக்கை எண்ணி வந்த எண்ணிக்கையை சிங்கிள் நெம்பராக்கி அந்த எண்ணிக்கைக்கு சமமான கிரகத்தை பேஸ் பண்ணி சொல்றது. உதாரணமா 1- சூரியன், 2-சந்திரன்  குறிப்பிட்ட கிரகம்  அந்தாளு வந்த லக்னத்துக்கு எங்கன இருக்கு. அதுக்கு எந்தளவுக்கு பலம்  இருக்குனு பார்த்து பலன் சொல்றது

கே:
இதென்னா சார் விசித்திரமா இருக்கு? ரெண்டு ரூபாய்க்கு வெத்தலை பாக்கு கொடுன்னா எல்லாருக்கும் ஒரே எண்ணிக்கைலதானே தருவாய்ங்க..

ப:
இல்லப்பா.ஜோசியம் பார்க்க எண்ணாம கொடுன்னு கேட்டு வாங்கிட்டு வருவாய்ங்க

கே:
இதையெல்லாம் நீங்க நம்பறிங்களா?

ப:
நான் நம்பறேனோ இல்லியோ ..பலர் ஃபுல் டைமா இதைத்தான் செய்யறாய்ங்க

கே:
நீங்க எப்படி?

ப:
99.9% ஜாதகம் ,டேட் ஆஃப் பர்த் இல்லாத பார்ட்டிகளை சேர்க்கவே மாட்டேன். எப்பயாச்சும் ஆப்ளிகேஷன் வரும். அப்போ.....

கே:
சொல்லிருவிங்களா?

ப:
இல்லைப்பா. 99.9% அவாய்ட் பண்ணிருவன். அப்படியும் மாட்டிக்கிட்டாலும் ஓப்பனா சொல்லிருவன்.

கே:
என்ன சொல்விங்க?

ப:
த பாருங்க .. இன்னைக்கு நாங்க வச்சிருக்கிற சப்ஜெக்டே அரை குறை. அவாள் ஆசனத்துல செருகி வச்சிருந்தா. இஸ்லாமிய படையெடுப்பு,ஆங்கிலேய ஆட்சி காரணமா அவா வயித்துப்பொழப்புக்கு போற அவசரத்துல சப்ஜெக்டை குப்பை தொட்டில வீசிட்டு போயிட்டா. அதை நாங்க எடுத்து ஃபெனாயிலும்,டெட்டாயிலும் போட்டு கழுவி வச்சிக்கிட்டு கதை பண்ணிக்கிட்டிருக்கோம். இந்த இழவுல ஆரூடம் அது இதுன்னு ரிஸ்க் எடுக்க  நான் தயாரா இல்லை. ஜாதகம் பார்த்து சொல்லவே கண்ணை கட்டுது. இதுல இந்த கிம்மிக்குக்கெல்லாம் கியாரண்டி கிடையாதுனு ஏக் மார் தோ துக்கடா சொல்லிருவன்

கே:
மத்தவுக ஏன் அப்படி சொல்லமாட்டேங்கிறாய்ங்க?

ப:
அதுக்கு சனங்க தான் காரணம்.  அவிக குடையனும். சொன்னதை கேட்டுக்கிட்டு வந்துட்டா ஜோசியருங்கல்லாம் ரேங்கறாய்ங்க.

கே:
எழுத்தாளர்ங்கறதை விட  உங்களுக்கு ஜோசியருங்கற முறையிலதான் நல்ல இன்கம் கிடைக்கும்னு நினைக்கிறேன்.ஆனா நீங்க எழுதின பதிவுகளை பார்த்தா 90 சதவீதம் பொது விஷயங்களை பத்தித்தான் எழுதியிருக்கிங்க. ஜோசியத்தை பத்தி எழுதும்போதும் அவாளை கிழிக்கிறதும், சேம் சைட் கோல் போடறதுமாதான் இருக்கிங்க.ஏன் அப்படி?

ப:
நான் இன்டலெக்சுவல் கிடையாது. மேலும் கணக்குல வீக்கு. நம்முது கடகலக்னம் சந்திரன் கொடுக்கிற  மனோபலத்தையும் , ஜன்மத்துல உச்சமா இருக்கிற குரு கொடுக்கிற தெய்வபலத்தையும் கொண்டுதான் ஜோசியம் சொல்றேன். சனங்க தர்ர காசை விட பலமடங்கு இழப்பு ஏற்படுது. ஜன்ம குரு 5,7,9 ஐ பார்த்து எனக்கு பீஸ் ஆஃப் மைண்ட், மகளுக்கு நல்ல வாழ்க்கை,  பொஞ்சாதிக்கு ஆரோக்கியம், புண்ணியத்தையெல்லாம் தரனும். வெறுமனே நான் காசு பணத்துக்காக அவரை எக்ஸாஸ்ட் பண்ணிட்டேனு வைங்க மத்ததெல்லாம் பிடுங்கிக்கும். அதனாலதான் அடக்கி வாசிக்கிறேன்.

கே:
நிறைய ஜோசியருங்களுக்கு ஜோசியத்து மேல நம்பிக்கை இருக்கிறாப்ல தெரியலியே..

ப:
மத்தவுக கதை நமக்கு தெரியாது. என்னை பொருத்தவரை நான் நம்பறேன். அது ஹ்யூமேனிட்டிக்கு எதிரா போகாதவரை நான் 100% நம்பறேன்.

கே:
ஜோசியம் ஹ்ய்மேனிட்டிக்கு எதிரா போகுமா?

ப: போகும். அது எப்போனு அடுத்த பதிவுல பார்ப்போம்.

No comments: