'>

Saturday, October 16, 2010

12 ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்

அண்ணே வணக்கம்ணே,
ராசிபலன் படிக்கிறதுக்கு முந்தி ஒரு மேட்டரு. நேத்து எந்திரனை பத்தி போட்ட பதிவுக்கு ரெம்ப பேரு ஃபீலாயிட்டாய்ங்க ஏன் இந்த வலைப்பூவை கூட நாறடிக்கிறிங்கன்னுட்டுதேன். அதனால இன்னைக்கு எந்திரன்: ஹேட்ஸ் ஆஃப் ஷங்கர் பதிவை செகண்டரி ஐட்டமா வச்சிருக்கேன். அதை படிக்க இங்கே அழுத்துங்க‌


டிசம்பர் 6 முதல் கும்பத்துலருந்து மீனத்துக்கு ஸ்திரவாசம் வரப்போற குரு கும்பத்துக்கு 2லும், விருச்சிகத்துக்கு அஞ்சிலயும், கன்னிக்கு 7லயும் கடகத்துக்கு 9லயும், ரிஷபத்துக்கு 11லயும் வரார். ஆக இந்த ராசிக்காரவுகளுக்கெல்லாம் குரு அனுகூலரா வரார். நீங்க கட்ட கடைசில கொடுத்துள்ள குரு காரகத்வங்களை ஒரு தாட்டி ஓட்டிப்பாருங்க. இதுல எல்லாம் உங்களுக்கு ஓரளவுக்காச்சும் அனுகூலம் ஏற்படும்.

மத்த ராசிக்காரவுகளுக்கு மீன குரு பிரதி கூலர். நீங்களும் மேற்படி குரு காரகத்வங்களை படிச்சுட்டு அந்த பேட்டை பக்கம் ஒதுங்காம இருங்க. பெட்டரா இருக்கும்.

பை தி பை குருவுக்குரிய பரிகாரங்களையும் தந்திருக்கேன். மீன குரு பிரதிகூலமா உள்ள ராசிக்காரவுக இதையெல்லாம் செய்துட்டு இருந்தா குருவுக்கு கொஞ்சம் போல பாச்சா காட்டாலம். இல்லைன்னா மூச்சா போக வச்சிருவாரு.

இப்போ பத்திரிக்கைகள்ள வர்ர மாதிரி ராசி வைஸ் குரு பெயர்ச்சி பலன்களை பார்ப்போம்.

1.மேஷம் :குரு பெயர்ச்சி பலன் 2010
சுப செலவுகள்,சுப காரியங்கள் நடக்கும். வாரி விட்டுராதிங்க. அப்பாறம் கஷ்டம் உங்களுக்குத்தானே. நெல்ல தூக்கம் கிடைக்கும். முதலிரவு நடக்கும் ( கண்ணாலம் நடந்த பொறவுதேன்). குருவுக்கு பாக்யாதிபத்யமும் உள்ளதால அப்பா விஷயத்துலயும் செலவுகள் வரலாம், தூர தேச யாத்திரை ஓகே. சேமிப்பையெல்லாம் காலி பண்ற சீக்வன்ஸ் இருக்கு. இவ்ள ஏன் அப்பாவழி சொத்திருந்தா அது கூட செலவழிஞ்சுரும் துரை அடக்கி வாசிங்க..

2.ரிஷபம் :குரு பெயர்ச்சி பலன் 2010
இந்த தாட்டி குரு வர்ர மீனம் உங்களுக்கு லாபஸ்தானம். பத்தை விட்டு விலகறதே நல்ல திருப்பம். இதுல 11 க்கு வர்ரது நல்ல ரிலீஃபை கொடுக்கும். ஆனா இவருக்கு அஷ்டமாதிபத்யம் இருக்கிறதாலயும், உங்களுக்கு அஞ்சுல சனியும் உட்கார்ந்திருக்கிறதாலயும் நெருங்கிய உறவுகள்ள மரணம், விபத்து இத்யாதி ஏற்பட்டு அது மூலமா லாபம் ஏற்படவும் வாய்ப்பிருக்கு. மொத்தத்துல ரெண்டு பேருக்கு டிக்கெட் கொடுப்பிக. பணம் காசு வரும். பிடிச்சு வைச்சுக்காம (உங்க இயல்பு பிடிச்சு வைக்கிறது) போட்டு புரட்டுங்க. அஞ்சுல சனி உள்ளதால உங்க மேக்கப்,காஸ்மெடிக் சமாசாரம்லாம் விட்டுருங்க. முன்னே நிக்காம கும்பல்ல கோவிந்தா போடுங்க.சமாளிச்சுரலாம்
கடகம்: குரு பெயர்ச்சிபலன்கள்



3.மிதுனம்:குரு பெயர்ச்சி பலன் 2010
பத்துல குரு வந்தா பதவி பறிபோகும்பாய்ங்க. உங்களுக்கு ஏற்கெனவே சுக ஸ்தானத்துல சனி வேற கீறார் .டேக் கேர்.வேலை, செய் தொழில்,வியாபாரத்துல உசாரய்யா உசாரு.இவருக்கு சப்தமாதிபத்யம் வேற இருக்கு.அன் மேரீடா உள்ளவுகளுக்கு ஆஃபீஸ் கோயரே மனைவியா அமையலாம். ஆண்களுக்கு மனைவியோட உதவியை நாட வேண்டி வரலாம். பார்ட்னர்ஷிப்ல உள்ளவுக மேட்டர்ல பார்ட்னரோட இம்பாக்ட் அதிகமாகும்.

4.கடகம்: குரு பெயர்ச்சிபலன்கள்

இந்த தாட்டி குரு வர்ர மீனம் உங்களுக்கு பாக்ய ஸ்தானம் .இவரு எட்டை விட்டு விலகறதே நல்ல திருப்பம். இதுல 9 க்கு வர்ரது நல்லதே. அப்பா,அப்பா சொத்து,அப்பாவோட ரிலேஷன், தூர பிரயாணங்கள், பப்ளிஷிங், ப்ளாகிங், சேமிப்பு இத்யாதியெல்லாம் அனுகூலம் தரும். இந்த ரெண்டேகால் நாள் ஒரு ஸ்டைல் அடுத்த ரெண்டேகால் நாள் ஒரு ஸ்டைல்னு எல்லாமே மாறிப்போற உங்க லைஃப்ல உங்க எதிர்காலத்துக்கு உண்டான ஃபவுண்டேஷன் இந்த வருஷம் விழலாம். ஆனால் இவருக்கு சஷ்டமாதிபத்யமும் இருக்கிறதால மேற்படி விஷயங்கள்ள அப்பப்ப கடன், நோய், விரோதங்கள் பாதிப்பை தரலாம். ஆனாலும் என்ன சனி 3 ல இருக்கிறதால தூள் கிளப்பலாம்


5.சிம்மம்:குரு பெயர்ச்சி பலன் 2010
குரு அஷ்டமத்துல வர்ராரு. வவுறு சாக்கிரதை. டூப்ளிக்கேட் சரக்கெல்லாம் அடிக்காதிங்க பாஸ். (சொம்மா கலாய்ப்பு - வவுறு சம்பந்தப்பட்ட பிரச்சினை வரலாம். டைம் கீப் அப் பண்ண முடியாது. ஸ்டார்ட் எர்லி ரீச் சேஃப்லி. தங்கம், ரொக்கம் தொலைப்பிங்க. தங்க நகை அடகுல மூழ்கி போயிரலாம். ப்ரைவேட் லோனிங் வேணாம். ஒரு மரண செய்தி உங்களை கலக்கும். வீண்பழி வரும். அசால்ட்டா இருந்தா லாக்கப்பை கூட பார்க்க வேண்டி வரும். குருவுக்கு பஞ்சமாதிபத்யம் இருக்கிறதால குறை பிரசவம், வாரிசுகளுக்கு தீமை கூட நடக்கலாம். பரிகாரம் அவசியம்.

6.கன்னி: குரு பெயர்ச்சிபலன்கள்2010
இந்த தாட்டி குரு வர்ர மீனம் உங்களுக்கு புத்தி,புத்திர பூர்வ புண்ணிய ஸ்தானம். இவரு 6 ஐ விட்டு விலகறதே நல்ல திருப்பம். இதுல இவரு 7 க்கு வர்ரது பெட்டரோ பெட்டர். இவரு உங்களுக்கு 4,7 க்கு அதிபதி. ஏழுல ஆட்சி பெறுகிறார். ஜெனராலாவே உங்க மேல தாய், மற்றும் மனைவியோட இம்பாக்ட் அதிகம். ( ரெண்டுத்துக்கும் குருவே அதிபதி) ரெண்டு பேரையும் இன்ஃப்ளுயன்ஸ் பண்ற ப்ளானெட் ஆறுல இருந்தா இன்னா கதி? ரெண்டு பேருக்கும் நோய், அவிகளால கடன், அவிகளோட தகராறெல்லாம் ஏற்பட்டிருக்கும். ஜன்ம சனி வேற இருக்கிறதால இரண்டு பெண்கள் பதிவை படிக்காம இருந்திருந்தா நாறிட்டிருப்பிக

இப்போ குரு 7 ல ஆட்சி பெறுவதால் மனைவியோட ஆட்சி கொடி கட்டும் ( அம்மா இருந்தா ரகசியமாவாச்சும் பேலன்ஸ் பண்ணுங்க..) கண்ணாலமாகாதவுகளுக்கு தாய் வழில பெண் அமையும். மத்தபடி குருவோட காரகத்வத்துல ஓரளவு எதிர்பார்க்கலாம்.

ஜன்ம சனி 7 ஐ பார்க்கிறதால எதை செய்தாலும் தனியா செய்ங்க (கில்மாவுக்கு மட்டும் ரிலாக்சேஷன்)

7. துலா:குரு பெயர்ச்சி பலன் 2010
பெரியவுகளோட ஆதரவு கிடைக்கிறது கஷ்டம்.ஆரம்பத்துல சத்ரு,ரோக,ருண பீடைகள் அலைக்கழிச்சாலும் ஒழிஞ்சுரும். 3க்கு அதிபதி 6ல வர்ரதால சவுண்ட் பாக்ஸ்ல (காது) பிரச்சினை வரலாம். உடன் பிறப்புகளுக்கு பிரச்சினை வரலாம் அ அவிகளால பிரச்சினை ( வேறென்ன கடன்,விரோதம்) வரலாம். குறைந்த தூர பிரயாணங்கள்ள தகராறு வரலாம். தைரிய லட்சுமி டபுள் ட்யூட்டி பண்ணி வம்பை விலைக்கு /இலவசமா வாங்கி தருவாய்ங்க

8.விருச்சிகம் : குரு பெயர்ச்சிபலன்கள் 2010
இந்த தாட்டி குரு வந்து உட்கார்ர மீனராசி உங்களுக்கு அஞ்சாவது இடம். புதுசா கண்ணாலமானவுக ஆகிறவங்க ஆண் குழந்தையே வேணம்னு துடிக்கிறவுக கர்பம் தரிக்காம பார்த்துக்கங்க. புத்திர ஸ்தானத்துல புத்திர காரகனான குரு வந்தா ஆண் குழந்தை பிறக்காதுனு ஒரு விதி இருக்கு.

2/5 க்கு அதிபதியான குரு புத்தி பூர்வ புண்ணிய ஸ்தானத்துல ஆட்சி பெறுவதால பத்திரிக்கைல வர்ர மாதிரி திடீர் தனலாபம் கூட கிடைக்கலாம். புத்தி நெல்லா வேலை செய்யும். ஃபோர் சைட்டட் நெஸ் வரும் ( பேசிக்கலா உங்களுக்கு இருக்காது பாஸ் காரியம் பெரிசா வீரியம் பெரிசான்னா வீரியம் தான் பெருசுங்கற பார்ட்டி நீங்க ) பெண் குழந்தை பிறக்கலாம். ஏற்கெனவே வாரிசுகள் இருந்தா அவிக வளர்ச்சி நல்லா இருக்கும்.சின்னதா பேர்,புகழ் கூட வரலாம்.

9.தனுசு:குரு பெயர்ச்சி பலன் 2010
உங்களுக்கு லக்னாதிபதியான குரு தாய் வீடு வாகனம் , கல்வியை காட்டற நாலாவது இடத்துல ஆட்சி பெறுவதால தாய் வீடு வாகனம் , கல்வி விஷயங்கள்ள அதிகம் கவனம் செலுத்த வேண்டி வரும். சுப கிரகமான குரு கேந்திரத்துக்கு வர்ரதால தாய்க்கு சுகவீனம், வீடு மாற்றம்/ஆல்ட்டரேஷன், சேஞ்ச் ஆஃப் சீட், சேஞ்ச் ஆஃப் ப்ளேஸ், சிறு விபத்துல்லாம் நடக்கலாம். மத்திய வயசை தாண்டினவுகளுக்கு இதயம் தொடர்பான பிரச்சினை கூட வரலாம். . பரிகாரம் அத்யாவஸ்யம்.

10.மகரம்:குரு பெயர்ச்சி பலன் 2010
3க்கு அதிபதி 3லயே வராரு. இவரு பிராமண கிரகம்ங்கறதால மனசுல கோழைத்தனம் சாஸ்தியாயிரும். உடன் பிறப்புகளோட பலம் கூடலாம். அவிகளோட பிரச்சினை வரலாம். குறைந்த தூர பிரயாணங்கள்ள அல்லல் அலைச்சல் அதிகரிக்கும். மனசுல இனம் புரியாத பயம் வந்துரும். இவருக்கு விரயாதிபத்யமும் உள்ளதால உடன் பிறப்புகளுக்கு செலவழிக்க வேண்டி வரும். உங்க தைரிய சாகசங்கள் பிறருக்கு லாபமா முடியலாம். உங்களுக்கு செலவுகளை இழுத்து விடலாம்.

11.கும்பம்: குரு பெயர்ச்சி பலன் 2010

இவிகளுக்கு இப்போ அஷ்டம சனி நடக்குது.(சுருக்கமா சொன்னா இவிக சொத்தை அடுத்தவன் அனுபவிக்கனும் -அடுத்தவன் கடனுக்கு இவிக பதில் சொல்லனும்) இவிகளுக்கு குரு 2/11 க்கு அதிபதி 2ல வந்து ஆட்சி பெறுவதால் சுராங்கனி கா சேக்கு ( பைசா) வந்து கொட்டுமா? அப்படியே கொட்டினாலும் அஷ்டமத்துல சனி விட்டுருவாரா?

இதர ராசிக்காரவுகளுக்கு வர்ர அஷ்டம சனி வேறு கும்பத்துக்கு வர்ர அஷ்டமசனி வேறு. லக்னாதிபதியே எட்டுல இருந்தா சீன் எப்படி இருக்கும்? "தானும் கெட்டு தன்னை சேர்ந்தவுகளையும் கெடுத்துரனும். மன்சன் லைஃப்ல போகவே கூடாதுனு நினைக்கிறஇடத்துக்கெல்லாம் போயாகனும். (போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், ஆஸ்பத்திரி, சுடுகாடு) , உடம்பு,மனசு,புத்தி ஏன் ஆத்மா கூட க்ஷோபிக்கனும். அதான் பலன்.

12.மீனம் : குரு பெயர்ச்சி பலன் 2010
லக்னாதிபதி லக்னத்துலயே வர்ரது நெல்லதுதான் பாஸ். ஆனால் குட்டி போட்ட நாய் தன் குட்டிகள்ள ஒன்னை தானே தின்னுர்ராப்ல குரு தான் நின்ன இடத்தை நாஸ்தி பண்ணிருவாரு.அவர் நின்ன இடம் எது? உங்க தலை தான் பாஸ். மேலும் இவருக்கு ஜீவனாதிபத்யம் கிடைக்கிறதால சாதாரணமாவே எம்.ஜிஆர் வேலைகள் சாஸ்தி இதுல ஜன்மத்துக்கே வந்தா கேட்கனுமா என்ன? சப்தம சனி எஃபெக்டால ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர் ,வைஃப் வகையறாவுல இருந்த லொள்ளெல்லாம் குறையும். அஞ்சை பார்க்கிறதால அறிவு கூர்மை அதிகரிக்கும், சந்தான பாக்கியம் ஏற்படும் (பெண் குழந்தை தான்) அதிஷ்டம் கை கொடுக்கும். வெலை வெட்டி மேல அதி ஆர்வம் ஏற்பட்டு சொதப்புவிக. அடக்கி வாசிங்க. ஹெல்த் ஈஸ் வெல்த். வேளைக்கு சாப்பிடுங்க.

குருவோட காரக்த்வம்: ( குருவோட பேட்டை)

(குருவே சொல்றாருங்கோ.. ) நான் தங்கம், பைனான்ஸ், அரசியல், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வடகிழக்குத் திசை அகியவற்றிற்கு அதிகாரி, நானே புத்திரக்காரகன், பௌத்திரக்காரகன் (பேரன்கள்), நீதிமன்றம், கரூவூலம், புஷ்பராகம், பிராமணர், சான்றோர், இதயம், வயிறு, ஞாபகசக்தி, புராணம், வேதம், சேவை நிறுவனங்கள், ஆட்சி மொழி, அரசு தரும் வீட்டு வசதி, காசாளர், கண்டக்டர், முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுதல், இது எல்லாம் என் இலாகாவின் கீழ் வருபவை. தட்சிணாமூர்த்தி, சாயிபாபா, ஸ்ரீராகவேந்திரரர் ஆகியோரும் எனது பிரதி ரூபங்களே!

குருவுக்குரிய பரிகாரங்கள்:

1. வியாழக்கிழமை மஞ்சளாடை அணிந்து தட்சிணாமூர்த்திக்கோ வேறு எவரேனும் குருவுக்கோ விரதமிருங்கள்.2. தங்கத்தை லாக்கரில் வையுங்கள். 3. வட்டிக்கு ஆசைப்படாதீர்கள்.4. அஜீரணத்தைத் தவிர்த்து விடுங்கள்.5. பிராமண நண்பர்களுக்குச் சாப்பாடு போடுங்கள்.6. மஞ்சள் நிறப் பொருட்களை அதிகம் உபயோகியுங்கள்.7. கோயில், குளம், ஆசிரமம், திருப்பணி சேவைகளுக்குப் பணம் கொடுங்கள். ஆனால் நீங்கள் அங்கு செல்வதோ, ஈடுபாடு காட்டுவதோ வேண்டாம்.8. பெரிய மனிதர்களுடன் அளவோடு பழகுங்கள்.9. வங்கி, கோர்ட்டு, தேவஸ்தானங்களைத் தவிர்த்து விடுங்கள்.10. வெறும் வயிற்றில் வில்வ இலையை மென்று விழுங்குங்கள். 11. வடகிழக்கில் மேடு, படிகள், மாடிப்படிகள் இருந்தால் நீக்கி விடுங்கள்.

1 comment:

NAGA INTHU said...

/மேலும் இவருக்கு ஜீவனாதிபத்யம் கிடைக்கிறதால சாதாரணமாவே எம்.ஜிஆர் வேலைகள் சாஸ்தி இதுல ஜன்மத்துக்கே வந்தா கேட்கனுமா என்ன?/
புரியலேலையே தெளிவாக சொல்லுங்க தல!
அரவரசன்