'>

Saturday, October 16, 2010

எந்திரன் : சங்கருக்கு ஹேட்ஸ் ஆஃப்!

எந்திரனை பத்தி ( ஃபர்ஸ்ட் ஹாஃப் மட்டும் தேன்)  நான் எழுதின பதிவை பார்த்து ஒருத்தர் மனசு நொந்து போய்  நீ படம் எடுப்பா நாங்க பார்த்துட்டு விமர்சனம் பண்றோம்னுட்டார். இன்னொருத்தர் ஏன் இந்த கொலைவெறினு கேட்டிருந்தாரு. எல்லாரும் ஒரு விஷயத்தை மறந்துர்ராய்ங்க. அட நானும் ஒரு காலத்துல ரஜினி ரசிகன் தான்யா. ரஜினிக்கிருந்த மதிமயக்கத்தை எந்திரன் மூலமா தெளியவச்ச சங்கருக்கு ஹேட்ஸ் ஆஃப் சொல்லலின்னா எப்படி?

ஒன் மேன் ஷோவா கொடுத்துக்கிட்டிருந்த  ரஜினி எந்த கட்டத்துலருந்து பக்க பலத்துக்கு ஆசைப்பட ஆரம்பிச்சாருனு கரீட்டா சொல்ல முடியலைன்னாலும் ரத,கஜ,துரக,பதாதிகள்ம்பாய்ங்களே அந்த மாதிரி மாறிட்டார். சரி ஓஞ்சு போவட்டும். பக்க பலங்கறது பக்கமா இருக்கனுமே தவிர .. நம்மையே "சற்றே தள்ளியிரும் பிள்ளாய்"ங்கற கதையா போச்சுன்னா தாளி அந்த பக்கபலமே தேவையில்லாத மேட்டர்.

மொத்தத்துல சங்கருக்கு  ரஜினி மேல இன்னா விரோதம்டானு ரோசிச்சு ரோசிச்சு மண்டை காஞ்சு போச்சு. பின்னே என்ன பாஸ் ரஜினிய வடிவேலு ரேஞ்சுக்கு கொண்டுட்டு வந்துட்டாப்ல .. சிட்டி ஐஸ்வர்யா கிட்டே பேசற அசோக வனம் டயலாக் அப்படியே அச்சு அசலா வடிவேலு.  சிட்டி முகத்தை பார்த்து ஐஸ்வர்யா மயங்கி விழற பிட்டு அப்படியே " நாய் சேகர்"

சங்கருக்கு அப்படி இன்னா தான் கோவமோ  பாவம் ரஜினியை போட்டு கைமா பண்ணிக்கிறிராரு.

கண்ண நோண்டிர்ராய்ங்க (எத்தீனி தாட்டி - யப்பாஆஆஆஆஆ) , முகத்தை உடைக்கிறாய்ங்க- ஆசிட் அடிக்கிறாய்ங்க- ரஜினிய வில்லனாக்கியிருக்காரு (சிவாஜி வாசனை அடிக்குது குப்புனு) - அடியாளாக்கியிருக்காரு - எலும்பு கூடாக்கியிருக்காரு, அக்கக்கா வெட்டி ப்போட  விட்டிருக்காரு, குப்பை தொட்டிக்கு அனுப்பியிருக்காரு.. விட்டலாச்சாரியா படத்துல நரசிம்மராஜு ரேஞ்சுக்கு கொண்டுட்டு வந்துட்டாரு, ஹீரோயின் மேல எவனோ கைய வச்சா போலீஸ் போலீஸுக்கு ஃபோன் பண்ணிருவேன்னு சொல்ல வச்சிருக்காரு.. ஐஸ்வரியாவை கிட்னாப் பண்ணீட்டு போற சீக்வென்ஸ்ல சிட்டி அப்படியே தசாவாதரம் படத்துல வில்லன் கமலோட ஃபோஸை கொடுக்க வச்சிருக்காரு ( கார் பேனட் மேலயோ டாப் மேலயோ இருந்து ஷூட் பண்ற ஷாட்) ,கொசு பிடிக்க வச்சிருக்காரு.. ஒன்னா ரெண்டா..

இத்தனைக்கு பிறகும் ரஜினி விழிச்சுக்காம இருந்தா அது ஷங்கரோட தப்பில்லே..

இத்தனை செய்தும் ஷங்கரை ( ஓகேவா) நான் கிழிக்காம இருக்க காரணம் அவர் ரஜினியை கார்ப்போரேட் கனவுகள்ள இருந்து தட்டி எழுப்பி "பர தர்மத்தை விட சுதர்மமெ பெட்டருன்னு நினைக்க வச்சிருக்கிறதுதான்.

உபரியா தன் வீட்டு கல்யாணத்துக்கு ஒரு பக்கெட் சாம்பாரை பக்கெட் தூக்க வச்சதும் ஷங்கரை நான் கிழிக்காம போக ஒரு காரணம்தான்.  யாருன்னு கரீட்டா கெஸ் பண்றவுகளுக்கு சன் க்ரூப் சானலஸ்ல  எந்திரன் விளம்பரம் வரப்பல்லாம் சேனல் பைபாஸ் ஆகட்டும்.

எந்திரன் வருகையால ஒரே லாபம் என்னடான்னா இன்னம் அஞ்சு வருஷத்துக்காச்சும் கிட்னி இருக்கிற  எவனும் கிராஃபிக்ஸ் பக்கம் போகமாட்டான். (வீடியோ கேம்ஸ் பார்க்கிறாப்லயே கீது குரூ!) சன் பிக்சர்ஸ் பக்கம் தலை வச்சும் படுக்கமாட்டான்.

அந்த வகையில ஷங்கருக்கு ஹேட்ஸ் ஆஃப்..

1 comment:

NAGA INTHU said...

விமரிசனம்னா இப்படிதான்யா இருக்கனும் நச்சுனு நடுமண்டைலே லேண்ட் ஆன மாதிரி.
அரவரசன்