'>

Saturday, October 16, 2010

கிரகங்களின் பயோடேட்டா

பயோடேட்டாங்கற வார்த்தையே அவுட் டேட்டட் ஆயிருச்சு. கொஞ்ச நாள் கர்ரிகுலம் விட்டையோ என்னவோனு சொல்லிட்டிருந்தாய்ங்க இப்ப சுருக்கமா சி.வி.  தேன்.

நம்ம பயோடேட்டால என்ன இழவு இருந்தாலும், நம்ம ஜாதகத்துல கிரகங்களோட பயோடேட்டா கரீட்டா இருக்கனும்ணே. குறைந்த பட்சம் லீடிங் ப்ளேனட்னு சொல்லக்கூடிய ப்ளேனட்டோட பயோடேட்டா ( பொசிஷன்) கரீட்டா இருந்தாதான் பொயப்பு.

லீடிங் ப்ளேனட்னா:
நம்ம லக்னத்துக்ககு நல்லது செய்யற கிரகங்கள்ள மோஸ்ட் கம்ஃபர்ட்டபிள் கண்டிஷன்ல  நின்ன கிரகம்.

அல்லது நம்ம லக்னத்துக்ககு கெட்டதை  செய்யற கிரகங்கள்ள  எந்திரன் சிட்டி மாதிரி ரெம்ப டேமேஜ் ஆகி   நின்ன கிரகம். இதனோட பயோடேட்டாப்படிதான் வாழ்க்கை வண்டி ஓடும்.

அதுவும் இந்த லீடிங் ப்ளேனட் லக்னம் அ ஏழுல உட்கார்ரது, லக்னத்தை பார்க்கிறது மாதிரி எதுனா லிங்க் மாட்டினா அந்த ஒரு கிரகத்தோட பயோடேட்டா தான் உங்க பயோடேட்டாவும்.

உ.ம்: அந்த கிரகம் செவ்வாயா இருந்தா நீங்களே செவ்வாய்தான். (எவ்ரி மேன் ஈஸ் எ ப்ளேனட் - உங்களை சுத்தி இருக்கிறவன்ல எவனுக்கு செவ் நல்லாயிருந்தா அவனுக்கு உங்களால நல்லது நடக்கும் - எவனுக்கு செவ் கெட்டிருந்தா உங்களால  அவனுக்கு கேடு காலம் தேன்.

நம்ம நேரம் நல்லா இருந்தா கையில கீற தவுட்டை கூட உலகம் தங்கமா வாங்கினி போவுது.  நேரம் கெட்டுப்போயிருந்தா தங்கத்தை கூட தவிடா தட்டி விட்டுட்டு போவுது.

சில பேரு ( ஏன்  சில ஜோசியருங்களே கூட ) நேரம் என்னய்யா நேரம்? கையில காசிருந்தா எல்லாம் நடக்கும்யாங்கறாய்ங்க.எந்திரன் எடுத்தாய்ங்களே அவிக கையில காசில்லையா? ஏன் ஊத்திக்கிச்சு? நேரம்.

சரிங்கண்ணா இந்த பதிவுல கொஞ்சம் டெக்னிக்கலா சில விஷயங்களை பார்க்கலாம். ( இதையெல்லாம் குன்ஸா கியாபகம் - ரஜினியோட உச்சரிப்பு - வச்சிக்கிட்டா சமாளிக்கலாம்)

இந்த மாதிரி டெக்னிக்கல் டேட்டா எல்லாம் பிளாட்பார புத்தக கடைகள்ள இருந்து மணி மேகலை பிரசுரம் வரை ஈஸியா கிடைக்குது. இதெல்லாம் ஜஸ்ட் அரிசி பருப்பு மாதிரி. சமைப்பது எப்படினு கூட புஸ்தவம் விப்பாய்ங்க. ஆனால் அதெல்லாம் டுபுக்கு. ( அதை அய்யரு எழுதியிருந்தா தாளி .. எவனுக்கும் புரியக்கூடாதுன்னு எச்சி உமிஞ்சி சத்திய பண்ணிட்டுத்தான் எழுதியிருப்பாரு.

அதனால இந்த டெக்னிக்கல் டீட்டெயில்ஸ் எல்லாம் கொடுக்கனுமானு தயங்கியே கொடுக்கலை. வகுப்பறைனு ஒரு வலைப்பூ இருக்கு. சொம்மா வாழைப்பழத்தை உரிச்சு வச்சமாதிரி அக்கக்கா பிரிச்சு கொடுத்திருக்காய்ங்க. ஒரு நடை பாருங்க.

என்னமோ ஆரம்பிச்சாச்சு முடிச்சாகனுமே..

முதல்ல செக்ஸ்.. அடடா... அந்த செக்ஸ் இல்லே பாஸ் கிரகங்களோட பால்

சூரிய, செவ்,குரு - ஆண் பால்
சந்திரன்,சுக்கிரன்,ராகு -பெண்பால்
சனி,புதன்,கேது - மூன்றாம் பால்

( ஆண்கள் ஜாதகத்துல ஆண்கிரகங்கள்,பெண் ஜாதகத்துல பெண் கிரகங்கள் பலம் பெற்றிருக்கனும் இல்லேன்னா லொள்ளுதான்.)

இந்த மேட்டர் எப்படா உதவும்னா.. உங்க ஜாகத்துல அஞ்சாவது இடத்தை இன்ஃப்ளுயன்ஸ் பண்ற கிரகம் ஆண்ணா பெண்ணானு கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டா என்ன குழந்தை பிறக்கும்னு சொல்லிரலாம்.

ஒரு பொருள் காணாம போயிருச்சு அதை ஆரு சுட்டிருப்பாய்ங்க திருடா? திருடி?ன்னு சொல்ல உதவும்.. 

கிரக ஜாதி
(குறிப்பிட்ட கிரகம் வலிமையா அமைஞ்சா குறிப்பிட்ட சாதியோட குணங்கள் வரும்னு கணக்கு)

குரு,சுக்கிரன் - பிராமண சாதி
சூ,செவ் - சத்ரிய சாதி
சந்திரன்,புத - வைசிய சாதி
சனி - சூத்திர சாதி
ராகு - சண்டாள சாதி  ( தெய்வ நம்பிக்கை இல்லாதவுகனு சொல்லலாம் - குரு +சனி, குரு+ராகு/கேது அமைப்பை குரு சண்டாள யோகம்ங்கறாய்ங்க - நாத்திகம்)
கேது - மிலேச்சர்கள் ( வெளி நாட்டுக்காரவுக)

உங்க ஜாதகத்துல எந்த கிரகம் அனுகூலமா இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டா மேற்படி சாதியினர்ல  அந்த கிரகத்துக்குரிய சாதிக்காரவுக உங்களுக்கு அனுகூலமா இருப்பாய்ங்க

குணங்கள்:
சூ,சந்,குரு - சத்வகுணம்

( அவனவன் பாவத்துல அவனவன் போறான்னு அப்துல் கலாம் மாதிரி காலத்தை கழிச்சுர்ரது -இது சூடு,இது குளிர்ச்சி, இது பித்தம்னு பார்த்து பார்த்து திங்கறது ) 

எச்சரிக்கை:சந்திரன் வளர்பிறைலதான் வசீகரன், தேய்பிறைல சிட்டி)

புத,சுக் -ரஜோ குணம் :
( நான் தான் டாப்பு மீதியெல்லாம் டூப்புங்கற மென்டாலிட்டி- கார சாரமான  தீனி)

செவ்,சனி,ராகு,கேது - தமோ குணம்
கண்ட நேரத்துல தின்னு, க. நே கழிஞ்சு ,க. நேரத்துல புணர்ந்து வாழறது

லீடிங் ப்ளேனட் லக்னம் அ ஏழுல உட்கார்ரது, லக்னத்தை பார்க்கிறது மாதிரி எதுனா லிங்க் மாட்டினா அந்த கிரகத்தோட குணம் தான் உங்க குணம்.

கிரகங்கள் ஒரு ராசியில சஞ்சரிக்கிற காலம்:
சூ - 1 மாசம்
சந்தி - ரெண்டேகால் நாள்
செவ்- ஒன்னரை மாசம்
ராகு,கேது - ஒன்னரை வருசம்
குரு - ஒரு வருசம்
சனி -  ரெண்டரை வருசம்
புத - 1 மாசம்
சுக்கிரன் - 1 மாசம்

சுப ,அசுப கிரகங்கள்

பாப கிரகங்கள்:

சூ,தேய் பிறை சந்திரன்,செவ்,ராகு,கேது,சனி பாப கிரகங்களுடன் சேர்ந்த புதன்

சுப கிரகங்கள்:
வளர் பிறைசந்திரன்,குரு, பாவர்களுடன் சேராத புதன், சுக்கிரன்

கிரகங்களுக்கு எப்போ பலம்:
சுப கிரகங்களுக்கு வளர் பிறையில,பகல்ல, தக்ஷிணாயணத்துல பலம் ( தை மாத பிறப்பு  முதல் 6 மாசம் -புரியலிங்களா ? உதாரா ஜனவரி 14,15 லருந்துனு ஞா வச்சுக்கங்க)

பாப கிரகங்களுக்கு தேய்பிறைல,ராத்திரில,உத்தராயணத்துல பலம்.( ஆடி மாத பிறப்புலருந்து 6 மாசம் - புரியலிங்களா உதாரா ஜூன் 13,14லருந்துனு ஞா வச்சுக்கங்க)

புதன் மட்டு எவர் க்ரீன் ஹீரோங்கண்ணா (புதன்னா புரோக்கருங்கண்ணா புரோக்கர் உதவி தேவைப்படாத தொழில் உண்டா நேரம் உண்டா)

No comments: