'>

Wednesday, May 16, 2012

மே 28 அன்று ஜகன்மோகன்ரெட்டி கைது?


அண்ணே வணக்கம்ணே !

ஆந்திர முன்னாள் முதல்வர் டாக்டர் ஒய்.எஸ்.ஆரின் மகன் ஜகன் மேல சிபிஐ வழக்கு தொடர்ந்திருக்கிறதுங்கறது வரையாவது உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அந்த வழக்குல மே 28 ஆம் தேதி நேர்ல ஆஜராக சொல்லி சம்மன் கொடுத்திருக்காய்ங்க.அதுவும் எப்படி இடைத்தேர்தல் பிரச்சாரத்துல இருந்த ஜகன் கையிலயே கொடுத்திருக்காய்ங்க.

இந்த வழக்கு எப்படி வந்தது .. என்ன வழக்குன்னு ஒரு அவுட் லைன் தெரிஞ்சுக்கிட்டா காங்கிரஸுக்கு ஆந்திராவுல சமாதி கடப்பா கல்லுல கட்டப்படுமா? கிரானைட்ல கட்டப்படுமான்னு உறுதிப்படுத்திக்கலாம்.

சங்கர்ராவ்னு ஒரு மந்திரி. இவர் பாவம் கோர்ட்டு கேஸுன்னு போகவோ - லாயருக்கு ஃபீசு கொடுக்கவோ துப்பில்லாத அன்னாடங்காய்ச்சி.

ஒய்.எஸ்.ஆர் தனியாருக்கு நிலம் ஒதுக்கி 60 அரசு ஆணைகள் வெளியிட்டதாகவும் - அதனால் பலன் பெற்ற நிறுவனங்கள் ஜகனோட கம்பெனிகள்ள கோடிக்கணக்கான ரூபாய்களை முதலீடு செய்ததாவும் அதையெல்லாம் லஞ்சப்பணமா கருதி நடவடிக்கை எடுக்கனும்னு ஹை கோர்ட்டுக்கு ஒரு லெட்டர் போட்டார்.

உடனே ஹை கோர்ட் அந்த கடிதத்தை ரிட் மனுவாக ஏற்று குறைஞ்ச பட்ச ஆதாரங்கள் இருக்கான்னு பார்க்க சொல்லி சிபிஐக்கு உத்தரவு போட்டது.

சி.பி.ஐ கு.ப ஆதாரங்கள் இருப்பதா அறிக்கை கொடுத்தது. டீட்டெய்ல்ட் என்கொய்ரி நடத்தும்படி ஹைகோர்ட் உத்தரவிட்டது.

இந்த வழக்குல ஜகன் தான் முதல் எதிரி. ஆனால் நாளிதுவரை அவருக்கு சம்மன் கூட கொடுக்காம சீன் போட்டுக்கிட்டிருந்தாய்ங்க. இப்போ இடைத்தேர்தல்ல ஜகன் ஆட்களை பேதியாக்க ஜகனோட சாட்சி மீடியா நிறுவனத்தோட வங்கி கணக்குகளை முடக்கறதும் -அரசு விளம்பரங்களை நிறுத்தரதுமா டோசேஜ் அதிகரிச்சுக்கிட்டிருக்காய்ங்க.

இந்த வரிசையிலதான் மே 28 ஆம் தேதி சிபிஐ கோர்ட்ல ஆஜராக சொல்லி சம்மன். இந்த வழக்கின் ஆணி வேர் தனியாருக்கு நிலம் ஒதுக்கிய அரசு ஆணைகள். அதுக்கு டாக்டர் ஒய்.எஸ்.ஆர் ஒருத்தரை மட்டும் பொறுப்பாக்க கூடாது அந்த சமயம் மந்திரிகளா இருந்தவுகளை , ஐ.ஏ.எஸ்களையும் விசாரிக்கனும்னு ஒரு பார்ட்டி ரிட் போட கோர்ட் அவிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி விஜாரிக்க சொல்லி உத்தரவிட்டாச்சு.

சிபி ஐ காரவுக மந்திரிகளுக்கு ஃபோன் போட்டு "அப்பாய்ன்ட்மென்ட்"கேட்டுக்கிட்டிருக்காய்ங்களாம். ஒரே ஒரு பெண் ஐ.ஏ.எஸ்ஸை மட்டும் கைதுபண்ணியிருக்காய்ங்க. ஆனால் ஜகன் மேட்டர்ல மட்டும் படு ஸ்பீட்.
ஊழல் நடந்தது நெஜம்தான்னா மொதல்ல அரசாங்கம் என்ன செய்யனும்? மேற்படி 60 அரசு ஆணைகளையும் ரத்து பண்ணனும்.

அன்னைக்கு மந்திரிகளா இருந்தவுகளை ராஜினாமா பண்ணச்சொல்லனும். அன்னைக்கு இருந்த அதிகாரிகளை சஸ்பெண்ட் பண்ணனும். விசாரணை கமிஷன் போடனும். அதெல்லாம் பண்ண மாட்டோம் ஜகன் கோவணத்தை மட்டும் உருவி வாசம் பார்ப்போம்னா ஜனங்க மத்தியில சிம்பதிதான் வ்ரும்.வந்துக்கிட்டிருக்கு.

ஒரு வேளை கோர்ட்ல ஆஜராக போற ஜகனை அரெஸ்ட் பண்ணா இந்த சிம்பதி இன்னம் சாஸ்தியாகுமே தவிர குறையாது.

இதுவரைக்கும் ஜகன் மேட்டரை மேக்ரோ லெவல்ல பார்த்தோம். இப்பம் மைக்ரோ லெவல்ல பார்ப்போம்.


அரசியல்ல எதிர்கட்சித்தலைவருங்களை விமர்சிக்க "முரண்பாடுகளின் மொத்த உருவம்"னு சொல்வாய்ங்க. அந்த வார்த்தை நமக்கும் ஏகமா பொருந்துதோன்னு ஒரு சம்சயம்.

நவ பாரத நிர்மானமே லட்சியமா ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை தீட்டின நான் - அதுக்காவ 7 வருசம் வரைக்கும் சொந்த வாழ்க்கையையே திராட்ல விட்ட நான் - 12 நாள் உண்ணாவிரதம் இருந்த நான் எப்படி இந்தளவுக்கு ப்ராக்டிக்கலா ரோசிக்க ஆரம்பிச்சுட்டேன்னு புரியவே மாட்டேங்குது. எனக்குள்ள இருந்த உத்வேகம் எப்படி குறைஞ்சதுன்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன்.

அஃதாவது நம்ம ஆப்பரேசன் இந்தியா திட்டத்தை லோபட்ஜெட் படம் கணக்கா டாக்டர் ஒய்.எஸ்.ஆர் அமல்படுத்த ஆரம்பிச்சாரு. (2004) . தான் ஆண்ட காலத்துல விவசாயமே தண்டம். விவசாயிகளோட வாரிசுகள் வேறு துறைகளுக்கு மாறனும்னு "தத்துவம்" விட்ட பாபு ஒய்.எஸ்.ஆர் அரசை சகட்டுமேனிக்கு விமர்சிக்க காங்கிரசை எந்த நாளும் விடாது உடன் பிறந்தே கொல்லும் வியாதியான கோஷ்டி பூசல் காரணமா எல்லா தலைவர்களும் எவனோ செத்தான் எனக்கென்ன போச்சுன்னு இருக்க நமக்கு பொத்துக்கிச்சு.

லட்சம் கோடி ரூபாய் செலவில் ஒய்.எஸ்.ஆரம்பிச்ச ஜலயக்னம் ( அணைகள் கட்டுதல்) தொடரனும்னா அதுக்கு அவரோட ஆட்சி தொடரனும். அதுக்காவ மோரல் சப்போர்ட் ரெண்டர் பண்ண ஆரம்பிச்சோம். அந்த காலகட்டத்துல நம்ம லோக்கல் மேகசின் கருப்பு வெள்ளையில தான் வரும் . ப்ரொடக்சன் காஸ்ட் குறைவா.. கட்டுரைகளா தாளிக்க ஆரம்பிச்சம்.

2009 தேர்தல்கள் வர்ரதுக்குள்ள ஒய்.எஸ். நிலை ரெம்ப மோசம் ஆயிருச்சு. பாபு என்னடான்னா மெகா கூட்டணி வச்சுட்டாரு. இடையில சிரஞ்சீவி வேற பிரஜாராஜ்ஜியம். பாபுவோ ,சிரஞ்சீவியோ ஜலயக்னம் தொடரும்னு சாஸ்திரத்துக்கு கூட சொல்லலை.

ஜலயக்னம் தொடரனும் -ஒய்.எஸ். மறுபடி முதல்வராகனும்ங்கற ஒன் பாய்ண்ட் ப்ரோக்ராமோட ஃபீல்டுலயே இறங்கி கலக்க ஆரம்பிச்சுட்டம். மே -செப்டம்பர் இடையில மூணே மாசம். கனவு கலைஞ்ச கணக்கா ஒய்.எஸ்.ஆர் போய் சேர்ந்துட்டாரு.

இப்பம் ஜகன் தன் கட்சி ஆட்சிக்கு வந்தா அப்பாவோட எல்லா திட்டங்களும் தொடரும்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிக்கிட்டே இருக்காரு.அதனால கடைசி சான்ஸா நினைச்சு ஜகனுக்கு ஆதரவா குரல் கொடுத்துக்கிட்டிருக்கம்.


ஜகன் மேல ஏராளமான புகார்கள் .வெறுமனே ஊழல் புகார் மட்டுமில்லே பரிட்டால ரவீந்திரா கொலையிலருந்து -லேட்டஸ்டா மத்தல செருவு சூரி கொலை வரை ஆயுத சப்ளை செய்த மங்கல கிருஷ்ணா ஜகனோட ஃபாலோயர்னு பாபுவும் - காங்கிரஸ் காரவுகளும் தொண்டை. வறள கத்திக்கிட்டிருக்காய்ங்க.ஆனால் நாம என்னமோ ஜகனுக்குத்தான் ஆதரவு.

லோக்கல் பாலிட்டிக்ஸ்ல 1983லருந்து 1999 வரை கூட நாம தெலுங்கு தேச ஆதரவாளர்தேன். 2003 ல சந்திரபாபு லோக்கல் காங்கிரஸ் எம்.எல்.ஏ வை கச்சா முச்சான்னு டார்ச்சர் பண்ண ( நம்மையும் பாபு விட்டு வைக்கல்லை.அதை எல்லாம் சொன்னாலும் சனம் நம்ப மாட்டாய்ங்க அதுவேற கதை) இயல்பாவே போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான நம்ம மனசு எம்.எல்.ஏ பக்கம் சாய்ஞ்சுருச்சு. இந்த ஸ்டாண்ட்லயே இன்னை வரைக்கும் நாம இருக்கம்.

அவரு ஒய்.எஸ்.ஆருக்கு தத்துப்பிள்ளை மாதிரி. அவரும் 2014 தேர்தல் அ இடைத்தேர்தல்ல ஜகனுக்கு ஆதரவு தர நிறைய வாய்ப்பிருக்கு.

லோக்கல் பாலிட்டிக்ஸ்ல அவசரப்பட்டு அவரு இன்னைக்கோ நாளைக்கோ ஜகன் பக்கம் சாய்ஞ்சா காங்கிரஸ்ல இருந்துக்கிட்டே இன்னைக்கு வரைக்கும் ஒத்துழையாமை இயக்கம் நடத்திக்கிட்டிருக்கிற சவுண்டு பார்ட்டிங்கல்லாம் ஆக்டிவ் ஆயிருவாய்ங்க. காங்கிரஸ் பவர் ஃபுல்லாயிரும். 5 தேர்தல்களை எதிர்கொண்ட அவருக்கு இதெல்லாம் தெரியாதுன்னு சொல்ல முடியாது. அதனால கூட அவர் டிலே பண்ணிக்கிட்டிருக்கலாம்.

இடையில ஒரு தரம் மாணவர்கள் ஃபீஸ் ரீ எம்பர்ஸ் மென்டுக்காக ஜகன் உண்ணாவிரதம் இருந்தப்போ நேர்ல போயி ஆதரவெல்லாம் தெரிவிச்சுட்டு வந்தாரு ( கட்சிக்கு அப்பாற்பட்ட ஆதரவு அது)

நம்ம சிக்ஸ்த் சென்ஸ் சொல்றது நெஜமா இருந்தா இப்பம் நடக்கப்போற இடைத்தேர்தலுக்கு அப்புறமாவோ அ ஜகன் கைது செய்யப்பட்ட உடனேயோ அவரும் ஜகனுக்கு ஆதரவா குரல் கொடுப்பாரு.

மே 28 ஆம் தேதி சிபிஐ கோர்ட்ல ஆஜராக சொல்லி ஜகனுக்கு நோட்டீஸ் கொடுத்திருக்காய்ங்க. அன்னைக்கு அப்படியே அரெஸ்ட் பண்ணி கஸ்டடில எடுக்கவும் வாய்ப்பிருக்கு. ( அப்படியாவது நடக்கப்போற இடைத்தேர்தல்கள்ல நாலஞ்சு இடத்தை பிடிச்சுரலாம்னு காங்கிரசோட நப்பாசை. இந்த பப்பெல்லாம் வேகாது. ஜகனை கைது பண்ணா வாக்கு வித்யாசம் கூடுமே தவிர குறையாது.

ஒரு வேளை அவர் ஜகனுக்கு ஆதரவு தெரிவிக்காம காங்கிரஸ் டிக்கெட்லயே கன்டெஸ்ட் பண்ணாலும் அவரை ஆதரிக்க வேண்டியதுதான். பிரச்சாரத்துலயும் கலந்துக்கவேண்டியதுதான். ஏன்னா லோக்கல் பாலிட்டிக்ஸ்ல அடிக்கடி ஸ்டாண்ட் மாத்திக்க முடியாது.அவரோட ஆதரவாளர்கள் எல்லாம் இந்த 8 வருசத்துல நமக்கு கொஞ்சம் போல நெருக்கமாவே ஆயிட்டாய்ங்க.

அவிகளை எல்லாம் பகைச்சுக்கிட்டு ஜகன் கட்சிக்கு லோக்கல்ல பிரச்சாரம் பண்றதெல்லாம் தர்மசங்கடமா இருக்கும். அதுலயும் தற்சமயத்துக்கு ஜகன் கட்சியில உள்ள தெலுங்கு தேசம் முன்னாள் எம்.எல்.ஏ மேல நமக்கு நம்பிக்கை இல்லே.

நமக்கு இருக்கிற சொந்த பிரச்சினைகள்ள இந்த பிரச்சினை வேற நம்மை அண்டர் கரண்ட்ல குழப்பிக்கிட்டே இருக்கு. ஜஸ்ட் தர்ம சந்தேகம் தான். பார்ப்போம் ..

No comments: