
விளையாட்டுத்தனமாகச் செய்த ஒரு காரியம், பெரும் வினை ஆகி ஒரு தமிழ் இளைஞ னின் எதிர்காலத்தையே கேள்விக் குறி ஆக்கி உள்ளது. இந்த விபரீ தத்தில் சிக்கி இருப்பவரை, தமிழர்கள் மனதுவைத்தால் காப்பாற்ற முடியும் என்ற ஒரே ஆறுதலுடன் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.
கம்ப்யூட்டர் நிபுணரான ரவி பழனி என்பவர், கடந்த 15 ஆண்டு களுக்கு முன், அவரது மனைவி சபீதா மற்றும் மகன் தருண் ரவியுடன் வேலை நிமித்தமாக அமெரிக்காவில் குடியேறினார். 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 18 வயது நிரம்பிய தருண் ரவி, கல்லூரிப் படிப்புக்காக நியூ ஜெர்ஸியில் உள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தது தற் செயலான நிகழ்வு. ஆனால், அது ஒரு பிரச்னைக்கான பிள்ளையார் சுழியாகவும் அமைந்துவிட்டது!
ரட்கர்ஸ் பல்கலைக் கழகக் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்த தருண் ரவிக்கு ரூம்மேட்டாக வந்தவர், அமெரிக்கரான டைலர் கிலிமென்ட்டி. தற்செயலாக நெட்டில் மேய்ந்துகொண்டு இருந்த வேளையில், டைலர் ஓரினச் சேர்க்கையாளர் என்பதைக் கண்டு பிடித்திருக்கிறார் தருண். அதோடு, கல்லூரியில் சேருவதற்கு முன்பே, டைலர் தன் பெற்றோரி டம் இந்த உண்மையைச் சொல்லி இருப்பதையும் அறிந்தார். இதனை டைலரின் தந்தை ஏற்றுக் கொண்டாலும் தாய் ஏற்கவில்லை என்ற உண்மைகளும் ரவிக்குத் தெரிய வந்தன.Read More
No comments:
Post a Comment