'>
Showing posts with label தமிழர்கள். Show all posts
Showing posts with label தமிழர்கள். Show all posts

Monday, March 26, 2012

வாங்க தருண் ரவியை காப்பாற்றலாம்! : கே.சி ,யு.எஸ்.ஏ « Anubavajothidam.com


விளையாட்டுத்தனமாகச் செய்த ஒரு காரியம், பெரும் வினை ஆகி ஒரு தமிழ் இளைஞ னின் எதிர்காலத்தையே கேள்விக் குறி ஆக்கி உள்ளது. இந்த விபரீ தத்தில் சிக்கி இருப்பவரை, தமிழர்கள் மனதுவைத்தால் காப்பாற்ற முடியும் என்ற ஒரே ஆறுதலுடன் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.
கம்ப்யூட்டர் நிபுணரான ரவி பழனி என்பவர், கடந்த 15 ஆண்டு களுக்கு முன், அவரது மனைவி சபீதா மற்றும் மகன் தருண் ரவியுடன் வேலை நிமித்தமாக அமெரிக்காவில் குடியேறினார். 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 18 வயது நிரம்பிய தருண் ரவி, கல்லூரிப் படிப்புக்காக நியூ ஜெர்ஸியில் உள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தது தற் செயலான நிகழ்வு. ஆனால், அது ஒரு பிரச்னைக்கான பிள்ளையார் சுழியாகவும் அமைந்துவிட்டது!
ரட்கர்ஸ் பல்கலைக் கழகக் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்த தருண் ரவிக்கு ரூம்மேட்டாக வந்தவர், அமெரிக்கரான டைலர் கிலிமென்ட்டி. தற்செயலாக நெட்டில் மேய்ந்துகொண்டு இருந்த வேளையில், டைலர் ஓரினச் சேர்க்கையாளர் என்பதைக் கண்டு பிடித்திருக்கிறார் தருண். அதோடு, கல்லூரியில் சேருவதற்கு முன்பே, டைலர் தன் பெற்றோரி டம் இந்த உண்மையைச் சொல்லி இருப்பதையும் அறிந்தார். இதனை டைலரின் தந்தை ஏற்றுக் கொண்டாலும் தாய் ஏற்கவில்லை என்ற உண்மைகளும் ரவிக்குத் தெரிய வந்தன.Read More

Friday, December 30, 2011

தமிழர்களின் கொலை வெறி


பரிசில் கேட்டு
பாவலர் செல்வார்
பாராளும் மன்னர் அவை தனுக்கே

பாடல் கேட்டு அன்னை வந்தாள்
பாவலன் எனது குடிலினுக்கே

எமக்கிடை நிகழ்ந்த சம்வாதம்
நாளை உமக்கே ஒரு வேதம்

பாவலன்:

அன்னையே வா..
அற்பன் எனை தேடி
கற்பகம் வருவதா?

( இந்த ரேஞ்சுலயே இதை கொண்டு போனா போடா பொங்கின்னுட்டு கழண்டுக்குவிங்க..அதனால நம்ம ஸ்டைலுக்கு வந்துர்ரன்)

நான்:
வா.. தாயீ.. திடீர்னு தே.சீனிவாசன் படத்துல பெருமாள் மாதிரி விசிட் அடிச்சிருக்கே.. நான் ஏதும் பெருசா பாக்கி கீக்கின்னு கூட சொல்ல முடியாதே..

அவள்:
ஒன்னுமில்லைப்பா நீ அப்பப்போ நம்மை வச்சு கவிதைல்லாம் எழுதுவியே.. இடையில சுத்தமா நிப்பாட்டிட்டாப்ல இருக்கு?

நான்:
முள்ளை முள்ளால எடுத்த பிற்காடு ரெண்டையும் தூக்கி போட்டுரனும்னு சொல்வாய்ங்க.அப்படி வறுமைங்கற முள்ளை எடுக்க ஒன்னை முள்ளா உபயோகிச்சேன். முள்ளை எடுத்தாச்சு.அதான் உன்னையும் வீசிட்டன் போல ..என்னருந்தாலும் நானும் மன்சன் தானே..

அவள்:
என்னப்பா இது உன்னாட்டம் கவிஞர்ங்க எல்லாம் நான் தேவன் இறைவன்னு பந்தாவா எழுதிக்குவிப்பிக. நானும் .மன்சந்தானே ங்கறே

நான்:
யம்மாடி.. கண்ணதாசன் கூட எனக்கு மரணமில்லைன்னு எழுதினாரு.. ஆனால் இன்னைக்கு தமிழ் கூறு நல்லுலகே கொலைவெறியில தானே அலையுது.. அப்பம் கண்ணதாசனுக்கும் மரணம் வந்துட்டாப்ல தானே..

அவள்:
இன்னா ஆச்சு மகனே ..எம்.எஸ்.உதயமூர்த்திக்கே தன்னம்பிக்கைய இரவல் கொடுக்கிற பார்ட்டி நீ .அப்படியா கொத்தது நீயே இப்டி பேசலாமா?

நான்:
கொலை வெறி தலைக்கேறின சமயமும் கண்ணதாசனை தமிழ் மனம் மறக்காது. பத்து நாளைக்கப்புறம் கொலை வெறியை நினைக்காதுன்னு கவர் பண்ணி பேசலாம்.ஆனால் இந்த பத்து நாள் கண்ணதாசனுக்கு இறப்புங்கறது யதார்த்தமில்லியா?

அவள்:
நான் ஏதோ ஒரு பாட்டு வாங்கிக்கினு போயிக்கலாம்னு வந்தேன்.. உன் மூடு சரியில்லை போல இருக்கு. நான் கழண்டுக்கறேன்.

நான்:
ஹய்யோ ஹய்யோ.. பத்து வருசம் போனா நான் எழுதற இந்த தமிழையே பேச ஆளில்லை,எழுத ஆளில்லை. படிக்க ஆளில்லை இதுல புராதன தமிழ்ல நான் பாடி என்ன ஆகப்போகுது. ஆளை விடு தாயி..

அவள்:
பார்த்தயா இரும்பை காய்ச்சறாப்ல இத்தனை காச்சியும் உன் திமிர் போகலியே..

நான்:
ஆத்தா.. பாட்டுங்கறது ஓட்டுலருந்து பழம்புளி மாதிரி கழண்டு வரனும். புளியங்காயை நசுக்கினா என்னாகும்..

அவள்:
அப்போ உனக்கு எட்டு இடமும் குளிர்ந்திருந்தாதான் பாடுவேங்கறே..

நான்:
நான் அப்படி சொல்லலே. என் தமிழை தட்டி தரம் பார்த்து அதன் உரம் கண்டு வரம் கொடுக்க நீ மட்டும் இருந்தா போதாது..தரணியில தமிழ் தழைக்கனும். அப்பம் பாடினா ஒரு அருத்தம் இருக்கும்.

அவள்:
மகனே.. கால சக்கரம் வட்டமா சுழலும்.சரித்திரம் ஒரு பைத்தியம் மாதிரி .ஒரே மேட்டரை மறுபடி மறுபடி சொல்லும். வெய்ட் அண்ட் சீ..

நான்:
நம்ம ஃபிலாசஃபியே லைஃப் ஈஸ் வெய்ட்டிங் - என்பது தான்.காத்திருக்கிறதுல எனக்கு ஒன்னும் அப்ஜக்சன் இல்லை.

அவள்:
அப்பம் பாட்டு இல்லேங்கறே..

நான்:
ஆமா தாயீ .. நீ கம்ப்யூட்டரை நாஸ்தி பண்ணி - காலண்டர் மேட்டரை சொதப்பி - ரெக்கார்டிங்குக்கு உபயோகிக்கிற மொபைலை மொக்கை பண்ணி என்னென்னமோ செய்து பார்த்தே. ஆனாலும் பாட்டு வரலை..

நான் இந்த நாட்டை - என் மொழியை - தருமத்தை - நியாயத்தை - காலைல அஞ்சு மணிக்கு எழுந்து சோறாக்கி வேலைக்கு போயி ஆறின சோத்தை தின்னு - கூலி வாங்கி -அரிசி வாங்கி -புளி வாங்கி சமைக்கிறாளே அந்த சித்தாளை கூட உன் உருவமாத்தான் பார்க்கிறேன்.

இதையெல்லாம் ஒரு ரேஞ்சுக்கு கொண்டு வந்த பிற்காடு பாட்டு என்ன பாட்டு காவியமே தீட்டிருவம்ல.. வெய்ட் அண்ட் சீ..




Thursday, March 17, 2011

2012 பிப்.8 முதல் 24 வ. இலங்கையில் தமிழர் ஆட்சி?


1948+64 வருடங்கள் முடிந்தால் இலங்கையில் அதுவரை அடிமைப்பட்டு கிடந்தவர்கள் அதை  ஆளும் வாய்ப்பை  பெறலாம் என்பது என் ப்ரிலிமினரி ப்ரிடிக்சன். திடீர்னு என்ன  இந்த மேட்டர்ல அக்கறைனு கேப்பிக.

என்னதான் இன்னொரு மானிலத்துல பிறந்து -அங்கனயே வளர்ந்தாலும் இனம் -மொழி இதெல்லாம் தமிழ் தானே. என்னதான் விட்டேத்தியா சோசியத்தை பத்தி பீசிக்கிட்டிருந்தாலும் உள்ளூற ஒரு ஃபீலிங் இருக்குங்கண்ணா.

இதுல வேற ஆரோ ஒரு சோசியர் 2011க்குள்ள இலங்கை அழியும்னு சொன்னதா தகவல்.இந்த கான்செப்ட்ல பதிவுலகத்துல நிறைய கச முசா நடக்கிறதை கேள்விப்பட்டு சரி நம்ம பங்குங்கு நாமும் கொஞ்சம் போல குழப்பி வைப்போமேன்னு தான் இந்த பதிவு. இன்னொரு நண்பர் ஏற்கெனவே இந்த சப்ஜெக்டுக்கு கர்சீஃப் போட்டு வச்சிருக்காரு.அவருக்காகவும் தான் இந்த பதிவு.
Read More