'>

Monday, March 26, 2012

நிர்வாகம்: சில நிர்வாண உண்மைகள்




அண்ணே வணக்கம்ணே !
அம்மா பட்ஜெட் போட்டாச்சு .அதுக்கு மிந்தி அதென்னமோ விஷன் 2023 ஆமே அதை கூட விட்டாச்சு. பட்ஜெட் சம்பிரதாயத்தையாவது  புரிஞ்சுக்கலாம். அதை விடலைன்னா அரசு துறைகளுக்கு ஃபண்ட் ரிலீஸாறதுல டெக்னிக்கலா பிரச்சினை வந்துரும்.

இடையில விஷன் 2023ன்னு விட்டிருக்காய்ங்களே இந்த சம்பிரதாயம் வேற புதுசா எதுக்குன்னு கேப்பிக. எங்க பக்கம் சந்திரபாபு கூட விஷன் 2020ன்னு ஒன்னை விட்டாரு ( கலாம் விட்டதை பார்த்து எங்காளும் விட்டதால அதே பேரை உபயோகிச்சுக்கிட்டாப்ல இருக்கு).

பாபு விட்டதை கம்யூனிஸ்டுங்க இது ட்வன்டி ட்வன்டியில்லை ஃபோர் ட்வென்டின்னு விமர்சிச்சாங்க. நாம ஒன்னும் மாஸ்டர் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் இல்லைதான்.ஆனால் இவிகளோட " நிர்வாக சீர்கேட்டு" க்கு அந்த நாள் முதல் இந்த நாள் வரை  பலி கடா ஆன வகையில நமக்கும் கொஞ்சம் பட்டறிவு வந்துருச்சு.

காந்தி தாத்தா சொன்ன கிராம ராஜ்ஜியம் பெட்டர் சாய்ஸா தோனுது.தாத்தா இதை ப்ரப்போஸ் பண்ண  நாள்ள தகவல் தொழில் நுட்பம்லாம் இல்லை. அந்த தேதிக்கு கி.ரா வை கொண்டு வந்திருந்தா ஒவ்வொரு கிராமமும் அன்றைய ரஷ்யா மாதிரி இரும்புத்திரைக்கு பின்னாடி போயிருக்கும்.

அன்னைக்கிருந்த கல்வியறிவின்மை,சாதீய அமைப்பு ,மௌடீகங்கள் காரணமா கிராம ராஜ்ஜியமே ஒரு சாபக்கேடா கூட மாறியிருக்கும். ஆனால் இன்னைக்கு 1000 க்குள்ள சனத்தொகை உள்ள கிராமங்களை ஒரு யூனிட்டா வச்சுக்கிட்டு ஒரு பிரதி நிதியை மக்கள் தேர்வு செய்துக்கிட்டா போதும்.அந்த ஆசாமிக்கு கம்ப்யூட்டர் -இன்டர்  நெட்ல பரிச்சயமுள்ள ஒரு உதவியாளரை ஏற்பாடு பண்ணிரனும்.

அங்கன கிராம சபைய ஏற்பாடு பண்ணி அந்த கிராமத்தோட "அசலான பிரச்சினை என்ன? அதுக்கு தீர்வு என்ன?"ன்னு ஒரு அறிக்கை தயாரிச்சு அரசுக்கு அனுப்பனும். கிராம சபைய வீடியோல கவர் பண்ணிரனும்.

நாடு முழுக்க நடந்த கிராம சபைகள் -அவற்றில்  மக்கள் தெரிவிச்ச  கருத்துக்கேற்ப தயாரிக்கப்பட்ட அறிக்கைகளை அடிப்படையா வச்சு க்ராஸ் ரூட்  லெவல்ல ஆக்சன் ப்ளான் ஒன்னை தயாரிக்கனும்.அதை அமல்படுத்தனும்.

இதை  எல்லாம் செய்யாம எதையோ பார்த்து எதுவோ சூடு போட்டுக்கிட்ட கதையா தலை நகர்ல , தலைமை செயலகத்துல உட்கார்ந்து திட்டம் போட்டா அது வெத்து.

என்னதான் மக்களுக்கு இலவசங்களை கொடுத்து கெடுத்து வச்சிருந்தாலும் பெருவாரியான சனம் கேட்கிறது வேலை வெட்டியைத்தான்.டாஸ்மாக் உபயத்துல ஆல்க்கஹாலிக்கா மாறிட்ட கிராக்கிகளை தவிர மத்தவுக வேலை வெட்டி கொடுத்தா சந்தோசமா செய்யற மூட்ல தான் இருக்காய்ங்க.

டென்டர்,காண்ட்ராக்டுக்கு கமிஷன்லாம் பத்து ,பதினைஞ்சுன்னு ஆரம்பிச்சு இன்னைக்கு இருபத்தைஞ்சு வரை போயிருச்சுன்னு தகவல்.இனியும் வளர்ச்சி ,உள் கட்டமைப்பு வேலைகளுக்கு டென்டர்,காண்ட்ராக்டை நம்பினா வேலைக்காகாது.

தேவை எங்கே இருக்கோ அங்கனயே சோர்ஸ் ஏற்படுத்தி தேவைய நிறைவேத்தற வழிய பார்க்கனும். எந்த ஒரு இளைஞனும் / பெண்ணும் வேலை வெட்டி இல்லாம இருக்கக்கூடாது. ஊர்காவல் படை மாதிரி ஒரு படைய உருவாக்கனும். (இதுல போட்டிங்கற பேச்சே கூடாது - வேலை வேணம்னு வர்ர எல்லாருக்கும் வேலை கொடுத்துரனும் -மிஞ்சிப்போனா மெடிக்கல் டெஸ்ட் வைக்கலாம் அவ்ளதேன்)

டென்டர்,காண்ட்ராக்டுன்னு அரசு பணத்தை கரியாக்கறதை விட மேற்படி படைய வச்சு ஒர்க் அவுட் பண்ணலாம். கிராமப்புறங்கள்ள சாலைகள், குடி நீர், பாசன நீர் , கழிவு நீர் மேலாண்மை, பொதுக்கழிவறைகள், சின்ன சின்ன கட்டிடங்கள்னு சில அம்சங்களை அவிக கிட்டே விட்டுப்பார்க்கலாம்.

ஹும் எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ வந்துட்டம். அரசாங்கம் குடிகளை சம்பாதிக்க செய்யனும். சம்பாதிக்கிறவனை ஊக்குவிக்கனும். அவன் சம்பாரிச்சதை எவனும் கொள்ளையடிச்சுராம பாதுகாக்கனும். வரி வட்டின்னு வசூலிச்சு அரசாங்கம் கிழிக்கிறதை சனங்களே கிளிக்க சான்ஸிருக்கு.

சூட்சுமத்தை அறிஞ்சு , புரிஞ்சு தீர்வை எட்டி பிடிக்கிறதை  விட்டுட்டு  பட்ஜெட்,விஷனுன்னு  ஜல்லி அடிக்கிறாய்ங்க.இதெல்லாம் எங்கே போயி முடியப்போகுதோ தெரியலை.

ஒழுங்கு மரியாதையா பவர் மேனேஜ்மென்டை  ப்ளான் பண்ணி -  சிக்கனத்தை கட்டாயமாக்கி -மின் சக்தியை சேமிச்சா - கொடுத்த மின்சாரத்துக்கு கரீட்டா கட்டணம் வசூலிச்சு -வசூலிச்சதை நிர்வாக செலவுக்கே எரிச்சு போடாம ரீ இன்வெஸ்ட்மென்ட் செய்தா இதையெல்லாம் அரசியல் தலையீடு இல்லாம பக்காவா அமல் படுத்தினா அணு உலைக்கெல்லாம் அவசியமே இல்லை.

இவிக நெஜமாலுமே முட்டாளுங்களா அ அப்படி நடிக்கிறாய்ங்களான்னு கூட குழப்பமாயிருது.. அட தலைமைச்செயலக ஊழியர்கள் /மந்திரிகள் உட்பட அவிகவிக வீட்டில் இருந்தே ஆன்லைன்ல வேலை செய்யறாப்ல இருந்தா எத்தனை செலவு குறையும்? தலைமை செயலகத்தை க்ளோபல் டென்டர் கூப்டு 99 வருசத்துக்கு லீசுக்கு விட்டுரலாம்.

இங்க நாம சொல்றதெல்லாம் பை.தனமா இருக்கும்.ஆனால் எல்லாம் நடைமுறைக்கு வரத்தான் போகுது. என்ன ஒரு பத்து வருசம் பிடிக்கும். வேற  வழியில்லாம நடைமுறைக்கு கொண்டு வருவாய்ங்க. அவ்ளதான். ஒளியட்டும்.. நமக்கெதுக்கு இந்த தலைவலி.ஏற்கெனவே நம்ம மண்டையில நிறைய ஸ்க்ரூ போல்ட்டெல்லாம் லூசாகிக்கிடக்கு. ஆளை விடுங்கப்பு..

No comments: