'>

Monday, February 13, 2012

ஜோதிடம் 360 ரெடி!



அண்ணே வணக்கம்ணே !

ஏற்கெனவே ஒரு தேதி அறிவிச்சு அது தவறினதால புஸ்தவம் அச்சாகிற படத்தையெல்லாம் வைக்க வேண்டியதாயிருச்சு. நீங்க பார்க்கிற ஃபோட்டோ நேத்து திங்கள் இரவு 7.30 மணி நிலவரத்தை காட்டுது . இன்னைக்கு மதியம் அ மாலைக்குள்ள மொதல் 100 புஸ்தவமாவது பைண்டிங் முடிச்சு கொடுக்கிறதா சொல்லியிருக்காய்ங்க. முன்பதிவு செய்துக்கிட்டவுகளுக்கு ஒரு நாள் முன்னே பின்னே கூரியர்ல அனுப்பிருவம் .

இன்னொரு மேட்டர் இன்னான்னா 10 கேள்விக்கு பதில்+ புஸ்தவம் ரூ.250 ன்னு அறிவிச்சிருந்தம். முன் பதிவு ஜரூரா நடந்தா கைக்காசு போடாமயே ஹை குவாலிட்டில புஸ்தவம் கொண்டுவரலாம்னு ப்ளான்.ஆனால் பப்பு வேகல்லை.

ஆப்பரேஷன் இந்தியா 2000 தவிர வேறு எந்த விசயத்துக்கும் கைக்காசை இன்வெஸ்ட் பண்றதில்லைன்னு டிசைட் பண்ணியிருக்கமா.. முன்பதிவுல கிடைச்ச காசை மட்டும் வச்சு " என்ன" பண்ண முடியுமோ அதை மட்டும் செய்திருக்கம்.

யூனிட் காஸ்ட் குறைஞ்சு போனதால கண்ணா இன்னொரு லட்டு திங்க ஆசையான்னு கேட்காமலே முன் பதிவு செய்துக்கிட்டவுகளுக்கு மட்டும் 1+1 அதாவது ரெண்டு பிரதி கூரியர்ல அனுப்பறதா இருக்கம்.

இதுக்கு மேல புஸ்தவத்துக்கு காசு அனுப்பறவுகளுக்கும் 1+1 ஆஃபர் உண்டு. ( ஆயிரம் பிரதி போட்டு வருசக்கணக்கா விக்கிறதுல்லாம் அசிங்கம் வாத்யாரே.. ஆடித்தள்ளுபடி கணக்கா தள்ளி விட்டுரனும்) ஆக அனவுன்ஸ்மென்ட் ஓவர்.

நம்ம சிஸ்டம் ஏகத்துக்கும் கண்ணா மூச்சி காட்டிருச்சா ஜோதிடம் 360 வேலை முடிஞ்சும் 3 நாளா பொளப்பு கேட்டுப்போச்சு ..இன்னைக்கு டபுள் ட்யூட்டி அடிச்சா பென்டிங் ஒர்க் எல்லாம் முடியும் நாளைக்கு வச்சுக்குவம் கச்சேரி.

கில்மா கனவுகள் - யோகங்களின் மறுபக்கம்னு டபுள் தமாக்கா தேன்..

No comments: