'>

Sunday, December 25, 2011

இன்றைக்கு நாள் எப்படி?

சனிப்பெயர்ச்சி அடுத்த ரெண்டரை வருஷம் எப்படி இருக்கும்னு சொல்லுது. குரு பெயர்ச்சி அடுத்த 1 வருஷம் எப்படி இருக்கும்னு சொல்லுது. இன்னைக்கு நாள் எப்படி இருக்குன்னு எப்படி கண்டுக்கறது? அதுக்குத்தேன் இந்த அத்யாயம்.

இதுல சம்பிரதாய முறைகளை ஓரலா சொல்லி இந்த முறைகள்ள உள்ள ரிஸ்க் என்ன அதை ஓவர் கம் பண்ண என்ன செய்றதுங்கற மேட்டரையும் தரேன்.

சம்பிரதாய முறைகள்:

1.தாராபலம்:

காலண்டர்ல இன்னைக்கு என்ன கிழமைங்கறதோட என்ன நட்சத்திரம்னு தந்திருப்பாய்ங்க. உங்க ஜன்ம நட்சத்திரம் எதுன்னு தெரியும்ல.தெரியாதவுக தங்களோட பெயரின் முதல் எழுத்தை வச்சு நாம நட்சத்திரத்தை தெரிஞ்சுக்கிடலாம்.( ஆனா இது அன் சைன்டிஃபிக்)

மொதல்ல உங்கள் ஜன்ம/நாம நட்சத்திரம் முதலாக இன்றைய நட்சத்திரம் வரை எண்ணனும்.( உங்க நட்சத்திரத்தையும் சேர்த்து எண்ணுங்கண்ணா) 9 அ 9க்குள் வந்தா அதற்கான பலனை கீழே பார்த்துக்கங்க.

அப்படி எண்ணும் போது 9 க்கு மேல வந்தா வந்த எண்ணிக்கைய ஒன்பதால வகுக்கனும். அப்படி வகுத்து வந்த மீதியை வச்சும் பலனை கீழே பார்க்கலாம்.

2 - 4 -6 -8 -9 என்றால் நலம். இதர எண்ணிக்கைக்கான பலனை பாருங்க.

1.ஜன்ம தாரா :3.விபத் தாரா 5.ப்ரத்யுக்த தாரா 7.நைதன தாரா ஆகிய 4 நட்சத்திரங்கள் நன்மையை தராது.


இதுல உள்ள ரிஸ்க்:

குறிப்பிட்ட நட்சத்திரம் உங்க ஜன்ம நட்சத்திரத்துலருந்து 2 - 4 -6 -8 -9 ஆவது நட்சத்திரமா வந்துட்டா மட்டும் போதாது. அந்த நட்சத்திரத்துக்கு அதிபதியான கிரகம் கோசாரத்துல உங்களுக்கு அனுகூலமாவும் இருக்கனும்.

உதாரணமா இன்னைக்கு பூராடம் காலை 7.52 வரை. இதற்கு பிறகு உத்திராடம். இப்பம் நேரம் 10.09 ஆயிருச்சு.அதனால பூராடத்தை விட்டுருவம்.

என் ஜன்ம நட்சத்திரம் மகம். உத்திராடம் எனக்கு 12 ஆவது நட்சத்திரம். இதை 9 ஆல் வகுத்தால் மிஞ்சறது 3 . அப்பம் இது எனக்கு விபத் தாரா. அதனால இந்த நாள் எனக்கு நல்லாருக்காதுன்னு தாராபலம் சொல்லுது.

ஆனால் உத்திராடத்துக்கு அதிபதி ஆரு? சூரியன். இவர் கோசாரத்துல எங்கன இருக்காரு? மார்கழி மாசங்கறதால தனுசுல இருக்காரு.

என்னோட ராசி சிம்மம். சிம்மத்துக்கு தனுசு 5 ஆவது ராசி. சூரியன் என்ற கோணத்துல பார்த்தா அவர் 5 ல இருக்கிறது நல்லதில்லைதான்.ஆனால் ராசியாதிபதிங்கற கோணத்துல பார்க்கும் போது ஓகே.

ராசிக்கு அஞ்சுல உள்ள சூரியன் தனக்கு சொந்தமான நட்சத்திரங்கள்ள தான் வேலை செய்யமுடியும். ஐ மீன் "கூர்மையான புத்தி ,அதிர்ஷ்டம், வாரிசுகளால் உதவி" ன்னு உதவனும். ( உதவினாரான்னு நாளைக்கு சொல்றேன்)

2.சந்திரபலம்:

இன்று நாள் எப்படின்னு பார்க்கிறதுல முக்கியமான முறை சந்திர பலம். பஞ்சாங்கத்துல பார்த்திங்கனா கீழ்கண்டவாறு பொதுவா ஒரு பட்டியலை தந்திருப்பாய்ங்க.
1.சுகம், நன்மை

2. நஷ்டம் -சமம்

3.லாபம் -நன்மை

4.வியாதி தோஷம்

5.பங்கம் துயரம்

6.சத்ரு ஜெயம் ,நன்மை

7.கடன் -சமம்

8.விரோதம் ,சிரமம்

9.தாமதம் -சமம்

10 சம்பத்து நன்மை

11.ஐஸ்வரியம்

12.நஷ்டம்

இன்னைக்கு உத்திராட நட்சத்திரம். (7.52 முதல்) இதுல மொத பாதம் தனுசு. அதாவது மொத 6 மணி நேரம் அதாவது மதியம் 1.52 வரை சந்திரன் தனுசுல இருப்பாரு.(என் ராசிக்கு அஞ்சாவது ராசி) சந்திர பலத்துக்கான பொதுவிதி என்ன சொல்லுது? சந்திரன் அஞ்சுல இருந்தா பங்கம் -துயரம். சரி மதியம் 1.52 க்கு 6 க்கு வராரு. இதுக்கு பொதுவிதி என்ன சொல்லுது? சத்ரு ஜெயம் - நன்மை.


இதுல உள்ள ரிஸ்க்:

1.சந்திரன் வளர்பிறையா தேய்பிறையான்னு பார்க்கப்படலை (இவர் வளர் பிறையில சுபன் - தேய்பிறைல பாபர்.)

இது அமாவாசைக்கு பிறகான நாள் என்பதால் அவரு வளர்பிறை /சுபரா இருக்காரு

2. சந்திரனுக்கு என்ன விதமான ஆதிபத்யம் கிடைச்சிருக்குன்னு பார்க்கப்படலை. என்னோட சிம்ம ராசிக்கு விரயாதிபதி.

வளர்பிறையில சுபனா இருக்கக்கூடிய சந்திரன் 5 ல் இருந்தா சனங்களுக்கு நல்லதில்லை. ( வேவரிங் சாஸ்தியாயிரும்) ஆனால் ஒரு சிந்தனையாளனாக - எழுத்தாளனாக நமக்கு வேவரிங் வந்தா -அதாவது ஒரே கணத்தில் பல யோசனைகள் வந்தா - அதுல பெட்டர் ரோசனை எதுன்னு நூல் கட்டி இழுத்து யூஸ் பண்ணிக்குவம்.

மதியத்துக்கு மேல மகரத்துக்கு போறாரு.அது ஆறாவது இடம் . விரயாதிபதி ஆறில் நின்னா சத்ரு ஜெயம்,ரோக நிவர்த்தி,ருண விமுக்தி நடக்கனும். (இது நடந்ததா இல்லையான்னு நாளைக்கு சொல்றேன்)

உஸ் அப்பாடா இப்பமே கண்ணை கட்டுதே..!

1 comment:

gvsivam said...

சார் தினப் பலன் பற்றி நுணுக்கமா சொல்லி இருக்கிங்க.
தாரா பலன் பற்றி ஒவ்வொரு நட்சத்திர காரருக்கும் விரிவா சொல்லமுடியுமா?
இதில் ஜன்ம லக்னத்தின் தலையீடு உண்டா?