இது என்னடா பாரததிரு நாட்டுக்கு வந்த சோதனைன்னு நொந்துராதிங்க. இதுல சின்ன ஆறுதல் தரும் சின்ன விஷயம் இருக்கு.அவர் ஜட்ஜ் ஆக இருக்கும்போது கிரிமினல் இல்லை. ஒரு காலத்துல கிரிமினலா இருந்து நீதிபதியானாரு.நீதி வழங்கும் பணிகளில் என்னென்ன கிரிமினல் வேலை செய்தாரோ ஆருக்கு தெரியும்.
அவர் மேலான கிரிமினல் கேஸ் விவரம்:
பல்கலைகழகத்துக்கு வந்து செல்லும் பஸ் மேல கல்லெறிஞ்சு ,பயங்கர ஆயுதங்களோடு பிரயாணிகளை காயப்படுத்தினதா அவர் மேல வழக்கு.
ஹை கோர்ட் நீதிபதியாற சமயம் கூட மேற்படி கேஸ் நிலுவையில் இருந்தது. இதை சுப்ரீம் கோர்ட் பார்வைக்கு,அரசாங்கத்தோட பார்வைக்கு போகாம மறைச்சு நீதிபதியாயிட்டாரு. அவரு நீதிபதியான பிற்காடு அரசாங்கம் ஒன்னரை வருசம் கழிச்சு அந்த கேஸை வாபஸ் வாங்கிருச்சு.
வாபஸ் ஆன கதை:
அவர் நீதிபதியாகி ஒன்னரை வருடம் நீதி வழங்கிக்கொண்டிருந்த பிறகு 2001 ல் அந்த கேஸை தீர்க காலம் நிலுவையில் உள்ள வழக்கா "ஐடென்டிஃபை" செய்து அரசாங்கம் வாபஸ் வாங்கிருச்சு.
மேலதிக தகவல்கள்:
கல்லெறிஞ்சது ,பிரயாணிகளை காயப்படுத்தினது 1981 ல் -தலைவரு வழக்கு நடந்த கோர்ட்டுக்கு கூட ஆஜராகலை. வாரண்ட் கூட இஷ்யூ ஆச்சு.ஆனால் லோக்கல் போலீஸ் ஒத்துழைப்பு காரணமா அரெஸ்ட் ஆகலை.
தன் வழக்கை இருபது வருசமா பெண்டிங்ல "போட" வச்ச இந்த எதிர்கால (?) நீதியரசர் தான் நீதிபதியாகி ஒன்னரை வருடத்துக்கு பிறகு "மூவ்" பண்ணி சிறப்பாணை வெளியிட வைத்து அரசாங்கமே கேஸை வாபஸ் வாங்கிக்கிறாப்ல மேனேஜ் பண்ணாரு
போனஸ் தகவல்:
அன்னைக்கு முதல்வரா இருந்த சந்திரபாபு அண்ட் கோவிற்கு "ஆலோசகரா " இருந்திருக்காரு.இப்பம் ஒய்.எஸ்.ஆர் மனைவி ஹைகோர்ட்டுக்கு சந்திரபாபு மேல் தெரிவிச்ச புகார் மேல சிபிஐ விசாரணைக்கு உத்தரவு வந்தது. பாபு ஸ்டே வாங்கிட்டாரு.
இந்த விவகாரங்கள்ள எல்லாம் மேற்படி நீதியரசோட கை இருக்கிறதா தகவல். தெலுங்கு தினசரி ஒன்னு நோண்டி நுங்கெடுத்து முழு ஆதாரங்களோட இந்த செய்தியை பிரசுரிச்சிருக்கு.
தமிழ் கூறு நல்லுலகம் இந்த செய்தியை அறிந்தே ஆகனும்னு நாம டப் பண்ணி பதிவா விட்டிருக்கம். ( கபில் சிபல் அண்ணா எனக்கொன்னும் தெரியாது.. சோனியா மிஸ்ஸுக்கு சொல்லி முட்டி போடவச்சிராதிங்க.ஆமாம் சொல்ட்டேன்)
No comments:
Post a Comment