'>

Saturday, December 24, 2011

சமையல் கலை அறிவோம்!

சமையல்னா அது ஏதோ "பொம்பளைங்க சமாசாரம்"ங்கற மாதிரி ஒரு எண்ணம் தந்தை குலத்துக்கு உண்டு. மாதவிலக்குன்னா என்னனு தெரியாத ஆண் அரண்டு போறான். இதை ஒரு ட்ராப்பா வச்சு "சீன் போட்டு" புருசனை சரண்டர் பண்ணிக்கிற தாய்க்குலம் கூட உண்டு. "களவும் கற்று மற"ன்னு பெரியவுக சொல்லியிருக்காய்ங்க. சமையலை பத்தி தெரிஞ்சுக்கிட்டா தப்பே இல்லை.

சில பொம்பளைங்க " கழுவி ,கவுத்து ,ஆக்கி ,படைச்சு,கழுவி" ன்னு பூதக்கண்ணாடியில காட்டுவாய்ங்க. சமைக்கிறதே மலை - சமைக்கிறதை தவிர மத்த எதுவும் எனக்கு சம்பந்தமில்லேங்கற மாதிரி ஃபிலிம் காட்டுவாய்ங்க.

அதனால மாதவிலக்கை பத்தி தெரிஞ்சுக்கற மாதிரியே சமையலை பத்தியும் கு.பட்சம் பேசிக்ஸ் மட்டுமாவது தெரிஞ்சு வச்சுக்கிட்டா தந்தைகுலம் தப்பிக்கலாம்.

மேலும் சமையல் கலைக்கு உதாரணம்னு சொல்ல வந்தா நள பாகம் ,வீம பாகம்னு தான் சொல்வாய்ங்க. ( ரெண்டுத்துக்கும் என்ன வித்யாசம்னு சொல்றவுகளுக்கு சமையல்ல உப்பு,காரம் சாஸ்தியாயிட்டா எப்படி மேனேஜ் பண்றதுங்கற மேட்டர் மெயில் மூலம் அனுப்பப்படும்.)

சரிங்ணா பதிவுக்குரிய மேட்டருக்கு வர்ரதுக்கு மிந்தி சின்னதா சில ஃப்ளாஷ் பேக்ஸ்.

அப்பா ஹானஸ்ட் ஆஃபீசர். மானிலத்துல உள்ள எல்லா ஜில்லாவுலயும் போஸ்டிங் வாங்கின பார்ட்டின்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன்.

ஃப்ளாஷ் பேக் : 1

பெத்த பொண்ணை புகுந்த வீட்டுக்கு அனுப்பறாப்ல அம்மா அப்பாவுக்கு சாப்பாட்டு பொடி,மிளகு சீரகம்,சாம்பார் பொடி,வத்தல்,ஊறுகாய்னு பேக் பண்றதோட இந்த காலத்து "ஆஹா என்ன ருசி"ப்ரோக்ராம் கணக்கா சமையல் குறிப்புகளை எழுதி அனுப்புவாய்ங்க. அப்பம் நாம கால் டிக்கெட் .விவரம் போதாது.

ஃப்ளாஷ் பேக்:2

அம்மாவுக்கு பிபி,ஷுகருன்னு எந்த நோயும் இல்லைன்னாலும் வீட்ல உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகம்ங்கறதால மேல் வேலை சாஸ்தி. கண்ணால ஃபோட்டோல "பசி"சோபா கணக்கா இருந்த அம்மா பண்டரி பாய் மாதிரி ஆயிட்டாலும் அவிக மேல கவர்ச்சி மட்டும் குறையாத காரணத்தால மூட் இருக்கிற சமயத்துல எல்லாம் அவிக வேலைகளை ஷேர் பண்ணிக்கிறதுண்டு. ( கழுவறது, மெழுகிறது,வெட்டறது)

ஃப்ளாஷ் பேக் :3
1987 ல 3 மாசத்துக்கு அப்பாறம் வரப்போற ரெம்யூனரேஷனை நம்பி செகண்ட் ஹேண்ட் லூனாவுக்கு கமிட் ஆகி அப்பன் கிட்டே அட்வான்ஸ் காசு கேட்க அது முல்லை பெரியாறு கணக்கா சிவியர் ஆகி ஸ்டெப் அவுட் ஆக வேண்டியதாயிருச்சு. ( நல்லவேளை அம்மா 1984 லயே டிக்கெட்டு) முன்னாள் DTOங்கற ஹோதாவுல இந்நாள் DTO வை அப்பா பிடிச்சு அவரு " நீ என்ன வேணா செய்துக்க ஆனா வீட்லருந்து செய்"னு ரோசனை சொன்னாரு. ஒரு 3 மாசம் மாடி தனியறையில சுயம்பாகம் செய்யவேண்டியதாயிருச்சு.

ஃப்ளாஷ் பேக் 4

ஹைதராபாத்ல அண்ணனோட தனியறையில தங்கியிருந்தப்ப - கண்ணாலத்துக்கப்பாறம் பொஞ்சாதி ஊருக்கு போன சமயம் - டெலிவரி ஆன சமயம் - ஓம்பு செரியில்லாத சமயம்னு சமையல் அறையிலயும் கொடி பறக்க விடுவது உண்டு.

இந்த குவாலிஃபிகேஷன்ஸை வச்சு தேன் இந்த பதிவு.எந்தவித ஹெல்த் ரூல்ஸும் ஃபாலோ பண்ணாம - ஹை வேல போற ரோகங்களை எல்லாம் செல் ஃபோன்ல கூப்டு கூட்டுவச்சுக்கிற கேரக்டர் பொஞ்சாதியோடது.

நேத்தும் அப்படித்தேன் பல்ப் மாட்டிக்கிச்சு. இன்னைக்கு மகளை உதவிக்கு வச்சுக்கிட்டு வேலைய ஆரம்பிச்சிருக்கம்.

பாத்திரம் கழுவறது:

பாத்திரம் கழுவறதுலயே நெறைய மேட்டர் இருக்கு. ( ஆண்களுக்கு). மொதல்ல சமையல் மேடைக்கு வந்து கழுவ வேண்டிய சாமானை எல்லாம் பொறுக்கி ஒரு டப்லயோ ஒரு பெரிய பாத்திரத்துலயோ போட்டு பாத்ரூம்ல சேர்த்துரனும்.

பாத்ரூம்ல குளிக்க உபயோகிக்கிற ப்ளாஸ்டிக் ஸ்டூலை போட்டுக்கிட்டு உட்கார்ந்த வாக்குல பாத்திரங்களை சார்ட் அவுட் பண்ணிக்கிடனும் அதாவது எதெல்லாம் எது உள்ளாற உட்காருமோ அப்படி உட்கார வச்சுரனும். அதுக்கு மிந்தி பாத்திரங்கள்ள மிஞ்சி கிடக்கிற சரக்கையெல்லாம் ஓட்டையில்லாத டஸ்ட் பின்ல கொட்டிக்கிடனும். பாத்திரங்கள் கட்டாயம் காஞ்சு கிடக்கும். ஆகவே தண்ணி ஊத்தி நனைச்சுரனும்.

அப்படியே கிச்சன் வந்து சின்னதா டீயோ காஃபியோ போட்டு குடிச்சுக்கிட்டே ஒரு சிகரட்டை பத்த வச்சுக்கிட்டு பாத்திரம் கழுவ தேவையான ப்ரஷ்,சோப் வாட்டர் இத்யாதி எங்கன இருக்குன்னு பார்த்து கொண்டு சேர்த்துக்கிடனும்.

பாத்ரூம் ஸ்டூல் மேல உட்கார்ந்து மிச்சம் மீதி சிகரட்டை அடிச்சு முடிச்சுரனும்.சார்ட் அவுட் பண்ணி நிமிர்த்தி வச்ச பாத்திரங்களை கவுத்து போட்டுட்டு பெரிய பாத்திரத்துல/தட்டுலருந்து சோப் போட்டு தேய்க்க ஆரம்பிக்கனும். தேய்ச்சதை நிமிர்த்தி வச்சுக்கனும். அதுக்குள்ளாற சின்னது -அதைவிட சின்னதுன்னு போட்டுக்கிட்டே வரனும். சார்ட் அவுட் பண்ண செட் அப் மாறவே கூடாது.

தேய்ச்சு முடிஞ்ச பிறகு தேய்ச்ச பாத்திரங்களோட செட்டை கவுத்து போட்டு கழுவ ஆரம்பிக்கனும். என்னதா ஒயுங்கா கழுவினாலும் சந்தேகத்துக்கு இன்னொரு பக்கெட் தண்ணியில அலசி வச்சுக்கறது நல்லது. பாத்திரங்களை இப்பம் கவுத்துரனும். முடிஞ்சா வெயில்ல வைங்க. அகாலத்துல வவுத்தை கலக்காது.

இப்பம் கிச்சனுக்கு வந்து "என்ன இருக்கு..என்ன இல்லே" ன்னு ஒரு சர்வே பண்ணிக்கனும். அதைவிட முக்கியம் என்ன சமைக்கிறதுங்கற மெனுவை முடிவு பண்ணனும்.

( ஹி ஹி.. இப்ப வரைக்கும் இந்த வேலைதான் முடிஞ்சிருக்கு.சமைச்சு -தின்னு -உசுரா இருந்தா நாளைக்கு பதிவை தொடருவமா)


No comments: