அண்ணே வணக்கம்ணே !
படிக்கிறவுக படிச்சிக்கிட்டே இருப்பாய்ங்க. படிக்காதவங்க படிக்கவே மாட்டாய்ங்கனு தெரியும் .இருந்தாலும் ஒரு நப்பாசை. நம்ம சைட்டு,நம்ம வலைப்பூக்கள் எந்த அளவுக்கு பிரபலம்னு தெரிஞ்சா சனம் அம்மும்னு ஒரு பிரமை.
நாம வாழ்க்கைய தொலைச்சு பெற்ற "அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதத்தை" சுவைத்து மனித வாழ்வின் மூலம் செக்ஸ் தான் எனும் நிர்வாண உண்மையை சீரணித்து ஆன்மீகத்தின் முதல் படியான ஜோதிடத்தில் நுழைந்து - தனிப்பட்ட வாழ்விலான கவைக்குதவாத பிரச்சினைகள் தீரப்பெற்று - சுய நலம் சுருக்கி -பொது நலம் வளர்த்து - மக்கள் சேவையில் -மகேசனுக்கு சேவையாற்றி சச்சிதானந்த ஸ்வரூபனான இறைவனின் நேரடி வாரிசுகளாக தமது பிறப்புரிமையாகிய பேரின்பத்தை பெறனும்ங்கறது நம்ம லட்சியம்.
நம்ம ரைட்டிங்சை படிச்ச மாத்திரத்துல இதெல்லாம் நாளைக்கே சாத்தியம்னு உறுதி மொழி கொடுக்கலின்னாலும் நம்ம எழுத்தெல்லாம் ப்ரிஸ்க்ரிப்ஷன் மாதிரி எந்தளவுக்கு ஃபாலோ பண்ணா அந்த அளவுக்கு லோகாயதம்+ ஆன்மீகம்னு ரெண்டு டிப்பார்ட்மென்ட்லயும் தூள் பண்ணலாம்.
மேற்படி பத்திகள் என் நம்பிக்கை. என் நம்பிக்கையில் நம்பிக்கை வைக்கக்கூடிய சனம் - நம்ம எழுத்துக்களை படிச்சு பயன்பெறனுங்கறதுக்காவ இந்த "மெய் கீர்த்திகளை" இந்த பதிவில் முன் வைக்கிறேன்.
1. அனுபவஜோதிடம் டாட் காம்:
அலெக்ஸா ரேங்க்: ( இந்திய அளவில்) : 92,154
இணைக்கும் தளங்கள்: 31
2. நிர்வாண உண்மைகள் :
அலெக்ஸா ரேங்க்: ( இந்திய அளவில்) :1,25,072
இணைக்கும் தளங்கள்: 54
வருகைகளை பொருத்தவரை :
நேற்று:( 2011,டிசம்பர்,7) 1,483
2009,மே முதல் நாளிதுவரை பெற்ற வருகைகள் (ஹிட்ஸ்) 7 லட்சத்து 10 ஆயிரத்து 940.
ஆதாரம்: ஸ்டேட் கவுண்டர்
புதுசா சனம் வர்ரது வராதது அப்பாறம் கதை . இப்பம் படிச்சிட்டிருக்கிற நல்ல உள்ளங்கள் நம்ம முருகேசு ஏதோ மொக்கை போடறாரு படிச்சு வைப்போம்னு நினைச்சுரக்கூடாதில்லை.அதனாலதேன் இந்த பில்டாப்.
மேலும் இந்த மெய்கீர்த்திகளை நீங்க ஒரு பத்து ஆன் லைன் நட்புகளோடு பகிர்ந்து - அதுல பாதி பேர் நம்ம எழுத்துக்களை படிக்க ஆரம்பிச்சாலும் நம்ம ஹிட்ஸ் 1,483 X 5 =7,415 ஆயிரும்.
செய்விங்களா?
நாம எந்த அளவுக்கு பிரபலம்னா :
நம்ம பேர்ல போலி ப்ரொஃபைல் கிரியேட் பண்ற அளவுக்கு பிரபலம்
நம்ம எழுத்துக்களை காப்பி பேஸ்ட் பண்ணிக்கிற அளவுக்கு பிரபலம்
நம்மை ட்ராப் பண்ண பெண்களின் பெயர்களில் போலி ஐடி கிரியேட் பண்ணி ஜொள்ளு விடவைக்கிற அளவுக்கு பிரபலம்.
( இந்த மேட்டர்ல நம்முது சாரு நிவேதிதா ரேஞ்சுங்கோ)
No comments:
Post a Comment