'>

Monday, November 21, 2011

கனிமொழிக்கு ஜாமீன் - பத்திரிக்கைகள் வக்காலத்து

அண்ணே வணக்கம்ணே !

2 ஜி மேட்டர் லீக் ஆனப்ப அல்லா பத்திரிக்கையும் வீராவேசமா கிளிச்சிட்டிருந்தாய்ங்க.ஆனால் சமீப காலமா கனிமொழி மேட்டர்ல ப்ளேட்டை திருப்பி போட்டு எளுத ஆரம்பிச்சிருக்காய்ங்க. வெறுமனே கனிமொழிக்கு வக்காலத்து வாங்கினா "அசலான" விஷயம் வெளிய வந்துரும்னு மதுகோடா ,சத்யம் ராஜூன்னு சுத்தி வளைக்கிறாய்ங்க.

ஏறக்குறைய கலைஞர் ரேஞ்சுல கண்ணீர் விடறாய்ங்க. ஜாமீனுங்கறதென்னவோ அடிப்படை உரிமை மாதிரி எஸ்டாப்ளிஷ் பண்ணிக்கிட்டிருக்காய்ங்க. ஜாமீன்ல விடாத ஜட்ஜு மீடியாவுக்கு பயப்படறாரு -ஓவர் ஆக்சன் பண்றாருங்கற மாதிரி எளுதறாய்ங்க.

நம்ம அப்பாவி வாசகர்கள் இதையெல்லாம் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சுட்டா பாவம்யா..பொம்பள புள்ளை மாசக்கணக்கா செயில்ல போட்டா இன்னா பண்ணும்..கொடுத்துரவேண்டியதுதானேன்னு நினைக்க ஆரம்பிச்சுருவாய்ங்க.

இந்த மாதிரி மேட்டர்லாம் பேப்பர்ல வர்ரதால இவிக மனித உரிமைகளுக்காவ கமிட்மென்டோட எளுதறாய்ங்கனு நினைச்சுட்டிங்கனா உங்களை மாதிரி முட்டாள் வேற யாருமில்லை. கனிமொழிக்கு ஜாமீன் வர்ரதுல நம்ம பத்திரிக்கைகளுக்கு என்ன அக்கறைன்னு கேப்பிக. மனித உரிமைகளை நிலை நாட்டறாய்ங்கனு சொன்னா அது ஜல்லி.

இவிகளை பொருத்தவரை .மனித உரிமைகள் மண்ணா போனாலும் நஷ்டமில்லை.தாளி இவிக வேலைக்கு வச்சிருக்கிற சப் எடிட்டர்,ரிப்போர்ட்டர் பொளப்பே நாறிக்கிடக்கு . ஜூ.விலருந்து வெளியே வந்த பார்ட்டிங்க கூட வாயை திறக்கலை.ஏன்னா எல்லாம் ஒரே குட்டையில ஊறின மட்டைங்கதான்.

இவிக ஜூவியை பத்தி வாய் திறந்தா எந்த பத்திரிக்கையும் இவிகளை சேர்த்துக்காது. இதெல்லாம் ஒரு "புரிதல்". செரி செரி கனி மேட்டருக்கு வரேன்.

ஒரு காலத்துல மக்கள் கருத்தை பிரதிபலிக்கறதுதேன் பத்திரிக்கைகளோட வேலையா இருந்தது.ஆனால் இப்பம் மக்கள் கருத்தை உருவாக்கறதே நாங்கதேங்கற நினைப்பு அவிகளுக்கு வந்துருச்சு. ( நினைப்புத்தான் பொளப்பை கெடுக்குது)

இதுக்கு பிரதிபலனா என்ன கிடைச்சுரப்போகுதுன்னு கேப்பிக.வெய்ட் அண்ட் சீ.. கனி அம்மா வெளிய வந்தப்பாறம் விளம்பர வருமானம் குவியலாம். சங்கமம் அது இதுன்னு ப்ரோக்ராம் பண்ணுவாய்ங்க. விளம்பரங்களை அள்ளி விடுவாய்ங்க. இதெல்லாம் " ஜென்டில்மென் (?) அக்ரிமெண்டுங்கோ"

ராசா திகார்ல இருக்கிறப்பயே தான் அவரோட நண்பர் சந்தேக சாவு செத்தாரு. ராசாவுக்கு பெயில் கொடுத்து வெளிய விட்டிருந்தா இன்னம் ஆரெல்லாம் "தற்கொலை" செய்திருப்பாய்ங்களோ?

ஐ.பி.சில ஆயிரம் விதி -உபவிதி இருந்தாலும் கடேசியில ஜட்ஜூ தன் ஆறாவது அறிவை பயன்படுத்தித்தேன் தீர்ப்பு தரனும். அந்த ஆறாவது அறிவை இந்த நாலாவது தூண்கள் குழப்ப பார்க்கிறதுதேன் கேவலத்திலும் கேவலமா இருக்கு.

2ஜியை ஊதி பெருசாக்கினதும் இவிகளே. அதை ஊதி அணைக்க பார்க்கிறதும் இவிகளே. இதெல்லாம் எதுக்குன்னு கேப்பிக.வேற எதுக்கு? வசூல் ராஜா எம்பிபிஎஸ் தேன்.

வேலையோட வேலையா ஒரு காலத்துல பத்திரிக்கைகளை நாம கேட்ட பத்து கேள்விகளை இங்கன மீண்டும் தந்திருக்கம். அவிக பதிலே தரமாட்டாய்ங்கனு தெரியும். நீங்க ரோசிச்சு பாருங்களேன் இந்த கேள்விகளுக்கு அவிக கிட்டே பதில் உண்டா இல்லையான்னு ரோசிச்சு பாருங்க. இவிக (அவ)லட்சணம் என்னன்னு கொஞ்சமாச்சும் புரியும்.

பத்திரிக்கைகளுக்கு 10 கேள்விகள்:

1.ஒரே நிறுவனத்தின் விளம்பரம் ஒரு பக்கத்திலும்,அது குறித்த செய்தி ஒரு பக்கத்திலும் வெளிவருவது ஏன்? நீங்கள் செய்தி போடுவதால் விளம்பரம் தருகிறார்களா? அல்லது அவர்கள் விளம்பரம் தருவதால் நீங்கள் செய்தி வெளியிடுகிறீர்களா?


2.விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று ஒரு அறிவிப்பை சமீப காலமாய் வெளியிட துவங்கியுள்ளீர்கள். இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் வெளியிட்ட விளம்பரங்களுக்கெல்லா ம் நீங்கள் தான் பொறுப்பா?


3.மத்திய அரசு பதிவு பெற்ற பத்திரிக்கைகளுக்கு நியூஸ் ப்ரின்ட் காகிதத்தை கண்ட்ரோல் ரேட்டில் தருகிறது. ஆனால் எந்த பத்திரிக்கையும் நியூஸ் ப்ரிண்ட் காகிதத்தில் வெளி வருவதில்லை. கண்ட்ரோல் ரேட்டில் அரசு தந்த காகிதங்கள் என்னவாகின்றன? ப்ளாக்ல வித்துர்ராய்ங்களா? இது குற்றமிலலியா? அல்லது அது தேவையில்லைன்னு எழுதிக்கொடுத்துட்டாய்ங்களா?


4.ஒரே குழுமத்திலிருந்து பல பத்திரிக்கைகள் வெளிவருகின்றன . பெரும்பாலும் ஆசிரியர் தவிர ஆசிரியர் குழு உறுப்பினர்கள் எல்லாம் அதே ஆசாமிகள் தான். இவர்களுக்கு எத்தனை பத்திரிக்கைக்கு வேலை செய்தால் அத்தனை சம்பளமா? அல்லது ஒரே சம்பளத்துக்கு இத்தனை இதழ்களுக்கும் பணி புரிகிறார்களா?


5.எஸ்.எம்.எஸ் மூலம் ஜோக்,வாசகர் கடிதம் இத்யாதி அனுப்பச் சொல்வதும் நடந்து வருகிறது. வாசகருக்கு வெட்டியா,தண்டமா செலவாகும் தொகையில் பத்திரிக்கைக்கு கிடைக்கும் பங்கு விவரம் என்ன?

6.எழுத்தாளர்கள் தங்களுக்கு அனுப்பும் படைப்புகள் முதலில் சுவற்றிலடித்த பந்தாக இருந்தன. பின் கிணற்றில் போட்ட கல்லாயின. தற்போது பிரதி வைத்துக்கொண்டு அனுப்புங்கள். திருப்பி அனுப்ப முடியாது என்று அறிவிக்கிறீர்கள். இந்த ரொட்டீன் வேலைய கூட ஒழுங்கு மரியாதையா செய்யமுடியாத நீங்க பிரம்மாண்டமான அரசு இயந்திரத்தை குறை சொல்லலாமா?


7.எழுத்தாளர் ராஜேஷ் குமார் எல்லா பத்திரிக்கைகளாலும் நிராகரிக்கப்பட்ட தன் குறுநாவல் மற்றொரு பத்திரிக்கையின் போட்டியில் பரிசு பெற்ற வரலாற்றை தம் சுய சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். தேர்வு பெறாத படைப்புகளை திருப்பி அனுப்பினால் அவை வேறு ஏதேனும் போட்டியில் பரிசு பெற்றுவிட்டால் என்ன செய்வது என்ற தங்கள் நல்லெண்ணமே மேற்படி அறிவிப்புக்கு காரணமா?


8.ஒரு பத்திரிக்கையில் கோழிக்கறியின் தீமைகள் குறித்து கட்டுரை தொடர் வெளிவந்தது. பிறகு கோழிக்கறி சாப்டு மஜா பண்ணுங்கங்கற விளம்பரங்கள் தான் தொடர்ந்து வந்ததே தவிர கட்டுரை என்ன கேடு ஒரு துணுக்கு கூட மேற்படி விஷயத்தில் வெளிவரவில்லையே? அது என்ன சமாசாரம்?


9.பிராமணர்களால் நடத்தப்படும் பத்திரிக்கைகளில் வாய்தா போன பிராமண‌ பிரபலங்களை கூட இந்த தூக்கு தூக்கறிங்களே..பிராமணர்களுக்கு மட்டும் வித்து பத்திரிக்கை நடத்தறிங்களா? இல்லயே! சூத்திர‌னோட காசு வாங்கிகிட்டு பிராமண புகழ் பாடறிங்களே இது நியாயமா?


10.உங்கள் வலை தளத்தில் contact என்பதை மட்டும் ஒளித்து வைத்துள்ளீர்களே அது ஏன்? தப்பித்தவறி அதை கண்டுபிடிச்சு மெயில் அனுப்புபவர்களுக்கும் உங்கள் விளம்பரத்தை தான் அனுப்புகிறீர்களே தவிர பதில் தருவதில்லையே இதுதான் பத்திரிக்கை தர்மமா?



எச்சரிக்கை:

ஜோதிடம் 360 டிகிரி நூலுக்கான வேலைகள் மும்முரமா நடந்துக்கிட்டிருக்கு. நீங்க இந்தாளு ப்ளாக்/சைட்ல எழுதின அதே சமாசாரத்தை புஸ்தவமா போட்டு காசாக்கிர போறான்னு நினைச்சிருந்தா சாரி.. பொஞ்சாதி கிட்டே கூட கட் அண்ட் ரைட்டா பாய்ண்ட் டு பாய்ண்ட் பேசிரலாம். மிஞ்சிப்போனா கட்டிலை பிரிச்சு போடவேண்டி வரும் .அம்புட்டுதேன்.

ஆனால் ப்ளாக்/சைட்ல பாய்ண்ட் டு பாய்ண்ட் எழுதித்தொலைச்சுட்டா ஊத்தி மூடிர வேண்டியதுதேன்.அதனால துக்கினியூண்டு ரஸ்னா பவுடரை வச்சு 22 கிளாஸ் ஜூஸ் கலக்குறாப்ல மேட்டரை அடக்கி வாசிச்சு மஸ்தா பூச்சி காட்டோனம். இதனால பாய்ண்ட் சோனியாயிரும்.

புஸ்தவ விஷயத்துல மேற்படி மேட்டரை ரீ ப்ரொட்யூஸ் பண்ணா மேட்டர் டைல்யூட் ஆயிரும்.அதனால புஸ்தவத்துக்கான மேட்டரை ஏறக்குறைய புதுசாவே எழுதிக்கிட்டிருக்கம்.

No comments: