தாய்மொழியின் அடிப்படை இலக்கணம் நமக்கு ஜீன் வழியாவே வந்துருதுன்னு எங்கயோ படிச்சேன். குழந்தை கருவில் இருக்கும்போதே சொல் -பொருள் -வார்த்தை,வாக்கிய அமைப்புல்லாம் ஃபைனலஸ் ஆயிரும் போல.
நம்ம வாக்கிய அமைப்புகள்ள 99.99 சதவீதம் ஆக்டிவ் வாய்ஸாவே இருக்கும். ( இதுக்கு தமிழ்ல என்ன?)
உ.ம்: கலைஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டினார்
இதை பாசிவ் வாய்ஸுக்கு மாத்தினா அண்ணா நூற்றாண்டு நூலகம் கலைஞரால் கட்டப்பட்டது.
எனக்கென்னமோ இந்த ரெண்டு வாய்ஸுமே ஈகோயிஸ்டிக்கா இருக்குன்னுதான் தோனுது. மனித குலமே ஈகோயிஸ்டிக் தான். வாய்ஸும் அப்படித்தானே இழவெடுக்கும்.
அண்ணா நூற்றாண்டு நூலகம் கலைஞரை கொண்டு தன்னை கட்டிக்கொண்டதுன்னு நான் சொன்னா பைத்தியக்காரத்தனமா நினைப்பிங்க. கால வெள்ளத்தின் ஓட்டத்தை - அதிலான சம்பவ கோர்வைகளை பார்க்கும் போது நான் சொன்னதுதான் கரெக்டுன்னு தோனுது.
மேற்சொன்ன ஆக்டிவ் வாய்ஸ் ,பாசிவ் வாய்ஸ் தான் மடத்தனமானதுன்னு புரிஞ்சிக்க நீங்க மனிதர்களை தேடும் சம்பவங்கள் ங்கற என்னோட பழைய பதிவை படிக்கனும்.
நாம பேசும் -எழுதும் வாக்கிய அமைப்புகள் எலலம் ஜீன் வழியா வந்தது. ஜீன் ? நம் முன்னோர் வழி வந்தது. அறியாமை காரணமா மனிதகுலம் தன்னோட நொய்மையை -பலவீனத்தை புரிஞ்சுக்காம வாழ்ந்த நூற்றாண்டுகளில் இந்த வாக்கிய அமைப்புகள் எல்லாம் ஏற்பட்டிருக்கனும்.
இன்னைக்கு நமக்குள் கருவாகி உருவாகும் வாக்கியங்கள் எல்லாமே ஜஸ்ட் ஈகோயிஸ்டிக் தான்னு நான் நினைக்கிறேன்.
டிஃப்ரண்டா எதுனா வாக்கியம் மைண்ட்ல ஸ்பார்க் ஆனா நமக்குள்ள கில்ட்டியே வந்துருது. என்னடா இது கிராமரும் இல்லை ,ஸ்ட்ரக்சரும் இல்லைன்னு பயந்துக்கறோம்.
நமக்கு சில சமயம் சில வரிகள் விபத்தே போல் மின்னும். பை.தனமாக இருக்கும். அர்த்தமற்றும் இருக்கும். அபத்தமாக இருக்கும்.
ஆனால் வாழ்க்கையே ஒரு அபத்தம் தானே. வாழ்க்கையை மிஞ்சிய அபத்தம் என்ன இருக்க முடியும்? அதே நேரம் இந்த படைப்பில் அர்த்தமற்றதாக எதுவும் இல்லை என்பதும் உறைகக மனதில் மின்னிய பை.தனமான வரி குறித்து சற்றே யோசிப்பதுண்டு.
இன்று ஸ்பார்க் ஆன அபத்தமான வரிகள்:
1.வறுமைக்கு மிஞ்சிய செல்வமில்லை:
வறுமையில் இருக்கும்போது வாழ்வின் வேறு எந்த பிரச்சினையும் பிரச்சினையாகவே தோன்றுவதில்லை.உறைப்பதில்லை. இந்த வறுமை மட்டும் ஒழிந்தால் போதும் வாழ்க்கையே ஸ்வர்கம்டா என்று தோன்றும்.
ஆனால் வறுமை சற்றே விலகிய பின் வாழ்வின் சிக்கல்கள் விஸ்வரூபம் எடுக்கின்றன. எத்தனை செல்வம் வந்தாலும் சிக்கல்கள் தீருவதே இல்லை.
செல்வம் அதுவரை அவுட் ஆஃப் ஃபோக்கஸில் இருந்த பிரச்சினைகளை எல்லாம் ஜூம் போட்டு காட்டி நம் மீதான நம் நம்பிக்கையை நசிக்க செய்துவிடும்.
எனவே செல்வத்தை விட இதர பிரச்சினைகள் அனைத்தையும் அவுட் ஆஃப் ஃபோக்கஸ் செய்து வறுமை மட்டும் ஒழிந்தால் ..என்று ஜொள்ளு விட வைத்து நம் மீதான நம்பிக்கையை நமக்குள் அதிகரிக்க செய்யும் வறுமை தான் உண்மையான செல்வம்.
அதற்கு மிஞ்சிய செல்வம் எது?
No comments:
Post a Comment