'>

Thursday, September 29, 2011

பவர் கட்டால் ஆன்மீக வளர்ச்சி


இன்னைக்கு நாட்டை ஆள்ற அரசியல்வாதிகளுக்கு அடுத்த தேர்தல்லயாவது "பவரை" கட் பண்ணாத்தான் தாளி இந்த பவர் கட் ஒழியும் போல. "துன்பம் வருகையிலே சிரிங்க"ங்கறாப்ல இந்த பவர் கட்டை பாசிட்டிவா பார்த்து ஒரு குரல் பதிவு போட்டிருக்கேன். ஆத்தா மேட்டர்ல ஆர்வம் உள்ளவுகளுக்கு ஒரு போனஸும் காத்திருக்கு


கொய்யால 2009 ,மே மாசத்துல தேர்தல் நடக்குது. பயங்கர கோடை . பருவ மழைல்லாம் கை கொடுத்துருச்சு. இருந்தாலும் பவர் கட் இல்லே. ஆனால் இன்னைக்கு ஊரு நாடுல்லாம் அடிச்சிட்டு போற அளவுக்கு மழை பின்னுது. ஆனாலும் பவர் கட்.

தாளி.. தெலுங்கானா பகுதியில உள்ள சிங்கரேணி நிலச்சுரங்க ஊழியர்கள் ஸ்ட்ரைக்காம். ஆனால் ஒரு நா வேலைக்கு ரெண்டு கூலின்னதும் 60% பேர் வேலைக்கு திரும்பிட்டாய்ங்கனு தகவல். நமக்கு எப்பம் தேவையே அப்பம் வேலை செய்யத்தேன் கூலி கொடுத்து இவிகளை வச்சிருக்கு.

எங்களுக்கு எப்பம் முடியுதோ /ஒழியுதோ அப்பத்தேன் வேலை செய்வோம்ங்கறவுகளை வச்சு மாரடிக்கிறது ஏன்னு புரியலை. இன்னைக்கு பத்திரிக்கை வினியோகத்தை கூட பந்த் பண்றாய்ங்களாம்.

இவிகளுக்கு உச்சா,கக்காவை பந்த் பண்ண ஒய்.எஸ்.ஆர் உசுரோட இல்லை என்ன பண்றது? நேரம் பவர் கட்டால ஆன்மீக வளர்ச்சி எப்படி சாத்தியம்? சொல்றேன். கையோட கையா நவராத்திரி ஸ்பெஷலா ஆத்தாவுக்கு தூய தமிழ்ல ஒரு கவிதை எழுதியிருக்கேன். தமிங்கிலீஷ் அது இதுன்னு நம்மை கிழிச்ச பண்டிதர்கள் இதை படிச்சு கருத்து சொன்னா தேவலாம்.

கவிதைய படிக்க (படிக்க அண்டர்லைன் -டெக்ஸ்டா தான் போட்டிருக்கேன்) இங்கே அழுத்துங்க
வழக்கம் போல கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி பவர் கட்டால ஆன்மீகவளர்ச்சி எப்படி சாத்தியம்னு தெரிஞ்சுக்கங்க

No comments: