சாதாரணமா ஆண் பெண் ஜாதகத்துக்கு என்ன வித்யாசம்னு ஆரையாச்சும் கேட்டா ( அட சோசியர்களை சொன்னேன்) ஆணுக்கு எட்டாமிடம் ஆயுளை காட்டும் பெண்ணுக்கு மாங்கலியத்தை காட்டும் - நாலாமிடம் பெண்ணுக்கு கற்பை காட்டும் - ஆணுக்கு கல்வியை காட்டும்னு தேன் சொல்வாய்ங்க.
ஆனா இந்த தொடரை படிச்சுட்டு வர்ர உங்களுக்கு நிறைய வித்யாசங்களை சொல்லிட்டே வந்தேன். லக்ன பாவத்துலருந்து 9 ஆம் பாவம் வரை வந்திருக்கம். இன்னைய தேதிக்கு நீங்க ஆணா இருந்தா பெண்,பெண்ணா இருந்தா ஆணோட பேஸ்மென்டையே மைண்ட்ல ஏத்தியிருப்பிங்க.
இந்த அளவுக்கு நாம மெனக்கெட காரணம் ஒன்னிருக்கு. அது இன்னாடான்னா இந்த வித்யாசம் புரியாம -ஆண் பெண் மத்தியில புரிதல் இல்லாம சனம் செத்துப்போயிர்ராய்ங்கண்ணே. தப்பித்தவறி நம்ம நாட்ல ஜனாதிபதி ஜன நாயகம் உருவாகி -நாம ஜனாதிபதியே ஆனாலும் ஆள சனம் வேணம்லியா.
அதனாலதேன் இப்படி ஆண் பெண் வித்யாசத்தை லிஸ்ட் போட்டு காட்டிக்கிட்டிருக்கம். இப்பம் 9 ஆம் பாவத்தை பொருத்தவரை இந்த அத்யாயத்துல தொலை தொடர்புங்கற அம்சத்தை எடுத்துக்கிட்டம். இந்த தொலை தொடர்பு அம்சத்துல தொலை தூர பயணங்கள், தூர தேச தொடர்பு ,சுற்றுப்பயணம், பேனா நண்பர்கள் ,ஆன் லை நட்பு , பத்திரிக்கைகளுக்கு படைப்புகள் அனுப்பறது எல்லாம் அடங்குதுங்க.Read More
No comments:
Post a Comment