முதல்வர்னதுமே உங்களுக்கு அம்மா ஞா வந்திருக்கும். சமச்சீர் கல்வி, சட்டமன்ற கட்டிடம் தவிர்த்து பார்த்தா அம்மாவோட ஸ்டாண்ட் மத்த எல்லா மேட்டர்லயும் "வித்யாசமாவே" இருக்கு.
அதுலயும் இலங்கை மீது பொருளாதார தடை தீர்மானம் நெத்தியடி. தமிழின காவலர்கள் எல்லாம் "ஓய்வில்" இருக்க ( வேலையில இருக்கிறப்பயும் என்னத்த கிழிச்சாரு) அம்மான்னா அம்மாதான் நிரூபிச்சிருக்காய்ங்க.
தமிழக நதிகள் திட்டம் எஸ்பெஷலி எனக்கு ரெம்ப சந்தோசம். ஆனா இதை ஹைலைட் பண்ணி மத்த இலவசத்தையெல்லாம் 6 மாசம் தள்ளிப்போட்டிருந்தா நிதி நிலைமை சீராகியிருக்கும். ஹும் பத்தோட பதினொன்னா இருந்தாலும் அறிவிச்சிருக்காய்ங்களே சந்தோசம்.
இதை இளைஞர்களோட பங்களிப்போட ( இளைஞியரும் தேன்) முன்னெடுத்து சென்றால் தூள் பண்ணலாம். பார்ப்போம்.
இப்ப முதல்வரின் பதில்கள் பதிவுக்கு வந்துருவம். முதல்வர்னா ஆங்கிலத்துல C.M ங்கறோம். நாம Chittoor Murugesan. சந்திரபாபு மேல வழக்கு போட்டதுலருந்து மஸ்தா பேரு செல்லமா நம்மை CM னு குறிப்பிடுவதுண்டு.
ஆனால் நமக்கு அந்த பதவி மேல ஆர்வமில்லை. (சதா ..சென்டர்ல கையேந்திக்கிட்டு கிடக்கனும். பதவின்னா தாளி நேரிடை ஜன நாயகத்துல ஜனாதிபதியானா கொஞ்சம் போல ட்ரை பண்ணி பார்க்கலாம்)
ஆக மொத்தத்துல இந்த பதிவின் தலைப்பு ஜெ பதில்கள் அல்ல. சித்தூர் முருகேசன் பதில்கள்.
நம்ம சுகுமார்ஜீ கேட்டிருந்த வில்லங்கமான கேள்விகளுக்கெல்லாம் இந்த பதிவுல பதில் தரப்போறேன்.
1) உங்கள் ஆப்பிரேசன் இந்தியாவுக்கான திட்டங்களில், குழந்தைகள் அவர்களின் கல்வி குறித்து எந்த திட்டமும் இல்லையே ஏன்?
என்னைப்பொறுத்தவரை அரசை விட பெற்றோருக்கு தங்கள் குழந்தைகள் ,அவர்கள் கல்வி மீது அக்கறை அதிகம். சனத்துக்கு வேலை வாய்ப்பை கொடுத்து பசி பட்டினி வறுமைய ஒழிச்சுட்டா அவிக குழந்தைகளுக்கு என்னா மாதிரி படிப்பு வேணமோ அவிகளே டிசைட் பண்ணிக்குவாய்ங்க.
ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி ஒட்டு மொத்த மறுமலர்ச்சியை கொண்டு வந்துரும். அப்பம் உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்கும் நிறுவனங்கள் தன்னிச்சையா தோன்றும். என்னை கேட்டா ஒரு மேட்டரை சீரழிக்கனும்னா அதுல அரசாங்கத்தை நுழைச்சா போதும்.
ஆமை புகுந்த வீடும் அரசு புகுந்த துறையும் உருப்படாது.ஆனால் ஆ.இ.2000 திட்டத்தின் பிற்சேர்க்கையான எக்கானமி பேக்கேஜ்ல திட்டவட்டமா சொல்லியிருக்கேன்.
படிப்புங்கறது மாணவனுக்கு அவன் உடல்,மனம்,புத்தி,ஆத்மா, பெற்றோர்,குடும்பம்,தெரு,பேட்டை, மாவட்டம் ,மானிலம், நாடு,கண்டம்,உலகம் குறித்த புரிதலை தரனும். சுய நலம் பொது நலத்தை பொசுக்கும் நிலை வந்தா அதை துக்கியெறியற மோரல் ஸ்ட்ரெங்த் அவனுக்கு/அவளுக்கு கிடைக்கனும்.
18 வ்யசு முடியறதுக்குள்ள அவன் தன் சொந்தக்கால்களில் நின்று சொந்த முயற்சியில் தான் விரும்பிய கல்வியை பெற முடியனும். ( ஐ மீன் பார்ட் டைம் ஜாப்ஸ்)
2) ஒரே பிரபஞ்சம், நம்மைபொறுத்தவரை ஒரே பூமி, ஒரே சந்திரன் எனினும் ஒரே தளத்தில் இரண்டு நபர்கள் கூட இயங்க முடிவதில்லையே, இது வரமா இல்லை சாபமா?
இல்லை பாஸ்! ஒரே தளத்தில் இயங்கும் ஒரு பெருங்கூட்டமே இருக்கு. அவிகளுக்குள்ளே கம்யூனிகேஷன் இல்லை - ஒருங்கிணைப்பு இல்லை. தட்ஸால். இதை விஞ்ஞானப்பூர்வமா சோஷியல் நெட் ஒர்க் சைட்ஸும்
மெய் ஞான பூர்வமா தியானமும் விரைவிலேயே சாதிக்கும்ங்கற நம்பிக்கை எனக்கிருக்கு.
3) இறப்பு என்பது நிச்சயமாக் இருந்தாலும் மனிதர்கள் மத்தியில் அடுத்தவனை குறித்து ஒரு நொடி சிந்தனையே இல்லாமல் தான், தனது என வாழும் மனிதர்கள்களை இயற்கை என்ன செய்கிறது? குறிப்பாக பழிவாங்குகிறதா?
இல்லிங்க பாஸ் . தன்னுடனான லின்கை கழட்டி விட்டுருது. அவன் ஒரு கூட்டில் அடைபட்டு போயிர்ரான். அவனோட வெற்றி, செல்வம், மகிழ்ச்சி கூட அவனை மகிழ்விக்க முடியாத நிலை ஏற்பட்டுருது. அவன் ஒரு தீவா இருக்கிறவரை அலைகள் அவனை அச்சுறுத்திக்கிட்டே இருக்கும். இந்த கடல்ல கரைஞ்சு போயிட்டான்னா எவ்ரி திங் வில் பீ ஓகே.
உயிரின் அடிப்படை உணர்வு பரவுதல். பொது நலம் இதை சாத்தியமாக்குது. சுய நலம் அவனை சுருக்கிருது. தான் உயிரோடதான் இருக்கமா? தன்னை சுத்தி உள்ளவுக உசுரோட தான் இருக்காய்ங்களாங்கற சந்தேகம் வந்துருது. அதனாலதான் கொல்லாம கொன்னுக்கிட்டு - தற்கொலை அல்லாத தற்கொலைகளை செய்துக்கிட்டு தவிக்கிறான்.
4) செக்ஸ் குறித்த விழிப்புணர்வுக்கு, உங்கள் திட்டம் என்ன? எங்கே இருந்து ஆரம்பிக்கலாம்?
நீங்க திருச்சில இருந்து புறப்பட்டு சித்தூர் வரனம்னாலும் அதே நேரம் தான், நான் சித்தூர்லருந்து திருச்சி வரனும்னாலும் அதே நேரம்தான். ரெண்டு பேரும் ஒரே நேரத்துல புறப்பட்டா மையத்துல சந்திச்சுரலாம்.அதுவும் பாதியளவு நேரத்துல.
அதனால இரு முனைகளிலும் ஆரம்பிக்கனும். ஐ மீன் குழந்தையின் கர்ப காலம் தொட்டே தாய்க்கு வழங்கினா அது பாப்பாவுக்கும் போய் சேரும். இது ஒரு முனை. அடுத்து வயது வந்தவர்களுக்கும் இது தரப்பாட்டாகனும்.
5) சிவலிங்க ரூபத்தில் மறைமுகமாக உயிர் உறுப்புக்களை வணங்கவேண்டிய கட்டாயம் என்ன? அப்படியானால் செக்சில் ஒருவனோ, ஒருத்தியோ திளைப்பது சரியானதுதானே?
உயிர் உறுப்பு ? புதிய பிரயோகம். இவை உடலின் மையங்கள் மட்டுமல்ல. மனதின் மையங்களும் தான். நீங்க என்னதான் பம்பாடு, நாகரீகம்னு பம்மாத்து பண்ணாலும் உங்க மைண்ட் அங்கனதான் குவியும். மனம் குவிப்பது தியானம் அல்ல என்றாலும் தியானத்துக்கான முதல் படி எண்ணங்களை ஒரு புள்ளியில் நிறுத்துதல்.
அடுத்து செக்ஸில் திளைப்பது. தி...ளை...ப்ப....துங்கற வார்த்தை அருமையான வார்த்தை பிரயோகம். செக்ஸ்ல எவனும் திளைக்கறதில்லை. (செக்ஸ் குறித்த கனவு கற்பனைகளில் திளைப்பது வேறு ). செக்ஸுக்குள்ள தட்டு தடுமாறி என்டர் ஆகிறான். உடனே அது இவனை தூக்கி எறிஞ்சுருது. திருப்பதி சர்வதரிசனம் கணக்கு.
உங்களை ஒரு அரைமணி நேரம் பெருமாள் முந்தி உட்கார வச்சுட்டா என்னாகும்? அடுத்த தரிசனத்துக்கு உங்க மனம் ஏங்க குறைஞ்சது ஒரு வருஷம் பிடிக்கும்.செக்ஸும் அப்படித்தான். அதில் திளைக்க முடிந்தால் உடலுறவுகளுக்கிடையிலான இடைவெளி அதிகரிக்கும்.
6) ஒரு குழந்தையின் பிறப்பில் தொடங்கும் கர்ப்பச்செல் நீக்கிய காலம், அந்த குழ்ந்தையின் குடும்பத்தில் ஏற்கனவே வாழ்ந்து மடிந்த ஒருவரை அல்லது திசை இருப்பை குறிக்கிறதா?
அந்த "ஏற்கனவே வாழ்ந்து மடிந்த ஒருவர்" அதே குழந்தையாக இருக்கும் பட்சத்தில் குறிக்கலாம்.
7) செக்ஸ் என்ன ஒன்றிலிருந்து தோன்றியதனாலயேதான், அதுலிருந்து மீள முடியாதிருக்கிறோமா?
இல்லிங்க. அங்கன ஆரம்பிக்க வேணம்னா இது காரணமா இருக்கலாம் ஆனால் ஆரம்பிச்ச இடத்துலயே நின்னுர இந்த சமூகம் தான் காரணம். நாம ஒவ்வொருத்தரும் சைக்காலஜில சொல்ற ஆசனப்பருவத்தை கடந்து தான் ஆகனும்.
நம்ம கவனம் இன உறுப்பு பக்கமா டைவர்ட் ஆகும்போது தடுக்கப்படறோம். அதனால தான் வாய் சொல் வீரர்களா, தின்னி பண்டாரங்களா,ஹோமோவா மாறிர்ரம். இந்த தடைக்கு மட்டும் தடை விதிக்கப்பாட்டால் சரியான விழிப்புணர்வு உள்ளவன் ரெண்டு வருஷத்துல செக்ஸ்லருந்து ஜம்ப் ஆயிரலாம்.
குண்டலி யோகாப்படி பார்த்தாலும் ஆக்னா ( ஆசனத்துக்கு சற்று மேல்) ஸ்வாதிஷ்டானம் (இன உறுப்புக்கு சற்று மேல்) இந்த தியரி சரி.
பயணம் தொடரனும். அது தொடர செக்ஸை தாண்டனும். தாண்டனும்னா அதுல இறங்கித்தானே கரையேறனும். தின்னு கழியவே 30 வயசு போயிருது. அப்பாறம் செக்ஸ். இந்த சந்தர்ப்பத்தையும் சரியா உபயோகிச்சுக்க முடியாத அளவு பிரச்சினைகள். இவன் காமச்சேற்றிலிருந்து கரையேற முடியாம அதுலயே மூழ்கி செத்துப்போயிர்ரான்.
சிறுமியை கற்பழித்த 90 வயது முதியவர்லாம் இந்த கேஸுதேன்
8) செக்ஸ் என்ற தாகத்தை, ஒரே மூச்சில் தண்ணீர் குடித்து தணிக்க என்ன செய்யலாம்?
அஸ்கு புஸ்கு .. நம்ம கில்மா பதிவுகளையெல்லாம் மனப்பாடம் செய்து ப்ராக்டீஸ் பண்ணி அப்ளை பண்ணாலும் உங்க ஒக்காபிலரில சொன்னா "திளைச்சாலும்" இடைவெளி அதிகரிக்கலாமே தவிர இந்த மேட்டர்ல லைஃப் டைம் வேலிடிட்டி எல்லாம் கடியாதுங்கோ. மந்த்லி டாப் அப் தேன்.
9) ஜோதிடம் பார்ப்பதினாலும் அல்லது பார்க்காமலேயே வாழ்வதனாலும், பிறப்பின் நோக்க்த்தை அடைவதில் நிறைவோ, குறைவோ ஏற்படுகிறதா?
ஹ்யூமன் மைண்டுங்கற கம்ப்யூட்டர்ல தேவையான எல்லா சாஃப்ட் வேரும் போட்டுத்தான் அனுப்புது இயற்கை. அதுக்குள்ள ஈகோங்கற வைரஸ் புகுந்து குழப்படி பண்ணிருது. அப்பம் சோசியம், தியானம் இதெல்லாம் ஆன்டி வைரஸ் மாதிரி வேலை செய்யுது.
யூனிவர்சல் மைண்டோட - வாழ்ந்தா ஜோதிடம்லாம் தேவையே இல்லை. என்ன பண்றது சனம் யூனிவர்சல் மைண்டோட வர்ர குழந்தைக்குள்ளே ஈகோவை இஞ்ஜெக்ட் பண்ணி பண்ணி தன்னை இந்த படைப்பின் மையமாக கருதும் கெட்டப்பழக்கத்தை உருவாக்கிர்ராய்ங்க. பஸ் ட்ரைவருக்கே எந்த ரூட்ல போகனும்னு தெரியாத பூட்டா என்னாகும் ? ஒவ்வொரு ஜங்க்ஷன்லயும் பஸ் ரைட்டுக்கும் லெஃப்டுக்கும் அலைபாயுது.
அப்பம் ஆரோ ஒரு பயணி "யோவ் ட்ரைவர் லெஃப்ட்ல திருப்புய்யா ..என்ன ரூட்டுக்கு புதுசா"ன்னு கூவ வேண்டியிருக்கு.
10) தங்களைப்போல ஜோதிட தாகம் கொண்டோருக்கும், ஆர்வமுள்ளோர்க்கும் ஏதேனும் ஜோதிட கல்வி நிலையம் தொடங்குவது போன்ற சிந்தனையுண்டா?
ஹய்யோ ஹய்யோ.. நானே இன்னம் கத்து முடியலை. இதுல கல்வி நிலையம் வேறயா? ராகுலை பிரதமாராக்கின கதையாயிரும் பாஸ்.. அதுக்கெல்லாம் சுப்பையா சார் மாதிரி பார்ட்டிங்க இருக்காய்ங்க. ஆள விடுங்க.

1 comment:
உங்க கற்பனை பரவாயில்லை
Post a Comment