ஆமாங்ணா. மாசேதுங் சொல்வாராம் "பூனை எந்த நிறமா இருந்தாலும் பரவால்லை. எலியை பிடிக்கனும் அம்புட்டுதேன்"
வெள்ளை வேட்டி கட்டினவன் தான் வரனும்னு வெய்ட்டிங்ல இருந்தா பாரதமாதா எப்பத்தேன் ஐ.சி லருந்து டிஸ்சார்ஜ் ஆகிறது.?
ஆர்.எஸ்.எஸ் பின்னணி இல்லாதவன் தான் வரனும்னு வெய்ட்டிங்ல இருந்தா ஊழலை எப்பத்தேன் ஊத்தி மூடறது?
பாபா,ஹசாரே உத்தமர்கள் என்றோ - சுயம்புகள் என்றோ வக்காலத்து வாங்க நான் தயாரில்லை. இவர்களை ஆர்.எஸ்.எஸ் ஏஜெண்டுகள் - பா.ஜ.க கையாட்கள் என்று திராவிட திலகங்கள் பொங்கி எழுவதை கண்டு கொஞ்சம் போல இர்ரிட்டேட் ஆகித்தான் இந்த பதிவை போடறேன்.
ஆர்.எஸ்.எஸ் , பாஜக வை எதிர்ப்பது சரிதான். ஆனால் இவற்றை எதிர்ப்பவர்களின் பின்னணி என்ன? அதையும் பார்க்கனும்ல.
ஊழலுக்கு மறு பெயர் காங்கிரஸ். அந்த கட்சிக்கு நேரடியாகவோ , மறைமுகமாவோ " நல்லாதரவை" கொடுத்துவரும் கட்சிகளின் பின்னணியும் இதுவே. அட வெளியிலருந்து ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்டுகளின் சாமுத்ரிகமும் இதே இழவுதேன்.
அதுக்காவ ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க ஆட்சிக்கு வந்துட்டா சாக்கடையில எல்லாம் பாலும் தேனும் கலந்து ஓடும்னு சொல்லமாட்டேன்.
"இஷ்யூ பேஸ்ட் சப்போர்ட்"ங்கறாப்ல இஷ்யூ பேஸ்ட் விமர்சனம் பண்ணனும். ஊழல் எதிர்ப்பா? அதை பேசுங்க.ஹசாரே,பாபா, ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க என்னெல்லாம் ஊழல் பண்ணியிருக்காய்ங்கனு லிஸ்ட் அவுட் பண்ணுங்க.
அதை விட்டுட்டு அக்கிரகாரத்து அதிமேதாவிகள் மாதிரி - சிதம்பரம் மாதிரி பேசினா எப்படி? Read More

No comments:
Post a Comment